10 TH STD QUARTERLY TAMIL QUESTION PAPER & ANSWER KEY DINDUGAL DIST(2023-2024)

    

காலாண்டுப்பொதுத் தேர்வு-2023 திண்டுக்கல்  மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க👇👇

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

இ. எம்+தமிழ்+நா

1

2.    

இ. மணி வகை

1

3.     

இ. அன்மொழித்தொகை

1

4.     

ஈ. சிற்றூர்

1

5.    

இ. இன்மையிலும் விருந்து

1

6.    

ஈ. வானத்தையும் பேரொலியையும்

1

7.     

இ. அறியா வினா , சுட்டு விடை

1

8.    

இ. கல்வி

1

9.    

இ. குறிஞ்சி , மருதம், நெய்தல் நிலங்கள்

1

10.   

ஆ. தளரப்பிணைத்தால்

1

11.    

அ. கார்காலம்

1

12.  

அ. கம்பராமாயணம்

1

13.  

அ. கம்பர்

1

14.  

இ. அலை

1

15.  

ஆ. பண்புத்தொகை

1

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

அ. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

ஆ. யார் மலையில் கிழங்கு அகழ்ந்தனர்?

2

17

திருமால், இசைநிறை அளபெடை(செய்யுளிசை அளபெடை).

2

18

தினைச்சோற்றைப் பெறுவீர்கள்

2

19

அருளைப் பெருக்கு, அறிவைச்சீராக்கு, மருளை அகற்று

2

20

விடை: முதற்பொருள்

                நிலம்-முல்லை  , பொழுது-மழைக்காலம்(பெரும்பொழுது) மாலை(சிறுபொழுது)

            கருப்பொருள்:

                 வரகு(உணவு)

2

21

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை  பொருள்

2

 

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

அ. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

ஆ. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்

2

23

அ. உப்பிட்டவரை உள்ளளவும் நினை

ஆ. விருந்தும் மருந்தும் மூன்று நாளுக்கு

2

24

அ. இயற்கை செயற்கையை விட மேலானது.

ஆ. தலைவிதியால் வீதியில் திரிகிறான்.

2

25

பதிந்து – பதி +த்(ந்) + த்+ உ;

தி – பகுதி    த்– சந்தி   (ந்-ஆனது விகாரம்)

த்– இறந்தகாலஇடைநிலை     உ – வினையெச்சவிகுதி

2

26

அ. விண்வெளி தொழில்நுட்பம்

ஆ. சின்னம்.

2

27

அ. சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

ஆ. நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

2

28

அ. பசுமையான காட்சி  ஐக்  காணுதல்  கண்ணுக்கு நல்லது

ஆ. பொது வாழ்வில் நடித்தல்  கூடாது நடிப்பு இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது

 

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

அ) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

ஆ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

 ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3

30

ü  கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும்.

ü  கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

ü  கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும்.

ü  கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும்.

3

31

அ.  நெருப்புப் பந்துபோல்

ஆ.  தொடர்ந்து பெய்த மழையால்

இ.   பூமியின் தோற்றம்

3

 

                                                                  பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

விடை:

சோலைக்காற்று :         இயற்கையில் பிறக்கிறேன்

மின்விசிறிக்காற்று :     செயற்கையில் பிறக்கிறேன்

சோலைக்காற்று :       காடும்,மலையும்,இயற்கையும் எனது இருப்பிடங்கள்

மின்விசிறிக்காற்று :     இருள்சூழ்ந்த அறையும்,தூசி நிறைந்த இடமும் எனது இருப்பிடங்கள்

3

33

 

  # மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்.

   # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார்.

   # அதுபோல, வித்துவக்கோட்டு அன்னையே ,நீ எனக்கு விளையாட்டாகத் துன்பங்கள் செய்தாலும் ,உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன் என்று குலசேகராழ்வார் கூறுகிறார்.

3

34

 

அ.

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

     வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

    எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற  இருத்தல்

    போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

        ஒழுக்கமும் வழிபடும் பண்பே*

ஆ.

தண்டலை மயில்களாடத்தாமரை விளக்கந்தாங்கக்

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்டத்தேம்பிழி மகரயாழின்

வண்டுக ளினிது பாட மருதம்வீற்றிருக்கு மாதோ.

3

 

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

6 வகை – அறி ,அறியா ,ஐய ,கொளல் , கொடை ,ஏவல்

3

36

புளிமாங்காய்  தேமா  புளிமா  புளிமாங்காய்

தேமா  கருவிளம்  நாள்

3

37

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது

3

 

                                                                   பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

அ. மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  கடல் ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.

ü  அதற்குத் தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்  உள்ளது.

ü  திலகத்தின் மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.

ü  அத்தகைய தமிழை வாழ்த்துவோம்.

பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

 (அல்லது)

ஆ)

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

 

5

39

 

வாழ்த்து மடல்

 

நெல்லை,

26-12-2021.

அன்புள்ள நண்பா/தோழி,

          நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதைப்போன்று வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள்.

                                                                                                                       இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்,

ம.மகிழினியன்.

உறைமேல் முகவரி:

      க.இளவேந்தன்,

      86,மருத்துவர் நகர்,

      சேலம்-2.

ஆணையருக்குக் கடிதம்

ஆ.அனுப்புநர்

        அ.எழில்வேந்தன்,

        12,கம்பர் தெரு,

         அரக்கோணம்.

பெறுநர்

         உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         அரக்கோணம்.

ஐயா,

    பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக.

    வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது.அதற்கான சான்றுகளை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன்.உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                     இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

அ.எழில்வேந்தன்.

இடம்:அரக்கோணம்,

நாள்:08-01-2022.

உறைமேல் முகவரி:

          உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         அரக்கோணம்.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

42

அ.

மாணவர்களின் சொற்பயன்பாடு, பிழையின்மை , கருத்துச் செறிவு முதலானவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக.

ஆ) 1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

விடை : ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறதுநெல்சன் மண்டேலா

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

விடை: மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும்ரீடா மேக் ப்ரெளன்     

5

 

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

அ) மொழி நடை , பிழையின்மை , கருத்துச் செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக.

 (அல்லது)

ஆ) மொழி நடை , பிழையின்மை , கருத்துச் செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக.

8

44

அ.

புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?

விடை:

                                                  கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை:

              கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார்.

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:

               அன்னமய்யா அங்கு இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:

              புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

               இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்  கொண்டான்.

முடிவுரை:

            அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

 (அல்லது)

ஆ)

ü   அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

 

8

45

 

அ) முன்னுரை:

   உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

முச்சங்கம்:

      பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.

சிற்றிலக்கியங்கள்:

    96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன.

காலந்தோறும் தமிழ்:

   சங்க காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில்

பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.

முடிவுரை:

    இவ்வாறு தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை.

ஆ)

பொதுக்கட்டுரை: விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

முன்னுரை:

    இந்தியாவில் பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

              விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

            1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி உறுதியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார். 

நமது கடமை:

            அனைத்துக் கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது.விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும்

முடிவுரை:

         “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.

 

8

 

  விடைக்குறிப்பை PDF வடிவில் பதிவிறக்க👇


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை