10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -JUNE WEEK 2 (2023-24)

            10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 07-06-2023 முதல் 10-06-2023        

மாதம்         ஜூன்

வாரம்     :  இரண்டாம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.அன்னை மொழியே 

                                            2.தமிழ்ச்சொல் வளம்

1.கற்றல் நோக்கங்கள்   :

     தமிழ்மொ ழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் உரையாற்றுதல். 

      Ø மொழியிலுள்ள வகைப்படுத்தப்பட்ட சொல்வளங்களைச் சொற்களின் வாயிலாகப் பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து கையாளுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

தமிழ்ச்சொல் வளம் காணொளி


அன்னை மொழியே - மனப்பாடப் பாடல்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  தமிழின் சிறப்பை உணர்த்தும் இனியப் பாடல் பாடி அறிமுகம் செய்தல்

       Ø  அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் தாவரங்களின் உறுப்பைக் குறிக்கும் தமிழ்ச்சொற்களை கரும்பலகையில் எழுத வைத்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

   Ø  பெருமைகள் மிகுந்த தமிழை தலை தாழ்த்தி வணங்குகிறோம்.

    Ø  செழுமை மிக்க தமிழே ! எமக்குயிரே ! சொல்லுதற்கரிய நின் பெருமைதனை என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறுதான் விரித்துரைக்கும் ? பழம்பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழே !   

  Ø  பாடலில் உள்ள நயங்கள் அறிதல் ( எதுகை, மோனை,இயைபு, பொருள் )

   Ø  தமிழின் சொல்வளத்தையும்,பொருள் வளத்தையும் அறிதல்

§ அடிவகை

§  கிளைப்பிரிவு

§  இலைவகை

§  கொழுந்து வகை

§ பிஞ்சு வகை

§  மணி வகை

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

    Ø  பெருஞ்சித்திரனாரின் சிறப்புகல்;

    Ø  தமிழின் பெருமையை அறிதல்.

   Ø  கவிதையின் நயங்களை உணர்த்துதல்

   Ø  தாவரங்களின் சினைப்பெயர்களைப் பற்றிக் கூறல்

   Ø  அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு தமிழ்ச்சொல் வளத்தைக் கூறல்

  Ø  தமிழ் ஆழ்ந்த சொல் வளமுடையது என்பதை உணர்த்துதல்

6.கருத்துரு வரைபடம்:

அன்னை மொழியே

தமிழ்ச்சொல் வளம்

7.மாணவர் செயல்பாடு:

    Ø  அன்னை மொழியே – மனப்பாடப் பாடலை பிழையின்றி வாசித்தல்
   Ø  பாவலரேறின்  சிறப்புகளை அறிதல்
   Øஅன்னை மொழியே- கவிதையில் உள்ள நயங்களை அறிதல்
   Ø  சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்
  Ø  தமிழ்ச்சொல் வள்;அம் பற்றி அறிதல்
    Øதாவரங்களின் சினைப்பெயர்களை அறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
    Ø  அன்னை மொழியே பாடலின் ஆசிரியர் யார்?
    Ø  பாப்பத்தே என்பதன் பொருள் யாது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
  Ø  கவிதையில் உள்ள மோனை சொற்கள் யாவை?
   Ø  சம்பா நெல் வகைகள் சிலவற்றைக் கூறுக
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  @ தமிழின் சொல்வளத்தை விளக்குக.
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       @ 1001- தமிழ்மொழியின் செழுமை குறித்து தனித்தமிழில் ஆற்றலுடன் உரையாற்றுதல்,கவிதையைப் படித்துச் சுவைத்தல்,பொருளுணர்தல்

Ø          @ 1002 மொழியிலுள்ள வகைப்படுத்தப்பட்ட சொல்வளங்களின் பொருளையும் நுட்பத்தையும் பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து கையாளுதல்  புதிய சொற்களையும் உருவாக்கி எழுதுதல்




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை