8 TH STD TAMIL FIRST MID TERM MODEL QUESTION PAPER (2023-2024)

 

முதல் இடைப்பருவத் தேர்வு-மாதிரி வினாத்தாள்(2023-2024)

  8.ஆம் வகுப்பு                                                             தமிழ்                                                 மதிப்பெண்கள்: 100

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                      15X1=15                                        

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.

அ) வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி

2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து _____என அழைக்கப்படுகிறது.

அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து

3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.

அ) செல்க ஆ) ஓடு இ) வாழ்க ஈ) வாழிய

4. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.

அ)இ,  ஆ)உ,   இ)எ,    ஈ)அ,

5. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.

அ) மரபு ஆ) பொழுது இ) வரவு ஈ) தகவு 

6. வானில் கரு _____ தோன்றினால் மழைபொழியும் என்பர்.

அ) முகில் ஆ) துகில் இ) வெயில் ஈ) கயல்

7. ’நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?’ என்பது -------தொடர்

அ) வினா  ஆ) செய்தி  இ) விழைவு  ஈ) உணர்ச்சி

8. செவ்விந்தியர்கள் நிலத்தைத்_____ மதிக்கின்றனர்.

அ) தாயாக ஆ) தந்தையாக இ) தெய்வமாக ஈ) தூய்மையாக

9. ஓடை+ஆட என்பதைச்சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ)  ஓடைஆட    ஆ) ஓடையாட    இ) ஓடையோட   ஈ) ஓடைவாட

10. ஆய்த எழுத்து பிறக்கும் இடம்

அ) மார்பு   ஆ) கழுத்து    இ) தலை   ஈ) மூக்கு

11. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்

அ) வலிமையற்றவர்    ஆ) கல்லாதவர்    இ) ஒழுக்கமற்றவர்     ஈ) அன்பில்லாதவர்

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

          இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

           திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்

12. இப்பாடல் இடம்பெற்ற நூல்

அ. பெரியபுராணம்   ஆ. தொல்காப்பியம்  இ. கலித்தொகை  ஈ. இராவண காவியம்

13. இப்பாடலை இயற்றியவர்

அ.நல்லந்துவனார்  ஆ.ஔவையார்   இ. தொல்காப்பியர்  ஈ.குடபுலவியனார்

14. வளி என்பதன் பொருள்

அ. உடல்  ஆ. மரம் இ.காற்று   ஈ. உறவினர்

15. திணை,------- வேறுபாடு அறிந்து சொற்களைச் சொல்லுதல் வேண்டும்.

அ. ஒருமை   ஆ. பன்மை   இ. பால்  ஈ. தன்மை

பகுதி-2(மதிப்பெண்கள்:18)

                                                                          பிரிவு-1                                                                   4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)

16. நண்பர்களின் இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல் எது?

17. ஓவிய எழுத்து என்றால் என்ன?

18. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

19. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?

20. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

21. ”தக்கார்” எனத்தொடங்கும் திருக்குறளை எழுதுக.

                                                                          பிரிவு-2                                                                     5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22. வினைமுற்று என்றால் என்ன?

23. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?

24. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?

25. கலைச்சொல் தருக : அ. VOWEL ஆ. LEOPARD

26. வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல் எழுதுக. அ.சென்றனர்  ஆ.கேட்டார்

27. தமிழெண்களை எழுதுக. அ.45  ஆ.92

28. ஒரே சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக.  அ.ஆறு  ஆ.திங்கள்.

            பகுதி-3(மதிப்பெண்:18)                 

                                                                        பிரிவு-1                                                                       2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க: 

29. எழுத்துச்சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக

30. நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.

31. பத்தியைப் படித்துப் பதில் தருக:-

     தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

அ. போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது?

ஆ. ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது?

இ. போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?                                                                  

                                                              பிரிவு-2                                                                                   2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32. தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறியுள்ளவற்றை எழுதுக.

33. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?

34. ’வாழ்க நிரந்தரம்.’ எனத்தொடங்கும் தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை அடிமாறாமல் எழுதுக                                                                                          

                                                           பிரிவு-3                                                                           2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35. ழகர,லகர,ளகர மெய்களின் முயற்சிப்பிறப்புப் பற்றி எழுதுக.

36. ஏவல் வினைமுற்றுக்கும்,வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

37. தொடர் வகைகளைக் கண்டறிந்து எழுதுக

     அ. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்

     ஆ. கடமையைச் செய்

     இ. உன் பெயர் என்ன?

பகுதி-4(மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                                   5X5=25

38. அ. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்டநிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?                                                           

(அல்லது)

ஆ. கல்லாமை குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

39. அ.. விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

(அல்லது)

ஆ. இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டி உங்கள் வகுப்பாசிரியருக்கு விடுப்பு விண்ணப்பம் எழுதுக

40. அ. மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

     சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண்விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள்.அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்டமாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மாதந்த பாலைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

(அல்லது)

ஆ. சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கோழி _____.  (கூவும்/கொக்கரிக்கும்)

2. பால் _____.    (குடி/ பருகு)

3. சோறு _____.  (தின்/உண்)

4. பூ _____.        (கொய்/பறி)

     5. _____.      (நிரை/மந்தை)

41. அ. அகரவரிசைப்படுத்துக.

  எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.

(அல்லது)

ஆ. பொருத்தமான பன்மைவிகுதியைச் சேர்த்தெழுதுக. 

       கல், பூ, மரம், புல், வாழ்த்து, சொல்

42. அ. இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

(அல்லது)

ஆ. பின்வரும் படத்தைப்பார்த்து உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதுக.


பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                                   3X8=24

43. அ தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

(அல்லது)

ஆ. எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

44. அ  தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

(அல்லது)

 ஆ.  வெட்டுக்கிளியும் சருகுமானும்’ , கதையைச் சுருக்கி எழுதுக.

45 அ. கட்டுரை எழுதுக : நான் விரும்பும் கவிஞர்

(அல்லது)

 ஆ. குறிப்புகளைப் பயன்படுத்தி கட்டுரை எழுதுக.

      முன்னுரை-நீர்வளம்-மழைநீர் சேகரிப்பு-எதிர்காலத்தேவை-விழிப்புணர்வு-நமது கடமை-முடிவுரை.

வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க👇👇



இராணிப்பேட்டை மாவட்ட முதல் இடைத்தேர்வு வினாத்தாட்கள் 
வகுப்பு 6-10
  (2022-23)

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை