10.ஆம் வகுப்பு
- தமிழ்
இயல் – 1
1.
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்டநாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே
கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ
வாழ்த்துவமே!
1) இலக்கணக்குறிப்பு:
ü விளித்தொடர்கள் - அன்னை
மொழியே,சிலம்பே,நறுங்கனியே, பேரரசே
ü பண்புத்தொகை - செந்தமிழ். நறுங்கனி
ü மன்னி - வினையெச்சம்
ü மன்னுஞ்சிலம்பே - பெயரெச்சம்
ü கடல்கொண்ட - இரண்டாம் வேற்றுமைத்தொகை
ü வாழ்த்துவம் - தன்மைப்
பன்மை வினைமுற்று.
ü நினைவால் - மூன்றாம்
வேற்றுமைத்தொடர்.
2) பிரித்து எழுதுக :
நறுங்களி = நறுமை+கனி
நாட்டிடையில் = நாடு+இடையில்
மண்ணுலகம்= மண் + உலகம்
நற்கணக்கு = நல்+கணக்கு
3) தென்னன்
என்பது யாரைக் குறிக்கும்? - பாண்டியன்
4) தென்னன்
மகளே எனக் குறிப்பிடப்பட்டது
- தமிழ்
5) பாப்பத்து
என்பது எந்த நூல் தொகுப்பைக் குறிக்கிறது? - பத்துப்பாட்டு
6) எண்தொகையே
என்பது எந்த நூல் தொகுப்பைக் குறிக்கிறது? - எட்டுத்தொகை
7) இப்பாடலில்
அடைமொழியோடு குறிப்பிடப்படும் நூல் தொகுப்பு யாது?
நற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு
8) நிலைத்த
என்று பொருள் தரும் சொல் - மன்னும்
9) இப்பாடலில்
இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்கள் யாவை? - சிலப்பதிகாரம், மணிமேகலை
10) ஐம்பெருங்காப்பியங்களில்
இப்பாடலில் இடம் பெறாத காப்பியங்கள்
சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
11) வாழ்த்துவம்
என்ற வினைப்பகுபதத்தைப் பகுக்கும் முறை. –
வாழ்த்து+வ்+அம்
12) இப்பாடலை
இயற்றியவர் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
13) இப்பாடல்
இடம்பெற்ற கவிதைத் தொகுப்பு - கனிச்சாறு.
2.
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால்-நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு.
1) இலக்கணக்குறிப்பு:
ü துய்ப்பது,
மேவல் – தொழிற்பெயர்கள்
ü சங்கத்தவர்
– வினையாலணையும் பெயர்
2) பொருள் தருக:
துய்ப்பது – கற்றல் , தருதல்
மேவல்
– பொருந்துதல் , பெறுதல்
3. இப்பாடலின் ஆசிரியர் – சந்தக்கவிமணி
தமிழழகனார்
4. இப்பாடல் இடம்பெற்ற நூல் – தனிப்பாடல் திரட்டு
5. இப்பாடலில் இடம்பெற்ற அணி – இரட்டுறமொழிதல் (அ) சிலேடை அணி
6. தமிழுக்கு இணையாக ஒத்திருப்பது – கடல் (ஆழி)
3) தொகைச்சொற்கள்:
முத்தமிழ் – மூன்று + தமிழ் – இயல் , இசை , நாடகம்.
முச்சங்கம்
– மூன்று + சங்கம் – முதற்சங்கம் , இடைச்சங்கம் , கடைச்சங்கம்.
இயல் – 2
3. நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை,
அருங் கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், கைய
கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர் என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்.
1) இலக்கணக்குறிப்பு:
ü பண்புத்தொகை - கொடுஞ்செலவு,
பெரும்பெயல், மூதூர், முதுபெண்டிர்,கொடுங்கோல் நன்மொழி
ü சொல்லிசையளபெடை – வளைஇ
ü செய்யுளிசை அளபெடை – மாஅல்
, தூஉய்
ü உரிச்சொல் தொடர் - கடி
மூதூர் , தடக்கை
ü குறிப்புப்பெயரெச்சம் - நனந்தலை
உலகம்
ü உருவகம் – பனிக்கடல்
ü வினைத்தொகை - அவிழ்
அலரி
ü மூன்றாம்
வேற்றுமைத்தொகை – கைதொழுது
ü பெயரெச்சம் - அசைத்த
கையள்
ü தன்மைப் பன்மை
வினைமுற்று - கேட்டனம்
2) பொருள் தருக:
நனந்தலை - அகன்ற
தடக்கை – பெரியகை
மாஅல் - திருமால்
இமிழ் - ஒலிக்கும்
வீ - அரும்பு
கொடுஞ் செலவு - விரைவாகச் செல்லுதல்
தூஉய் - தூவி
விரிச்சி - நற்சொல்
சுவல் - தோள்
கோவலர் - இடையர்
அலமரல் - துன்பம்
அருங்கடி மூதூர் – மிகுந்த காவலை உடைய ஊர்
3) பிரித்து எழுதுக :
கொடுஞ்செலவு – கொடுமை + செலவு
பெரும்பெயல் - பெருமை + பெயல்
மூதூர் – முதுமை + ஊர்
கொடுங்கோல் - கொடுமை+கோல்
நன்மொழி – நன்மை + மொழி
4)
இப்பாடல் இடம்பெற்ற நூல் தொகுப்பு - பத்துப்பாட்டு
5)
இப்பாடலை இயற்றியவர் யார் -
நப்பூதனார்
6)
இப்பாடல் இடம் பெற்ற நூலின் மொத்த அடிகள் எத்தனை - 103
7)
இப்பாடல் எந்த பாவகையால் இயற்றப்பட்டது? - ஆசிரியப்பா
8)
விரிச்சி கேட்டல் என்றால் என்ன? - தற்சொல்கேட்டல்
9)
இப்பாடலில் இடம்பெற்ற முல்லைக்குரிய கருப்பொருள்கள் சிலவற்றை
எழுதுக.
பூமுல்லை தெய்வம் திருமால்
10)
இன்னே வருகுவர் தாயர் யார் யாரிடம் கூறியது? - ஆய்மகள், கன்றிடம்
11)
நன்னர் நன்மொழி கேட்டனம் - யார் யாரிடம் கூறியது? - முதுபெண்டிர் தலைவியிடம்
4. காற்றே, வா.
மகரந்தத்
தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை
மயலுறுத்து
கின்ற இனிய வாசனையுடன் வா;
இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.
1) இலக்கணக்குறிப்பு:
ü காற்றே வா – விளித்தொடர்
ü இனிய வாசனை – குறிப்புப்
பெயரெச்சம்
2) பொருள்
தருக:
மயலுறுத்துதல்
- மயங்கச்செய்தல்
ப்ராண ரஸம் – உயிர்வளி
லயத்துடன் – சீராக
3. இப்பாடலை இயற்றியவர் யார்? – மகாகவி பாரதியார்
4. இப்பாடல் இடம்பெற்ற கவிதைத் தொகுப்பு – காற்று
5. இப்பாடல் எந்த கவிதை வடிவில் இடம்பெற்றுள்ளது?
– வசன கவிதை
6. வசன கவிதையை அறிமுகப்படுத்தியவர் – பாரதியார்.
இயல் – 3
5. விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
1) இலக்கணக்குறிப்பு:
ü பண்புத்தொகை – நன்மொழி
ü தொழிற்பெயர் – வியத்தல்,நோக்கல்,எழுதல்,உரைத்தல்,செப்பல்,இருத்தல்,வழங்கல்
ü வியங்கோள் வினைமுற்று – வருக
ü பண்புத்தொகை –
நன்முகமன்
ü பரிந்து - வினையெச்சம்
2) பொருள்
தருக:
அருகுற – அருகில்
முகமன் – நலம்
வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்
பரிந்து - புகழ்ந்து
3) பிரித்து எழுதுக :
நன்மொழி
= நன்மை + மொழி
செல்வதாதல் = செல்வது + ஆதல்
இவ்வொன்பான்= இ + ஒன்பான்
4. இப்பாடல் இடம்பெற்ற நூல் – காசிக்காண்டம்
5. இப்பாடலை இயற்றியவர் யார்? – அதிவீரராமபாண்டியன்
6. இப்பாடல் காசிக்காண்டத்தின் எப்பகுதியில்
அமைந்துள்ளது – இல்லொழுக்கங்கூறிய பகுதி
7. இப்பாடல் எந்நகரத்தின் பெருமையைக் கூறுகிறது?
– காசி
8. இப்பாடலில் குறிப்பிடப்படும் எண்ணுப்பெயர் – ஒன்பது
6. அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,
கன்று
எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து
சேந்த
செயலைச் செப்பம் போகி,
அலங்கு
கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு
அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோனாச்
செருவின் வலம்படு நோன்தாள்
மான
விறல்வேள் வயிரியம் எனினே,
நும்இல்
போல நில்லாது புக்கு,
கிழவிர்
போலக் கேளாது கெழீஇ
சேட்
புலம்பு அகல இனிய கூறி
பரூஉக்குறை
பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண்
இறடிப் பொம்மல் பெறுகுவிர்.
1) இலக்கணக்குறிப்பு:
ü இருபெயரெட்டுப்
பண்புத்தொகை – இறடிப்பொம்மல்
ü காலப்பெயர் – அவண் ,
அல்
ü வினையெச்சம் – அல்கி
ü வினைத்தொகை - ஒள்
இணர் , அலங்கு கழை
ü ஈறு கெட்ட
எதிர்மறைப்பெயரெச்சம் – நோனாச்செரு
ü ஆறாம் வேற்றுமைத்தொகை - , நும்இல்
ü சொல்லிசை அளபெடை - அசைஇ,
கெழிஇ
ü செய்யுளிசை அளபெடை – பரூஉக்
, குரூஉக்கண்
2) பொருள்
தருக:
அவண் - பகல்
இணர் - ஒளிரும்
அலங்கு - அசையும்
நரலும் - ஒலிக்கும்
நோனா - பொறுக்கமுடியாத
விறல் - வெற்றி
பரு - மாமிசம்
குரு - நிறமுடைய
அசைஇ - இளைப்பாறி
இறடிப் பொம்மல் - தினைச்சோறு
கடும்பு - சுற்றம்,
ஆசி - அருமை
வயிரியம் - கூத்தர்
அல்கி - தங்கி
படுகர் - பள்ளம்
வேவை - வெந்தது
கிழவிர் - உறவினர்
3) இப்பாடல் இடம்பெற்ற நூல் பெயர் யாது - மலைபடுகடாம்
4) இப்பாடல் எந்த நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?
-
பத்துப்பாட்டு
5) எந்த விலங்கின் ஓசை இந்த நூலின் பெயர்க்காரணமாக
உள்ளது? - கடாம் (யானை)
6) இப்பாடலை இயற்றியவர் யார்? - பெருங்கௌசிகனார்
7) இப்பாடலின் பாட்டுடைத்தலைவன் யார்? - நன்னன்
8) இப்பாடலில் யார் இடத்து, யாரை,
யார் ஆற்றுப்படுத்துகிறார்?
நன்னனிடம்,
பரிசில் பெறச் செல்லும் கூத்தனை, பரிசில்
பெற்ற கூத்தன் ஆற்றுப் படுத்துகிறார்.
9)இப்பாடலில் விறல்வேள் என்பது யாரைக் குறித்தது? - நன்னனை
இயல் – 4
6. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.
1) இலக்கணக்குறிப்பு:
ü அறுத்து - வினையெச்சம்
ü மாளாத - எதிர்மறைப் பெயரெச்சம்
ü மீளாத்துயர் - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
ü வித்துவக்கோட்டம்மா – விளித்தொடர்
(அல்லது) பால் வழுவமைதி
ü பார்ப்பன் - தன்மை ஒருமை வினைமுற்று
ü நோயாளன் – வினையாலணையும்
பெயர்
2) பொருள்
தருக:
சுடினும் - சுட்டாலும்
மாளாத - தீராத
மாயம் - விளையாட்டு
3) இப்பாடல் இடம் பெற்ற நூல் யாது? - பெருமாள் திருமொழி
4) இப்பாடலின் ஆசிரியர் யார்? அவரது
காலம் யாது? - குலசேகர ஆழ்வார், 8.ஆம் நூற்றாண்டு
5) இப்பாடல் எந்த தொகுப்பில் எந்த பிரிவின்கீழ்
இடம்பெற்றுள்ளது?
நாலாயிரத்
திவ்யபிரபந்தம், முதலாயிரம்
6) இப்பாடல் யார் மீது பாடப்பெற்றது? - திருவித்துவக்கோடு, உய்யவந்தபெருமாளின்மீது
7) இப்பாடல் இடம்பெற்ற நூலில் உள்ள பாடல்களின்
எண்ணிக்கை - 105
8) ஆசிரியர் தன்னை எவ்வாறு உவமித்துக் கொள்கிறார்? - நோயாளன்
9) இப்பாடலில் பாட்டுடைத் தலைவனுக்கு கூறப்படும்
உவமை யாது? - மருத்துவன்
10) இறைவன் எவ்வாறு உருவகப்படுத்தப்படுகிறார்? - அன்னை
11) வித்துவக்கோடு எனும் ஊர் எங்குள்ளது? - கேரள மாநிலத்தில் பாலக்கோடு மாவட்டத்தில்
12) பிரித்து எழுதுக :
வித்துவக்கோட்டம்மா
= வித்துவம் + கோடு +அம்மா
உனதருளே
= உனது + அருளே.
7. விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கருவளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்துவளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்
அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்...
1) இலக்கணக்குறிப்பு:
v ஊழி - காலப்பெயர்
v ஊழ் ஊழ் - அடுக்கு
தொடர்
v வளர் வானம் - வினைத்தொகை
v வாரா - ஈறுகெட்ட
எதிர்மறைப்பெயரெச்சம்
v உந்து வளி - வினைத்தொகை
v செந்தீ - பண்புத்தொகை
v தண்பெயல் - பண்புத்தொகை
v இருநிலம் - உரிச்சொல்தொடர்
2) பொருள்
தருக:
விசும்பு – வானம்
ஊழி
- யுகம்
ஊழ் - முறை
தண்பெயல் - குளிர்ந்த
மழை
ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்த
பீடு
- சிறப்பு
இருநிலம் - பெரிய
உலகம்
3) பிரித்து
எழுதுக:
செந்தீ = செம்மை + தீ
தண்பெயல்
= தண்மை + பெயல்
4) இப்பாடல் இடம் பெற்ற நூல் யாது? - பரிபாடல்
5) இப்பாடல் எந்த நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது? - எட்டுத்தொகை
6) இப்பாடல் இடம்பெற்ற நூல் பெறும் அடைமொழி யாது? - ஓங்கு
7) இப்பாடலை இயற்றியவர் யார்? - கீரந்தையார்
6) இப்பாடலில் பரமாணு என்று பொருள் தரும் சொல்லைக்
கண்டறிக - கரு
9) இப்பாடல் உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
- புவியின் உருவாக்கம்
10) உலகின் தோற்றம் குறித்து இந்நூல் குறிப்பிடும்
கொள்கை யாது? - பெருவெடிப்புக்கொள்கை
இயல் – 5
8. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
1) இலக்கணக்குறிப்பு:
v வினையெச்சம் - பெருக்கி , திருத்தி ,
அகற்றி
v பெயரெச்சம் – மதிக்கும் தெருளை
v நான்காம் வேற்றுமைத் தொடர் – ஆவிக்கு
அருந்துணையாய்
v இரண்டாம் வேற்றுமைத்தொடர் –
அருளைப்பெருக்கி , அறிவைத் திருத்தி ,
மருளை அகற்றி
v பண்புத்தொகை – அருந்துணை
2) பொருள்
தருக:
திருத்தி – சீராக்கி
மருள் – மயக்கம்
தெருள் – தெளிவு
அருத்துவது – தருவது
பொருத்துவது - சேர்ப்பது
3.
அருந்துணை – பிரித்து எழுதுக -
அருமை + துணை
4.
இப்பாடல் இடம்பெற்ற நூல் – நீதிவெண்பா
5.
இப்பாடலின் ஆசிரியர் – செய்குத்தம்பி பாவலர்
6.
இப்பாடலாசிரியர் எவ்வாறு போற்றப் பெற்றார்? –
சதாவதானி
7.
இப்பாடலாசிரியர் வேறு எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்? – சீறாப்புராணம்.
8.
ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் சேர்ப்பது யாது? - கல்வி
9. கழிந்த பெரும்கேள்வியினான்
எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்
பொழிந்த பெரும்காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப்புலவன் தென்சொல்
மொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத்தொடுத்த பனுவலொடு மூரித்தீம்தேன்
வழிந்து
ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து உரைப்பனுவல் வாசித்தான் ஆல்.
1) இலக்கணக்குறிப்பு:
v வினையாலணையும் பெயர் – கேள்வியினான் ,
கேண்மையினான்
v கழிந்த – உரிச்சொல் தொடர்
v பொழிந்த, தொடுத்த – வினையெச்சம்
v தன் சொல் – ஆறாம் வேற்றுமைத்தொகை
v ஒழுகு
தாரானை
– வினைத்தொகை
v தாரான்
–
அன்மொழித்தொகை
2) பொருள்
தருக:
கேள்வியினான் – நூல் வல்லான்
கேண்மையினான் – நட்பினன்
தாரான் – மாலை அணிந்தவன்
பனுவல் நூல்
3. இப்பாடல் இடம்பெற்ற நூல் – திருவிளையாடற்புராணம்
4. இப்பாடலின் ஆசிரியர் – பரஞ்சோதி முனிவர்
5. கழிந்த
பெரும்கேள்வியினான் யார்?
- குலேச பாண்டியன்
6. காதல் மிகு கேண்மையினான் யார்? - இடைக்காடனார்
7. இடைக்காடனாரின் நண்பர் யார்? - கபிலர்
8. வேப்பமாளையை அணிந்த அரசன்
– பாண்டிய மன்னன்
இயல் – 6
10) செம்பொனடிச்சிறு கிங்கிணியோடு
சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞாணரைமணி
யொடுமொளி திகழரைவடமாடப்
பைம்பொனகம்பிய தொந்தி
யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு
வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம் பொதி குண்டல
முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு
முச்சிக் கதிர்த் தொடுமாட
வம்பவளத்திரு மேனியு மாடிட
ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத
புரிக்குக வாடுக செங்கீரை
1) இலக்கணக்குறிப்பு:
v செம்பொன், பைம்பொன்,
வட்டச்சுட்டி – பண்புத்தொகை
v கிண்கிணி - இரட்டைக்கிளவி
v ஒளிதிகழ் - வினைத்தொகை
v ஆடுக - வியங்கோள்
வினைமுற்று
v குண்டலமும் குழை காதும்
சூழியும் உச்சியும் - எண்ணும்மைகள்
2) பொருள்
தருக
அடி - பாதம்
குண்டலம் - காதணி
பண்டி - வயிறு
நுதல் - நெற்றி
குழை - காதணி
மேனி - உடல்
அசும்பிய - ஒளி வீசுகின்ற
முச்சி - தலையுச்சிக்கொண்டை
3) இப்பாடல் இடம் பெற்ற நூல் யாது ? அது எந்த இலக்கிய வகையினது?
முத்துக்குமாரசாமிபிள்ளைத்தமிழ்,
சிற்றிலக்கியம்
4) இப்பாடலை இயற்றியவர் யார்? அவரது
காலம் யாது? - குமரகுருபரர், கி.பி.17
3) சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை? - 96
4) பிள்ளை வளர்வதில் எந்த மாதத்தைச் செங்கீரை
என்கிறோம்? 5 முதல் 6 மாதம்
6) செங்கீரையோடு சேர்த்து பிள்ளைத் தமிழில் எத்தனை
பருவங்கள் உள்ளன? - பத்து
6) இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் யாவை?
காப்பு,
செங்கீரை, தால், சப்பாணி,
முத்தம், வருகை, அம்புலி
7) குழந்தையின் எந்த உறுப்பு செங்கீரை போன்று
அசைந்தாடும்? - தலை
8) பிரித்து
எழுதுக:
கலந்தாட
- கலந்து + ஆட
திகழரை
- திகழ் +அரை
சரிந்தாட
- சரிந்து+ஆட
நுதற்பொலி
- நுதல் + பொலி
காதுமசைந்தாட
- காதும் +அசைந்து+ ஆட
11) ஆதி வைத்தியநாதபுரி என்பது எந்த ஊரைக்
குறிக்கும்?
நாகை
மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில்
12) இப்பாடலில் குறிப்பிடப்பட்ட அணிகலன்கள் யாவை?
சிலம்பு,
கிண்கிணி, அரைநாண், சுட்டி,
குண்டலம், குழை, சூழி
11) வெய்யோனொளி தன்மேனியின்
விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன்
வடிவென்பதொ ரழியாவழ குடையான்.
1) இலக்கணக்குறிப்பு:
v ஆறாம் வேற்றுமைத்தொகை -
வெய்யோனொளி , தன்மேனியின்
v வினைத்தொகை – விரிசோதி
v போனான் – படர்க்கை
ஆண்பால் வினைமுற்று
v உடையான் –
வினையாலணையும் பெயர்
2) பொருள்
தருக
வெய்யோன்
– பகலவன் (சூரியன்)
3. பிரித்து எழுதுக: அழியா வழகுடையான் - அழியா+அழகு+உடையான்
4. பொய்யோ எனும் இடையாள் யார்? _ சீதை
5. இப்பாடலில் குறிப்பிடப்பட்ட இளையான் யார்? – இலக்குவன்
6. ஒப்பற்ற அழியாத அழகுடையவன் யார்? - இராமன்
7. இப்பாடல் இடம்பெற்ற நூல் – கம்பராமாயணம்
8. இப்பாடல் இடம்பெற்ற காண்டம், படலம் – அயோத்தியா
காண்டம், கங்கைப்படலம்
9. இப்பாடலை இயற்றியவர் – கம்பர்.
இயல் – 7
12)
முதல் மழை விழுந்ததும்
மேல்மண் பதமாகிவிட்டது.
வெள்ளி முளைத்திடுது, விரைந்துபோ
நண்பா!
காளைகளை ஓட்டிக்
கடுகிச்செல், முன்பு!
பொன் ஏர் தொழுது, புலன்
வழிபட்டு
மாட்டைப் பூட்டி
காட்டைக் கீறுவோம்.
ஏர் புதிதன்று, ஏறும்
நுகத்தடி கண்டது,
காடு புதிதன்று, கரையும்
பிடித்ததுதான்
கை புதிதா, கார்
புதிதா? இல்லை.
நாள்தான் புதிது, நட்சத்திரம்
புதிது!
ஊக்கம் புதிது, உரம்
புதிது!
1) இலக்கணக்குறிப்பு:
v நண்பா – விளித்தொடர்
v கடுகிச்செல் –
உரிச்சொல் தொடர்
v பொன் ஏர் – மூன்றாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
v ஏர் தொழுது – இரண்டாம் வேற்றுமைத்தொகை
2) கடுகி என்ற
சொல்லின் பொருள் – விரைந்து
3) மண் ஏன் பதமானது
? – மழை பெய்ததால்
4) பொன்னேர்
பூட்டுதல் எம்மாதத்தில் நடைபெறும்? – சித்திரை
5) எவ்வாறு வழிபடவேண்டும்
என்று கவிஞர் கூறுகிறார்? – ஐம்புலன்களால் வழிபடவேண்டும்.
6) இப்பாடல்
இடம்பெற்ற கவிதைத் தொகுப்பு – கு.ப.ரா. படைப்புகள்
7) இப்பாடலை
இயற்றியவர் – கு.ப.ராசகோபாலன்
8) தமிழர் பண்பாட்டின்
மகுடம் யாது? - பொன்னேர் பூட்டுதல்.
13)
படியானையே பிணிப்புண்பன
வடிமணிச்சிலம்பே யரற்றுவன
செல்லோடையே கலக்குண்பன
வருபுனலே சிறைப்படுவன
மாவே வடுப்படுவன
மாமலரே கடியவாயின
காவுகளே கொடியவாயின
கள்ளுண்பன வண்டுகளே
பொய்யுடையன வரைவேயே
போர்மலைவன எழுகழனியே
மையுடையன நெடுவரையே
மருளுடையன இளமான்களே
கயற்குலமே பிறழ்ந்தொழுகும்
கைத்தாயரே கடிந்தொறுப்பார்
இயற்புலவரே பொருள்வைப்பார்
இசைப் பாணரே கூடஞ்செய்வார்
1) இலக்கணக்குறிப்பு:
v வருபுனல், வடிமணி – வினைத்தொகை
v மாமலர்
– உரிச்சொல் தொடர்
v நெடுவரை
– பண்புத்தொகை
v கயற்குலம்
– இருபெயரொட்டுப் பண்புத்தொகை
v வரை
வேய் – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
v பொருள்
வைப்பார் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
2) பொருள்
தருக:
அரற்றுதல் – புலம்புதல்
கயற்குலம் – மீனினம்
புனல் – நீர்
வரை வேய் – மலை மூங்கில்
கைத்தாயர் – செவிலித்தாயர்
மை – இருள்
3.
கயற்குலம் – பிரித்தெழுதுக - கயல்+குலம்
4.
இளமான்கள் – பிரித்தெழுதுக -
இளமை+மான்கள்
5.
சோழநாட்டில் போராக எழுவது யாது? -
வைக்கோற்போர்
6. சோழநாட்டில் கொய்யபடுபவை எவை? - மலர்கள்
7. மேற்கண்ட மெய்க்கீர்த்திப் பாடல்
யாரைப்பற்றியது? – இரண்டாம் இராசராசன்
8. மெய்க்கீர்த்தி யாருடைய காலந்தொட்டு வடிக்கப்படுகிறது? – முதலாம் இராசராசன்
14)
காழியர்,
கூவியர், கள்நொடைஆட்டியர்,
மீன்விலைப்
பரதவர், வெள்உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்தஊன்மலி இருக்கையும்;
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
1) இலக்கணக்குறிப்பு:
v
எண்னுமைகள்
– தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
v பண்புத்தொகை – அருங்கலம், கருங்கை,
நுண்வினை
v ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் – அறியா
v இரண்டாம் வேற்றுமைத்தொகை - கூலம் குவித்த
v
வினையாலணையும்
பெயர் – பாசவர் , வாசவர், பரதவர், காழியர்
2) பொருள் தருக:
சுண்ணம்
– நறுமணப்பொடி
காருகர்– நெய்பவர்(சாலியர்)
தூசு – பட்டு
துகிர்– பவளம்
வெறுக்கை– செல்வம்,
நொடை – விலை
பாசவர்– வெற்றிலை
விற்போர்
ஓசுநர்– எண்ணெய்
விற்போர்
கண்ணுள் வினைஞர்– ஓவியர்
மண்ணீட்டாளர்– சிற்பி
கிழி – துணி
கூலம் – தானியம்
3) பிரித்து
எழுதுக:
நுண்வினை = நுண்மை + வினை
அருங்கலம் = அருமை + கலம்
4. இப்பாடல் இடம்பெற்ற நூல் –
சிலப்பதிகாரம்
5. இப்பாடலை இயற்றியவர் –
இளங்கோவடிகள்
6. இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம்,
மணிமேகலை
7. உமணர் என்பது
யாரைக்குறிக்கும்? - உப்பு விற்பவர்
8. இப்பாடலில் குறிப்பிடப்படும்
நறுமணப் பொருட்கள் – அகில், சந்தனம்
9. இப்பாடலில் எந்த ஊர்
குறிப்பிடப்படுகிறது? – மருவூர்ப்பாக்கம்
10. இந்நூலில் வரும் மொழிநடை –
உரைப்பாட்டு மடை
11. இந்நூலுடன் கதைத்தொடர்புடைய நூல் –
மணிமேகலை
12. இந்நூலாசைரியர் எந்த அரச மரபைச்
சார்ந்தவர் ? - சேர
இயல் – 8
15)
வண்டா யெழுந்து மலர்களில்
அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந்
தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்
காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து
விடாது!
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!
1) இலக்கணக்குறிப்பு:
ü
தன்மைப்பன்மை
வினைமுற்று – அமர்வேன், தருவேன்
ü ஆறாம் வேற்றுமைத்தொகை – என்மனம் , என்னுடல்
ü வியங்கோள் வினைமுற்று – எழுதுக
ü
உம்மைத்தொகை
– காடு மேடு
2) பொருள் தருக
பண்டோர் – முன்னோர்
வளமார் –
வளம் மிகுந்த
3. இப்பாடல் இடம்பெற்ற தொகுப்பு – கண்ணதாசன்
கவிதைத்தொகுப்பு
4. இப்பாடலை இயற்றியவர் – கண்ணதாசன்
5. கண்ணதாசனின் இயற்பெயர் – முத்தையா
6. இப்பாடலில் குறிப்பிடப்பட்ட கவிஞர்கள்
- பாரதி , கம்பன் , பாரதிதாசன்
7. பிரித்தெழுதுக ; வண்டாயெழுந்து – வண்டாய் + எழுந்து.
இயல் – 9
16)
வாய்மணி யாகக் கூறும்
வாய்மையே மழைநீ ராகித்
தாய்மணி யாக மார்பில்
தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்
தூய்மணி யாகத் தூவும்
துளியிலது இளங்கூழ் வாடிக்
காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ
1) இலக்கணக்குறிப்பு:
ü
உருவகம் – வாய்மணி
ü வினைத்தொகை – காய்மணி
ü பண்புத்தொகை – தூய்மணி, இளங்கூழ்
ü வினையெச்சம் – குளிர , வாடி
ü தன்மைப் பன்மை வினைமுற்று – வாழ்ந்தேன் , காய்ந்தேன்
ü
பெயரெச்சம் – தூவும்
2) பொருள் தருக
இளங்கூழ்
– இளம்பயிர்
தயங்கி – அசைந்து
காய்ந்தேன் – வருந்தினேன்
3) பிரித்து
எழுதுக:
தூய்மணி- தூய்மை + மணி
இளங்கூழ்
– இளமை + கூழ்
4. இப்பாடலில் இடம்பெறும் அணி - உருவக அணி
5. இப்பாடலை இயற்றியவர் யார்? - வீரமாமுனிவர்
6. இப்பாடல் இடம்பெற்ற நூல் யாது? - தேம்பாவணி
7. இளங்கூழ் போல வாடியவன் யார்? - கருணையன்
8. கருணையன் யாருடைய இறப்பை எண்ணி வருந்தினான்?
- தாய் எலிசபெத்
9.
காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக்
காய்ந்தவன் யார்? – கருணையன்
10. வீரமாமுனிவரின் இயற்பெயர் - கான்சுடான்சு சோசப் பெசுகி
11. வீரமாமுனிவரின் காலம் – கி.பி. 17.ஆம்
நூற்றாண்டு
12. இப்பாடல் இடம்பெற்ற நூல் மொத்தம் எத்தனை
பாடல்களைக் கொண்டது? - 3615