9.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்
இயல்-3
(பக்க எண்:80 கற்பவை கற்றபின்)
1.வல்லினம்
மிகலாமா?
அ) பெட்டிச் செய்தி
ஆ) விழாக்குழு
இ) கிளிப்
பேச்சு
ஈ) தமிழ்த்தேன்
உ) தைப்
பூசம்
ஊ) கூடக்கொடு
எ) கத்தியைவிடக் கூர்மை
ஏ) கார்ப்பருவம்
2. தொடர்
தரும் பொருளைக் கூறுக.
அ) சின்னக்கொடி -
சின்னம் வரையப்பட்ட கொடி
சின்ன
கொடி - சிறிய கொடி
ஆ) தோப்புக்கள்
- தோப்பிலிருந்து
இறக்கிவரப்பட்ட கள்
தோப்புகள்
- தென்னந்தோப்புகள்
பலவுண்டு
இ) கடைப்பிடி - கொள்கையைக் கடைப்பிடிப்பது
கடைபிடி - வாணிகம் தொடங்கக் கடை பிடித்தார்.
ஈ) நடுக்கல்
- நடுக்கல் ஊன்றினோம்.
நடுகல் - நினைவுச் சின்னம்
உ) கைம்மாறு
- செய்த உதவி
கைமாறு - கையில் உள்ள மாறு (விளக்குமாறு)
ஊ) பொய்ச்சொல் - நீ சொன்னது பொய்ச்சொல்
பொய் சொல் - பொய் சொல்வது தவறு
(பக்க எண்:81 மதிப்பீடு)
பலவுள் தெரிக
1.பொருந்தாத
இணை யது?
அ)ஏறுகோள்
எருதுகட்டி ஆ) திருவாரூர்- கரிக்கையூர்
இ) ஆதிச்சநல்லூர் –
அரிக்கமேடு ஈ) பட்டிமன்றம் - பட்டிமன்பம்
2.முறையான
தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக
அ.தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்
ஆ) தமிழர்களின்
வீரவிளையாட்டு ஏறுகழுவதன் தொன்மையான,
இ) தொன்மையான
வீரவிளையாட்டு தமிழர்களிஏறுதழுவுதல்,
ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
3.பின்வருவனவற்றுள்
தவறான செய்தியைத் தரும் தொடர்
அ) அரிக்கமேடு
அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.
ஆ) புறப்பொருள்
வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
இ) எட்டு, பத்து -ஆகிய எண்ணுப் பெயர்களின் பின்
வல்லினம் மிகாது.
ஈ) பட்டிமண்டபம் பற்றிய
குறிப்பு மணிமோலையில் காணப்படுகிறது.
4 ஐம்பெருங்குழு,
எண்பேராயம் சொற்றொட்ர்கள் உணர்த்தும் இலக்கணம்
அ) திசைச்சொற்கள் ஆ) வடசொற்கள் இ) உரிச்சொற்கள் ஈ ) தொகைச்சொற்கள்
5.சொற்றொடர்களை
முறைப்படுத்துக
அ) எறுதழுவுதல் என்பதை ஆ) தமிழ் அகராதி இ) தழுவிப் பிடித்தல் என்கிறது
அ) ஆ-அ-இ ஆ) ஆ-இ-அ
இ) இ-ஆ-அ ஈ) இ-அ-ஆ
குறுவினா
1.நீங்கள்
வாழும் பகுதியில் எறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
விடை: மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு,
வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, காளைவிரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு
2.தொல்லியல்
சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?
விடை:
அ)தொல்லியல் அகழாய்வு செய்தல்
என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தல் ஆகும்.
அகழாய்வு வரலாறு முழுமைபெற உதவுகிறது.
ஆ)அகழாய்வில் கிடைத்த பொருள்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமின்றி நம் வரலாற்றையும் உணர்த்துகின்றன.
3.ஏறுதழுவுதல்
நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.
விடை: கலித்தொகை –
ஏறுதழுவுதல்
புறப்பொருள் வெண்பாமாலை – எருதுகோள்
பள்ளு – எருட்துகட்டி
4.பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் :
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில்
இடம்பெற்றிருக்கிறது இத்தொடர்.
பொருள் : விழாக்கள் நிறைந்த
இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப்
பரப்புங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
விளக்கம் :
மணிமேகலைக் காப்பியத்தில்
முப்பது காதைகளுள் முதல் காதையாக விளங்குவது விழாவறை காதை ஆகும். புகார் நகரில் இருபத்தெட்டு நாள் நடைபெறக்கூடிய இந்திரவிழா தொடங்க உள்ளது.
இந்த அறிவிப்பை யானை மீது அமர்ந்து முரசறைவோன் அறிவித்தான். விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழையமணலை
மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்று அறிவிக்கிறான்.
5.பட்டிமண்டபம்,
பட்டிமன்றம் – இரண்டும் ஒன்றா? விளக்கம் எழுதுக.
பட்டிமண்டபம் என்பது
இலக்கிய வழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம்
என்றே குறிப்பிடுகிறார்கள். பேச்சு வழக்கும் ஏற்றுக்
கொள்ளப்படுகிறது.
“மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன்”
பகைப் புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் எனச் சிலப்பதிகாரத்திலும்,
“பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்” என
மணிமேகலையிலும்
“பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை;
எட்டினோடு இரண்டும் அறியனையே” என்று திருவாசகத்திலும்
“பன்னரும் கலை தெரி பட்டிமண்டபம்” எனக் கம்பராமாயணத்திலும்
இச்சொல் பயின்றுவருதலை அறியலாம்
6.ஏறுதழுவுதல்
குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.
- சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால்
எடுக்கப்பட்ட “எருது பொருதார்
கல்” ஒன்று உள்ளது.
- கோவுரிச் சங்கன் கருவந்துறை எனும் ஊரில் எருதோடு போராடி
இறந்து பட்டான். சங்கன் மகன்
பெரிய பயல் எடுத்த நடுகல் ஒன்றுள்ளது.
- நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கரிக்கையூரில்
மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் காணப்படுகிறது.
- திமிலுடன் கூடிய காளை ஒன்றை அடக்க முயல்வது போன்ற ஓவியம்
மதுரை உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுவினா
1.வேளாண் உற்பத்தியின்
பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
விடை: ஏறுதழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும்,
மருதநிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும், பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.
2.ஏறுதழுவுதல்,
திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
விடை: தமிழக உழவர்கள், தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற
மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல். அவ்விழாவின்போது,
மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில்
பொட்டிட்டு மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடிகயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர். கொம்புகளைப்
பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து
மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டுவர்.
பின்னர் பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில்
ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர்.
இதன் தொடர்ச்சியாக வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும்
பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே
ஏறுதழுவுதலாகும்.
3. வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில்
அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க
விடை:
ü அறிவியல் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பழைய தலைமுறையைப் பற்றித் தெரித்து என் செய்வது? செல்லிடப்பேசிக்குள்ளே உலகம் சுற்றும் வேளையில்
அகழாய்வில் கிடைக்கும் செல்லாக்காசுகள் வந்தெள்ள செய்யமுடியும்? என்ற
எண்ணத்தை மாற்ற வேண்டும்.
ü அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள்
கிடைத்தன, ரோமானியர்களுக்கும்
நமக்கும் இருந்த வளரிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. அதனால்
ü ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான
முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டன.
ü நம் முன்னோர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் அடிப்படையிலான பண்பாட்டு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். தமிழர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளே ஆவணங்களாகத் திகழ்கின்றன.
4.உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா
முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
அ) எங்கள் ஊரில்
நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகள்:
1. கோவிலையும், தெருக்களையும் தூய்மைப்படுத்துவார்கள்
2.தென்னையோலையால்
தெருவெங்கும் பந்தல் கட்டுவார்கள்
3.வாழை மரங்களைக்
கட்டிவைப்பார்கள்
4. நாடகம், இசைக் கச்சேரி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்திட ஏற்பாடு செய்வார்கள்.
ஆ) இந்திர விழா
நிகழ்வுகள்:
1. தெருக்களிலும், மன்றங்களிலும் பூரணகும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு மற்றும் மங்கலப் பொருட்களைமுறையாக அழகுபடுத்திவைப்பார்கள்.
2.பாக்கு மரம், வாழை மரம், வஞ்சிக் கொடி, பூங்கொடி,
கரும்பு போன்றவற்றை நட்டுவைத்தனர்.
3. வீடுகளின் முன்
தெருத்திண்ணையில் இருக்கும் தங்கத் தூண்களில் முத்து மாலைகளைத் தொங்கவிட்டனர்.
4. விழாக்கள் நிறைந்த
மூதூரின் தெருக்களிலும், மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப்
புதிய மணலைப் பரப்பினார்கள்.
5. சொற்பொழிவு, பட்டிமண்டபம் நடத்தினார்கள்.
நெடு வினா.
1. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று
போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
விடை:
1. தேசிய
விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில்காளையைக் கொன்று
அடக்குபவனே வீரன் அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
2. காளையை
அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை
சிலநாட்டுவிளையாட்டுக்களில் கொல்லப்படுவதும் உண்டு.
3.அது
வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.
4. தமிழகத்தில்
நடைபெறும் ஏறு தழுவுதலில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது.
5.நிகழ்வின்
தொடக்கத்திலும்முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர்.
6.எவராலும்
அடக்கமுடியாத காளைகள்வெற்றிபெற்றதாகக் கருதப்படும்.
7. அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையைஅரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.
2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம்
செய்யவேண்டிய செயல்களைத்தொகுத்து எழுதுக.
விடை:
ü
உழவர்கள் தங்களின் உழவு சார்ந்த
கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணை நின்ற மாடுகளைப்போற்றி மகிழ்விக்க
ஏற்படுத்திய விழாவே மாட்டுப்பொங்கல்.
ü
இதன் தொடர்ச்சியாக வேளாண் குடிகளின்
வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்தமாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக
உருக்கொண்டதே ஏறுதழுவுதலாகும்.
ü
கலித்தொகை,
சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
ü
சிந்துவெளி அகழாய்வுகளில்
கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல்முத்திரை தமிழர்களின் பண்பாட்டுத்தொல்லியல்
அடையாளமான ஏறு தழுவுதலைக்குறிக்கிறது.
ü
பண்டைய வீர உணர்வை நினைவூட்டும்
ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும்
வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும்
பண்பாட்டுக்குறியீடாகும்.
ü
ஆகையால் நம்முன்னோர்களின் இத்தகைய
பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் ஏறுதழுவுதல்நிகழ்வைக் காணவும்,
ஏறுகளைப் பேணவும் நாம் உறுதிகொள்ளவேண்டும்.
(பக்க எண்:82 மொழியை ஆள்வோம்)
பொன்மொழிகளை மொழி பெயர்க்க
1. A nation's culture
resides in the hearts and in the soul of its people Mahatma Gandhi
நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.
2. The art of people
is a true mirror to their minds Jawaharlal Nehru
மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி
3. The biggest problem
is the lack of love and charity Mother Teresa
அன்பு செலுத்துதல், தர்மம்
செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது.
4. You have to dream
before your dreams can come true A.P.J. Abdul Kalam
உங்கள் களவு நளவாகும் வரை,
களவு காணுங்கள்.
5. Winners don't do
different things; they do things differently Shiv Khera
வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச்
செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்கிறார்கள்.
வடிவம் மாற்றுக
பின்வரும் கருத்துகளை
உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி
முறையான பத்தியாக்குக.
1. உலகின்
மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. டைனோசர்கள்
உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள்அறியப்படுகின்றன.
பெரம்பலூர் மாவடடத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள
ஆதாரங்கள் உறுதி செய்கின்றன,
3. இங்குக்
கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த
கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல்
கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
4. தமிழ்மக்களின்
தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும்
தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.
விடை
4 தமிழ்
மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும்
தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன. 2 டைனோசர்கள்
உலாவித் திரிந்த தமிழ் மண் என்று அரியலூர், பெரம்பலூர்
மாவட்டங்கள் அறியப்படுகின்றன, பெரம்பலூர் மாவட்டத்தில்
கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. 3 இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப்
படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன. 1 உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான்
கண்டெடுக்கப்பட்டுள்ளது
மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக
எ.கா ; மேலும் கீழும் - ஆரிப் சொன்னதில் நம்பிக்கை
இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான்
1. மேடும்
பள்ளமும் - நடுத்தர மக்களின்
வாழ்க்கை மேடும் பள்ளமும் கொண்டதாக இருக்கிறது.
2. நகமும்
சதையும் - மும்தாஜும் தமிழரசியும்
நகமும் சதையும் போல இணைபிரியாத் தோழிகள்.
3. முதலும்
முடிவும் - இது போன்ற தவறுகள் முதலும் முடிவும் ஆக
இருக்கட்டும் என்று ஆசிரியர்
அவர்களிருவரையும்எச்சரித்தார்.
4. கேளிக்கையும்
வேடிக்கையும்: எங்கள் ஊர்த் திருவிழா கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்ததாக
இருந்தது.
5. கண்ணும்
கருத்தும்- அன்பழகள் கண்ணும் கருத்துமாகப் படித்துத் தேர்வில் முதல் மதிப்பெண்
பெற்றான்.
தொகுப்புரை எழுதுக:
பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற
விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.
தமிழ் இலக்கிய மன்ற விழா
இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி, டஹ்ணிகைப்போளூர், இராணிப்பேட்டை
மாவட்டம்.
நாள் : 11-09-2023
இராணிப்பேட்டை மாவட்டம்,
தணிகைப்போளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றக்
கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மா.செயப்பிரகாசு தலைமை தாங்கினார். மாவட்ட அளவில் தமிழ்ப்
பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 10.ஆம் வகுப்பு மாணவி
வா.நிறைமதி வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியங்களில் எவ்வாறு
இன்பச்சுவை அமைந்து இருக்கிறது என்பது பற்றிப் பேசினார் .
தலைமை ஆசிரியர் தலைமை உரையில்
இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற் போல் மாறி வந்திருக்கிறது
என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார்.
சிறப்பு விருந்தினர் திண்டுக்கல்
ஐ. லியோனி அவர்கள், ஒன்பான் சுவைகளை சிறப்புச்
சொற்பொழிவாற்றி நகைச்சுவை உணர்வோடு "இலக்கியத்தில் இன்பச்சுவை” எனும்
தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார்.
நிறைவாக, இலக்கியமன்றச் செயலர் 9.ஆம் வகுப்பு மாணவி அன்புச்
செல்வி நன்றியுரை ஆற்றினார்.
பத்தியைப் படித்து
வினாக்களுக்கு விடையளிக்க.
தென்னிந்தியாவின்,அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக
மாட்டினங்களின் தாய் இனம் என்று 'காங்கேயம்' கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம்
மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு
மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான
தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள்: ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர்
பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும்
அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
கடுமையாக
உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை,
பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி
ஆற்றுத் துறையில் காங்கேயம் மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச்
சேர்ந்த சேரர்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
வினாக்கள்:
3. பின்வரும் நான்கு
வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக
அ) மிடுக்குத் தோற்றத்திற்கும்
ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?
ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம்
என்று கருதப்படுவது யாது?
இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச்
செல்கின்ற காளை இனம் எது ?
ஈ) மேற்கண்ட பத்தி எதைக்
குறிப்பிடுகிறது?
விடை: காங்கேயம் இனக்
காளைகள்
2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
அ)
கர்நாடகம் ஆ) கேரளா இ)
இலங்கை ஈ) ஆந்திரா
விடை: இ) இலங்கை
3. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அ)
கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன. ஆ) கண்டு
+ எடுக்கப் + பட்டுள்ளன.
இ)
கண்டெடுக்க பட்டு + உள்ளன. ஈ) கண் + டெடுக்க + பட்டு உள்ளன.
விடை: அ) கண்டு +
எடுக்கப்பட்டு உள்ளன.
4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக்
காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது
எவ்வகைத் தொடர்?
அ) வினாத் தொடர் ஆ) கட்டளைத்தொடர் இ) செய்தித்தொடர் ஈ) உணர்ச்சித்தொடர்
விடை: இ) செய்தித்தொடர்
(பக்க எண்:84 மொழியோடு விளையாடு)
பொருள் எழுதித்
தொடரமைக்க.
கரை,கறை; குளவி, குழவி, வாளை, வாழை, பரவை, பறவை; மரை, மறை '
(எ.கா)
அலை – கடலலை இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது
அழை – வரவழைத்தல் என் நண்பர்களை
வரவழைத்துள்ளேன்
விடை:
கரை – கடற்கரை கறை -அழுக்கு
கடற்கரையில்
அலையோடு விளையாடலாம் - ஆடையில் கறை படிந்தால் துவைக்க வேண்டும்
குளவி - பூச்சி - குழவி
- குழந்தை
தேனுக்காக
பூக்களைக் குளவிகள் மொய்த்தன - பொம்மையைப் பார்த்து அழுத குழவி சிரித்தது
வாளை – ஆயுதம் வாழை –
மரம்
போர்வீரன்
வாளைச் சுழற்றிப் பயிற்சி செய்தான் - கோவில் திருவிழாவில்
வாழைமரம் கட்டுவார்கள்
பரவை- கடல் பறவை - பறவை
கடலில்
மீனவர்கள் மீன் பிடித்தனர் - அதிகாலையில் பறவை எழுந்துவிடும்
மரை – மான் மறை - வேதம்
காட்டில்
மான்கள் கூட்டமாக வாழும் - மறை நான்கு வகைப்படும்.
அகராதியில் காண்க.
இயவை, சந்தப்பேழை, சிட்டம்,
தகழ்வு, பௌரி
விடை:
இயவை - வழி
சந்தப்பேழை - அழகிய பெட்டி
சிட்டம் - பெருமை வீண்
தகழ்வு - ஆடம்பரம்
பௌரி - பெரும் பண் வகை.
பொருள் தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக்
கொண்டு பொருள்தரும் வகையில் ஒரு சொல்லில்தொடரைத் தொடங்குக. அத்துடன்
அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய
சொற்றொடர்களை உருவாக்குக. இறுதித்தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக
அமையவேண்டும்
காலங்களில் தெருவில்
வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக்குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழை
மின் கம்பிகள்.
1.வைக்காதீர்கள்
2.-------- வைக்காதீர்கள்
3. -------- ---------- வைக்காதீர்கள்
4.----------
விடை:
1. வைக்காதீர்கள்
2 காலை
வைக்காதீர்கள்
3.கவனக்குறைவுடன்
காலை வைக்காதீர்கள்
4. காப்புக்
கம்பிகள், அறுந்த மின் கம்பிகள் ஆகியவற்றின் மீது
கவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்.
5. தெருவில்
காப்புக் கம்பிகள், அறந்த மின் கம்பிகள் ஆகியவற்றின் மீது
கவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்.
6. மழைக்காலங்களில்
தெருவில் காப்புக் கம்பிகள், அறுந்த மின் கம்பிகள்
ஆகியவற்றின் மீதுகவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்.
காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.
ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று சொன்னது இந்தக்
காட்சி! கலையைப்
பற்றி எழுதினேன்! அனைவரும்
இதன் அருமை அறிந்து நடக்க
வேண்டும்! வாழ்க்கையில்
மேலும் உயர வேண்டும்! |
|
நிற்க அதற்குத்தக...
நான் பாராட்டுப் பெற்ற
சூழல்கள்
அ) கூடுதலாக மீதம்
கொடுத்த கடைக்காரரிடம் அந்தப் பணத்தை மீண்டும் அளித்தபோது.
ஆ) கட்டுரை ஏடுகளைக்
கீழே தவறவிட்ட என் ஆசிரியருக்கு அதை எடுத்துத் தந்தபோது
இ)நகரப்
பேருந்து நிலையத்தில் வழிகேட்ட பெரியவருக்கு வழிகாட்டிய போது.
ஈ) பள்ளிக்குச் சென்று
கொண்டிருந்தபோது முதியவரின் பழுதாகி நின்ற இருசக்கர வாகனத்தைச் செய்த போது.
(பக்க எண்:91 கற்பவை கற்றபின் -திருக்குறள்)
1)படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்தல்
விடை:இ
இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை.
2) பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிதல்
விடை:ஆ
ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
4.
தீரா இடும்பை தருவது எது?
அ. ஆராயாமை, ஐயப்படுதல் ஆ. குணம், குற்றம்
இ. பெருமை, சிறுமை ஈ. நாடாமை, பேணாமை
5.
சொல்லுக்கான பொருளைத் தொடரில்
அமைத்து எழுதுக.
அ. நுணங்கிய கேள்வியர் - நுட்பமான கேள்வியறிவு
உடையவர்
நுட்பமான
கேள்வியறிவு உடையவர் கடுஞ்சொல் பேசமாட்டார்
ஆ. பேணாமை- பாதுகாக்காமை
அவரவர் உடமைகளைப் பாதுகாக்காமை
பேரிழப்பாகும்
இ. செவிச்செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு
கேட்பதால் பெறும் அறிவு ஆழமானது
ஈ. அறனல்லசெய்யாமை– அறம்
அல்லாதசெயல்களைச்செய்யாதிருத்தல்
அறம்
அல்லாதசெயல்களைச்செய்யாதிருத்தல் மகிழ்ச்சிக்கு
வழி
குறுவினா
1.
நிலம் போல யாரிடம் பொறுமைகாக்கவேண்டும்?
விடை
: நிலம் போல தம்மை இகழ்பவரிடம் பொறுமைகாக்கவேண்டும்
2.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். இக்குறட்பாவின்
கருத்தைவிளக்குக.
விடை : தீயவைதீ யவற்றையே தருதலால் தீயைவிடக் கொடியதாகக்
கருதி அவற்றைச் செய்ய அஞ்ச வேண்டும்.
3.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். இக்குறட்பாவில்
அமைந்துள்ளநயங்களைஎழுதுக.
விடை:
எதுகை நயம், மோனை நயம்
4.
கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?
விடை:
செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு
கனவிலும் இனிமைதராது.
இயல்-3 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇