அரசு
பொதுத் தேர்வு - ஜுன் 2023
பத்தாம்
வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
வினாத்தாளைப் பதிவிறக்க
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||
1. |
அ, வணிகக் கப்பல்களும்,ஐம்பெருங்காப்பியங்களும் |
1 |
|||||||
2. |
இ. தமிழர் பண்பாட்டில்
வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு |
1 |
|||||||
3. |
ஆ. பண்புத்தொகை |
1 |
|||||||
4. |
ஈ. வானத்தையும்
. பேரொலியையும் |
1 |
|||||||
5. |
இ. கல்வி |
1 |
|||||||
6. |
ஈ. கரகாட்டத்தின்
வேறுபெயர்கள் யாவை? |
1 |
|||||||
7. |
அ. வேற்றுமை உருபு |
1 |
|||||||
8. |
ஈ . சிலப்பதிகாரம் |
1 |
|||||||
9. |
இ. எம்+தமிழ்+நா |
1 |
|||||||
10. |
அ. அகவற்பா |
1 |
|||||||
11. |
ஆ. க உ |
1 |
|||||||
12. |
இ. சீராக |
1 |
|||||||
13. |
ஈ. பாடுகிறோம்
, கூறுகிறோம் |
1 |
|||||||
14. |
ஆ. பாரதியார் |
1 |
|||||||
15. |
அ. நெடுமை+காலம் |
1 |
|||||||
பகுதி
– 2 பிரிவு
- 1 |
|||||||||
16. |
வாருங்கள், நலமா?
,எப்பொழுது வந்தீர்கள்? |
2 |
|||||||
17. |
அ. ”தமிழா துள்ளி எழு’ எனும் தலைப்பையுடைய துண்டறிக்கையை
கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியவர் யார்? ஆ. விருந்தோம்பலை வலியுறுத்தும் அதிகாரம் எந்நூலில் அமைந்துள்ளது? |
1 |
|||||||
18. |
தினைச்சோற்றைப் பெறுவீர்கள் |
1 1 |
|||||||
19 |
தஞ்சம் – நேர்+நேர் -தேமா எளியன் – நிரை+நேர் – புளிமா பகைக்கு – பிறப்பு (அல்லது)
புளிமா |
2 |
|||||||
20. |
Ø காற்று இயற்கையின் உயிர்மூச்சு Ø
காற்றின்றி உலகில்லை |
2
|
|||||||
21
|
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு |
2
|
|||||||
பகுதி
– 2 / பிரிவு - 2 |
|||||||||
22 |
அ. உயிரெழுத்து ஆ. சின்னம் |
½ ½ ½ ½ |
|||||||
23 |
கிளர்ந்த – கிளர்+த்(ந்)+த்+அ கிளர் – பகுதி த் – சந்தி ந் – விகாரம் த் – இறந்தகால இடைநிலை அ – பெயரெச்ச விகுதி |
1 1 |
|||||||
24 |
பழங்காலத்திலே பாண்டியன்
ஆண்ட பெருமையைக்கூறி,சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி,
சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினை வூட்டி,
விடுதலைப் போரில் ஈடுபட வருமாறுதமிழர்க்கு அழைப்பு
விடுத்திருந்தேன், - ம.பொ.சி. |
1 1 |
|||||||
25. |
பெயர்ப்பயனிலை , வினைப்பயனிலை , வினாப்பயனிலை |
1 1 |
|||||||
26. |
“தேனிலே ஊறிய செந்தமிழின்
– சுவை தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே |
1 1 |
|||||||
27. |
வெட்சி- கரந்தை
, வஞ்சி-காஞ்சி , நொச்சி - உழிஞை |
1 1 |
|||||||
28.
|
அ.முருகன் பணத்தை அள்ளி இறைத்தான் ஆ. கோபத்தில் எதையும் செய்யாமல் ஆறப்போடுதல் நல்லது. |
2
|
|||||||
பகுதி
– 3 / பிரிவு - 1 |
|||||||||
29 |
அ)சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்
மனித வாழ்வுக்குத் தேவையான பண்பு நலன்களை உருவாக்குகின்றன. ஆ)இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில்
நன்மை கிட்டும் என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க
இலக்கியங்கள் கூறுகின்றன. இ)நீர்நிலைகளைப்
பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன.இக்கருத்து இன்றைக்கும் பொருந்தக்கூடியது.
ஈ)மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே. |
3
|
|||||||
30
|
அ. 5000 ஆ. ஆங்கிலம் இ. புதிய சொற்கள் உருவாக்கம் |
1 1 1 |
|||||||
31. |
# மறைகாணி எல்லாப் பக்கமும் திரும்பி காட்சிகளைப்
பதிவு செய்கிறது. # செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல் புதுமைகள்
சிறப்பாகச் செயல்படுகின்றன. # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல்
உதவியுள்ளது. |
3 |
|||||||
பகுதி
– 3 / பிரிவு - 2 |
|||||||||
32 |
ü
குசேல
பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü
இடைக்காடனார்
இறைவனிடம் முறையிட்டார் ü
இறைவன்
கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü
தன்
தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் |
3 |
|||||||
33. |
ü
உயிர்பிழைக்கும்
வழி அறியேன் ü
உறுப்புகள்
அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü
உணவினத்
தேடும் வழி அறியேன் ü
காட்டில்
செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார். |
3
|
|||||||
34. |
அ)அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும்
முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! தென்னன்
மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிததாழ வாழ்த்துவமே. ( அல்லது ) ஆ. தூசும்
துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு
முத்தும் மணியும் பொன்னும் அருங்கல
வெறுக்கையோடு அளந்துகடைஅறியா வளம்தலைமயங்கியநனந்தலைமறுகும்; பால்வகைதெரிந்தபகுதிப்
பண்டமொடு கூலம் குவித்தகூல வீதியும்;
* |
3
|
|||||||
பகுதி
– 3 பிரிவு
- 3 |
|||||||||
35 |
கருவிளம் கூவிளம் தேமாங்காய் தேமா கருவிளங்காய் தேமா பிறப்பு. |
3 |
|||||||
36. |
இயல்பான நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன்குறிப்பை ஏற்றிக்
கூறுவது. |
3 |
|||||||
37 |
அ) ஆற்றுநீர்ப் பொருள்கோள் |
3 |
|||||||
பகுதி
– 4 |
|||||||||
38 |
தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. v திராவிட மொழிகளில் மூத்தது. v பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து
தோன்றியவை. v தமிழ்மொழி 1800 மொழிகளுக்கு
வேர்ச்சொற்களையும்,180 மொழிக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது. v பிறமொழிச்சொல்லை நீக்கினாலும்
தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத்
தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும். v மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச்
சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும். |
5 |
|||||||
38 |
வினாவிற்கேற்ற விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
|||||||
39 ஆ |
·
அனுப்புநர் ·
பெறுநர் ·
ஐயா , பொருள் ·
கடிதச்செய்தி ·
இப்படிக்கு, ·
இடம்,நாள் ·
உறைமேல் முகவரி என்ற
அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும். வாழ்த்து மடல் நெல்லை, 26-12-2021. அன்புள்ள நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில்
நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ
முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி
அடைந்தேன். அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இதைப்போன்று வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள். இப்படிக்கு, உனது
அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல் முகவரி: க.இளவேந்தன், 86,மருத்துவர் நகர், சேலம்-2. |
½ ½ ½ 2 ½ 1 |
|||||||
40 |
ஏடு எடுத்தேன் கவி ஒன்று
எழுத என்னை எழுது என்று சொன்னது
இந்தக் காட்சி அர்த்தமுள்ள இந்தக் காட்சி சமூகத்திற்கு தேவையான காட்சி சமூக விளைவை ஏற்படுத்துக் காட்சி எல்லோருக்கும் அறிவுறுத்தும்
காட்சி |
5 |
|||||||
41. |
படிவத்தில் அனைத்து படிநிலைகளையும் சரியாக
நிரப்பி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|||||||
42 |
வினாவிற்குப் பொருந்திய விடைகள் எழுதியிருப்பின்
முழுமதிப்பெண் வழங்குக |
5 |
|||||||
42 |
கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம்
போன்றஇதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை, நிறைய பாடல்களுடன்
நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி
நடிப்பார்கள். பதினைந்திலிருந்து
இருபது கலைஞர்கள் ஒரு குழுவாக “ கூத்து குழு “
ஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென
பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள் குரலில் பாடுவர். கலைஞர்கள்
மிக கனமான உடைகளும், ஆபரணங்களும் அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு
கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை. |
5 |
|||||||
|
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று
வினா 1. சமூகக் கடலின் துளி 2. எல்லாரோடும் தன்னை இணைத்துக்கொள்ளும்போது. 3. அறத்தை ஏற்றல் 4. அற இலக்கிய காலம் 5. இயல்பானவை |
|
|||||||
|
பகுதி
– 5 |
|
|||||||
43.அ |
வினாவிற்குப் பொருந்திய விடைகள் எழுதியிருப்பின்
முழுமதிப்பெண் வழங்குக |
8 |
|||||||
|
வினாவிற்குப் பொருந்திய விடைகள் எழுதியிருப்பின்
முழுமதிப்பெண் வழங்குக |
8 |
|||||||
44. |
அ. கோபல்லபுரத்து
மக்கள் முன்னுரை: கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக
இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற
மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற
கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அவனது முகம் பசியால் வாடி
இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த
இளைஞரிடம் போய் அருகில் நின்று பார்த்தார்.அந்த
வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா “அருகிலிருந்து நீச்ச
தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில்
ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: ஒரு வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள்
கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது.
ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால்
குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்
பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு
பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். இளைஞன் அந்தப் பெயரை இதற்குள்
திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக்கொண்டான். ”எவ்வளவு
பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்
கொண்டான். சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்: சுப்பையாவும், அவருடன் இருந்தவர்களும் அன்னமய்யாவையும், இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா
தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். முடிவுரை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை
கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும்
விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே. |
8 |
|||||||
44 |
ஆ) வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி
கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி
தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும். மனிதநேயம் நலிந்து
வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்
அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத
ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி
தனது “ ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்
ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார். குப்புசாமியின்
குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட
மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி. நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக்
கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். கடிதத்தில் இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும்
எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து
அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால்,
பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின்
பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது. ஆறுமுகம்: குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை
ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு
குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4
சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு
ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக்
கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த
சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
|||||||
45 |
முன்னுரை: உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த
இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர்
என்பதை இக்கட்டுரையில் காண்போம். முச்சங்கம்: பாண்டிய
மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு
தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.மூன்று தமிழ்ச்சங்கங்களும் கடல்கோளால் அழிந்து போயின. சிற்றிலக்கியங்கள்: 96
சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு
சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி
போன்றவை குறிப்பிடத்தக்கன. காலந்தோறும் தமிழ்: சங்க
காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில் பல்வேறு
வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. முடிவுரை: இவ்வாறு
தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை
அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை. |
8 |
|||||||
45 |
ஆ. உட்தலைப்புகள் இட்டு கட்டுரை
அமைப்பில் விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
8 |