8.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்
இயல் - 1
தமிழ்மொழி வாழ்த்து (பக்க எண்: 04 மதிப்பீடு)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1)மக்கள்
வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு ஆ)கடல் இ) பரவை ஈ) ஆழி
2)என்றென்றும்
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .
அ)என் + றென்றும் ஆ)என்று +
என்றும் இ) என்றும் + என்றும் ஈ)என் + என்றும்
3. வானமளந்தது
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ)வான + மளந்தது ஆ)வான்
+ அளந்தது இ)வானம் +
அளந்தது ஈ)வான் + மளந்தது
4. அறிந்தது+அனைத்தும்
என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)அறிந்ததுஅனைத்தும் ஆ) அறிந்தனைத்தும் இ)அறிந்ததனைத்தும் ஈ) அறிந்துனைத்தும்
5) வானம்
+ அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
அ) வானம் அறிந்து ஆ)
வான்அறிந்த இ) வானமறிந்த ஈ)
வான்மறிந்த
தமிழ்மொழி வாழ்த்து - இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை
எடுத்தெழுதுக
வாழ்க வாழிய , வானம் வண்மொழி , எங்கள் என்றென்றும்
குறுவினா
1. தமிழ்
எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
விடை : தமிழ்
உலகம் முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது
2. தமிழ்
எவற்றை அறிந்து வளர்கிறது?
விடை : தமிழ் வானம்
வரையுள்ள அனைத்து பொருண்மைகளையும் அறிந்து வளர்கிறது
சிறுவினா
தமிழ்மொழியை வாழ்த்திப்
பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
விடை:
v
எல்லா காலத்திலும் நிலைபெற்று தமிழே!
வாழ்க.
v
எல்லாவற்றையும் அறிந்துரைக்கும்
தமிழே! வாழ்க.
v
ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம்
முழுவதும் புகழ்கொண்ட
v
உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க.
v
எங்கும் உள்ள அறியாமை இருள்
நீங்கட்டும்.
v
தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும்
சிறப்படைக!
v
பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும்
துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும் தமிழே! வாழ்க.
சிந்தனை வினா
பாரதியார் தமிழை வணமொழி
என்று அழைக்கக் காரணம் என்ன?
விடை: நமது
தாய்மொழி தமிழ். இதன் சிறப்புகள் பல. இம்மொழி வரலாற்றுத் தொன்மை, பண்பாட்டு வளம், சொல்வளம், கருத்துவளம்
ஆகியவற்றால் ஓங்கி உயர்ந்துள்ளது. அழியாத மொழியாக, சிதையாத
மொழியாக, அன்று முதல் இன்றுவரை ஒரே நிலையில் உயிர்ப்புடன்
வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே மொழி நம் தமிழ் மொழிதான்.
தமிழ்
மொழி ஒன்றுதான், வாழ்வுக்கே இலக்கணம் அமைத்து சிறந்து
மிளிரும் வளமான மொழியாகும். மானிட வாழ்க்கையையே 'அகம்',
'புறம்' என இருவகைப்படுத்தி இலக்கணங்கண்ட
பெருமை தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் உண்டு,
தமிழ்மொழி மரபு (பக்க எண்: 07 மதிப்பீடு)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .
1 பறவைகள்
---- பறந்து செல்கின்றன:
அ) நிலத்தில் ஆ) விசும்பில் இ) மரத்தில் ஈ) நீரில்
2. இயற்கையைப்
போற்றுதல் தமிழர் ....
அ) மரபு ஆ) பொழுது இ) வரவு ஈ) தகவு
3 ‘இருதிணை
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .....
அ) இரண்டு +திணை ஆ) இரு + திணை இ) இருவர் திணை ஈ)இருந்து
திணை
4) 'ஐம்பால்'
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) ஐம் + பால் ஆ) ஐந்து + பால் இ) ஐம்பது பால் ஈ)ஐ + பால்
குறுவினா
1.உலகம்
எவற்றால் ஆனது?
விடை: உலகம் ஐம்பூதங்களான நிலம்,
நீர், நீ, காற்று,
வானம் ஆகியவற்றால் ஆனது.
2.செய்யுளில்
மரபுகளை ஏன் மாற்றக்கூடாதூ
விடை: செய்யுளில்
திணை, பால், வேறுபாடறிந்து மரபான
சொற்களைப் பயன்படுத்துதல்
வேண்டும். மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்.
சிந்தனை வினா
நம் முன்னோர்கள்
மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
·
உலகில் உள்ள எல்லாப்
பொருள்களையும் இருதிணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறியுள்ளது
தமிழ்மொழி. இது இம்மொழியின் மரபு.
·
நம் முன்னோர்
ஒழுக்கத்தின் அடிப்படையில் உயர்திணை, அஃறிணை
எனப்
பிரித்துள்ளனர்.
·
உயர்திணைக்குரிய
பால்களாக ஆண்பால், பெண்பால்,
பலர்பால் ஆகியவற்றையும் அஃறிணைக்குரிய பால்களாக ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றையும் வகைப்படுத்திப் பயன்படுத்தியுள்ளனர்.
·
இம்மரபினை மாற்றாமல்
பயன்படுத்தினால் மட்டுமே பொருள் மாறாமல் இருக்கும்.
இதனையறிந்த நம்
முன்னோர் மரபு மாறாமல் பின்பற்றியுள்ளனர்.
தமிழ் வரிவடிவ வளர்ச்சி (பக்க எண்: 07 மதிப்பீடு)
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான
வடிவத்தைப் பெறக் காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை ஆ) இசைக்கலை இ) அச்சுக்கலை
ஈ) நுண்கலை
2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ்
எழுத்து அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில்
ஈடுபட்டவர்
அ) பாரதிதாசன் ஆ) தந்தை பெரியார் இ) வ.உ.சிதம்பரனார் ஈ) பெருஞ்சித்திரனார்.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1.கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ்
எழுத்துகள் கண்ணெழுத்துகள்
எனஅழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும்
குழப்பங்களைக் களைந்தவர் வீரமாமுனிவர்
குறுவினா
1. ஓவிய எழுத்து என்றால் என்ன?
விடை: தொடக்ககாலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ
குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவேஇருந்தது.
இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
2.ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
விடை: ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையைஒலி எழுத்து நிலைஎன்பர்.
3. ஓலைச்சுவடிகளில்
நேர்க்கோடுகள் புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
விடை:
ü புள்ளியிட்டு எழுதினால் ஓலைச்சுவடி
சிதைந்துவிடும்.
ü நேர்க்கோடிட்டு எழுதினால் ஓலைச்சுவடி
கிழிந்துவிடும்,
ஆகிய காரணங்களால்
ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள்,
புள்ளிகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்
4.வீரமாமுனிவர்
மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.
விடை:
ü ஓகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும்
குழப்பங்களை வீரமாமுனிவர் போக்கினார்.
ü 'எ' என்னும் எழுத்திற்குக்
கீழ்க்கோடிட்டு 'எ' என்னும் எழுத்தை
நெடிலாகவும் 'ஓ' என்னும் எழுத்திற்குச்
சுழி இட்டு 'ஓ' என்னும் எழுத்தாக
உருவாக்கினார்.
சிறு வினா.
1.எழுத்துச்
சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
ü ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது
அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
ü ஓலைச்சுவடிகளில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது, புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத
நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா
நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
ü இதனால் படிப்பவர்கள் பெரிதும் துன்பம்
அடைந்தனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
2.தமிழ்
எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
ü நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிகளுக்குப்
பதிலாக இக்காலத்தில் துணைக்கால் பயன்படுகின்றது.
ü ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன்
இருந்த இரடடைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு ( ை) பயன்படுகின்றது.
ü ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின்
இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள)
பயன்படுகின்றது.
ü குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின்மேல் புள்ளி இடும்
வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது,
நெடுவினா.
எழுத்துகளின் தோற்றம்
குறித்து எழுதுக.
விடை:
v மனிதன் தனக்கு எதிரேஇல்லாதவர்களுக்கும்
தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான், அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன்
எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.
v இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
v தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே
இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
v அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு
உரிய முழு ஒலியாகியசொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும்
அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என
உருவான நிலையை 'ஒலி
எழுத்து நிலை" என்பர்.
v இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில்
பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.
சிந்தனை வினா.
1. தற்காலத்
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக
விடை:
v தமிழராய்ப் பிறந்தோர் அனைவரும் தமிழ் வழிக்
கல்வியை ஆதரிப்பவர்களாக விளங்க வேண்டும்.
v தமிழ்மொழியில் தோன்றிய இலக்கண, இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் போன்ற அனைத்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அனைவருக்கும்
பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும்.
v பழைமையைப் பேணுவதுடன், புதுமை காணும் நோக்கத்துடன் வெளிவரும்
படைப்பிலக்கியங்களையும் அவற்றைப் படைப்போரையும் பேணும் நிலை வர வேண்டும்.
v பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்து தமிழிலேயே
வெளியிட வேண்டும்.கலைச்சொற்கள் புதிதாகப் படைக்கப்பட வேண்டும்.
2. தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால்
தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறி கலந்துரையாடவும்.
சிவா : தமிழ்மொழியின் பெருமையைப்பற்றி பேசுகிறாயே!
எண்களுக்கு அதாவது ஒன்று. இரண்டிற்கு
எழுத்துருக்கள் உண்டா?
சக்தி : எண்களுக்கும் தமிழ்மொழியில் உருக்கள் உண்டு.
எப்படி 1, 2, 3 என உரோமன்எழுத்துகள்
உண்டோ அதுபோல தமிழிலும் எண்களுக்கான
எழுத்துருவரிசைகள் உண்டு.
சிவா : ஒவ்வொரு எண்ணிற்கும் உரோமன் எழுத்தில் தான்
எழுதுதல் வேண்டும். தமிழில் எண்கள்
இல்லை என நான் தவறாக
கருதிவிட்டேன்.
சக்தி : நீ
மட்டுமல்ல தமிழ் அறிந்த பலரும் எண்களுக்கு எழுத்தில்லை என்று தவறாகப்புரிந்துக்
கொண்டு, நம் தமிழின் சிறப்பை
மறந்துவிடுகின்றனர் ஒன்றுக்கு 'சு' என்றும்
இரண்டிற்கு 'உ
என்றும் எழுத்து வடிவம் உண்டு
சிவா : நீ சொல்வது சரிதான். இதை மறந்து அனைவரும் உரோமன்
எழுத்துருவைப் பயன்படுத்தினால்,
காலப்போக்கில் தமிழ் எண்
எழுத்து மறைந்துவிடக்கூடும். மறந்துவிடக்கூடும்.
சக்தி : ஆம் சிவா! எனவே நாம் அனைவரும் முடிந்தவரை
எண்களுக்குரிய தமிழ் வரிவடித்தை எழுதப்
பழகுவோம். தமிழ்மொழியைப்
போற்றுவோம்.
சொற்பூங்கா (பக்க எண்: 16 மதிப்பீடு)
தமிழில்
ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து
எழுதுக.
முன்னுரை
தமிழ்மொழி செந்தமிழாகவும்
உயிரோட்டத் தமிழாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி சொல்வளம் மிக்கமொழி என்பதை
இக்கட்டுரையின் மூலம் பார்ப்போம்.
மொழி வகை
தமிழில் ஓர் எழுத்துமொழி,
ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட
எழுத்துகள் உடைய மொழி என மூன்று வகையாக உள்ளது. "நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து
ஒருமொழி” என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
ஓரெழுத்து ஒருமொழி
உயிர் வரிசையில் ஆறு
எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, ந என்னும் வரிசைகளில்
ஐந்து எழுத்துகளும், க, ச. வ என்னும்
வரிசைகளில் நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக
நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார் நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
கலைச்சொல் வடிவம்
பூ.கா என்ற ஒரு இரு ஓரெழுத்து
ஒருமொழியை இணைத்து பூங்கா என வழங்கினர். ஆ,மா இரண்டையும் ஆமா
என்னும் சொல் உருவாக்கப்பட்டு காட்டுப் பசுவைக் குறித்தது. மாநிலம்,மாநாடு, மாஞாலம் இச்சொற்களில், மா என்பது பெரிய என்ற பொருளை தந்தது. அரிமா பரிமா, கரிமா
என்று விலங்கினப் பெயராகிறது.
இக்கால வழக்கு
ஈ என்ற சொல் ஒலிக்குறிப்பைக்
காட்டும்; பூச்சி வகையைச் சுட்டும், வழங்குதல்
என்னும் பொருளை உணர்த்தும். வெளிப்படை ஆகும். "ஈ என்று பல்லைக் காட்டாதே”
என்று அறிவுரை கூறவும் பயன்படும். போ, வா, நீ. சூ. சே. சை. சோ என்பவை இக்காலத்தில் வழங்கும் சொற்களாகும்.
மாற்றம் பெற்றவை
ஆன் மான், கோன். தேன். பேய ஆகியவை முறையே ஆ, மா. கோ, தே. பே என மாறியது. கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடைய "ஏய் அழைத்தல் பொருளைக் குறித்தது.
"ஏ" என வழக்கில் மாறிவிட்டது. ஏவலன், ஏகலை,
ஏகலைவன் என்ற சொற்களும் ஏவை அடிச்சொல்லாக மாற்றம் பெற்றவை.
முடிவுரை
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச்
சொற்களின பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பவனவற்றைக் கையில் கனியாகக் காட்டும். இத்தகைய
தமிழ்மொழியின் சொற்களை, மொழிப்பற்றை மீட்டெடுத்தலே
வழிகாட்டிகளுக்கு முதல் கடமையாய் நிற்கிறது. மொழிப்பற்றுள்ள ஒருவனே மொழியை
வளர்ப்பான்; அதன் இனத்தை, பண்பாட்டைக்
காப்பான். com
கற்பவை கற்றபின்
1. ஒரெழுத்து
ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
1) பழங்காலத்தில் போர்
தொடங்கும் முன் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர்.
2) “கனமான பொருளைத் தூக்காதே,
வை" என்று தாய் மகனிடம் கூறினார்.
3) கந்தனுக்கு முருகன் கை
கொடுத்து உதவி செய்தான்
4)தை மாதம் முதல் நாள் பொங்கல்
திருநாளாகக் கொண்டாடப்படும்.
5) "நீ எங்கே சென்றாய்?" என்று சீதா ராணியிடம் கேட்டாள்.
எழுத்துகளின் பிறப்பு (பக்க எண்: 19 மதிப்பீடு)
சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இதழ்களைக் குவிப்பதால்
பிறக்கும் எழுத்துகள் _____.
அ) இ, ஈ ஆ) உ,
ஊ இ) எ, ஏ ஈ) அ,
ஆ
2. ஆய்தஎழுத்து பிறக்கும் இடம் ______.
அ) மார்பு ஆ) கழுத்து இ) தலை ஈ) மூக்கு
3. வல்லின எழுத்துகள் பிறக்கும்
இடம் _____.
அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து
4. நாவின் நுனி அண்ணத்தின்
நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) க், ங் ஆ) ச், ஞ் இ) ட்,
ண் ஈ) ப், ம்
5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும்
இணைவதால் பிறக்கும் எழுத்து _____.
அ) ம் ஆ) ப் இ) ய்
ஈ) வ்
பொருத்துக.
க்,
ங் - நாவின் இடை, அண்ணத்தின் இடை நாவின்
முதல், அண்ணத்தின் அடி
ச்,
ஞ் - நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி நாவின்
இடை, அண்ணத்தின் இடை
ட்,
ண் - நாவின் முதல், அண்ணத்தின் அடி நாவின்
நுனி, அண்ணத்தின் நுனி
த்,
ந் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி நாவின்
நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
சிறுவினா
1. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
விடை:
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு,
தலை, கழுத்து, மூக்கு
ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய்ஆகிய உறுப்புகளின் முயற்சியினால்
வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின்
பிறப்பு என்பர்.
2. மெய்எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
விடை:
ü
வல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ü
மெல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ü
இடையின
மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
3. ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
விடை:
ü ர்,
ழ் - ஆகிய இருமெய்களும் மேல்வாயைநாக்கின் நுனி வருடுவதால்
பிறக்கின்றன.
ü ல்
– இது மேல்வாய்ப் பல்லின் அடியைநாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
ü ள்
– இது மேல்வாயைநாக்கின் ஓரங்கள் தடித்துத்தடவுதலால் பிறக்கிறது.
மொழியை ஆள்வோம்
(பக்க எண்: 20 )
அகரவரிசைப்படுத்துக.
எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி,
உரைநடை, ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ
, ஈசன், ஐயம்.
விடை: அழகுணர்ச்சி , ஆரம்நீ, இரண்டல்ல , ஈசன்,
உரைநடை , ஊழி, எழுத்து
, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம்
, ஓலைச்சுவடிகள், ஒளகாரம்
சரியான மரபுச் சொல்லைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1.கோழி
(கூவும் / கொக்கரிக்கும்) விடை: கொக்கரிக்கும்.
2 பால் (குடி/பருகு) விடை:
பருகு
3. சோறு
(தின் உண்) விடை: உண்
4 .பூ (கொய்/பறி) விடை: கொய்
5 .ஆ
(நிரை / மந்தை) விடை: நிரை.
மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள் பூப்பறிக்க
நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள் அங்கு மரத்தில் குயில் கரைந்து
கொண்டிருந்தது பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும்
கொய்து கொண்டு வீடு திரும்பினாள் அம்மா தந்த பாலைக் குடித்துவிடடுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
விடை:
சேவல் கூவும் சத்தம்
கேட்டுக்கயல்கண் விழித்தாள். பூக்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள் அங்கு மரத்தில் குயில் கூவிக்
கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன் தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக்கொண்டு வீடு
திரும்பினாள் அம்மா தந்த பாலைப் பருகிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
கட்டுரை எழுதுக:
நான் விரும்பும் கவிஞர்
முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி எனப் பாராட்டப்பட்டவர் நம் பாரதியாரே ஆவார். பாட்டுக்கொரு புலவனாய்த் திகழ்ந்த பாரதி தம் பாடல்கள் மூலம் மக்களிடையே தமிழ்ப்பற்று, விடுதலை உணர்வு ஆகியவற்றை வளர்த்தார். பிறப்பும் இளமையும் பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882 ஆம் நாளில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசாமி, இலக்குமி அம்மையார் ஆவார். சிறிய வயதிலேயே கவிதை புனையும் திறமையைப் பெற்றார். தமது பதினோறாம் வயதில் பாரதி என்னும் பட்டம் சான்றோர்களால் வழங்கப்பட்டது. விடுதலைவேட்கை: 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்றார். இப்படிப்பட்ட நம் உயர்ந்த பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருப்பதை எண்ணி 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என பாடினார். வெள்ளையரின் அடக்கு முறைக்கு அஞ்சாது விடுதலை உணர்வு மிக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார். ஒருமைப்பாட்டுணர்வு: எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள் என்றார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே எனப் பாடி மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார். மொழிப்பற்று: பல மொழிகளைக் கற்றிருந்த பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும்காணோம் என்றுதமிழின்சிறப்பைஎடுத்துரைத்தார். நாட்டுப்பற்று . பாரதத் தாயின் அடிமைத்தனத்தை தகர்த்தெறிய இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களைவீறு கொண்டு எழச் செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேடைகளிலும் வீதிகளிலும் இவருடைய பாடல்களையே பாடினார்கள். சமுதாயத் தொண்டு: சாதிக் கொடுமைகள், பெண்ணடிமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இந்நாட்டிலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதவெறிப் பிடித்து அலைபவர்களின் போக்கினைக் கண்டித்தார். படைப்புகள்:
பாரதியார் எண்ணற்ற கவிதை, உரைநடை நூல்களைப் படைத்துள்ளார். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், தராசு போன்ற எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார்.
முடிவுரை:
வளமான, வலிமையான
பாரதத்திற்குத் தேவையான சிறந்த வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை
பின்பற்றினால் அவர் கனவு கண்ட பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும்.
மொழியோடு விளையாடு (பக்க எண்: 21 )
பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக
கல், பூ, மரம், புல், வாழ்த்து, சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா.
கள் |
க்கள் |
ங்கள் |
ற்கள் |
வாழ்த்துகள் |
பூக்கள் |
மரங்கள் |
கற்கள் |
கிழமைகள் |
ஈக்கள் |
மாதங்கள் |
புற்கள் |
கைகள் |
பசுக்கள் |
புடங்கள் |
சொற்கள் |
கடல்கள் |
பாக்கள் |
பக்கங்கள் |
பற்கள் |
ஒரு
சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக.
(எ.கா.) அணி – பல அணிகளை அணிந்தவீரர்கள், அணிஅணியாய்ச் சென்றனர்.
படி
- படித்துக்கொண்டிருந்த மாலதி, மாடு
கறந்த ஒரு படிப்பாலை எடுத்துக் கொண்டு படியில் ஏறிச்
சென்று
தாயிடம் கொடுத்தாள்,
திங்கள்
- திங்கள் நித்திரைத் திங்களில், முதல் திங்கள் அன்று, இரவில்
திங்களைப் பார்ப்பது நல்லது
ஆறு
- ஆறுமுகம்,காலையிலதுவைப்பதற்காக
ஆறுதுணிகளை எடுத்துக்கொண்டு காவேரி ஆற்றுக்குச்
சென்றான்.
சொற்களை
ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
1.
வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த
அமைந்த எழுத்து.
2.
உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
3.
வென்றதைப் பரணி பகைவரைஆகும் பாடும் இலக்கியம்.
4.
கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
5.
ஏகலைகலையைஅம்புவிடும் தமிழ் என்றது.
விடைகள்:
1.வளைந்த
கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வடடெழுத்து எனப்படும்.
2 உலகம்
உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.
3. பகைவரை
வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
4. உயிரெழுத்து
பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
5. தமிழ்
அம்புவிடும் கலையை ஏகலை என்றது.
இயல்2 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇