8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 10-07-2023 முதல் 14-07-2023
மாதம் : ஜூலை
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : நிலம் பொது,வெட்டுக்கிளியும் சருகுமானும்
1.கற்றல் நோக்கங்கள் :
@ பழங்குடியினர் இயறகையைப் போற்றும் உணர்வை அறிந்து பின்பற்றுதல்
Ø மொழிபெயர்ப்புப் படைப்புகள் மூலம் நல்லுணர்வுகளை உணர்ந்து மதித்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
@ இயற்கையைப் பிடிக்காதவர்கள் யாரேனும் உள்ளார்களா? என்ற வினாவைக்கேட்டு விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ இயற்கை வளம் பாதுகாத்தல்.
@ இயற்கையின்பால் மனிதர்களுக்கு உள்ள பொறுப்புகள்.
@ மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் உணர்த்தும் கதை
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø இயற்கையின் பயன்களை நடைமுறைச் சான்றுகளுடன் மாணவர்களுக்கு விளக்குதல்
Ø காட்டு விலங்குகளைப் பற்றிய கதையை நயத்துடன் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம் :
நிலம் பொது
வெட்டுக்கிளியும் சருகுமானும்
7.மாணவர் செயல்பாடு:
Ø காடுகள் மக்களுக்கு என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்பதை அறிதல்.
Ø காடுகளை அழியாமல் காக்க வேண்டும் என அறிதல்
@ வனவிலங்குகள் என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என அறிதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு: