காலாண்டுப்பொதுத் தேர்வு-2023 தேனி மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்க👇👇
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
வினா எண் | விடைக்குறிப்புகள் | மதிப்பெண் |
1. | ஈ. சருகும், சண்டும் | 1 |
2. | ஆ. மணி வகை | 1 |
3. | ஆ. எம்+தமிழ்+நா | 1 |
4. | இ. அன்மொழித்தொகை | 1 |
5. | ஈ. சிற்றூர் | 1 |
6. | அ. வேற்றுமை | 1 |
7. | ஈ. வானத்தையும் பேரொலியையும் | 1 |
8. | ஈ. இலா | 1 |
9. | அ. அருமை+ துணை | 1 |
10. | ஈ. தேவநேயப்பாவாணர் | 1 |
11. | ஆ. தளரப்பிணைத்தால் | 1 |
12. | ஆ. பாரதியார் | 1 |
13. | அ. சீராக | 1 |
14. | அ. தீராத | 1 |
15. | ஈ. அவித்து விடாதே, மடித்து விடாதே | 1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க | ||
16 | அ. தமிழர் எத்தகைய இயல்புடையவர்கள்? ஆ. ”கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பெருமைப்படுபவர் யார்? | 2 |
17 | செய்யுளும் உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது. | 2 |
18 | கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் | 2 |
19 | திருமால், இசைநிறை அளபெடை(செய்யுளிசை அளபெடை). | 2 |
20 | அ. உழவர் வயலில் உழுதனர். ஆ. நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர். | 2 |
21 | செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல். | 2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க | ||
22 | அ. 4 – ௪ ஆ. 5 - ரு | 2 |
23 | அ. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஆ. உப்பிலாப் பண்டம் குப்பையிலே | 2 |
24 | அமர்+த்(ந்)+த்+ஆன் அமர்- பகுதி ,த்-சந்தி, ந்- விகாரம் , த்- இறந்தகால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி | 2 |
25 | அ. உயிரெழுத்து ஆ. புயல் | 2 |
26 | திருக்குறள் | 2 |
27 | அ. படிக்காமல் தேர்ச்சி பெறலாம் என மனக்கோட்டை கட்டினான் ஆ. கண்ணும் கருத்துமாகப் படித்ததால் முதல்மதிப்பெண் பெற்றான். | 2 |
28 | முதல் நிலை, இடைநிலை, கடைநிலை | 2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க | ||
29 | அ) நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. | 3 |
30 | அ. போலச்செய்தல் ஆ. புரவி ஆட்டம் , புரவி நாட்டியம் இ. மராட்டியர் | 3 |
31 | தான் அறிந்ததை பிறர் அறியும் பொருட்டு கேட்பது, ஐயத்தைப் போக்குவதற்காகக் கேட்பது | 3 |
பிரிவு-2 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க | |||||||||||||||||
32 |
| 3 | |||||||||||||||
33 | # மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார். # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார். # அதுபோல, வித்துவக்கோட்டு அன்னையே ,நீ எனக்கு விளையாட்டாகத் துன்பங்கள் செய்தாலும் ,உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன் என்று குலசேகராழ்வார் கூறுகிறார். | 3 | |||||||||||||||
34 |
| 3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க | ||
35 | விடை: 'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர் மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர் பாடினேன் தாலாட்டு -வினைமுற்றுத்தொடர் ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – அடுக்குத்தொடர் | 3 |
36 | இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது | 3 |
37 | புளிமா புளிமா புளிமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா மலர் | 3 |
பகுதி-4 5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி | ||
38 | அ. மாணவர்களின் சொற்பயன்பாடு, பிழையின்மை , கருத்துச் செறிவு முதலானவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக. (அல்லது) ஆ) ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் | 5 |
39 அ | வாழ்த்து மடல் நெல்லை, 26-12-2021. அன்புள்ள நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதைப்போன்று வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள். இப்படிக்கு, உனது அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல் முகவரி: க.இளவேந்தன், 86,மருத்துவர் நகர், சேலம்-2. ஆணையருக்குக் கடிதம் ஆ.அனுப்புநர் அ.எழில்வேந்தன், 12,கம்பர் தெரு, அரக்கோணம். பெறுநர் உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். ஐயா, பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக. வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது.அதற்கான சான்றுகளை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன்.உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள அ.எழில்வேந்தன். இடம்:அரக்கோணம், நாள்:08-01-2022. உறைமேல் முகவரி: உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். | 5 |
40 | காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. | 5 |
41 | தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக. | 5 |
42 அ. | மாணவர்களின் சொற்பயன்பாடு, பிழையின்மை , கருத்துச் செறிவு முதலானவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக. ஆ) 1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela விடை : ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது – நெல்சன் மண்டேலா 2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown விடை: மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக் ப்ரெளன் | 5 |
பகுதி-5 3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: | ||
43 | அ) தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. v திராவிட மொழிகளில் மூத்தது. v பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v தமிழ்மொழி 1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180 மொழிக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது. v பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை: v மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும். மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும் (அல்லது) ஆ. ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் | 8 |
44 அ. | புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ? விடை: முன்னுரை: கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே ஒரு தோணி எனும் குறும்புதினமாகும். புயல்: கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது. தொங்கானின் நிலை: அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது. கரை காணுதல்: அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது.கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது.அங்கிருந்தவர்கள் ”எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர். சீட்டு வழங்குதல்: பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர். அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார். முடிவுரை: புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன. (அல்லது) ஆ) ü அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது. ü மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது. ü கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம். | 8 |
45 | அ) பொதுக்கட்டுரை: விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் முன்னுரை: இந்தியாவில் பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி இக்கட்டுரையில் காண்போம். விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்: விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா. 1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி உறுதியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார். நமது கடமை: அனைத்துக் கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது.விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் முடிவுரை: “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும். ஆ) அ) முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். | 8 |