9 TH STD TAMIL UNIT 4 QUESTION & ANSWER

 


9.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்

இயல்-4  

(பக்க எண்:115  கற்பவை கற்றபின்)

1. வல்லினம்வருமா?

அ) தோழி __ கூற்று                                

ஆ) பெரிய __தம்பி

இ) சிறிய __ பறவை

ஈ) பழகு __தமிழ்

உ) இது __கேள்

ஊ) எலி __ கடிக்கும்

எ) ஓடிய __ குதிரை

ஏ) தரும்படி __ சொன்னார்

ஐ) வாழ்க__ தலைவர்

ஒ) கார் __ காலம்

விடை:

    மேற்கண்ட எவற்றிலும் வல்லினம் வராது.

அ) தோழி  கூற்று                                

ஆ) பெரிய தம்பி

இ) சிறிய  பறவை

ஈ) பழகு  தமிழ்

உ) இது கேள்

ஊ) எலி கடிக்கும்

எ) ஓடிய  குதிரை

ஏ) தரும்படி  சொன்னார்

ஐ) வாழ்க தலைவர்

ஒ) கார் காலம்.

2.வல்லினம் இடலாமா?

1.

அ. வாழ்த்து--கள்

கள் எனும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடக்கூடாது.

2.

ஆ.எழுத்து--கள்

கள் எனும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடக்கூடாது.

3.

இ. திருநிறை—செல்வன்

வினைத்தொகையில் வல்லினம் இடக்கூடாது

4.

ஈ. திருவளர்--செல்வி

வினைத்தொகையில் வல்லினம் இடக்கூடாது

2. எது சரி? எது தவறு? காரணம் கூறுக

1

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சரி

இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

2

அத்தனைச் சிறிய

தவறு

அத்தனை என்ற சொல்லின்பின் வல்லினம் மிகாது

3

ஆத்திச்சூடி

சரி

அகர , இகர ஈறு புணரும்போது வல்லினம் மிகும்.

4

எடுத்துக்காட்டுகள்

சரி

வன்றொடர் குற்றியலுகரத்தின்பின் வல்லினம் மிகும்.

5

கீழ்பக்கம்

தவறு

இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

6

சான்றோர் பேரவை

சரி

நிலைமொழியில் உயர்திணை வரும்போது வல்லினம் மிகாது

7

சென்னைப் பல்கலைக்கழகம்

சரி

இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

8

தயிர்ச்சோறு

சரி

இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

4. கீழ்க்காணும் தொடர்களில் வல்லினம் மிகும், மிகாஇடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக.

அ)  வங்கி கடன்  - வங்கிக் கடன் - இதர ஈற்றுச் சொற்களில் வல்லினம் மிகும்.

ஆ) பழங்களை பறிக்காதீர்கள் -பழங்களைப் பறிக்காதீர்கள்-இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்,

இ)திட்டக்குழு -  திட்டகுழு  - ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

ஈ) அரசு ஆணை பிறப்பித்தது -  அரசு ஆணை பிறப்பித்தது -  எழுவாய்த் தொடர்களில் வல்லினம் மிகாது.

உ) மருந்து கடை -  மருந்துக் கடை - மென்றொடர்க் குற்றியலுகரத்தின் வல்லினம் மிகும்.

ஊ)வேலையில்லா பட்டதாரி -வேலையில்லாப்பட்டதாரி -ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தில்  வல்லினம் மிகும்

எ) சிறப்பு பரிசு -   சிறப்புப் பரிசு  - அடைமொழிகளில் வல்லினம் மிகும்.

(பக்க எண்:115  கற்பவை கற்றபின்)

பலவுள் தெரிக.

1. கீழ்க்காணும்  மூன்று தொடர்களுள் -

அ) இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதைஎளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.

ஆ) வங்கி அட்டை இல்லைஎன்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.

இ) திறன் அட்டைகள் என்பவைகுடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.

i) , ஆ ஆகியன சரி; இ தவறு    ii) , இ ஆகியன சரி; ஆ தவறு

iii) அ தவறு; , இ ஆகியன சரி   iv) மூன்றும் சரி

2. தமிழ்நாடு அரசு கிராமப்புறமாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத்தேர்வு எது?

அ) தேசியத்திறனறித்தேர்வு   ஆ) ஊரகத்திறனறித்தேர்வு

இ) தேசியத்திறனறி, கல்வி உதவித் தொகைத்தேர்வு   ஈ) மூன்றும் சரி

3. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

  இரண்டறிவதுவே அதனொடு நாவே

இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?

அ) நுகர்தல்   ஆ) தொடு உணர்வு  இ) கேட்டல்   ஈ) காணல்

4. பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க.

அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்

எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்

இளையவர் கூட்டம் என்னைஏந்தி நடப்பர்

அ) இணையம்    ஆ) தமிழ்  இ) கணினி    ஈ) ஏவுகணை

5. விடைவரிசையைத்தேர்க.

அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டைமுன்கூட்டியேகணிக்கும்.

ஆ) இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்டசெயலி.

௧) நேவிக், சித்தாரா ௨) நேவிக், வானூர்தி ௩) வானூர்தி, சித்தாரா ௪) சித்தாரா, நேவிக்

குறுவினா

1.கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக.

விடை: கூட்டுப்புழுவைப்போல நாம் பொறுமையும்,அடக்கமும் கொண்டிருந்தால் அனைத்திலும் வெற்றி பெறலாம்

2. இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.

விடை:

1.     அலைபேசி

2.    கணிப்பொறி

3.    தொலை நகல்

4.    அட்டை தேய்ப்பி இயந்திரம்

5.    ஆளறி சோதனைக் கருவி

3. மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

    நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

    ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும். மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?

விடை: மூவறிவு- கரையான்,எறும்பு

            நான்கறிவு – நண்டு,தும்பி 

            ஐந்தறிவு- பறவை,விலங்கு

4. செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியைப் பற்றி திரு. சிவன் கூறுவது யாது?

விடை:

·        செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியின் பெயர் சித்தாரா.

·        இது செயற்கைக்கோள் பற்றி முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும்.

·        அதைப் பயன்படுத்தி வாகனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கலாம்.

சிறுவினா

1.என் சமகாலத் தோழர்களே' கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?

விடை:

ü  அறிவியல் என்றும் ஊர்தியின் மீது ஆட்சி செய்கின்ற தமிழை நிறுத்துங்கள்.

ü  கல்லணையை கவினுற கட்டிய கரிகாற் சோழனின் மேன்மையையெல்லாம் கணிப்பொறி உள்ளே சேகரித்து வையுங்கள்.

ü  ஏவுகின்ற திசையில் பாய்ந்த அம்பைப் போல நம் இனத்தை வீரமுடையதாக்குங்கள்.

ü  அறிவியல் முன்னேற்றத்தால் நாம் ஏவுகின்ற ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோள்களிலும் ஏற்றுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறார் கவிஞர் வைரமுத்து.

2. அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?

விடை:

3. பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.

விடை:

ü  நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆண்டுதோறும் பல போட்டித் தேர்வுகள் நடத்துகின்றன. அவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம்.

ü  பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பும் முடிந்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாகச் செய்யப்பட்டு வருகிறது.

ü  பள்ளிக்கல்வி முடித்த மாணவர்கள் கல்லூரிகளுக்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கட்டணம், கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றையும் இணையம் வழியாகவே செலுத்த முடியும்.

4. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு யாது?

விடை:

v  செயற்கை கோள்களினால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தின் மூலம் பெருக்க வழிவகைகளை அரசுக்குத் தெரிவிக்க முடிகிறது.

v  அரசானது பற்பல விவசாய முன்னேற்றத் திட்டங்களை வகுக்க முடிகிறது.

v  நிலத்தில் எந்த இடத்தில் நீரின் அளவு இருக்கும் என்பதைச் செயற்கைக் கோள் மூலம் அறிவதால் அதற்கேற்பப் பயிர் செய்ய முடிகிறது.

v  விவசாயத்தில் தன்னிறைவு ஏற்படும் போது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது.

v  கடல் பகுதியில் எந்த எந்த இடங்களில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்று மீனவர்களுக்கும் சொல்ல முடிகிறது.

5.வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

விடை:

·        வல்லெழுத்துகள் க,,,ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும், இவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும். இதை வல்லினம் மிகுதல் என்பர்.

·        இவ்வாறு எந்த எந்த இடங்களில் அவ்வல்லினம் மிகும் என்பதை விதிகளின் மூலமூம் எடுத்துக்காட்டுகள் மூலமும் அறியலாம்.

             (எ.கா) அச்சட்டை, கதவைத்திற, எனக்கேட்டார், எட்டுத்தொகை மல்லிகைப்பூ

·        நாம் பேசும் போதும் எழுதும் போதும் பொருள் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது இன்றியமையாததாகும்.

நெடுவினா

1.அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத்

தொகுத்து எழுதுக.

விடை:

இணைய வணிகம்

  இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979இல் இணைய வரிகத்தைக் கண்டுபிடித்தார்.இன்று இணைய நிறுவனங்கள் விற்காத பொருள்கள் எதுவும் உலகில் இல்லை கரும்பு முதல் கணினி வரை இணைய வழியில் விற்கப்படுகின்றன. இன்று இணைய வணிகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது.

இணைய பயன்பாடு :

    தற்காலத்தில் பேருந்து, விமானம், தொடர்வண்டி. தங்கும் விடுதி போன்றவற்றின் முன் பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.இணையப் பயன்பாட்டால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது .பெரு நகரங்களில் திரைப்படங்களின் இருக்கைகள், முன்பதிவு செய்வது கூட இணையம்  மூலம் நடைபெறுகின்றது.

வரி செலுத்துதல்

       அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி ஆகியன இணைய வழியில்செலுத்தப்படுகின்றன. அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் உரிய படிவங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை நிரப்பி இணையம் மூலம் வழங்கப்படுகின்றன. நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கும் இணையம் பயன்படுகிறது.

         ஆண்டுதோறும் பல போட்டித் தேர்வுகளுக்கு இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம். பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையத்தின் வழியாகச் செயல்பட்டு வருகிறது.

2.இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.

விடை:

         இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் 'அன்தரீஷி பவன்' என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை விண்வெளி நிலையம் சதீஸ் தவன் விண்வெளிமையம்.

      இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி தொழில்நுடபத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.

         இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 'ஆரியப்படடா' அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார் 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக் கோள் 'ரோகினி' ஏவப்பட்டது. இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதற்பயணமாக "சந்திராயன்-I" ஏவப்பட்டது.

      1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுடபத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுடபம் மக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார்.

(பக்க எண்:118  மொழியை ஆள்வோம்)

மொழிபெயர்க்க

    Bottie xylophone, Make music with bottles.

    You will need: 6 glass bottles, Wooden spoon, Wter, Food coloring.

1.Fill one bottle with water, then fill each other bottle with slightly less than the bottle next to it.

2.Add some food coloring to help you to see the different levels of water.

3.Tap the bottles with the end of a wooden spoon. Can you play a tune?

Water music

      Hitting the bottles with the spoon makes them vibrate and produce a sound. The more the bottle vibrates, the higher the note will be. The more water in a bottle, the less it vibrates, so less water means higher notes.

விடை:

    கண்ணாடிப் புட்டிகளாலான இசைக்கருவி,

    கண்ணாடி புட்டிகள் மூலம் இசையை உருவாக்குதல்.

தேவையான உபகரணங்கள்:

    ஆறு கண்ணாடி புட்டிகள், மரத்தாலான கரண்டி ஒன்று,  தண்ணீர் ,உணவுப்பொருளுக்குப் பயன்படும் வண்ணப்பொடி.

செய்முறை:

    1.முதல் புட்டியில் முழுவதுமாக தண்ணீரை நிரப்பு. அடுத்தடுத்து வரும் புடடிகளில் சற்று குறைவாக நிரப்பிக் கொள்.

    2.உணவுப் பொருளுக்குப் பயன்படுத்தப்படும் வண்ணப் பொடியை தண்ணீரில் கலந்து கொண்டு, ஒவ்வொரு புடடியிலும் வேறுபட்ட அளவில் தண்ணீர் நிரப்பியிருப்பதை அறிந்துகொள்

   3.இப்போது மரத்தாலான கரண்டியின் அடிப்பாகத்தைக் கொண்டு புட்டிகளில் தட்டினால், இசையை உன்னால் உருவாக்க முடியும்.

தண்ணீர் இசை:

    மரக்கரண்டியின் அடிப்பாகத்தால் புடடிகளைத் தட்டும் போது ஏற்படும் அதிர்வுகளால் ஒலி ஏற்படுகிறது. புட்டிகளில் நிறைய நீர் இருந்தால் குறைவான அதிர்வுகளும், குறைவான நீர் உள்ள புட்டிகளில் நிறைய அதிர்வுகளும் ஏற்படும். ஒலியின் அளவுகள் வேறுபட்டு வரும்பொழுது, அதற்கேற்ப இசையும் (Tune) மாறுட்டு ஒலிக்கும்.

2 பின்வரும் பத்தியில் இடம் பெற்றுள்ள பிறமொழிச் நிகரான தமிழ்ச்சொற்களை எழுதுக

   நாக்கு தான் ஐம்புலன்களிலேயே ரொம்ப விக்கு! அதற்கு நான்கு ஆதாரருசிகள் தாம் தெரியும், எலுமிச்சையின் புளிப்பு. சர்க்கரையின் தித்திப்பு, காபியின் கசப்பு, உப்பு, இவை தவிர ஸேவரி என்று சொல்கிற டேஸ்ட் எல்லாம் இந்த நான்கு ஆதார ருசிகளின் கலப்புதான் இந்த சூசிகளைத் தொட்டு அறிய நாக்கில் வெவ்வேறு இடங்கள் உண்டு. தித்திப்பு - நுனி நாக்கு, உப்பு பரவலாக, குறிப்பாக நுனியில், கசப்பு நாக்கின் வலது இடது புறங்கள்! ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் 9,000 சுவை அரும்புகள் உள்நாக்கு, புளிப்பு, ஸேவரி உண்டு அலட்டல் வேண்டாம். குழந்தையின் நாக்குடன் ஒப்பிடும் போது இது ஒன்றுமே இல்லை. ஏதாவது மருந்தை நாக்கில் தொட்டால் குழந்தைகள் என்னமாக எக்ஸ்பிரஷன் காட்டுகின்றன.

    அவைக்கு வாசனையும் சேரவேண்டும். இரண்டும் ஒத்துழைத்தால் தான் பாதாம் அல்வா ஐஸ்கீரிம் போன்றவற்றை ரசிக்க முடியும், மூக்கைப் பிடித்துக் கொண்டு ஐஸ்கீரிம் சாப்பிட்டுப் பாருங்கள். ஜில்லென்று இருக்கும் அவ்வளவே. கூடவே சூடும், உணவின் தோற்றமும் முக்கியம் மூக்குக்கு மொத்தம் ஏழு வாசனைகள் கற்பூர வாசனை, பெப்பர்பிண்ட் வாசனை, மலர்களின் வாசனை, மஸ்க் என்னும் அரபுசேக் செண்ட் வாசனை, ஈத்தர் அல்லது பெட்ரோல் வாசனை, அழுகிய முட்டை வாசனை, காட்டமான அமில வாசனை, இந்த ஏழு வாசனைகளின் கலப்புகளால் நம்மால் ஆயிரக்கணக்கான வாசனைகளை உணரமுடிகிறது. (ஏன்? எதற்கு? எப்படி சுஜாதா)

விடைகள்:

1. வீக்கு – பலவீனமானது

2. காபி  - கொட்டை வடிநீர்

3. ஸேவரி - தின்பண்டம்

4. டேஸ்ட் - சுவை

5. எக்ஸ்பிரஷன் - வெளிப்பாடு

6.ஐஸ்கீரிம் - பனிக்கூழ்

7.ஜில் - குளிர்

8. பெப்பர்மிண்ட் - ஒருவகை புதினா

9. மஸ்க் - ஆண் மானின் நறுமணப்பொருள்

10.அரபுசேக் - அரேபிய தலைவர்

11. செண்ட் -  நறுமணம்

12. ஈத்தர் - நிறமில்லாத திரவம்

3 . கதையைப் படித்து உரையாடலாக மாற்றுக.

       ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது 'ஐயோ, என்னால் வலி தாங்க முடியவில்லையே' 'ஏன்? என்னாச்சு?' என்று விசாரித்தது இரண்டாவது சிப்பி

     வலி' "எனக்குள் ஏதோ ஒரு கனமான உருண்டை, பந்து உருள்வதுபோல் இருக்கிறது.ரொம்ப வலி”

    இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு மிகுந்த மகிழ்ச்சி பெருமையுடன் தெஞ்சு நிமிர்த்தி

'ஆகா! நான் எந்த வலியும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்' என்றது உற்சாகமாக.

   இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு, இரண்டாவது சிப்பியிடம் சொன்னது 'உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். வலியை தாங்க விரும்பாத நீ, எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான். ஆனால் இப்போது சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாள்களில், ஓர் அழகான முத்தா உருவெடுக்கும். அது பெருமை தேடித்தரும்.

உரையாடல்

முதல் சிப்பி : ஐயோ, என்னால் வலி தாங்க முடியவில்லை!

இரண்டாவது சிப்பி :  ஏன்? என்னாச்சு?

முதல் சிப்பி : எனக்குள் ஏதோ ஒரு கனமான உருண்டை பந்து உருள்வது போல்இருக்கிறது. ரொம்ப வலி.

இரண்டாவது சிப்பி: மகிழ்ச்சியுடன் ஆகா! என்னாச்சு? இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த நண்டு   

                              இரண்டாவது சிப்பிடம் சொன்னது.

நண்டு : உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம் வலியைத் தாங்க விரும்பாத

             நீ, எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியது தான், ஆனால் இப்போது  சிரமப்படுத்தும்       

            அந்த வலி, இன்னும் சில நாள்களில் ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும் அது பெருமை தேடித் தரும்.

4. நயம் பாராட்டுக.

      பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்

      சிங்கமே! வான வீதி திகுதிகு எனவு ரிக்கும்

      மங்காத தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த

      தங்கத்தின் தட்டே! வாளத் தகளியிற் பெருவி ளக்கே!

      டலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்

      நெடுவானில் கோடி கோடி நிறைகடர்க் கைகள் நீட்டி

      இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ

     அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!

                                                                                                      -  பாரதிதாசன்

முன்னுரை:

      இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க்கவிஞர் பாரதிதாசன் பாவேந்தர் புரட்சிக்கவிஞர்

எனப் பாராட்டப்பட்டவர் குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்புப் போன்ற நூல்களைப் படைத்தவர் இயற்கையை வாழ்த்தும் அவருடைய பாடலின் நயங்களைக் காண்போம்-

திரண்ட கருத்து:

     நிரைந்தும் பெருகியும் நீளமான கழுத்தின் பின்புறம் மயிர்க்கற்றை சிலிர்க்கும் சிங்கமே! வாளவீதி திகுதிகு என எரிந்து கொண்டிருக்கும் குறையாத கனிந்த நெருப்புப் பிழம்பாகிய திரட்சியே! சிவப்பு இரத்தினக் கல்லாகிய மாணிக்க மணிகள் ஒளி விடுகின்ற சிறுமலையேற பட்டை தீட்டிய தங்கத் தட்டே! வானத்தின் எண்ணெய்க் கலத்தில் எரியும் பெரிய விளக்கே  கடலின் மீது கோடி கோடியாக ஒளிர்க்திர்களாகிய கைகளை வீசுகின்றாய் நீண்ட வாளத்தில் கோடிக்கணக்கான நிறைச்சுடர்களாம் விண்மீன் கூட்டங்கள் உன் ஒளி பெற்றுக் கை நீட்டி உன்னைச் சுற்றுகின்றன இடைப்பட்ட மலைகளிலும், காடுகளிலும், இல்லங்களிலும் நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் உன் ஒளிக்கதிர்கள் பட்டுப்பட்டு மின்னி ஒளிர்ந்திட அழகாக அமைந்துள்ளாய்! சூரியனே நீ வாழ்க!

மையக்கருத்து :

     கதிரவனின் கண்கொள்ளாக் காட்சியை இப்பாடல் தெளிவுபடுத்துகிறது.

மோனை நயம்:

     செய்யுளில் அடிகளிலோ சீர்களிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயமாகும்.

         பொங்கியும்

         பொலிந்தும்

         புதுப்பிடல்

எதுகை நயம்:

     செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை நயமாகும். பொங்கியும்

          ங்காத

          சிங்கமே

          ங்கத்தின்

சொல் நயம்:

      இப்பாடலில் இனிமை பயக்கும் இனிய சொற்றொடரில் விரவிக் கிடக்கின்றன தணற்பிழம்பி தகவியிற் பெருவிளக்கே, கதிர்க்கைகள், பொய்கை ஆறோ எனக் கதிரவனைச் சிறப்பிக்கு சொற்றொடர்கள் தமிழின் இனிமையை வெளிப்படுத்துகின்றன.

அணி நயம்:

   இப்பாடயில் உயர்வு நவிற்சி அளளி பயின்று வந்துள்ளது உள்ளதை மிகைப்படுத்தி, மீ, உயர்வாகப் பாடுவது உயர்வு தவிற்சி அணியாகும்.

       கதிரவனின் அழகை கூற வந்த கவிஞர் களிந்த தெப்புக் குவியல், வானவீதி சிலப்பூ

இரத்தினக்கற்கள் நிறைந்த சிறுமலை வானில் உள்ள அகழியின் பெரிய விளக்கு என உயர்த்தி

பாடுவதால் இப்பாடல் உயர்வு நவிற்சி அணியாகும்.

முடிவுரை:

    கதிரவனின் அழகை நம் கண்முன் படைத்துக் காட்டும் பாரதிதாசனின் கவி இன்பத்தை

கண்டு மகிழ்வோம். 

(பக்க எண்:119  மொழியோடு விளையாடு)

1 அகராதியில் காண்க.

    இமிழ்தல், இசைவு, துவளம், சபலை, துகலம்

1. இமிழ்தல்  - ஒலித்தல், கட்டுதல்

2. இசைவு  - உடன்பாடு , ஒப்புதல்

3. துவளம் - ஒலி

4 சபலை -  மின்னல், இலக்குமி

5.துகலம் -  மகிழ்ச்சி

2 ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.

     (விலங்கு, எழுதி, அகல், கால், அலை)

அ) எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்

ஆ) எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் கால் ஐ வை.

இ) கைப்பொருளைக் கடல் அலையில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?

ஈ) வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும், வெளியில் அதனைக் கழுத்து    

     விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்,

உ எழுத்தாணிகொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோனிலும் ஏற்றுங்கள்.

3.ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக.

1.மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன

  மயில் தோகையை விரித்தது.

2.ஊர்த்திருவிழாவில் மக்கள் குவிந்தனர் வணிகர்கள்,

   பொருட்களைக் குவித்து வைத்து விற்பனை செய்தனர்.

3. நண்பர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ந்தனர் ஆசிரியர்,

    ங்களையெல்லாம் ஒன்று சேர்த்து மகிழ்ந்தார்

4.மேலாளரைக் கண்ட பணியாளர்கள் பணிந்து வணங்கினர்

   மேலாளர் அவர்களுக்குப் பணியைச் செய்யுமாறு பணித்தார்.

5. கட்டடம் கட்டுபவன் இரண்டு சுவர்களை பொருத்தினான்

    சுவர்கள் இரண்டும் பொருந்தியது.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி!       

தொழில் நுட்பத்தைப் பற்றி எழுதினேன்!

அனைவரும் இதன் அருமை அறிந்து

நடக்க வேண்டும்!

வாழ்க்கையில் மேலும் உயர வேண்டும்!

நிற்க அதற்குத்தக...

என் பெற்றோர் மகிழுமாறு நான் செய்ய வேண்டியது

    1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.

    2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.

    3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.

    4. முயற்சி செய்தால் முடியும், என் வேலையை நானே செய்து தருவேன்.

    5. என் தங்கையோடு போட்டிபோடாமல் ஆண், பெண் வேறுபாடின்றி உரிமையைச் சமமாகப் பெற செய்வேன்.

    6. நான் குடியிருக்கும் தெருவில் குப்பைக் கூளங்கள் தேங்காதவாறு பார்த்துக் கொண்டு பிறர்க்கு முன்மாதிரியாக நடந்து கொள்வேன்.

 இயல்-4 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇

 

 

 

 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை