9 TH STD TAMIL FIRST MID TERM MODEL QUESTION PAPER (2023-2024)

 

முதல் இடைப்பருவத் தேர்வு - மாதிரி வினாத்தாள் (2023-2024)

 9.ஆம் வகுப்பு                                                           தமிழ்                                            மதிப்பெண்கள்: 100

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                              

1) தமிழ் விடு தூது----இலக்கிய வகையைச் சார்ந்தது

)தொடர்நிலைச்செய்யுள் )புதுக்கவிதை )சிற்றிலக்கியம்  )தனிப்பாடல்

2) நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

அ.அகழி  ஆ.ஆறு  இ.இலஞ்சி   ஈ.புலரி

3) கல்லணையைக் கட்டியவர் யார்?

அ.கரிகாலச் சோழன் ஆ. இராசராசன்  இ. இரத்தின பாண்டியன் ஈ.. குலோத்துங்க சோழன்

4) சிற்றிலக்கியம்------வகைப்படும்.

அ. 65  ஆ. 100  இ.96  ஈ. 123

5) இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை

அ.கண்ணி  ஆ.சிற்றிலக்கியம் இ.குறள்   ஈ.சங்க இலக்கியங்கள்

6) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை

அ.1200  ஆ.1300  இ.1400  ஈ.1500

7) திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலை எழுதியவர்----

அ. பாவாணர்   ஆ. கம்பர்  இ. பாரதியார்   ஈ. கால்டுவெல்

8)  பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

அ.6  ஆ.8  இ.10  ஈ.12

9) கூட்டு வினையடிகளைக் கொண்ட வினைச்சொற்கள்----எனப்படும்

அ.தனிவினை  ஆ.கூட்டுவினை  இ.எச்சவினை   ஈ.மையவினை

10) மல்லல்மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?                                            

 அ) மறுமை ஆ) பூவரசு மரம் இ) வளம் ஈ) பெரிய                                                                                     

   11) உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை                                                                                  

 அ) குண்டம்  ஆ) குண்டு  இ) கூவல்   ஈ) கேணி

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

    மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு

    பூவி ரித்தபுதுமதுப் பொங்கிட

    வாவி யிற்பொலி நாடு வளந்தரக்

12) இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் யாது?

அ. தமிழோவியம் ஆ. பெரியபுராணம் இ. மணிமேகலை ஈ. குறம்

13) இப்பாடலை இயற்றியவர் யார்?

) தமிழ் ஒளி ) சேக்கிழார்  ) அப்பர்  . சுந்தர்

14) மது என்பதன் பொருள்

அ. தேன்  ஆ. நீர்  இ. நெருப்பு ஈ. பானம்

15) மாவிரை  என்பதன் இலக்கணக்குறிப்பு

அ. வினையெச்சம்   ஆ. உரிச்சொல் தொடர்   இ. பெயரெச்சம்  ஈ. முற்றெச்சம்

 

பகுதி-2   (மதிப்பெண்கள்:18)

                                                                          பிரிவு-1                                                               4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)

16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

   அ) பூவின் தோற்ற நிலை அரும்பு எனப்படும்.

   ஆ)“கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பாரதி பெருமைப்படுகிறார்.

17) கூவல் என்று அழைக்கப்படுவது எது?

18) நீங்கள் பேசும் மொழி எந்த மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது?

19) நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

20) சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

21) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே– குறிப்புத்தருக.

                                                                                    பிரிவு-2                                                                    5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22)  செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

23) வீணையோடு வந்தாள்,கிளியே பேசு-தொடரின் வகையைச் சுட்டுக.

24) அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

         அ. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத்தமிழ் .................. (திகழ்)

         ஆ. வைதேகி நாளைநடைபெறும் கவியரங்கில் ................. (கலந்துகொள்)

25). பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.

        . மனிதனையும் விலங்குகளையும் (வேறு) _________ மொழியாகும்.

        . திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு) _________.

26) கலைச்சொல் தருக.  அ. LITERATURE ஆ. PHONETICS

27) பகுபத உறுப்பிலக்கணம் தருக : வளர்ப்பாய்

28) தமிழெண்களை எழுதுக : 47 , 52

              பகுதி-3(மதிப்பெண்:18)  

                                                                                          பிரிவு-1                                                                     2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29) திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத்தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

30) அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை– அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.

31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-

    தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

   அ. போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது?

   ஆ. ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது?

   இ. போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?

                                                                  பிரிவு-2                                        2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32) பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?

33) "புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்"- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

34) அ. காடெல்லாம் - எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக  

(அல்லது)

      ஆ. தித்திக்கும்  -  எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

                                                        பிரிவு-3                                                 2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35) தன்வினை,பிறவினை -எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக்காட்டுக.

36) துணை வினைகளின் பண்புகளை எழுதுக.

37) தொடர் வகைகளை எழுதுக.

      அ. என் அண்ணன் நாளைவருவான்

       ஆ. எவ்வளவு உயரமான மரம்!

        இ. பூக்களைப் பறிக்காதீர்

                                                    பகுதி-4 (மதிப்பெண்:25)                                    5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:

38) அ) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்புகளைத் தொகுத்து எழுதுக.

                                                            (அல்லது)

 ஆ) தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

39) அ.குடிநீர் வசதி செய்து தரவேண்டி மாவட்ட ஆட்சியருக்குக் கூட்டு விண்ணப்பம் எழுதுக  

(அல்லது)

ஆ. உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின், "கால்முளைத்த கதைகள்" என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

40) அ. அந்தாதிச்சொற்களை உருவாக்குக :

    அ. அத்தி, ஆ. குருவி, இ.விருது, ஈ. இனிப்பு, உ வரிசையாக

(அல்லது)

ஆ) அகராதியில் காண்க :

     அ.நயவாமை ஆ.கிளத்தல் இ.கேழ்பு ஈ. செம்மல்  உ. புரிசை

41)உங்கள் பெற்றோர் மகிழ்ச்சியடைய நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை வரிசைப்படுத்துக.

42)காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                                      3X8=24

43) அ) திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத்தமிழேபெருந்துணையாக இருக்கிறது என்பதைஎடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

(அல்லது)

   ஆ) நீரின்று அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தைஎடுத்துக்காட்டுடன் விவரிக்க.

44) அ) நீங்கள்  நாள்தோறும் வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப் பட்டியலிட்டு, அவற்றில் இடம்பெற்றுள்ளபிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களைஅறிந்து எழுதுக.

(அல்லது)

    ஆ) தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கி எழுதுக.

45) அ. சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றைஎழுதுக.
                                                                 (அல்லது)

    . குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக:

         முன்னுரை- சாலை விதிகள்- ஓட்டுநர் – சாலைப்பாதுகாப்பு -விதிமுறைகள்- முடிவுரை 

வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க👇👇



இராணிப்பேட்டை மாவட்ட முதல் இடைத்தேர்வு வினாத்தாட்கள் 
வகுப்பு 6-10
  (2022-23)


 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை