10 TH STD QUARTERLY TAMIL QUESTION PAPER & ANSWER KEY MADHURAI DIST(2023-2024)

    

காலாண்டுப்பொதுத் தேர்வு-2023 மதுரை  மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க👇👇

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

ஆ. மணிவகை

1

2.    

ஈ. பாரதியார்

1

3.     

ஆ. தங்கமீன்கள்

1

4.     

ஈ. சிற்றூர்

1

5.    

அ. பெப்பர்

1

6.    

ஆ. வழாநிலை

1

7.     

அ. சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

1

8.    

ஆ. அறியா வினா, சுட்டு விடை

1

9.    

ஆ. குமரகுருபரர்

1

10.   

ஈ. அங்கு வறுமை இல்லாததால்

1

11.    

இ. தேவராட்டம்

1

12.  

இ. காசிக்காண்டம்

1

13.  

ஆ. பண்புத்தொகை

1

14.  

ஆ. விருந்தினனாக , திருந்துற

1

15.  

ஆ. புதியவர்

1

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

அ. எந்நாளை உலக காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்?

ஆ. பரிபாடல் எந்நூல் தொகுப்பைச் சார்ந்தது?

2

17

சீவகசிந்தாமணி , வளையாபதி, குண்டலகேசி

2

18

தம்பி அழாதே,அப்பா இப்போது வந்துவிடுவார், தின்பண்டம் வாங்கி வருவார்

2

19

அருளைப் பெருக்கு, அறிவைச்சீராக்கு, மருளை அகற்று

2

20

  சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கைவழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது

2

21

பல்லார்   பகைகொளலின்   பத்தடுத்த தீமைத்தே

நல்லார்  தொடர்கை  விடல்

 

2

 

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

அ. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஆ. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

2

23

அ. மலை மீது மாலையில் ஏறினான்

ஆ. சிறு பாம்பாக இருந்தாலும் அதிகமாகச் சீறியது

2

24

அ. பசுமையான  காட்சி ஐக் காணுதல்  கண்ணுக்கு நல்லது

ஆ. காட்டு விலங்குகளைச் சுடுதல் டை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் சுட்டல் திருத்த உதவுகிறது

2

25

அ. வெள்ளை

ஆ. கருத்துவிடும்

2

26

அ. காப்பிய இலக்கியம்

ஆ. அறிவாளர்

2

27

அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது; ஐயங்களை நீக்குகிறது; பழைய தவறான புரிதல்களை நீக்குகிறது; எண்ணங்களை மாற்றுகிறது

2

28

பொறி+த்+த்+அ

பொறி- பகுதி , த் – சந்தி .த் -இறந்தகால இடைநிலை அ-பெயரெச்ச விகுதி

 

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

      இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்தது

3

30

விடை:

     # மறைகாணி எல்லாப் பக்கமும் திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது.

     # செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல் புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

     # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.

3

31

அ. 1988

ஆ. ஆற்றல் பூங்கா, இயந்திரவியல் பூங்கா

இ. பத்து

 

3

 

                                     

                                                         பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

 

தமிழ்

கடல்

1

முத்தமிழாக வளர்ந்தது

முத்தினைத் தருகிறது.

2

முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

முச்சங்கினைத் தருகிறது.

3

ஐம்பெருங்காப்பியங்கள்- அணிகலன்கள்

கடலில் செல்லும் கப்பல்கள்

4

சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

சங்கினைக் காக்கிறது

3

33

 

ü  கிடைத்தற்கரியபேறுகளுள்எல்லாம் பெரும்பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும்.

ü  குற்றங்கண்ட பொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக் கொள்ளாத பாதுகாப்பற்றமன்னன், பகைவர் இன்றியும் தானேகெடுவான்.

ü  தானொருவனாக நின்று பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும்.

3

34


அ.

சிறுதாம்பு தொடுத்த பசலைக்கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

    இன்னேவருகுவர், தாயர்” என்போள்

     நன்னர் நன்மொழி கேட்டனம்

ஆ.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

 

3

 

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

விடை: மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை

            பூங்கொடி- பண்புத்தொகை

            ஆடுமாடு -உம்மைத்தொகை

3

36

3

37

அ) உவமை. உவமேயம் ,உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது (அல்லது)

ஆ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்

3

 

                                                                   பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

ü  மேகம் மழையைப் பொழிகிறது

ü  திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம்.

ü  கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர்.

ü  இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள்.

ü  தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள்

 (அல்லது)

ஆ)

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

 

5

39

அ.

வாழ்த்து மடல்

 

நெல்லை,

26-12-2021.

அன்புள்ள நண்பா/தோழி,

          நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                                       இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்,

ம.மகிழினியன்.

உறைமேல் முகவரி:

      க.இளவேந்தன்,

      86,மருத்துவர் நகர்,

      சேலம்-2.

ஆ)

அனுப்புநர்

        அ.எழில்வேந்தன்,

        12,கம்பர் தெரு,

         அரக்கோணம்.

பெறுநர்

         உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         அரக்கோணம்.

ஐயா,

    பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக.

    வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது.அதற்கான சான்றுகளை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன்.உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                     இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

அ.எழில்வேந்தன்.

இடம்:அரக்கோணம்,

நாள்:08-01-2022.

உறைமேல் முகவரி:

          உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         அரக்கோணம்.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

42

அ.

1.குழு விளையாட்டுகள் விளையாடுதல்.

2.உலக நிகழ்வுகளைப் பற்றி  கலந்துரையாடுதல்.

3.விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல்.

4நூல்களைப் படித்தல்.

5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை குறைக்கச் செய்தல்.

ஆ)     கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை, நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள் ஒரு குழுவாககூத்து குழுஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள் குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான உடைகளும்,ஆபரணங்களும் அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை

 

5

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 

அ)

   தமிழ்ச்சொல் வளம்:

v தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v திராவிட மொழிகளில் மூத்தது.

v பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v தமிழ்மொழி 1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180 மொழிக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது.

v பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப

தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்

(அல்லது)

ஆ. வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

 

8

44

அ.

கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை:

              கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய்  அருகில் நின்று பார்த்தார்.அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யாஅருகிலிருந்து நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். 

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:

               ஒரு வேப்பமரத்தின் அடியில்  மண் கலயங்கள் கஞ்சியால்  நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு  சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:

              புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்  பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

               இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். இளைஞன் அந்தப் பெயரை இதற்குள் திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக்கொண்டான். எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்  கொண்டான்.

சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்:

               சுப்பையாவும், அவருடன் இருந்தவர்களும் அன்னமய்யாவையும், இளைஞனையும்   மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். சுப்பையா  தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார்.

முடிவுரை:

               தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

 (அல்லது)

ஆ)

ü  ஆ)  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

 

8

45

அ.

(அல்லது)

பொதுக்கட்டுரை: விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

முன்னுரை:

    இந்தியாவில் பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

              விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

            1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி உறுதியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார். 

நமது கடமை:

            அனைத்துக் கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது.விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும்

முடிவுரை:

         “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.

ஆ)

முன்னுரை :

    எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

          மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

          பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

          அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

          வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

          சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

          எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

 

 

8

 

 விடைக்குறிப்பை PDF வடிவில் பதிவிறக்க👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை