10.ஆம் வகுப்பு-தமிழ்
காட்சியைக் கண்டு கவினுற எழுதுதல்
அனைத்து தமிழாசிரியப் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் அன்பு வணக்கங்கள். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 'காட்சியைக் கண்டு கவினுற எழுதுதல்' என்பது ஒரு இன்றியமையாத ஐந்து மதிப்பெண் வினா விடை ஆகும். எளிதாகத் தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்கள் இந்த பகுதியை நன்கு பயிற்சி செய்தால் நிச்சயமாக முழுமதிப்பெண் பெற முடியும். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள ஒன்பது இயல்களின் மொழிபெயர்ச்சி பகுதிகளும் இந்த காட்சியைக் கண்டு கண்டு கவினுற எழுதுதல் பகுதிக்கான ஒரு படமானது தரப்பட்டிருக்கும். அந்தப் படத்தை குறித்து மாணவர்கள் தங்களது சொந்த நடையில் கருத்துகளை எழுத வேண்டி இருக்கும். குறிப்பாக மெல்ல கற்கும் மாணவர்கள் நலன் கருதி, ஒன்பது இயல்களுக்கும் ஒரே மாதிரி வடிவத்தில் கட்சி கண்டு கவினுற எழுதுதல் எப்படி? என்பதே இப்பதிவாகும். அதை பின்வருமாறு காண்போம்.
ஏடு எடுத்தேன்
கவி ஒன்று எழுத
என்னை எழுது
என்று சொன்னது
இந்தக்
காட்சி!
இரக்கத்தைப் பற்றி எழுதினேன்!
அனைவரும்
இதன் அருமை அறிந்து
நடக்க
வேண்டும்!
வாழ்க்கையில்
மேலும் உயர வேண்டும்!
மேற்கண்ட வடிவத்தில் அடிக்கோடிட்ட சொல்லை மட்டும் தரப்பட்ட காட்சிக்கேற்றவாறு மாற்றி எழுதினால் போதும். ஒன்பது இயல்கள் அல்லது எந்த படத்தைக்கொடுத்தாலும் இவ்வடிவத்தைப் பயன்படுத்தி எழுத இயலும்.
- இயல் 1 - புத்தகத்தை (அல்லது) படித்தலை
- இயல் 2 - காற்றைப் பற்றி
- இயல் 3 - இரக்கத்தைப் பற்றி
- இயல் 4 - அலைபேசியைப் பற்றி
- இயல் 5 - மரத்தைப்பற்றி
- இயல் 6 - நிகழ்கலையைப் பற்றி
- இயல் 7 - உழவைப் பற்றி
- இயல் 8 - கொடையைப் பற்றி
- இயல் 9 - கொடையைப் பற்றி