9 TH STD TAMIL MODEL LESSON PLAN -AUGUST 2 ND WEEK (2023-2024)

 9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு  

நாள்           : 07-08-2023 முதல் 11-08-2023   

மாதம்          ஆகஸ்டு 

வாரம்     :   இரண்டாம் வாரம்                                                   

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.இயந்திரங்களும்,இணையவழிப் பயன்பாடும்

                                             2.ஓ என் சமகாலத் தோழர்களே!

1.கற்றல் நோக்கங்கள்   :

      #மின்னணு இயந்திரங்களின் தேவையையும்,இணையதளச் சேவையின் இன்றியமையாமையையும் அறிதல்

      #அறிவியல் செய்திகளையும் கவிதையாக்க முடியும் என்பதை அறிந்து படைப்பூக்கம் பெறுதல்

    2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

          Ø  தற்கால விண்வெளி தகவல்கள்  குறித்து கலந்துரையாடி பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.

       Ø புலனம் ,முகநூல் முதலியவற்றைப்பற்றி உரையாடி பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

       Ø  ஒளிப்படி இயந்திரம்

        Ø  தொலைநகல் இயந்திரம் 

        Ø  தானியங்கிப் பண இயந்திரம்.

        Ø  அட்டை தேய்ப்பி இயந்திரம்

        Ø திறனட்டைக் கருவி

        Ø  கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர் . இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்ம பூஷண் விருதினைப் பெற்றவர் . கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் .

5.ஆசிரியர் செயல்பாடு              :

       Ø  இயந்திரங்களின் பயன்பாட்டை விளக்குதல்.

      Ø  இயந்திரங்களின்  அவசியத்தை விளக்குதல்

      Ø  பல்வேறு மின்சாதனங்களைப் பற்றி விளக்குதல்

      Ø  நூல்குறிப்பை விளக்குதல்

      @  மனப்படலை இசையுடன் படித்துக் காட்டுதல்

6.கருத்துரு வரைபடம்:


      இயந்திரங்களும்,இணையவழிப் பயன்பாடும்


ஓ என் சமகாலத் தோழர்களே!!!


www.thamizhvithai.com

7.மாணவர் செயல்பாடு:

       @ இயந்திரங்களின் பயன்பாட்டை அறிதல்.

      Ø  இயந்திரங்களின்  அவசியத்தை புரிந்துகொள்ளுதல்

      Ø  பல்வேறு மின்சாதனங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல்

      Ø  நூல்குறிப்பை அறிதல்

      @  மனப்படலை இசையுடன் பாடுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
2.வைரமுத்துவின் ஊர் எது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.ஆளறி சோதனைக்கருவி எதற்குப் பயன்படுகிறது?
2.இணையத்தின் அவசியத்தை விளக்குக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.இணைய வணிகம் குறித்த உங்கள் கருத்துகளைப் பதிவு செய்க

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

      # 9016- மின்னணு இயந்திரங்களின் தேவையையும் இணையத்தின் இன்றியமையாமையையும் சமூகத் தேவைகளுக்கேற்ப மேம்பட்டு வருவதை உணர்ந்து மொழியைப் பயன்படுத்துதல்.

      # 9017 - அறிவியல்  செய்திகளையும் கவிதையாக்க முடியும் என்பதை அறிந்து படைப்பூக்கம் பெறுதல்.

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை