10 TH STD TAMIL SECOND REVISION EXAM QUESTION AND ANSWER KEY(VELLORE, 2023)

 

இரண்டாம் திருப்புதல் தேர்வு-2023 வேலூர் மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க👇

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

இ. எம்+தமிழ்+நா

1

2.    

அ.அகவற்பா

1

3.     

ஆ. கொன்றை வேந்தன்

1

4.     

ஈ. இலா

1

5.    

அ. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

1

6.    

அ. வேற்றுமை உருபு

1

7.     

இ. வலிமையை நிலைநாட்டல்

1

8.    

இ. உருவகம்

1

9.    

அ. ஆலமரம்,வேலமரம் – ,

1

10.   

ஈ. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

1

11.    

அ. காடு

1

12.  

அ. முல்லைப்பாட்டு

1

13.  

ஆ. அகன்ற உலகம்

1

14.  

ஆ. வளைஇ

1

15.  

அ. நப்பூதனார்

1

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

அ. பூவின் தோற்றநிலை யாது?

ஆ. தமிழர் எத்தகைய இயல்புடையவர்கள்?

2

17

செய்யுளும், உரைநடையும் கலந்து எழுதப்பெறுவது.

2

18

பொருளை மறைத்து வைக்கும் துன்பம் தராதவர்

2

19

1.     சிலநேரங்களில் சில மனிதர்கள்

2.   ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

3.    ஊருக்கு நூறுபேர்

4.    உன்னைப்போல் ஒருவன்

2

20

வறுமையிலும் கையில் பணம் கிடைத்தால் புத்தகங்களையே வாங்குவார்

2

21

முயற்சி திருவினை ஆக்கும்  முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

2


                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

கிளர்ந்த – கிளர் + த்(ந்) +த் +அ

கிளர்-பகுதி ,த்-சந்தி ,ந்-விகாரம் ,த்-இறந்தகால இடைநிலை

அ-பெயரெச்ச விகுதி  

2

23

அ. நம்பிக்கை  ஆ. தத்துவவியளாளர்

2

24

வெட்சி- கரந்தை , வஞ்சி-காஞ்சி ,நொச்சி-உழிஞை ,தும்பை -வாகை

2

25


    பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தசிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபடவருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்.

2

26

அ. மாலையில் மலை ஏறினான்.

ஆ. காலையில் கலைக்கூடம் சென்றான்.

2

27

அண்ணன் நேற்று வீட்டிற்கு வந்தார். அண்ணன் புறப்படும்போது அம்மா வழியனுப்பினார்.

2

28

6 வகை – அறிவினா,அறியா வினா, ஐய வினா, கொளல் வினா ,கொடை வினா , ஏவல் வினா

 

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

அ)நாற்று- நெல் நாற்று நட்டேன்.

ஆ)கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

இ)பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

ஈ)வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

உ)பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

 

3

30

அ. எழுதப்பட் டதை மொழிபெயர்ப்பது.

ஆ. TRANSLATION

இ. மொழிபெயர்ப்பு

3

31

 

  தமிழகம் , ஆந்திர மாநிலம் பிரிவின்போது ம.பொ.சி கூறியது.

 

3

 

                                                                  பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

3

33

ü  காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும்.

ü  அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும்.

ü  தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும்.

ü  நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும்.

ü  முருகப்பெருமானே செங்கீரை ஆடுக.

3

34

 

அ.

    அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !

    முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

    கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடை யில்

    மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே !

 

    தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே !

    இன்னறும் பாப்பத்தே ! எண்தொகையே! நற்கணக்கே !

    மன்னுஞ் சிலம்பே ! மணிமேகலை வடிவே !

    முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே !

ஆ.

   நவமணி வடக்கயில்போல்

      நல்லறப்படலைப்பூட்டும்

  தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

  துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

  உவமணி கானம்கொல் என்று

     ஒலித்து அழுவ போன்றே

3

 

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர்

 மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர்

 பாடினேன் தாலாட்டு -வினைமுற்றுத்தொடர்

ஆடி ஆடி ஓய்ந்துறங்குஅடுக்குத்தொடர்

 

3

36

நிரல் நிரையணி -

      சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறைஅணி எனப்படும்.

3

37

தேமா  புளிமா  புளிமா  புளிமாங்காய்

கூவிளங்காய்  கூவிளம்  நேர்.

3

 

                                                                   பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

விளம்பரம்:

      சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. வணிகம் செய்யும் மக்கள் வீதிகளில் அமர்ந்து செய்யும் வணிகமே விளம்பரமாகச் செயல்பட்டது. ஆனால் இன்றளவிலோ  வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும்  பெரும் பொருட்செலவில் செய்தித்தாள், தொலைக்காட்சி,துண்டு பிரசுரம் ஆகிய ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறை:

      மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர்.ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் ஒரு பொருள் வாங்குவதற்குப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

அங்காடிகள்:

      சிலப்பதிகாரம் கூறும்   மருவூர்ப்பாக்கத்தில்அகில் சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருள் விற்பவர்களும், தானியங்கள் விற்பவர்களும், உப்பு விற்பவர்களும்,எண்ணெய் விற்பவர்களும், பலவிதமான இறைச்சி விற்பவர்களும்  ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்தனர்.

       ஆனால், இன்றைய சூழலில்  அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.அங்காடிகள் அமைப்பதற்கும் அதைப் பராமரிப்பதற்கும் ஆகும்செலவினத்தை,பொருட்களின் விலையை ஏற்றி  நுகர்வோரை பாதிப்படையச் செய்கின்றனர்.

பல தொழில் செய்வோர்:

       மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும்  வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்  பலர் உள்ளனர்.

வணிக வளாகங்கள்:

      மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது  வானுயர் கட்டடங்களுக்கு  இடம் பெயர்ந்து உள்ளது. மருவூர்ப்பாக்கத்தில் உள்ள வணிக வீதிகளில்,அங்கு வரும் மக்களை மகிழ்விக்க  பாணன்,பாடினி,விறலி,கூத்தர்  உள்ளிட்ட இயல் இசை நாடகக் கலைஞர்கள் இருந்தனர். இன்றளவிலும்  வணிக வளாகங்களில் மக்களையும் பொழுதுபோக்கிற்காக  நிறைய அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 (அல்லது)

ஆ)

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

5

39

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

(அல்லது)

ஆ)

ü  அனுப்புநர் முகவரி ,நாள்

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

மேல்நிலை வகுப்புசேர்க்கை விண்ணப்பப் படிவம்

 

சேர்க்கை எண்: 1234   நாள்: 15-02-2023  வகுப்பும் பிரிவும்: 11.ஆம் வகுப்பு/அறிவியல் பிரிவு

     

1.     மாணவரின் பெயர்                                                        :        பா.இனியன்

2.    பிறந்த நாள்                                                                   :        12-12-2008

3.    தேசிய இனம்                                                                :        இந்தியன்

4.    பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                                 :        பாண்டியன்

5.    வீட்டு முகவரி                                                                :        62 தமிழன்னை வீதி,

                                                                                                         தென்றல் நகர் , ஆற்காடு

6.    இறுதியாகப் படித்த வகுப்பு                                           :        10.ஆம் வகுப்பு

7.    பயின்ற மொழி                                                              :        தமிழ், ஆங்கிலம்

8.    இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி                    :        அரசினர் மேனிலைப் பள்ளி

                                                                                                        ஆற்காடு

9.    பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்                    :       

தேர்வின் பெயர்

பதிவு எண் - ஆண்டு

பாடம்

மதிப்பெண் (100)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

123456

(2022-2023)

தமிழ்

99

ஆங்கிலம்

99

கணிதம்

100

அறிவியல்

100

சமூக அறிவியல்

100

மொத்தம்

498

 

9.    மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?                                   :     ஆம்

10.   தாய்மொழி                                                                                                    :     தமிழ்

11.    சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும்                                  :      அறிவியல் பிரிவு/ தமிழ்

                                                                                                                                               இனியன்

மாணவர் கையெழுத்து

 

5

42

வினாவுக்கேற்ற விடை எழுதியிருப்பின் முழுமதிப்பெண் வழங்குக

5

 

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

அ.                      வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)

 முன்னுரை:

                அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்  அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத  ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி  தனதுஒருவன் இருக்கிறான்என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்  ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

 குப்புசாமியின் குடும்ப நிலை:

              காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும்  மட்டுமே அவனது உறவினர்கள். விறகு கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி.

நோயுற்ற குப்புசாமி:

               சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.

கடிதத்தில் இருந்த செய்தி:

              அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன் உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும் எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய்  கொடுத்து அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால், பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான்.

                   இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின் பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது.

ஆறுமுகம்:

                 குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.

 முடிவுரை:

                  “ பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

                    மண்புக்கு மாய்வது மன்”   

 பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு  மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.

அ) கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை:

              கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய்  அருகில் நின்று பார்த்தார்.அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யாஅருகிலிருந்து நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். 

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:

               ஒரு வேப்பமரத்தின் அடியில்  மண் கலயங்கள் கஞ்சியால்  நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு  சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:

              புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்  பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

               இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். இளைஞன் அந்தப் பெயரை இதற்குள் திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக்கொண்டான். எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்  கொண்டான்.

சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்:

               சுப்பையாவும், அவருடன் இருந்தவர்களும் அன்னமய்யாவையும், இளைஞனையும்   மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். சுப்பையா  தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார்.

முடிவுரை:

               தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே. 

 

8

45

அ) முன்னுரை :

  எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

         மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

         பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

         அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

         வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

         சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

         எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

 (அல்லது)

ஆ) தரப்பட்ட குறிப்புகள் அல்லது தலைப்புகள் ,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு ,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

 

8

 விடைக்குறிப்பை PDF  வடிவில் பதிவிறக்க👇

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை