8 TH STD TAMIL UNIT 4 QUESTION & ANSWER

 

8.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்

இயல் - 4 

கல்வி அழகே அழகு  (பக்க எண்: 71 மதிப்பீடு)

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கற்றவருக்கு அழகு தருவது ________.

அ) தங்கம்   ஆ) வெள்ளி   இ) வைரம்   ஈ) கல்வி

2. 'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

அ) கலன் + லல்லால்   ஆ) கலம் + அல்லால்    இ) கலன் + அல்லால்   ஈ) கலன் + னல்லால்

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. அழகு – கற்றவருக்குக் கல்வி அழகு

2. கற்றவர் – கற்றவர் எங்கு சென்றாலும் சிறப்படைவர்

3. அணிகலன் – கல்வியே சிறந்த அணில்கலன் ஆகும்.

குறுவினா

யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

விடை: கற்றவருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை

சிறுவினா

நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

விடை : ஒளிரும் மணிகளால் செய்யப்பட்டஅணிகலனுக்கு மேலும் அழகூட்டவேறு அணிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்றகல்வியேஅழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிறஅணிகலன்கள் அவருக்குத்தேவையில்லை.

சிந்தனைவினா

கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

விடை:

v  வாழ்வியல் நெறிகளை அறிதல்

v  சிறந்த அறிவு பெறுதல்

v  காலத்திற்கேற்ப தம்மைப் புதுப்பித்துக் கொள்ளுதல்

v  ஒழுக்க குணங்களைப் பெறுதல்.

புத்தியைத் தீட்டு  (பக்க எண்: 73 மதிப்பீடு)

 

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.

அ) சோம்பல்   ஆ) அகம்பாவம்   இ) வருத்தம்   ஈ) வெகுளி

2. ‘கோயிலப்பா‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) கோ+ அப்பாஆ) கோயில் + லப்பா   இ) கோயில் + அப்பா   ஈ) கோ+ இல்லப்பா

3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) பகைவென்றாலும் ஆ) பகைவனென்றாலும்   இ) பகைவன்வென்றாலும்   ஈ) பகைவனின்றாலும்

குறுவினா

1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

விடை : பிறரது தவற்றை மன்னிப்பவரின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது

2. பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறையாது?

விடை : பகைவர்களிடம் நாம் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

சிறுவினா

புத்தியைத்தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

விடை:

v  கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்டவேண்டும்.

v  ஆத்திரம் கண்ணை மறைத்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்துஅமைதி காக்க வேண்டும்.

v  பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.

v  மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கல் போன்றது.இதனை மறந்து வாழ்ந்தவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும். வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் ஏன் அகம்பாவம்? இதனால் எந்த இலாபமும் கிடைக்காது. எனவே, அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ வேண்டும். இவற்றை எண்ணிப்பார்த்தால் வாழ்க்கை தெளிவாகும்.

சிந்தனைவினா

உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களைஎவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

விடை:

ü  முதலில் வெறுப்புக்குக் காரணம் என்ன? என்பதைப் பற்றி ஆராய்வேன்,

ü  அவரிடம் சென்று அன்பாக, என் மீது நீங்கள் வெறுப்பு காட்ட, நான் செய்துள்ளபிழையை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் மனம் புண்படும்படியாகப் பேசியிருந்தால், அதனைப் பொறுத்துக் கொண்டு எனக்கு நல்வழி காட்டுங்கள் என்று கூறுவேன்.

பல்துறைக் கல்வி  (பக்க எண்: 73 மதிப்பீடு)

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அறியாமையைநீக்கி அறிவைவிளக்குவது _____.

அ) விளக்கு  ஆ) கல்வி  இ) விளையாட்டு   ஈ) பாட்டு

2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.

அ) இளமை   ஆ) முதுமை   இ) நேர்மை   ஈ) வாய்மை

3. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

அ) வீட்டில்   ஆ) நாட்டில்   இ) பள்ளியில்   ஈ) தொழிலில்

நிரப்புக.

1. கலப்பில் வளர்ச்சி உண்டென்பது இயற்கைநுட்பம்.

2. புறஉலக ஆராய்ச்சிக்கு அறிவியல்  கொழுகொம்பு போன்றது.

3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது காவிய இன்பம் ஆகும்.

பொருத்துக.

1. இயற்கைஓவியம் - சிந்தாமணி

2. இயற்கைத்தவம் - பெரியபுராணம்

3. இயற்கைப் பரிணாமம் - பத்துப்பாட்டு

4. இயற்கைஅன்பு – கம்பராமாயணம்

விடை: 1- இ  , 2-அ  , 3-ஈ  , 4-ஆ

குறுவினா

1. இன்றைய கல்வியின் நிலைபற்றித்திரு. வி.க. கூறுவன யாவை?

விடை: இன்றைய கல்வி குறிப்பிட்ட பாடங்களை நெட்டுரு (மனப்பாடம்) செய்து

தேர்வில் தேறி, பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்கு ஒரு கருவியாகக்

கொள்ளப்பட்டு வருகிறது. நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது என்று திரு.வி.க. கூறுகிறார்.

2. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

விடை: தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.

3. திரு. வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களைஎழுதுக.

விடை: சேக்கிழார் , திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், கம்பர், பரஞ்சோதி, ஆண்டாள்

சிறுவினா

1. தமிழ்வழிக் கல்வி பற்றித்திரு. வி.க. கூறுவனவற்றை எழுதுக.

விடை:

v  கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது இயற்கை நுடபம். தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு.ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாடடைநிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம் தேடுவோம் என்னும் புதுப்பாட்டு பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

v   கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்று திரு.வி.க. கூறுகின்றார்.

2. அறிவியல் கல்வி பற்றித்திரு. வி.க. கூறுவன யாவை?

விடை:

ü  உலக வாழ்விற்கு மிக இன்றியமையாதது அறிவியல்,

ü  உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றைப் பற்றிய அறிவும், கோள் இயக்கம், கணிதம், அகத்திணை முதலிய அறிவும் நமக்கு வேண்டும்,

ü  இந்நாளில் அத்தகைய அறிவு தேவை. புற உலகு ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.

ü  நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி, இந்நாளில் உறுதி பெறலரிது.இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை.

ஆகவே, அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞர்கள் உலகில் பரவ வேண்டும் என்று திரு. வி. க. கூறுகின்றார்.

நெடுவினா

காப்பியக் கல்வி குறித்துத்திரு. வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

விடை:

§  வாழ்விற்கு உரிய இன்பத் துறைகளில் காவிய இன்பமும் ஒன்று, அதுவே முதன்மையானது என்றும் கூறலாம்.

§  நாம் தமிழர்கள், நாம் பாட்டு இன்பத்தை நுகர வேண்டும். அதற்காகத் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே செல்ல வேண்டும். தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன.

§  இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு

§  இயற்கை இன்பக்கலம் கலித்தொகை

§  இயற்கை வாழ்வில்லம் திருக்குறள்

§  இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

§  இயற்கைத் தவம் சிந்தாமணி

§  இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம்

§  இயற்கை அன்பு பெரியபுராணம்

§  இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்

இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்திலும் வரும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.

      இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு

பெற்றிருக்கிறீர்கள். தமிழ் இன்பத்தில் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ?|

      தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று திரு. வி. க. காப்பியக் கல்வி பற்றிக் கூறுகிறார்.

சிந்தனைவினா

திரு. வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்கவிரும்புகிறீர்கள்?

விடை:

    திரு. வி. க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நான் அறிவியல் கல்வியைக் கற்கள் விரும்புகிறேன். காரணம் என்னவென்றால், தமிழ் மொழி அறிந்த எனக்கு அறிவியல் பற்றிய செய்திகளை மேலும் தெரிந்து கொள்ளவும், அறிவியலில் உள்ள பல புதுமையான செய்திகளைத் தமிழ்ப்படுத்தவும் அறிவியல் கல்வி கற்க விரும்புகிறேன்.

ஆன்ற குடிப்பிறத்தல்  (பக்க எண்: 83 மதிப்பீடு)

திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.

விடை:

v  கிராமத்தில் பணி புரியும் ஆசிரியரின் வேட்டி களவாடப்பட்டிருந்தது.

v  அதை அக்கிராமத்தைச் சேர்ந்த சிகாமணிதான் எடுத்திருப்பார் என கிராம மக்கள் கூறுகிறார்கள். ஆசிரியருக்கும் அதே சந்தேகம். ஆனால் கேட்க மனமில்லை.சிகாமணியின் மகன் சகாதேவன் அந்த ஆசிரியரிடம் மாணவளாகப் பயின்று வருகின்றான்.

v  வகுப்பில், திருக்குறளில், 'பண்புடைமை' என்னும் அதிகாரத்தில் உள்ள, அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் எனும் குறளினை நடத்துகிறார். சிறந்த குடியில் பிறத்தல் என்னும் கருத்தினை சொல்ல ஆசிரியருக்குத் தயக்கம்.

v  சிறந்த குடியை உருவாக்குதல் என மாற்றிக் கூறினார். > அதற்கு காரணம், சகாதேவனின் குடும்ப பின்னணியே ஆகும்.திருடன் மகன் திருடன் என்று பெயர் எடுத்தல் கூடாது. அதை வழிவழியாகத் தொடராமல், தான்நல்வழியில் வாழ்தல்தான் சிறந்த குடிபிறப்பு என்று கூறினார்.

v  அவன் தகப்பன் கெட்டவன். மகன் நல்லவன் என்று கூறுதல் வேண்டும். அவ்வாறு பெயர் எடுக்கவேண்டும் என்று ஆசிரியர் பாடம் நடத்தினார்.

v  மனம் திருந்திய சகாதேவன், அவ்வூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தியிடம், அவ்வேட்டியினைக் கொடுத்து அனுப்பினான்.

v  கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியரிடம் அதைக் கொடுத்துவிட்டு, அவன் அப்பா வீட்டில் மறைத்துவைத்த வேட்டியைத் தங்களிடம் தருமாறு சகாதேவன் கூறினான் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினான்

v  ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார் தான் வகுப்பில் நடத்திய பாடம். மாணவனின் மனதை மாற்றியுள்ளதே என நினைத்து பூரித்துப்போனார்

v  மேலும், அவனுக்கு அவன் அப்பாவால் தண்டனை கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, ஊர் மக்களிடம், இதோடு, இப்பிரச்சனையை விட்டுவிடுமாறு வேண்டினார்.

ஆம்! குழந்தைகளே, ஆசிரியர் நடத்தும் பாடத்தை வாழ்வில் கடைப்பிடித்து, நல்லவர்களாக வாழ்வோம்

வேற்றுமை  (பக்க எண்: 88 மதிப்பீடு)

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும்.

அ) எழுவாய்   ஆ) செயப்படுபொருள்   இ) பயனிலை   ஈ) வேற்றுமை

2. எட்டாம் வேற்றுமை___________ வேற்றுமைஎன்று அழைக்கப்படுகிறது.

அ) எழுவாய்   ஆ) செயப்படுபொருள்   இ) விளி   ஈ) பயனிலை

3. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமைவரும்.

அ) மூன்றாம்   ஆ) நான்காம்   இ) ஐந்தாம்   ஈ) ஆறாம்

4. ‘அறத்தான் வருவதேஇன்பம்’ - இத்தொடரில் ________ வேற்றுமைபயின்று வந்துள்ளது.

அ) இரண்டாம்   ஆ) மூன்றாம்   இ) ஆறாம்   ஈ) ஏழாம்

5. ‘மலர் பானையைவனைந்தாள்’ – இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது.

அ) ஆக்கல்   ஆ) அழித்தல்   இ) கொடை  ஈ) அடைதல்

பொருத்துக.

1. மூன்றாம் வேற்றுமை– இராமனுக்குத்தம்பி இலக்குவன்.

2. நான்காம் வேற்றுமை– பாரியினது தேர்.

3. ஐந்தாம் வேற்றுமை- மண்ணால் குதிரைசெய்தான்.

4. ஆறாம் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.

விடை: 1 - இ , 2 - அ ,  3 - ஈ  , 4 – ஆ

சிறுவினா.

1. எழுவாய் வேற்றுமையை விளக்குக.

விடை:

   எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல், எழுவாய் தனித்து நின்று, இயல்பான பொருளைத் தருவது எழுவாய் வேற்றுமை என்பர்.இதனை 'முதல் வேற்றுமை' என்றும் கூறுவர்.     எடுத்துக்காட்டு: பாவை வந்தாள்,

2. நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?

விடை:

   கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை.

3. உடனிகழ்ச்சிப் பொருளில் என்றால் என்ன?

விடை:

    வினை கொண்டு முடிகிற பொருளைத் தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி ஆகும்.

    ஓடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.

எடுத்துக்காட்டு :

   தாயோடு குழந்தை சென்றது.

   அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.

மொழியை ஆள்வோம்  (பக்க எண்: 89)

கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

மா    -  மாவிலை, மாமரம், மாங்காய் மலர்த்தேன்

தேன் - தேன்சிட்டு, தேன்கூடு

மலர் தேன்மலர்

செம்மை  - சேயிலை, செங்குருவி, செந்தேன்

சிட்டு -  சிட்டுக்குருவி

கனி - கனிமரம், தேன்கனி, காய் கனி

குருவி - குருவிக்கூடு

முட்டை - குருவிமுட்டை

மரம் - மாமரம், செம்மரம்

பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

1 பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.

2. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.

3. தமிழ்மொழி செம்மையானது. வலிமையானது. இளமையானது.

4 கபிலன், "தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேடடான்.

5. திரு. வி. க, எழுதிய 'பெண்ணின் பெருமை" என்னும் நூல் புகழ்பெற்றது.

பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

    "நூல் பல கல்" என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும்நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது, நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகமாகும். நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், 'எனக்கு பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்' என்றார் நேகு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்! அறிவு வளம் பெறுவோம்!

கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

1. எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது?

 விடை: உலகப் புத்தக நாள்.

2. புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?

விடை: இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானம்,

3. புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?

விடை:  11 நாடகள் (ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 23 வரை)

4. புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?

விடை: நுழைவுக் கட்டணம் இல்லை.

5. புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது? I

விடை: 10 சதவீதக் கழிவு.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக:

நூலகம்

முன்னுரை–  நூலகத்தின் தேவை- வகைகள்- நூலகத்தில் உள்ளவை- படிக்கும் முறை- முடிவுரை

முன்னுரை:

        “நூலகம் அறிவின் ஊற்று

        ”வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்

என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை குறித்தும், அதன் வகைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்தும் நாம் காண இருக்கிறோம்.

நூலகத்தின் தேவை:

       “ சாதாரண மாணவர்களையும் 

         சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்” 

    ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அன்றாட செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. ஆகவே, இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது .

நூலகத்தின் வகைகள்:

      மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும்.

நூலகத்தில் உள்ளவை:

     மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள், சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

 படிக்கும் முறை:

     நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும்.

முடிவுரை:

             “என்னை தலைகுனிந்து படித்தால்,

              உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்

     ன்று புத்தகம் மனிதர்களைப் பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. அறிவியலும் தொழில்நுட்பமும் ஆயிரம் வளர்ச்சி ஏற்றினார்கள் நூலகமே என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த அறிவைப் பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

மொழியோடு விளையாடு (பக்க எண்: 89)

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளைக் கட்டத்தில் நிரப்புக. வட்டத்தில் சிக்கிய எழுத்துகளைஎடுத்து எழுதுக. எழுத்துகளைமுறைப்படுத்திக் கல்வி பற்றிய பழமொழியைக் கண்டறிக.

1. திரைப்படப் பாடலாசிரியர் சோமுவின் ஊர் -  ஆலங்குடி  

2. கேடில் விழுச்செல்வம் - கல்வி

3. குமர குருபரர் எழுதிய நூல்களுள் ஒன்று நீதிநெறி விளக்கம்

4. ‘கலன்’ என்னும் சொல்லின் பொருள்  - அணிகலன்

5. ஏட்டுக்கல்வியுடன் இயற்கை கல்வியும் பயில வேண்டும்.

6. திரு.வி.க. எழுதிய நூல்களுள் ஒன்று பொதுமை வேட்டல்

7. தமிழ்த்_____ திரு. வி.க  - தென்றல்

 இயல்-4 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇

 

 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை