6. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 12-06-2023 முதல் 17-06-2023
மாதம் : ஜூன்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.கவிதைப்பேழை(தமிழ்க்கும்மி)
2.உரைநடை உலகம் (வளர்தமிழ்)
1.கற்றல் நோக்கங்கள் :
@ தமிழ் மொழியின் இனிமையை உணர்ந்து போற்றுதல்
Ø தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளைப் பட்டியலிடுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
தமிழர்கள் தம் தாய் மொழியாகிய தமிழை உயிராகக் கருதி போற்றி வந்துள்ளனர். புலவர் பலர் தமிழைப் பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர் அத்தகைய பாடல்களுள் கும்மிப்பாடல் ஒன்றை இங்கு அறிவோம்.
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
செய்யுள் மற்றும் உரைநடைப்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
5.மனவரைபடம் :
தமிழ்க்கும்மி
தமிழ்க்கும்மி:
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார். தேன்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.
இப்பாடலில் தமிழ்மொழியின் இயல்புகள் சிறப்பாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன.
வளர்தமிழ்மூத்தமொழி
எளிய மொழி
சீர்மை மொழி
வளமை மொழி
வளர்மொழி
புதுமை மொழி
அறிவியல் தொழில்நுட்ப மொழி
8.மதிப்பீடு:
தமிழ்க்கும்மி பாடலை இயற்றிவர் யார்?
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
முத்தமிழ் என்பது யாது?
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
@ தமிழ்க்கும்மி பாடலை இசையுடன் பாடி மகிழச் செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø 606- தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களை அறிந்திருத்தல் அவற்றைப் பற்றி கலந்துரையாடல்
Ø 610- பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதான கருத்துரைகளைப் பகர்தல், தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.