சிறப்பு திருப்புதல் தேர்வு-2
,2023 இராணிப்பேட்டை மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்க👇
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
இ.
கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை? |
1 |
2.
|
ஈ.
சிலப்பதிகாரம் |
1 |
3.
|
இ.
மதுரைக்காஞ்சி |
1 |
4.
|
ஆ.
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் |
1 |
5.
|
ஆ.
தளரப்பிணைத்தால் |
1 |
6.
|
இ.
குற்றமில்லாமல் தன்குடிப் பெருமையை உயர்த்துபவர் |
1 |
7.
|
ஈ.
தலையில் கல் சுமப்பது |
1 |
8.
|
ஈ.
எற்பாடு |
1 |
9.
|
அ.
தும்பை |
1 |
10. |
இ.அழியாமல்
இருத்தல் |
1 |
11.
|
இ.உருவகம் |
1 |
12. |
இ.
சிலப்பதிகாரம் |
1 |
13. |
ஆ.
பண்புத்தொகை |
1 |
14. |
இ.
நெய்பவர் |
1 |
15. |
ஆ.
இளங்கோவடிகள் |
1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
பித்தளைச்
செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்து ஆடுவது. |
2 |
17 |
அவையம்-அறம்
கூறும் மன்றங்கள் |
2 |
18 |
மறைத்து வைத்தல்
என்ற துன்பம் தராத நல்லவர் |
2 |
19 |
மன்னரைப் புகழ்ந்து
இலக்கிய நயம்பட பாடுதல் |
2 |
20 |
அ. தமிழர்
எவ்வாறு இன்புற்றனர்? ஆ. குப.ரா
எப்போது பிறந்தார் |
2 |
21 |
செயற்கை அறிந்தக் கடைத்தும்
உலகத் தியற்கை அறிந்து செயல். |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
நிலம் , பொழுது |
2 |
23 |
வெட்சி-கரந்தை,
வஞ்சி-காஞ்சி, நொச்சி-உழிஞை, தும்பை-வாகை. |
2 |
24 |
வெண்பா, ஆசிரியப்பா,
கலிப்பா, வஞ்சிப்பா |
2 |
25 |
ஒலித்து-ஒலி+த்+த்+உ ஒலி-பகுதி , த்-ச்ந்தி , த்-இறந்தகால இடைநிலை
, உ – வினையெச்ச விகுதி |
2 |
26 |
பல
+ கையொலி = பல கைகளால் எழுப்பப்படும் ஒலி பலகை
+ ஒலி = மரப்பலகையில் எழும் ஒலி |
2 |
27 |
வெள்ளை
, கருத்து விடும் |
2 |
28 |
அ.நம்பிக்கை
ஆ.மீட்டுருவாக்கம் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
இடம்: இத்தொடர்
ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள்
தலையை கொடுத்தாவது தலைநகரைக் காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர
மாநிலம் பிரியும்போது, ஆந்திரத் தலைவர்கள் சென்னை தான் அதன் தலைநகராக இருக்க வேண்டும்
என்று கருதினர். இதை எதிர்த்து அப்போதைய முதல்வர் இராஜாஜி தனது பதவியைத் துறந்தார்.அச்சமயத்தில்,செங்கல்வராயன்
தலைமையில் கூட்டப்பட்ட கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும்
தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார். |
3 |
30 |
தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம்
என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியவர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர்,
பெண்கள், நோயாளர், புதல்வரைப்
பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு புறப்பாடல் கூறுகிறது. தம்மைவிட
வலிமைகுறைந்தாரோடு போர் செய்வது
கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார். |
3 |
31 |
அ. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஆ. 96 இ. 10 |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும். ü முருகப்பெருமானே செங்கீரை ஆடுக. |
3 |
|
33 |
இடம்: நாகூர் ரூமியால் எழுதப்பட்ட “சித்தாளு”
கவிதையின் வரிகள் இவை பொருள்: சித்தாளு அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத்
தெரியாது விளக்கம்: கற்களைச் சுமந்தால் மட்டுமே அடுத்தவேளை
உணவு என்பதால் உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் சித்தாளின்
மனச்சுமை யாருக்கும் புரியாது. |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
35 |
மதில்
காத்தல் , மதில் வளைத்தல் |
3 |
36 |
வஞ்சப்புகழ்ச்சியணி-
கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது |
3 |
37 |
புளிமா புளிமா
புளிமா புளிமா புளிமா புளிமா
மலர். |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
இராசராசன் எட்டு
திசைகளிலும் உள்ள காவல் தெய்வங்கள் ஒன்றிணைந்தது போல் ஆட்சி செய்தான்.
அவனது நாட்டில், ·
யானைகள் மட்டுமே பிணைக்கப்பட்டு இருந்தன. ·
சிலம்புகள் மட்டுமே புலம்பின. ·
ஓடைகள் மட்டுமே கலக்கம் அடைந்திருந்தன. ·
நீர் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தது. ·
மாங்காய்கள் மட்டுமே வடுப்பட்டிருந்தன. ·
மலர்கள் மட்டுமே பறிக்கப்பட்டு இருந்தன. ·
காடுகள் மட்டுமே கொடியனவாக இருந்தன. ·
வண்டுகள் மட்டுமே தேன் உண்பதாக இருந்தன. ·
நெற்கதிர்கள் மட்டும் போராகவும்,மலைகள்
மட்டுமே இருள்சூழ்ந்ததாகவும், ·
இளம் ஆண்களின் கண்கள் மட்டுமே பயந்ததாகவும், ·
குளத்து மீன்கள் மட்டுமே பிறழ்ந்து
சென்றதாகவும், ·
செவிலித்தாய் மட்டுமே சினம் கொண்டதாகவும்
போது சரியான · இசைப் பாணர்கள் மட்டுமே ஆடிப்பாடியதாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. (அல்லது) ஆ) கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்: ”பூமித் தாயே என்
அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக” எனக் கருணையன் வேண்டினான்.
குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன்
அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான்.அதன்மேல் மலர்களையும் தன்
கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: என் தாய் கூறும் உண்மையான
சொற்களையே மழைநீராகக் கொண்டு தாயின் மார்பில் ஒரு மணிமாலைபோல் அசைந்து அழகுற
வாழ்ந்தேன்.இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி
இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று கருணையன்
வருந்தினான். கருணையனின்
தவிப்பு: ”எனது
மனம் பரந்த மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலரைப்போல் வாடுகிறது.
தீயையும்,நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான புண்ணின்
வலியால் வருந்துவது போன்றது எனது துயரம்.துணையைப் பிரிந்த பறவையைப் போல்
நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே
விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். தனித்து
விடப்பட்ட கருணையன்: “எனக்கு
உயிர் பிழைக்கும் வழி தெரியவில்லை, எனது உடல் உறுப்புகள் இயங்காத நிலையாய் நான்
உணர்கிறேன்.உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிகளை என்னால் அறிய
முடியவில்லை. காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன். எனது தாய் தன்
கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிந்துள்ளேன். என்னைத் தனியாகத் தவிக்க விட்டு
விட்டு எனது தாய் மட்டும் சென்று விட்டாளே” என்று அழுது புலம்பினான் பறவைகளும்,வண்டுகளும்
கூச்சலிட்டன: நவமணிகள் பதித்த மணி
மாலைகளைப் பிணித்தது போன்று, நல்லறங்களை மாலையாக அணிந்த கருணையன்
இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப்போன்றே
கூச்சலிட்டன. |
5 |
39 |
ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) ஆ) ü அனுப்புநர்
முகவரி ,நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
40 அ. |
அ.வினாவுக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
ஆ |
சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால்
தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. |
5 |
41 |
பணிவாய்ப்பு வேண்டி
தன்விவரப் பட்டியலை நிரப்புதல் 1. பெயர் : வா.நிறைமதி 2. பாலினம் : பெண் 3. பிறந்த நாள் மற்றும் வயது : 12-02-2008 4. தேசிய இனம் : இந்தியன் 5. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : வெ.க.வளத்தமிழன் 6. வீட்டு முகவரி : 562 வள்ளுவர் தெரு,
மதுரை-1 7. தொலைபேசி / அலைபேசி எண் : 8563254711 8. பத்தாம் வகுப்பில் பெற்ற
மதிப்பெண்கள் : 496/500 9. தாய்மொழி : தமிழ் 10. பயின்ற மொழிகள் : தமிழ்,ஆங்கிலம் 11. தட்டச்சு : இளநிலை,முதுநிலை 12. கணினி : டி.சி.ஏ மேற்கண்ட விவரங்கள்
அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன். தங்கள் நிறுவனத்தில்
தகவல் பதிவாளர் பணியினைத் தந்தால் என் பணியைச் சிறப்பாகவும் உண்மையாகவும் செய்வேன் என
உறுதியளிக்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள வா.நிறைமதி |
5 |
42 |
காட்சிக்குப் பொருந்திய வரிகள் எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
|
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 அ. |
நாட்டு
விழாக்கள்: நமது நாட்டை எண்ணி
பெருமை கொள்ள எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள்
விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது
நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள்
கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டிற்காக தனியான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு முழுமையான
மக்களாட்சி அரசியலமைப்பு பெற்றநாளை குடியரசுநாள் விழாவாக ஜனவரி 26இல்
கொண்டாடுகிறோம். விடுதலைப்
போராட்ட வரலாறு: பதினைந்தாம் நூற்றாண்டு
காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில்
நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த
ஐரோப்பியர்கள்,குறிப்பாக ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையான
சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை ஆளத்தொடங்கினர்.இது பல
இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை
ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத் தூண்டினர். எண்ணற்றோர்
சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கொடிகாத்த குமரன்,
தீரன்சின்னமலை,வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன்,
சுப்பிரமணிய சிவா,மருதுபாண்டியர்கள் பகத்சிங்,பால கங்காதர திலகர்,நேதாஜி
ஆகியோர் அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களது கடுமையான
போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது. நாட்டு
முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: நாட்டுக்காக
மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள்.
இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும்.
துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத
வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல்
கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப்
பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள்
மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை
நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக்
கொள்ள வேண்டும். மரம்
நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள் பற்றிய
அறிவுறுத்தல் மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில்
மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.கல்வியறிவில் முக்கியத்துவத்தைப் பொது
மக்களுக்கு உணர்த்த வேண்டும். மேலும், காந்தி பிறந்த தினம்,ஆசிரியர் தினம்,
குழந்தைகள் தினம், கொடி நாள், விடுதலை நாள், வழிபாட்டு நாள் போன்ற விழாக்களைத்
தாமே முன்னின்று நடத்திய முனைய வேண்டும். ஆ) |
8 |
44 அ. |
வினாவுக்குப் பொருந்திய விடைகள்
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக (அல்லது) ஆ. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன்
இருக்கிறான்) முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி
கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி
தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து
வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்
அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத
ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி
தனது “ ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்
ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட
மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி. நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக்
கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். கடிதத்தில் இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும்
எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து
அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால்,
பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின்
பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது. ஆறுமுகம்: குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை
ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு
குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4
சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு
ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம்
நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 அ. |
முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம்
வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என
நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது
போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப்
பொருட்கள், கைவினைப் பொருட்கள்
என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற
பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். (அல்லது) ஆ) தரப்பட்ட குறிப்புகள் அல்லது தலைப்புகள் ,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு
,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
விடைக்குறிப்பை PDF வடிவில் பதிவிறக்க👇