8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -JUNE 3 RD WEEK(2023-24)

     8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 12-06-2023 முதல் 17-06-2023       

மாதம்         ஜூன்

வாரம்     :  மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     : 1.உரைநடை உலகம் (தமிழ் வரிவடிவ வளர்ச்சி)

                    2.விரிவானம் (சொற்பூங்கா)

1.கற்றல் நோக்கங்கள்   :

       தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி நிலைகளை அறிதல்

      @ ஓரெழுத்து ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டு சொல்லாட்சித் திறனை வளர்த்தல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு பதிவிறக்கம் செய்யலாம்)



3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

           # மனிதன் பேசத்தொடங்கும் முன் தனது எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்தினான் என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

         # ஓரெழுத்தொருமொழிகள் சிலவற்றைக்கூறி,அவற்றுக்கு விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

                   Ø  எழுத்துகள் தொடக்கத்தில் படிப்படியாகத் தோற்றம் பெற்றன.அச்சுக்கலையே வரிவடிவம் விரைவாக வளர்ச்சிபெற உதவியது. வட்டெழுத்து,கண்ணெழுத்து முதலியன எழுத்துகளின் தொடக்கநிலையாக இருந்தன. வரி வடிவத்தில் காலப்போக்கில் உருவமாற்றமும்,சீர்திருத்தமும் ஏற்பட்டது.

              Ø  உயிரெழுத்து வரிசையில் 6 எழுத்துகளும், உயிர்மெய் வரிசையில் 36 எழுத்துகளும் ஓரெழுத்தொருமொழிகளாகும்.

5.ஆசிரியர் செயல்பாடு :

       Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

        Ø எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சியைப் படிப்படியாக விளக்குதல்

        Ø எழுத்து சீர்திருத்தஙகள் வரிவடிவ வளர்ச்சிக்கு எவ்வாறு உதவின எனபதை உணர்த்துதல்

        Ø   உரைப்பகுதியை உரிய ஏற்ற இரக்கத்துடன் படித்துக்காட்டுதல்

        Ø  ஓரெழுத்தொருமொழிகளின் பொருளை மாணவர்களுக்குக் கூறுதல்

6.கருத்துரு வரைபடம்:

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

சொற்பூங்கா

7.மாணவர் செயல்பாடு:

Ø  மாணவர்கள் தமிழ் வரிவடிவ வளர்ச்சி எவ்வாறு படிப்படியாக நிகழ்ந்துள்ளது என உணர்தல்.

Ø   எழுத்துச்சீர்திருத்தததைப் பற்றி அறிதல்

@ எழுத்துகளின் உருவமாற்றத்தைப் பற்றி அறிதல்

@ ஓரெழுத்தொருமொழிகளின் பொருளறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

  • தமிழ்மொழி வாழ்த்தை இயற்றிவர் யார்?

  • பாரதியாரின் இயற்பெயர் என்ன?


இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

  • வைப்பு என்ற சொல்லின் பொருள் என்ன?

  • தமிழ்மொழி மரபு பாடல் எந்நூலில் உள்ளது?


உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

      # ஐம்பூதங்களைப் பற்றி நீங்கள் அறிந்த செய்திகளை விளக்குக

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

       @ 803படித்தவற்றைப் பற்றி சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்துதல்

       @ 814 படிப்பவர் மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனத்தில்கொண்டு பயன் விளைவிக்கும் வகையில் எழுதுதல்.

       @ 813- தேவைப்படும் பார்வை நூல்களாகிய அகராதி, கலைக்களஞ்சியம் போன்றவற்றையும் நிலவரைபடம், இணையத்தளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல். (பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்.)

      திறன்கள்:

      @ படித்தல்,பேசுதல்

                                                 8.ஆம் வகுப்பு கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க👇


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை