இரண்டாம் திருப்புதல் தேர்வு-2023 சென்னை மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்க👇
10.ஆம் வகுப்பு தமிழ் - உத்தேச விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
அ. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது |
1 |
2.
|
இ.
அன்மொழித்தொகை |
1 |
3.
|
ஆ.
தளரப்பிணைத்தால் |
1 |
4.
|
இ.
சிரத்தையோடு செய்தல் |
1 |
5.
|
ஈ.
வானத்தையும் பேரொலியையும் |
1 |
6.
|
இ.
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் |
1 |
7.
|
இ.
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு |
1 |
8.
|
ஆ.
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் |
1 |
9.
|
அ.
கூவிளம் தேமா மலர் |
1 |
10. |
ஆ.
3,1,4.2 |
1 |
11.
|
ஈ.
கோயம்புத்தூர்- கோவை |
1 |
12. |
ஈ.
தனிப்பாடல் திரட்டு |
1 |
13. |
அ.
இரட்டுற மொழிதலணி |
1 |
14. |
ஆ.
கடல் |
1 |
15. |
இ.
சந்தக்கவிமணி தமிழழகனார் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ. நூலின்
பயன் எவற்றுக்காக இருத்தல் வேண்டும்? ஆ. பண்டைத்
தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் செழித்திருந்த பண்பாடு யாது? |
2 |
17 |
மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்து
உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் புகழும் பெருமையும் அழியாத வகையில் ,அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி
பாடப்படுவதன் நோக்கமாகும். |
2 |
18 |
ஒருவர் பொருளை ஈட்டவேண்டும்; அவருடைய பகைவரைவெல்லும்
கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை. |
2 |
19 |
அரும்பு: பூவின் தோற்றநிலை போது: பூ விரியத் தொடங்கும் நிலை; மலர்(அலர்):
பூவின் மலர்ந்த நிலை வீ: மரஞ்செடியினின்று பூ
கீழேவிழுந்த நிலை செம்மல்: பூ வாடினநிலை. |
2 |
20 |
அவையம்=மன்றம்
அல்லது சபை .
வழக்கை
விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம். |
2 |
21 |
செயற்கை அறிந்தக்
கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து
செயல். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
புவியில்
வாழும் மக்களில் சிலர் பழமிருக்கக் காய் உண்பதைப்போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி
துன்புறுகின்றனர். |
2 |
23 |
அறியேன் -
அறி + ய்+ ஆ + ஏன் அறி - பகுதி ய்- சந்தி ஆ
– எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று
விகுதி |
2 |
24 |
நான்கு- ௪ , ஐந்து-
௫ , இரண்டு- ௨ |
2 |
25 |
அ.
கடல் காற்று ஆ. ஆவணம் |
2 |
26 |
“சீசர் எப்போதும் என் பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது” என்று இளமாறன்
தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் |
2 |
27 |
அ.
மீண்ட துயர் ஆ. எழுதிய கவிதை |
2 |
28 |
8
வகை – சுட்டு விடை ,மறை விடை,நேர் விடை , ஏவல் விடை , வினா எதிர் வினாதல் விடை ,உற்றது உரைத்தல்
விடை , இனமொழி விடை. |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
உயிராய்
நான்;மழையாய் நான், நானின்றி பூமியே சுழலாது , பூமித்தாயின் குருதி நான் |
3 |
30 |
அ)சங்க இலக்கியங்கள்
காட்டும் அறங்கள் மனித வாழ்வுக்குத் தேவையான பண்பு நலன்களை உருவாக்குகின்றன. ஆ)இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில்
நன்மை கிட்டும் என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இ)நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே
அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.இக்கருத்து இன்றைக்கும்
பொருந்தக்கூடியது. ஈ)மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்
இன்றைக்கும் தேவையே. |
3 |
31 |
அ. மொழிபெயர்ப்பால் ஆ. அனைத்துலக அறிவு இ. மொழிபெயர்ப்பு |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும். ü கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ü கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும். ü கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும். |
3 |
|
33 |
வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத்தூரிகை
ஆகியவற்றையே மையமாகக் கொண்டு சிலரது வாழ்க்கை சென்று கொண்டுள்ளது.எத்தனை முறை
புழுதி ஒட்டினாலும்,எத்தனை முறை அழுக்கானாலும் சலிக்காமல் சுத்தம்
செய்து கொண்டே இருக்கின்றனர். என்றாவது ஒரு நாள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற
நம்பிக்கையில்… |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
35 |
ஆற்றுநீர்ப் பொருள்கோள் –
தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின் நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது. |
3 |
36 |
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத்
தன்மையினைக் கேட்பவர்களின்மனம் மகிழுமாறு உரிய சொற்களை
அமைத்துப்பாடுவது தன்மையணியாகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர். |
3 |
37 |
கருவிளங்காய் கூவிளங்காய்
கருவிளம் தேமா கூவிளம் கூவிளம்
நேர். |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||||||||
38 |
கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்: ”பூமித்
தாயே என் அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக” எனக் கருணையன் வேண்டினான். குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள
வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான்.அதன்மேல்
மலர்களையும் தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: என் தாய்
கூறும் உண்மையான சொற்களையே மழைநீராகக் கொண்டு தாயின் மார்பில் ஒரு மணிமாலைபோல்
அசைந்து அழகுற வாழ்ந்தேன்.இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும்
முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும்
என் தாயை இழந்த வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான். கருணையனின் தவிப்பு: ”எனது மனம் பரந்த மரக்கிளையில் இருந்து
பறிக்கப்பட்ட மலரைப்போல் வாடுகிறது. தீயையும்,நஞ்சையும் முனையில்
கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான புண்ணின் வலியால் வருந்துவது போன்றது
எனது துயரம்.துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான்
இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு
செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். தனித்து விடப்பட்ட
கருணையன்: “எனக்கு உயிர் பிழைக்கும் வழி தெரியவில்லை, எனது
உடல் உறுப்புகள் இயங்காத நிலையாய் நான் உணர்கிறேன்.உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக்
கொள்ளும் வழிகளை என்னால் அறிய முடியவில்லை. காட்டில்
செல்வதற்கான வழிகளையும் அறியேன். எனது தாய் தன்
கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிந்துள்ளேன். என்னைத் தனியாகத் தவிக்க விட்டு
விட்டு எனது தாய் மட்டும் சென்று விட்டாளே” என்று
அழுது புலம்பினான் பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன: நவமணிகள்
பதித்த மணி மாலைகளைப் பிணித்தது போன்று, நல்லறங்களை
மாலையாக அணிந்த கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப்போன்றே கூச்சலிட்டன. ஆ) மனோன்மணியம் சுந்தரனாரின்
வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும்
உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். |
5 |
||||||||||||||||||
39 |
ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) ஆ) ü அனுப்புநர்
முகவரி ,நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
||||||||||||||||||
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||||||||
41 |
மேல்நிலை
வகுப்பு
– சேர்க்கை விண்ணப்பப் படிவம் சேர்க்கை
எண்:
1234 நாள்: 15-02-2023 வகுப்பும் பிரிவும்: 11.ஆம் வகுப்பு/அறிவியல் பிரிவு 1. மாணவரின் பெயர் : இ.பூந்தளிர் 2. பிறந்த நாள் : 12-12-2008 3. தேசிய இனம் : இந்தியன் 4. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : இளங்கோ 5. வீட்டு முகவரி : 29 திரு.வி.க தெரு,
பாரதியார் நகர்
பூஞ்சோலை
, கடலூர் மாவட்டம் 6. இறுதியாகப் படித்த வகுப்பு : 10.ஆம் வகுப்பு 7. பயின்ற மொழி : தமிழ், ஆங்கிலம் 8. இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி : அரசினர் மேனிலைப் பள்ளி பூஞ்சோலை
, கடலூர் மாவட்டம் 9. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் :
9. மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா? : ஆம் 10. தாய்மொழி : தமிழ் 11. சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும் : அறிவியல் பிரிவு/
தமிழ்
இ.பூந்தளிர் மாணவர்
கையெழுத்து |
5 |
||||||||||||||||||
42
அ. |
வினாவுக்கேற்ற
விடை எழுதியிருப்பின் முழுமதிப்பெண் வழங்குக ஆ)
பொன்னிற கதிரவன் தன் ஒளிக்
கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை
உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம்
வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து , மணம் வீசும். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) வினாவுக்கேற்ற
விடை எழுதியிருப்பின் முழுமதிப்பெண் வழங்குக ஆ)
சுயசிந்தனை,படைப்பாற்றல் , வண்ணப் பயன்பாடு ,எளிதி விளக்கிக் கூறும் தன்மை ஆகியவற்றைக்
கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கலாம் |
8 |
44 |
ü
அ)
அறிவும்
பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும்
மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü
கல்விக்கு இனமோ மதமோ
சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü
வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது. ü
மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும்
படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற
இயலாது. ü
கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து
இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று
கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம். (அல்லது) ஆ) வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி
கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி
தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து
வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்
அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத
ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி
தனது “ ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்
ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட
மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி. நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக்
கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். கடிதத்தில் இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும்
எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து
அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால்,
பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின்
பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது. ஆறுமுகம்: குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை
ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு
குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4
சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு
ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம்
நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 |
அ.வினாவுக்கேற்ற விடை எழுதியிருப்பின்
முழுமதிப்பெண் வழங்குக ஆ. முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம்
வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள்
என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற
பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும்
நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம் |
|