10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 04-09-2023 முதல் 08-09-2023 வரை
மாதம் : செப்டம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : திருப்புதல் ( இயல் 1 முதல் 6)
1.கற்றல் நோக்கங்கள் :
@ மாணவர்களை காலாண்டுப்பொதுத்தேர்வுக்குத் தயார் செய்தல்.
2.மதிப்பீடு (முக்கிய வினாக்கள்)
04-09-2023 (குறு வினாக்கள் : செய்யுள் , உரைநடை)
1.மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்ற ஐம்பெருங்காப்பியங்களில் எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்கள் யாவை?
2. 'நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் - மரங்களை வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' - இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
3.வசன கவிதை – குறிப்பு வரைக
4.மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.
5.விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
6.வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக
7.மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
8.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக
9.உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’
கும்பகன்னனை
என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
10.சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன
ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ள ழகை எழுதுக.
05-09-2023 (குறு வினாக்கள் : இலக்கணம் , மொழித்திறன் பயிற்சி)
1. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-
1.
வானம்
கருக்கத் தொடங்கியது. மழை
வரும் போலிருக்கிறது.
2.
அனைவரின்
பாராட்டுகளால்,வெட்கத்தில்
பாடகர் முகம் சிவந்தது
3.
வெள்ளந்தி
மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4.கண்ணுக்குக்
குளுமையாக இருக்கும் பசும்புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது.
5.
வெயில்
அலையாதே;உடல்
கருத்து விடும்.
2. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப் பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர். முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
3.இந்த அறை இருட்டா க இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ ... இருக்கிறதே ! சொடுக்கியைப் போட்டா லும் வெளிச்சம் வரவில்லையே ! மின்சாரம் இருக்கிறதா , இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
4."சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் - இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.
5. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-
1 |
சிலை
- சீலை |
|
2. |
தொடு
- தோடு |
|
3 |
மடு
- மாடு |
|
4 |
மலை
- மாலை |
|
5 |
வளி
- வாளி |
|
6 |
விடு
- வீடு |
அடுக்குத்
தொடரானது. 'சிரித்துப் பேசினார் ' என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
8.தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.
9. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ)
10. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
(குவியல், குலை, மந்தை, கட்டு) கல், புல், பழம், ஆடு
11. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ் – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின்
வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.
12. வேங்கை என்பதை தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்தி காட்டுக
07-09-2023 (சிறு வினாக்கள் : உரைநடை)
1. ’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
2.உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர்நாவாய் ஓட்டியாக நான்…..முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன் னைப் பற்றிப் பேசினால்….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
3. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
4. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள் ?
08-09-2023 (சிறு வினாக்கள் : உரைநடை)
1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தை யாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங் கீரை ஆடியநயத்தை விளக்குக.
2. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.
3. "மாளாத காதல் நோயாளன் போல்" என்னும் தொடரிலுள்ள உவமைசுட்டும்செய்தியைவிளக்குக.
4. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
5. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான அலகுத்தேர்வு வினாத்தாட்கள் , காலாண்டுத்தேர்வு வினாத்தாட்கள் உள்ளிட்ட வினாத்தாட்களை பதிவிறக்கம் செய்ய 👇👇