7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 12-06-2023 முதல் 17-06-2023
மாதம் : ஜூன்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.கவிதைப்பேழை (ஒன்றல்ல இரண்டல்ல)
2.உரைநடை உலகம் (பேச்சு மொழியும்,எழுத்து மொழியும்)
1.கற்றல் நோக்கங்கள் :
@ பழந்தமிழகத்தில் வாழ்ந்த வள்ளல்கள் வரலாற்றை அறிதல்
Ø பேச்சுமொழி, எழுத்துமொ ழியின் நுட்பங்களை அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு பதிவிறக்கம் செய்யலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) @ தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றிப்பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது. அதே போல@ தமிழ்மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது.
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
செய்யுள் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
5.மனவரைபடம் :
ஒன்றல்ல இரண்டல்ல
ஒன்றல்ல இரண்டல்ல
தமிழ்நாட்டின் பெருமை அளப்பரியது.மிகுந்த பொருள்வளமும் செல்வ வளமும் உடையது.பல்வேறு இலக்கிய வளங்களை உடையது.
இப்பாடலை இயற்றியவர் உடுமலை நாராயண கவி ஆவார்
இவர் பகுத்தறிவுக் கவிராயர் எனவும் அழைக்கப்படுகிறார்
இவர் பல திரைப்படப்பாடல்களை இயற்றியுள்ளார்.
பேச்சுமொழியும்,எழுத்துமொழியும்:@ மொழியின் வடிவங்கள்
@ பேச்சுமொழி
@பொருள்வேறுபாடு
@வட்டார மொழி
@கிளைமொழி
@ எழுத்துமொழி
8.மதிப்பீடு:
கிளைமொழி என்றால் என்ன?
தமிழ் வரிவடிவ வளர்ச்சியை விளக்குக
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
பாடப்பகுதியில் இடம்பெற்ற அணிகளைப்பற்றி எழுதிவரச்செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø 711- படித்தவற்றை பற்றிச் சிந்தித்து வினாக்கள் எழுப்பி அவற்றை மேலும் சிறப்பாகப் புரிந்து கொள்ள முயலுதல்
Ø 709- ஒன்றைப் படித்து முழுமையான பொருண்மையை உணர்ந்து அதன் பயன்பாட்டினைக் கூறுதல்