9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER 3 RD WEEK

   9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு  

நாள்        :    21-10-2024 முதல் 25-10-2024 வரை         

மாதம்          அக்டோபர்

வாரம்     :   மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     : இடைச்சொல், உரிச்சொல்

1.கற்றல் நோக்கங்கள்   :

       #மொழியைப் பிழையின்றி எழுதும் திறன் பெறுதல்.
 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

கற்பித்தல் துணைக்கருவிகளைப் பதிவிறக்க

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # ஞாலம்,மாஞாலம்- வேறுபடுத்துக.
               ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

  # இடைச்சொல், உரிச்சொல்
  # ஒரு சொல் பல பொருள், பல சொல் ஒரு பொருள்.

5.ஆசிரியர் செயல்பாடு              :

      #இடைச்சொல் வகை, உதாரணம், பயன்பாடு குறித்து விளக்கம் தருதல்.
      #உரிச்சொல் வரையறை, பயன்பாடு குறித்துக் கூறுதல்.

6.கருத்துரு வரைபடம்:

இடைச்சொல்,உரிச்சொல்

7.மாணவர் செயல்பாடு:

      @இடைச் சொற்களை அறிந்து பயன்படுத்தும் முறையைப் புரிந்து கொள்ளுதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. இடைச்சொல் - பொருள் தருக

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

2. இடைச்சொற்கள் சில கூறுக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
3. பேச்சுவழக்கில் இடைச்சொற்கள் எங்கெல்லாம் பயன்படுகின்றன?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

     # 9025 - இலக்கணமறிந்து பேச்சிலும் எழுத்திலும் சொற்களை முறையாகப் பயன்படுத்துதல்.


 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை