10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 12-06-2023 முதல் 17-06-2023
மாதம் : ஜூன்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. இரட்டுற மொழிதல்
2. உரைநடையின் அணிநலன்கள்
3.எழுத்து,சொல்
1.கற்றல் நோக்கங்கள் :
@ உரைநடையிலுள்ள அணிநலன்களை உள்வாங்கிக்கொண்டு நயமிகு தொடர்களை உருவாக்கி வெளிப்படுத்துதல்.
Ø மொழி தனித்தும் தொடர்ந்தும் பொ ருள்தரும் நுட்பத்தை அறிந்து பயன்படுத்துதல்.
Ø சொல்லாக்க விதிமுறைகளை அறிந்து புதிய சொற்களை உருவாக்குதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø சிலேடை என்பதன் பொருள் உணர்த்தி பாடத்தை அறிமுகம் செய்தல்
Ø உரைநடையில் அல்லது அன்றாட பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் சில நயங்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ தமிழ், இயல் இசை நாடகம் எனமுத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடைஆகிய முச்ச ங்கங்களால்வளர்க்கப்பட்டது; ஐம்பெருங்கா ப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
@ கடல் , முத்தினையும்அமிழ்தினையும் தருகிறது; வெண்சங்கு ,சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது;
Ø இலக்கணை,இணை ஒப்பு,எதிரிணை இசைவு, சொல்முரண், முரண்படு மெய்ம்மை
Ø அளபெடை,சொல்,தொழிற்பெயர்,வினையாலணையும் பெயர்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø இரட்டுற மொழிதலின் பொருளை உணர வைத்தல்
Ø தமிழும்,கடலும் ஒன்றென இரட்டுற மொழிதல்
Ø கவிதையின் நயங்களை உணர்த்துதல்
Ø உரைநடையின் அணிநலன்களைத் தற்காலச் சான்றுகளுடன் விளக்குதல்
Ø அளபெடை மற்றும் அதன் வகைகளைத் தக்க சான்றுகளுடன் மாணவர்களுக்குப் புரியவைத்தல்.
Ø தொழிற்பெயர்,வினையாலணையும் பெயர் வேறுபாட்டை மாணவர்க்கு எளிதில் விளங்குமாறு விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
Ø கவிதையை மீண்டும் வாசித்தல்
Ø அன்றாய வாழ்வில் பயன்படுத்தும் மொழிக்கூறுகளைப் பற்றி உரையாடி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1003- மொழி தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரும் நுட்பத்தையும் அதன் நயங்களையும் அறிந்து முறையாக மொழியைப் பயன்படுத்துதல்
Ø @ 1004 - உரைநடையில் பயின்று வரும் அணிநயங்களைக் கண்டறிதல், பொருளுக்குப் பொருந்திவரும் தன்மையுணர்ந்து படித்துச் சுவைத்தல் நயமான தொடர்களுடன் உரைகளை எழுத முற்படுதல்.
@ @ 1005 - எழுத்து சொல்லின் அடிப்படை இலக்கணம் அறிந்து மொழியைக் கையாளுதல்.
10.ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க