8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -JUNE 2 ND WEEK(2023-24)

    8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 07-06-2023 முதல் 10-06-2023         

மாதம்         ஜூன்

வாரம்     :  இரண்டாம் வாரம்                                               

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     : 1. விதைப்பேழை(தமிழ்மொழி வாழ்த்து)

                    2. கவிதைப்பேழை(தமிழ்மொழி மரபு)

1.கற்றல் நோக்கங்கள்   :

       @ செய்யுளைப் படித்து அதன் நயங்களைப் போற்றும் திறன் பெறுதல்

        Ø தமிழ்மொழியின் மரபுகளை அறிந்து பயன்படுத்துதல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

தமிழ்மொழி வாழ்த்து - காணொளி

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  • மொழி கருத்தை அறிவிக்கும் கருவி மட்டுமன்று; அது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது; உணர்வுடன் கலந்தது.

  • தமிழர்கள் தம் தாய் மொழியாகிய தமிழை உயிராகக் கருதி போற்றி வந்துள்ளனர். புலவர் பலர் தமிழைப் பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர் அத்தகைய பாடல் ஒன்றை இங்கு அறிவோம்.

      மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

      தமிழ்மொழி வாழ்த்து:

  • நமது பாடப் பகுதியில் உள்ள தமிழ் மொழி வாழ்த்தை இயற்றியவர் பாரதியார் ஆவார்.

  •  அவரது இயற்பெயர் சி.சுப்பிரமணியன் என்பதாகும்.

  • பாரதியார் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போரிற்கு வித்திட்டார்.

  • பாரதிதாசன் பாரதியாரை ”சிந்துக்குத் தந்தை” என்று போற்றுகிறார்.

  • பாரதியார், ”தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!” , “ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ் மொழி வாழ்க!” என்று தமிழ் மொழியை வாழ்த்துகிறார்.

   தமிழ் மொழி மரபு

  • இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வொனம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவவுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவை ஆகும்.

5.ஆசிரியர் செயல்பாடு :

  @   செய்யுள் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்.

@ பாடப்பொருளை நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

தமிழ்மொழி வாழ்த்து


தமிழ்மொழி மரபு

7.மாணவர் செயல்பாடு:

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் மற்றும் உரைநடைப் பகுதியைப் பிரித்து சொற்களின் பொருள் விளங்குமாறு   படித்தல்.

Ø  தமிழ்மொழியின் பெருமைகளை உணர்தல்

@ சிறந்த மொழியுணர்வும்,மொழிப்பற்றும் பெறுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

  • தமிழ்மொழி வாழ்த்தை இயற்றிவர் யார்?

  • பாரதியாரின் இயற்பெயர் என்ன?


இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

  • வைப்பு என்ற சொல்லின் பொருள் என்ன?

  • தமிழ்மொழி மரபு பாடல் எந்நூலில் உள்ளது?


உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

      # ஐம்பூதங்களைப் பற்றி நீங்கள் அறிந்த செய்திகளை விளக்குக

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

       @ 804நமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற நாட்டுப்புறப்பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள்  ஆகியவற்றைப் பற்றிப் பேசுதல்

       @ 802 செய்தித்தாள்கள், இதழ்கள், கதைகள், தகவல் பகுதிகள், இணையம் போன்றவற்றில் தமிழில் உள்ள பல்வேறு வகை எழுத்துகளைப் படித்துப் புரிந்து கொண்டு அவற்றின் மீது கருத்துரை பகர்தல், முடிவு கூறல் மற்றும் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல் (வாய்மொழி வழி அல்லது சைகை வழி)

       @ 809-படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்

      திறன்கள்:

      @ படித்தல்,பேசுதல்

                                                 8.ஆம் வகுப்பு கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க👇



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை