மூன்றாம் திருப்புதல் தேர்வு
10.ஆம் வகுப்பு - தமிழ் மாதிரி வினாத்தாள்
மூன்றாம் திருப்புதல் தேர்வு
மாதிரி வினாத்தாள்-2023
10.ஆம் வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள் நேரம்:3.00 மணி
பகுதி-1 (மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: 15X1=15
1)
பாடு இமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டுஅடி உணர்த்தும் அறிவியல் செய்தி
அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல்நீர்
குளிர்ச்சி அடைதல்
இ) கடல்நீர் ஒலித்தல் ஈ) கொந்தளித்தல்.
2) சிலப்பதிகாரத்திலும்
மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
3) ”மருந்தே ஆயினும் விருந்தொடு உண்”
என்று குறிப்பிடும் நூல்
அ)
திருக்குறள் ஆ) கொன்றைவேந்தன்
இ) நற்றிணை ஈ) குறுந்தொகை
4)
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் யாது?
அ) துலா ஆ) சீலா இ) குலா ஈ) இலா
5) மேன்மை
தரும் அறம் என்பது-----------
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது ஆ)
மறுபிறப்பில் பயன்பெறலாம் என்று
அறம்செய்வது
இ) புகழ் கருவி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
6) அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்துவது
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய்
இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
7) இரு நாட்டு அரசர்களும் தும்பைப்
பூவைச் சூடி போடுவதன் காரணம்------
அ)
நாட்டை கைப்பற்றல் ஆ)
ஆநிரை கவர்தல்
இ)
வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
8)
வாய்மையே மழைநீராகி - இத்தொடரில்
வெளிப்படும் அணி
அ) உவமை
ஆ) தற்குறிப்பேற்றம் இ) உருவகம்
ஈ) தீவகம்
9)”ஆலும்
வேலும் பல்லுக்குறுதி: நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” இத்தொடர் உணர்த்தும் மரங்களின்
பெயர்களையும் தமிழெண்களையும் குறிப்பிடுக
அ) ஆலமரம்,வேலமரம்
- ௪‚௨
ஆ) ஆலமரம்,வேப்பமரம் – ரு , க
இ) அரச மரம்,வேங்கை மரம் – க , உ ஈ) வேப்பமரம்,ஆலமரம் - ௪‚௬
10)
உணவு
தொடர்பான பழமொழிகளைத் தேர்ந்தெடுக்க
அ) ஆடிப்பெருங்காற்றில் அம்மியும்
நகரும் ஆ)
வல்லவனுக்குப்
புல்லும் ஆயுதம்
இ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஈ) அளவுக்கு மிஞ்சினால்
அமுதமும் நஞ்சு
11)ஓரெழுத்தில்
சோலை:இரண்டெழுத்தில் வனம் -புதிருக்கான விடையைத் தேர்க்
அ)காடு ஆ)நாடு இ)தோடு ஈ)வீடு
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும்
பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ்
சிலம்பே! மணிமேகலைவடிவே!
முன்னும்
நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
12) இப்பாடலில் தென்னன் என்பது யாரைக் குறித்தது?
அ) சோழன் ஆ) பாண்டியன் இ) சேரன் ஈ) பல்லவன்
13) மகளே என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை ஆ) பெயரெச்சத்தொடர்
இ) விளித்தொடர் ஈ) எண்ணும்மை
14)நற்கணக்கே
-பிரித்துஎழுதுக
அ) நற்+கணக்கே
ஆ)
நல்+கணக்கே இ) நல்க்+கணக்கே ஈ) நல்ல+கணக்கே
15)எதுகைநயத்தைத்தேர்ந்தெடு
அ) தென்னன்-இன்னறு ஆ) தென்னன்- மகளே
இ)
மன்னும்-சிலம்பே ஈ) முடி-மணி
பகுதி-2(மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க:
(21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க)
16) விடைகளுக்கேற்ற வினாத்தொடர்
அமைக்க.
அ)பூவின் தோற்ற நிலை அரும்பு ஆகும்.
ஆ)தமிழர் பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு
இணைத்துக்கொள்ளும்
இயல்புடையவர்கள்
17)
வசன கவிதை-குறிப்பு வரைக..
18) ”கரம்பிடும்பை இல்லார்”-
இத்தொடரின் பொருள் கூறுக
19) திரைப்படமாக எடுக்கப்பட்ட ஜெயகாந்தன்
படைப்புகள் யாவை?
20)
வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம,பொ.சி என்பதற்குச்
சான்று தருக.
21) ’பல்லார்’ எனத்தொடங்கும் திருக்குறளை
அடிமாறாமல் எழுதுக.
பிரிவு-2
5X2=10
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய
விடையளிக்க:
22) கிளர்ந்த – பகுபத உறுப்பிலக்கணம்
தருக.
23) கலைச்சொல் தருக: அ)BELIEF ஆ)PHILOSOPER
24) புறத்திணைகளில் எதிரெதிர்த்
திணைகளை அட்டவணைப்படுத்துக.
25) நிறுத்தக்குறியிடுக:
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட
பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக்காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த
சிறுமையையும் நினை வூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் - ம.பொ.சி.
26) இரு சொற்களையும்
ஒரே தொடரில் அமைக்க: அ.மலை-மாலை. ஆ.கலை-காலை
27) அண்ணன் நேற்று
வீட்டிற்கு வந்தது. அண்ணன் புறப்படும்போது அம்மா வழியனுப்பியது.
வழுவை,வழாநிலையாக மாற்றுக.
28) வினா எத்தனை வகைப்படும்?
அவை யாவை?
பகுதி-3(மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29)புளியங்கன்று ஆழமாக
நடப்பட்டுள்ளது.
-இது போல் இளம்பயிர்வகை மூன்றன் பெயர்களை
எழுதி அவற்றைத் தொடரில் அமைக்க.
30) பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:-
ஐ.நா.
அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில்
புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு
(translation) என்பது எழுதப்பட்டதைமொழிபெயர்ப்பது;
ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது
விளக்குவது ( I n t e r p r e t i n g ) எ ன்றே சொல்லப்படுகிறது . ஐ.நா .அவையில் ஒருவர் பேசுவதைமொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்
பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார் . ஒருவர் பேசுவதைக்
காதணி கேட்பியில் (Headphone) கேட்டபடிசில
நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி
வழியே பேசுவார் . அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள
காதணி கேட்பியை எடுத்துப் பொருத்திக் கொண்டு அவரதுமொழியில் புரிந்துகொள்வார் .
1. மொழிபெயர்ப்பு என்பது யாது?
2. மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில்
எவ்வாறு குறிப்பிடுவர்?
3. இப்பத்திக்குப்
பொருந்திய தலைப்பொன்று தருக..
31) “மாலவன் குன்றம்
போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்” – கூற்றினை விளக்குக.
பிரிவு-2
2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க
(34-ஆவது வினாவிற்குக் கட்டாயமாக
விடையளிக்க)
32) தமிழன்னையை வாழ்த்துவதற்கான
காரணமாகப் பாவலரேறு கூறுவன யாவை?
33)
வைத்தியநாதபுரி முருகன் குழந்தை யாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை
ஆடியநயத்தை விளக்குக.
34) அ) “அன்னை
மொழியே” - எனத்தொடங்கும் வாழ்த்துப் பாடலை
அடிமாறாமல் எழுதுக.
(அல்லது)
ஆ) “நவமணி” - எனத்தொடங்கும் தேம்பாவணிப் பாடலை
அடிமாறாமல் எழுதுக.
பிரிவு-3
2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35) 'கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!'
-இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர்
வகைகளை எழுதுக.
36) அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - இக்குறட்பாவில் பயின்று வந்த அணியைச் சுட்டி
விளக்குக.
35) அலகிட்டு வாய்பாடு
எழுதுக:
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்
பகுதி-4(மதிப்பெண்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
5X5=25
38) அ) சிலப்பதிகாரம் மருவூர்ப்பாக்க
வணிக வீதிகளை இக்கால வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
(அல்லது)
ஆ)இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் விவரித்து எழுதுக.
39) அ) பல்பொருள் அங்காடி
ஒன்றில் குறிப்பிட்ட நாள் முடிவடைந்த உணவுப்பொருள் விற்கப்பட்டது குறித்து உணவுப் பாதுகாப்பு
ஆணையருக்குப்
முறையீட்டுக் கடிதம்
எழுதுக.
(அல்லது)
ஆ)புதிதாகத் திறன்பேசி வாங்கியிருக்கும் தம்பிக்குத்
திறன்பேசி பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறிக் கடிதம் எழுதுக.
40)காட்சியைக் கண்டு
கவினுற எழுதுக.
41) மதுரை மாவட்டம்,
முகில் நகர், மறையோன் வீதி, 45 ஆம் இலக்க வீட்டில், திருப்பரங்குன்றம்
நகரில் குடியிருக்கும் கிள்ளி வளவன் மகன் தமிழ்வேந்தன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பில் சேர
விரும்புகிறார். தேர்வர் தன்னை இனியனாகக் கருதி
கொடுக்கப்பட்ட சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை
நிரப்புக.
42)அ)பள்ளியிலும் வீட்டிலும்
உனது அன்றாடச் செயல்களைப் பட்டியலிடுக.
(அல்லது)
ஆ)மொழிபெயர்க்க:
The Golden sun
gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The
milky clouds start their wandering.The colourful birds start twitting their
morning melodies in percussion.The cute butterflies dance around the flowers.
The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and
makes everything pleasant.
பகுதி-5
(மதிப்பெண்:24)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க: 3X8=24
43)அ)தமிழின் சொல்வளம்
பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவைகுறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை
விவரித்து எழுதுக.
(அல்லது)
ஆ)
ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ்
ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.
44)அ அழகிரிசாமியின்” ஒருவன் இருக்கிறான்” என்னும்
சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும்
கதைமாந்தர் குறித்து எழுதுக
(அல்லது)
ஆ)கோபல்லபுரத்து மக்கள் கதையில் உங்கள் மனம் கவர்ந்த
கதாபாத்திரத்தைப் பற்றி விவரித்து எழுதுக.
45)அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை- அரசுப்பொருட்காட்சி- அரங்குகள்
– துறை விளக்கங்கள் – விற்பனை நிலையங்கள் – விளையாட்டு நிகழ்வுகள் – இலக்கியக் கூட்டங்கள்
- மகிழ்ச்சி – முடிவுரை.
(அல்லது)
ஆ)குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை-சாலைப்பாதுகாப்பு உயிர்ப்பாதுகாப்பு-சாலை விதிகள்-ஊர்தி ஓட்டுநருக்கான நெறிமுறைகள்-விபத்துகளைத் தவிர்ப்போம்-விழிப்புணர்வைத் தருவோம்-முடிவுரை
மேல்நிலை
வகுப்பு – சேர்க்கை
விண்ணப்பப் படிவம்
சேர்க்கை எண்: -------- நாள்: ----------
வகுப்பும்
பிரிவும்:
------------------
1. மாணவரின் பெயர் :
2. பிறந்த
நாள் :
3. தேசிய
இனம் :
4. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் :
5. வீட்டு
முகவரி :
6. இறுதியாகப்
படித்த வகுப்பு :
7. பயின்ற
மொழி :
8. இறுதியாகப்
படித்த பள்ளியின் முகவரி :
9. பத்தாம்
வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் :
தேர்வின்
பெயர் |
பதிவு
எண்
- ஆண்டு |
பாடம் |
மதிப்பெண் (100) |
|
|
தமிழ் |
|
ஆங்கிலம் |
|
||
கணிதம் |
|
||
அறிவியல் |
|
||
சமூக
அறிவியல் |
|
||
மொத்தம் |
|
9. மாற்றுச்
சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா? :
10. தாய்மொழி :
11. சேர
விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும் :
மாணவர் கையெழுத்து