6 ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 18-01-2023 முதல் 20-01-2023
மாதம் : ஜனவரி
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.பராபரக்கண்ணி
1.கற்றல் நோக்கங்கள் :
@ எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல்,அனைவருக்கும் உதவி செய்தல் போன்ற நற்சிந்தனைகளைப் பெறுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
உதவி செய்வது யாருக்கெல்லாம் பிடிக்கும் என்ற வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
செய்யுள் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
பராபரக்கண்ணி
அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.
எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்கமாட்டேன்.
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
1.வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களைப்பற்றி விளக்கி எழுதுக.
12.கற்றல் விளைவு:
@ 612-பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல் ஏற்றஇறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்