KALVI VALARCHI NAAL KATTURAIPPOTTI MUTIVUKAL(2023-2024)

 கல்வி வளர்ச்சி நாள்  கட்டுரைப்போட்டி முடிவுகள்(2023-2024)

   அன்பார்ந்த தமிழராசிரியர் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு தமிழ்ப்பொழில் வலைதளம் மூலமாக மாநில அளவிலான மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது. நம்முடைய இந்த முதல் முயற்சியானது, பெருமளவிலான மாணவர்களைச் சென்றடைந்து, பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அதில் பங்கேற்றது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.

  தமிழ்நாடு அளவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 450 மாணவர்கள் தங்களது கட்டுரைகளை எழுதி அனுப்பினர். அனைத்து கட்டுரைகளும் மதிப்பிடப்பட்டு,

முனைவர் திரு.க.பொன்னம்பலவாணன்,
தமிழாசிரியர்,
அரசினர் உயர்நிலைப் பள்ளி,
தணிகைப்போளூர்,
இராணிப்பேட்டை மாவட்டம்.
அலைபேசி எண்:9445700145
     அவர்களால் (கட்டுரைப்போட்டியின் தெரிவாளர்) மிகுந்த கவனத்துடனும், நேர்மையுடனும், சிறந்த மூன்று கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அளவுகோல்:
    # கையெழுத்துத் தெளிவு.
    #கருத்துச்செறிவு.
    # மேற்கோள்கள்.
    #சுருக்கமான முன்னுரை,முடிவுரை
    # தலைப்புக்குப் பொருந்திய கருத்துகள்
கூறுகள்:
    # 11,12 ஆம் வகுப்பில் சிறந்த கட்டுரை....
    # 9,10 ஆம் வகுப்பில் சிறந்த கட்டுரை....
    # 6,7,8 ஆம் வகுப்பில் சிறந்த கட்டுரை...
    # மாணவன்,மாணவி என அனைவருக்கும் வாய்ப்பு .....
    # ஒரே பள்ளியில் பல மாணவர் பங்கேற்பு....
    என அனைத்துச் சிறப்புக் கூறுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
தெரிவில் மனநெருடல்:
    # பல சிறப்புக் கட்டுரைகள்.
    # ஒரே மதிப்பெண் பெற்ற பல கட்டுரைகள்.
    # தெரிவில் யாரை விடுப்பது யாரைப் பரிந்துரைப்பது என்பதில் மனநெருடல்.
    # இருப்பினும் ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் (10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு)
    # 6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களின் ஊக்கம்   போன்றன கருத்தில் கொள்ளப்பட்டன.

அவ்வைகையில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

முதல் பரிசு:  (ரூபாய்.500)

    செல்வி.மா.பிரபா செல்வி,
    9.ஆம் வகுப்பு,
    அரசு உயர்நிலைப்பள்ளி,
    வடக்கு இலந்தைக்குளம்,
    தூத்துக்குடி மாவட்டம்

இரண்டாம் பரிசு:  (ரூபாய்.300)
    
    செல்வி.க.ஸ்ரீஹரினி,
    11.ஆம் வகுப்பு, ”ஆ” பிரிவு,
    அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி,
    மூலக்கடை,
    சென்னை மாவட்டம்.

மூன்றாம் பரிசு:  (ரூபாய்.200)
    
    செல்வன்.கா.இளமாறன்
    8.ஆம் வகுப்பு, ”ஆ” பிரிவு,
    அரசு  மேனிலைப்பள்ளி,
    கள்ளிப்பட்டி,
    ஈரோடு மாவட்டம்.

சிறப்புப் பரிசு:  (ரூபாய்.100)
    
    செல்வி.மு.துவாரிதா
    8.ஆம் வகுப்பு, ”அ” பிரிவு,
    அரசு மகளிர் மேனிலைப்பள்ளி,
    தாத்தையங்கார் பேட்டை,
    திருச்சி மாவட்டம்.


வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!!

     படிக்காத மேதையாம் கர்மவீரர் காமராசர் ஐயாவின் சீரிய பணியினால் படித்தவர்களாய் மிளிரும் ஆசிரியப்பெருமக்களுக்கும்,பெற்றோர்களுக்கும்,தமிழ் ஆர்வலர்களுக்கும் மற்றும் மாணவச்செல்வங்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்.
    மாணவர்களை ஊக்கப்படுத்தவும் ,தமிழார்வத்தைத்தூண்டவுமே இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகின்றன.எங்கள் முயற்சிக்குப் பேராதரவு அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி!!
    இனி இது போன்ற போட்டிகள் ஆண்டிற்கு நான்கைந்து முறை நடைபெறும். முறையான் அறிவிப்புகளுக்குத் தமிழ்ப்பொழில் வலைதளத்துடன் இணைந்திருங்கள்!!

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை