TEACHING AID TOOLS FOR ALL SUBJECTS

   அருமையான கற்பித்தல் துணைக்கருவிகள்

    அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு தமிழ்ப்பொழில் வலைதளத்தின் வணக்கங்கள். மாணவர்களுக்கு பாடங்களை திறம்பட கற்பித்தலுக்கான  தயாரிப்பில், மாணவர்களைப் பாடம் கற்கும் மனநிலைக்குத் தயார்படுத்துதல், அவர்களுடைய கற்கும் ஆர்வத்தை தூண்டுதல், பாட அறிமுகம், பாடப் பொருளை சுருங்கச் சொல்லி எளிதில் புரிய வைத்தல், மற்றும் அவர்களை மதிப்பிடுதல் முதலான அம்சங்கள் சிறப்பு பங்கு வகிக்கின்றன. கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் பிற செயல்பாடுகளுக்கு பழைய முறையில் அட்டைத்தாள்களை வெட்டியும் ஒட்டியும் அதில் வரைபடங்களை வரைந்து அல்லது படங்கள் மூலம் மாணவர்களுக்கு விளக்குவோம். கால மாற்றத்திற்கு ஏற்ப மாணவர்கள் மனநிலை மாறி வருவதால், அவர்களது கவனத்தை ஈர்க்க தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் அல்லது கற்பித்தல் உபகரணங்களை நாம் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வகையில் இப்பதிவில் எளிதாக நாம் மடிக்கணினி அல்லது தொலைபேசியை பயன்படுத்தியே கற்றல் கற்பித்தல் உபகரணங்களை எவ்வாறு எளிமையாக உருவாக்குவது என்ற அடிப்படையில் இரண்டு இணையவழி கருவிகளைப் பற்றி  காணவிருக்கிறோம்.

1.GOOGLE FORMS:
     இக்கருவியானது google வலைதளம் நமக்கு வழங்கக்கூடிய இலவசமான ஒரு  கருவியாகும். இக்கருவியை மதிப்பிடுதல் மற்றும் கற்றலுக்கு வலுவூட்டுதல் உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளுக்கு கற்பித்தல் துணைக் கருவியாக இதை பயன்படுத்த முடியும்.GOOGLE SLIDE மூலம்  சான்றிதழ்களை வடிவமைத்து இந்த google formவுடன் இணைத்து நீங்கள் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் வழங்க முடியும்.
   கூகுள் பார்மை எவ்வாறு கற்பித்தல் துணைக் கருவியாக பயன்படுத்த முடியும் என்பதை அறிவதற்கு முன்பாக  மடிக்கணினி அல்லது கணிப்பொறி இல்லாதவர்கள் கைபேசியை பயன்படுத்தியே எப்படி இது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பதை நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது.CHROME BROWSER ஐப் பயன்படுத்துதல் சிறப்பானது.
     
   SMART PHONE ஐ கணினியைப் போன்றே எளிமையாகப் பயன்படுத்த பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

      1.CHROME BROWSER ஐத் திறந்து அதன் மூலையில் மூன்று புள்ளிகளை CLICK செய்க.
    
     2.அடுத்து அதில் வரும் DESKTOP SITE என்பதை CLICK செய்க.

      google form மூலம் எப்படி துணைக் கருவிகளை உருவாக்குவது என்பதை தெளிவாக விளக்கும் காணொளி:
 

(நன்றி: கல்வி விதைகள் வலையொளி)

2.WORDWALL:

      WORDWALL  என்பது உலக அளவில் பயன்படுத்தக்கூடிய கற்பித்தல்

 துணைக்கருவிகளை உருவாக்கக்கூடிய ஒரு இலவச வலைத்தளமாகும். இந்த இலவச

 வலைதளத்தை பயன்படுத்தி மாணவர்களை எளிதில் கவரக்கூடிய வகையில் கற்பித்தல்

 துணைக்கருவிகளை உருவாக்க முடியும் அல்லது அவர்களை மதிப்பிடுவதற்கு சிறந்த

 துணை கருவிகளை உருவாக்க முடியும். இந்த வலைதளத்தை பயன்படுத்தி எவ்வாறு

 கற்பித்தல் துணைக் கருவிகளை மாணவர்களின் மனம் கவரும் வகையில்

 உருவாக்குவது என்பதைப் படிப்படியாக தெளிவாக விளக்கும் காணொளி



(நன்றி: கல்வி விதைகள் வலையொளி)

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை