10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 24-07-2023 முதல் 28-07-2023
மாதம் : ஜூலை
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.பரிபாடல் (கவிதைப்பேழை)
2. விண்ணைத்தாண்டிய நம்பிக்கை (விரிவானம்)
3.இலக்கணம்-பொது (கற்கண்டு)
1.கற்றல் நோக்கங்கள் :
Ø அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட் டுத்திறனைப் படித்துணர்ந்து எதிர்வினையாற்றல்.
Ø @ உரையாடல் வடிவில் கருத்துகளை வெளிப்படுத்தும் திறன்பெறுதல்.
Ø @ இலக்கணப் பிழையற்ற தொடரமைப்புகளைத் தெரிந்துகொண்டு பயன்படுத்துதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø மாணவர்கள் அன்றாடம் செய்யும் செயல்களில் பொதிந்துள்ள அறிவியலைப்பற்றித் தெரியுமா? என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
# பரிபாடல் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகும். பாடப்பகுதியிலுள்ள பாடலைஎழுதியவர் கீரந்தை யார். இந்நூல் “ஓங்கு பரிபாடல்” எனும் புகழுடையது.
# இது சங்கநூல்களுள் பண்ணோ டு பாடப்பட்ட நூல். உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ள னர். இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.
# அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் கற்பனை உரையாடல்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø அன்றாடச் செயல்களில் பொதிந்துள்ள அறிவியல் கூறுகளை விளக்குதல்
Ø அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் யார்? அவர் அறிவியல் துறையில் எதைக் கண்டு பிடித்துள்ளார் என விளக்குதல்.
Ø அன்றாடப் பேச்சுவழக்கில் உள்ள வழு,வழுவமைதிகளைப் பட்டியலிட்டு விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
பரிபாடல்
விண்ணைத்தாண்டிய நம்பிக்கை
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
# 1019- செய்யுள் கருத்துகயைொடு அறிவியல் பெய்திகளை ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளுதல்.