8. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 07-08-2023 முதல் 11-08-2023
மாதம் : ஆகஸ்டு
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.கல்வி அழகே அழகு
2. புத்தியைத் தீட்டு
1.கற்றல் நோக்கங்கள் :
Ø நீதிநூல்களைப் படித்து அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்
# திரையிசைப்பாடல்களில் உள்ள நற்கருத்துகளை அறிந்துகொள்ளுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø உங்களுக்குப் பிடித்த அணிகலண்கள் என்னென்ன? என்றவினாவைக் கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம்செய்தல்
# பழைய பாடல்கள் சிலவற்றைப்பாடி,ஆர்வமூட்டி பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அது போலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை
ஆலங்குடி சோமு திரையிசைப் பாடலாசிரியராகப் புகழ்பெற்றவர்
கலைமாமணி விருது பெற்றவர்.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø செய்யுளை இசையுடன் படித்துக்காட்டுதல்.
Ø நூல்வெளி பகுதியைத் தெளிவாக விளக்குதல்
Ø பாடற்கருத்தை உரிய சான்றுகளுடன் விளக்குதல்
Ø மொழித்திறன்களைப் பயிற்சி அளித்தல்
6.கருத்துரு வரைபடம்:
கல்வி அழகே அழகு
புத்தியைத் தீட்டு
7.மாணவர் செயல்பாடு:
Ø நூல்வெளி பகுதியைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல்
Ø பாடற்கருத்தை நடைமுறைச் சான்றுகளுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ளுதல்
Ø மொழித்திறன்களை நன்கு புரிந்து கொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø 807 - கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நகைச்சுவை பகுதிகள், அனுபவகருத்துகள் போன்றவற்றை படித்து நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகள் கண்டறிதல் ஊகித்தறிதல்