7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 07-06-2023 முதல் 10-06-2023
மாதம் : ஜூன்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : கவிதைப்பேழை(எங்கள் தமிழ்)
1.கற்றல் நோக்கங்கள் :
@ செய்யுளைப் படித்து மையக்கருத்தை எடுத்து உரைத்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
எங்கள் தமிழ் - காணொளி
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
தமிழர்கள் தம் தாய் மொழியாகிய தமிழை உயிராகக் கருதி போற்றி வந்துள்ளனர். புலவர் பலர் தமிழைப் பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர் அத்தகைய பாடல் ஒன்றை இங்கு அறிவோம்.
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
செய்யுள் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
5.மனவரைபடம் :
எங்கள் தமிழ்
எங்கள் தமிழ்:
நமது பாடப் பகுதியில் உள்ள எங்கள் தமிழ் பாடலை இயற்றியவர் நாமக்கல் கவிஞர் ஆவார்.
அவரது இயற்பெயர் இராமலிங்கனார் என்பதாகும்.
இவர் விடுதலைப்போராட்ட வீரர்,கவிஞர்,எழுத்தாளர் எனப் பன்முகங்களைக் கொண்டவர்
இவர் காந்தியக்கவிஞர் என்றும் போற்றப் படுகிறார்.
நாமக்கல் கவிஞர் தமிழ்மொழி அன்பையும்,அறத்தையும் தூண்டும் இனிய மொழி என்கிறார்.
8.மதிப்பீடு:
எங்கள் தமிழ் பாடலை இயற்றிவர் யார்?
நாமக்கல் கவிஞரின் இயற்பெயர் என்ன?
விரதம் என்ற சொல்லின் பொருள் என்ன? விளக்குக
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
பாடப்பகுதியில் இடம்பெற்ற அணிகளைப்பற்றி எழுதிவரச்செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø 713- உரைநடைகள் கதைகள் பாடல்களைப் படித்து பல்வேறு வகையான மொழி நடைகளையும் வருணனைகளையும் (உணர்வு சார்ந்தவை இயற்கை வருணனை போன்றவை )இனம் காணல்