HI TECH LAB ASSESMENT IMPORTANT INSTRUCTIONS AND LINKS

    HI TECH LAB ASSESMENT (2023-24)

   அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். நாளை முதல் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் தமிழ்நாடு  முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு  வினாடி வினா முறையில் நடைபெற உள்ளது. அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான படிநிலைகளை இங்கு காண்போம்.

படிநிலை 1:
   முதலில் https://exam.tnschools.gov.in  என்ற இணையதள முகவரிக்கு சென்று,அந்தந்த வகுப்புகளுக்குரிய வகுப்பாசிரியர்கள் தங்களுடைய  EMIS ID அதற்கான PASSWORD ஐ பயன்படுத்தி, உள் நுழைய வேண்டும். பிறகு அந்தந்த வகுப்பாசிரியர்களுக்கான வகுப்புக்குரிய வினாடி வினா SCHEDULE ஒதுக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள  இணைப்பை கிளிக் செய்து, பாட வாரியான வினாக்களை வகுப்பாசிரியர் தேர்ந்தெடுத்து வினாத்தாளை வடிவமைக்க வேண்டும்.

(மேலும் விரிவான விவரங்களுக்கு படங்களைப் பார்த்து தெளிவு பெறுக. அல்லது படங்களைத் தொட்டு அவற்றுக்கான PDF வடிவங்களைப் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்)







படிநிலை 2:

   அடுத்து, https://locsrv.in:8080 என்ற இணையதளத்தில் வகுப்பாசிரியர்கள் தங்களுடைய  EMIS ID அதற்கான PASSWORD ஐ பயன்படுத்தி, உள் நுழைய வேண்டும்.அதில் உள்ள  DOWNLOAD QP என்பதை Click செய்தவுடன் வினாத்தாள் அனைத்து கணினிகளுக்கும் சென்றுவிடும்.


படிநிலை 3:
    அடுத்ததாக https://locsrv.in:8080 என்ற இணையதள முகவரிக்கு சென்றவுடன் மாணவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட EMIS ID, PASSWORD ஆகியவற்றைப் பயன்படுத்தி உள் நுழைய வேண்டும். உள் நுழைந்தவுடன் அவர்களுக்கான வினாடி வினா தொடங்கிவிடும்




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை