6 AND 7 TH STD SCHOOL LEVEL ASSESMENT QUIZ MAKING PROCESS

  இணையவழித் தேர்வு வழிமுறைகள்



    அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம்.  பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் முன்னோட்டமாக ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கு உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் வாயிலாக இணையவழித் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தியுள்ளது.படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் இது செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. அதற்காகத் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையவழித் தேர்வுகளை உருவாக்குதல், அதற்கு முன் அவற்றைப் பதிவு செய்தல், மாணவர்களுக்கு வழங்குதல், மதிப்பீடு செய்தல் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது.

     இவை அனைத்திற்கும் ஆன விளக்கங்களை தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைகொண்டு காணொளிகளாக விளக்கி வெளியிட்டுள்ளது. அந்த காணொளிகளின் இணைப்பு உங்களுக்காக இங்கே வழங்கப்பட்டுள்ளது. இவற்றைப் பார்த்து அதற்கான வழிமுறைகளைத் தெளிவாக அறிந்து மாணவர்களை இணையவழித் தேர்வில் ஈடுபடுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

   இணைய வழித்தேர்வுகளைப் பள்ளி அளவிலேயே தயாரித்து வழங்குவதற்கான வழிமுறைகள் இரண்டு படிநிலைகளில் நடைபெறுகிறது.அவ்விரண்டு படிநிலையும் காணொளி வடிவில் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

படிநிலை 1: REGISTRATION


படிநிலை 2 : QUIZ MAKING AND QUESTION ALLOCATION


UNABLE TO CONNECT வந்தால் என்ன செய்வது? அல்லது HI TECH LAB MAIN SERVER ல் செய்யவேண்டியது

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை