சிறப்பு திருப்புதல் தேர்வு 3 – இயல்
7,8,9
விடைக்குறிப்புகள்
பகுதி-1 (மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
1)சரியான
அகர வரிசையைத் தேர்ந்தெடு
அ) உழவு, மண்,
ஏர், மாடு ஆ) மண், மாடு,
ஏர், உழவு இ) உழவு, ஏர், மண், மாடு ஈ) ஏர்,உழவு,மாடு,மண்
2)”மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ”மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பது முறையே
அ) திருப்பதியும், திருத்தணியும் ஆ) திருத்தணியும், திருப்பதியும்
இ) திருப்பதியும், திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும், பழனியும்
3)”தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயுமாக
இருந்த அரசன்”என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்
அ) மேம்பட்ட நிர்வாகத்
திறன் பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம்
உடையவர்
இ) பண்பட்ட மனிதநேயம்
கொண்டவர் ஈ) நெறியோடு நின்று காவல்
காப்பவர்
4)இரு
நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போடுவதன் காரணம்------
அ) நாட்டை கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
5) மேன்மை தரும் அறம் என்பது-----------
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம்
என்ற நோக்கில் அறம்செய்வது
இ) புகழ் கருவி அறம்
செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம்செய்வது
6) உலகமே
வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன்
என்றும் பாராட்டப்படுவோர்
அ) உதியன், சேரலாதன்
ஆ) அதியன்,பெருஞ்சாத்தன் இ)பேகன்,கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்,திருமுடிக்காரி
7) காலக்கணிதம்
கவிதையில் இடம்பெற்ற தொடர்-------
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
இ) இகழ்ந்தால் இறந்து
விடாது என்மனம் ஈ) என்மனம் இறந்து
விடாது இகழ்ந்தால்
8) சிலப்பதிகாரத்திலும்
மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
அ) அகவற்பா ஆ) வெண்பா இ)
வஞ்சிப்பா ஈ) கலிப்பா
9) சுதந்திர
இந்தியாவின் மகத்தான சாதனையும்,சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
அ) அரசின் நலத் திட்டங்களைச்
செயல்படுத்துதல் ஆ) அறிவியல் முன்னேற்றம்
இ) பெற்ற
சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
10) பூக்கையைக்
குவித்துப்பூவே புரிவொடு காக்க என்று----,---வேண்டினார்.
அ) கருணையன்
எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத் தமக்காக
இ) கருணையன் பூக்களுக்காக
ஈ) எலிசபெத் பூமிக்காக
11) வாய்மையே
மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி
அ) உவமை ஆ) தற்குறிப்பேற்றம்
இ) உருவகம் ஈ) தீவகம்
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்னகாரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல
பெருக்கிப்
12) கண்ணுள்
வினைஞர் யார்?
அ) ஓவியர் ஆ) சிற்பி இ) வணிகர் ஈ) கண் மருத்துவர்
13) நன்கலம் என்பதன்
இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) விளித்தொடர் ஈ)
அடுக்குத்தொடர்
14) இப்பாடல் இடம்பெற்ற நூல் யாது?
அ) பரிபாடல் ஆ) சிலப்பதிகாரம் இ)
முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் ஈ)
பெருமாள் திருமொழி
15) இயைபு நயத்தைத்
தேர்ந்தெடு
அ) கண் – பொன் ஆ) ஆளரும் – தருநரும் இ)
கம்பி - கட்டிய ஈ) கிழியினும் - கிடையினும்
பகுதி-2(மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா)
16) பாசவர்,
வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
விடை:
#
உமணர் – உப்பு விற்பவர்
17) மெய்க்கீர்த்தி
பாடப்ப டுவதன் நோக்கம் யாது?
விடை: மன்னர்
தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்து உணர்த்த ,அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்.
18) வறுமையிலும்
படிப்பின்மீது நாட்டம் கொண்டவர்
ம.பொ.சி. என்பதற்குச் சான்று.தருக
விடை:
உணவு உண்பதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும்
நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி.
19) குறிப்பு வரைக - அவையம்.
விடை:
அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்.
20) காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
விடை:
காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது இடையறாது அறப்பணி ஏய்தல்
21) ’செயற்கை’ எனத்தொடங்கும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக.
விடை:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்.
பிரிவு-2 5X2=10
ஐந்து வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க:
22) புறத்திணைகளில்
எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
விடை: வெட்சி – கரந்தை , வம்ஜ்சி – காஞ்சி , நொச்சி - உழிஞை
23) பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட
பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம்
அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி
விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் - ம.பொ.சி
விடை:
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி,
சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும்
நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு
அழைப்பு விடுத்திருந்தேன், - ம.பொ.சி.
24) வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு
உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.
விடை:
வஞ்சிப்பாவிற்குத் தூங்கல் ஓசையும்,கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசையும் உரியது.
25) உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.
அ.
தாமரை இலை நீர்போல ஆ. மழைமுகம் காணாப்
பயிர்போல.
விடை:
தாமரை இலை நீர்போல |
துரோகிகளின் நட்பு தாமரை இலை நீர் போல ஒட்டாமல்
இருக்கும். |
மழைமுகம் காணாப் பயிர்போல |
தந்தையை இழந்த குடும்பம் வருமானம் இன்றி மழைமுகம் காணாப்
பயிர்போல வாடி இருக்கிறது. |
26)
ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
அ. புதுக்கோட்டை
ஆ. திருச்சிராப்பள்ளி இ. உதகமண்டலம் ஈ. கோயம்புத்தூர்
விடை: அ -
புதுகை , ஆ – திருச்சி , இ – உதகை , ஈ - கோவை
27)
சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.
அ. கானடை
ஆ. வருந்தாமரை
விடை:
கானடை |
கான் அடை – காட்டைச் சேர் கான் நடை – காட்டுக்கு நடத்தல் கால்நடை – காலால் நடத்தல் |
வருந்தாமரை |
வரும் + தாமரை – வரும் தாமரை மலர் வருந்தா + மரை – துன்புறாத மான் வருந்து + ஆ + மரை – துன்புறும் பசுவும் மானும் |
28) கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்க : 1. Guild 2. Renaissance
விடை: 1 – வணிகக்குழு
, 2 - மறுமலர்ச்சி
பகுதி-3 (மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29) .“தலையைக்கொடுத்தேனும் தலைநகரைக்காப்போம்”இடம் சுட்டிப்பொருள் விளக்குக.
விடை:
இடம்: இத்தொடர்
ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம்
பெற்றுள்ளது.
பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது
தலைநகரைக் காப்பாற்றுவோம்.
விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில்,
செங்கல்வராயன்தலைமையில் கூட்டப்பட்ட கூட்டத்தில் ம.பொ.சி
அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார்.
30)
சங்க இலக்கிய அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள்
தருக.
விடை:
அ) சங்க
இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித வாழ்விற்கான பண்புநலன்களை
உருவாக்குகின்றன.
ஆ) இப்பிறவியில் அறம் செய்தால்,
அடுத்த பிறவியில்
நன்மை கிட்டும்
என எண்ணாமல் ,
அறம் செய்ய வேண்டும்
என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
இ) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.இக்கருத்து
இன்றைக்கும் பொருந்தக்கூடியது.
ஈ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே.
31) பத்தியைப் படித்து விடை
எழுதுக
1953–54ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லைப் பகுதிகளைக் கேரள(திருவிதாங்கூர்) முடியாட்சியிலிருந்து மீட்கவும் போராடினோம்.
தமிழக வடக்கு – தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளைத்
தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்தது தமிழரசுக் கழகம்தான் என்றாலும் அதனை நடத்துகின்ற
பொறுப்பை எல்லைப்பகுதி மக்களிடமே விட்டு வைத்திருந்தேன். அவர்களுள்
பி.எஸ். மணி, ம.
சங்கரலிங்கம், நாஞ்சில் மணிவர்மன், பி.ஜே.பொன்னையா ஆகியோர் முதன்மையானவர்கள்.
1. தமிழக வடக்கு – தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளைத் தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்த
அமைப்பு யாது?
விடை: தமிழரசுக் கழகம்
2. தெற்கெல்லைப்
பகுதிகளைத் தனவசம் வைத்திருந்த அரசு எது ?
விடை: கேரள அரசு(திருவிதாங்கூர்)
3. இப்பத்திக்குப்
பொருந்திய தலைப்பொன்று தருக.
விடை: தெற்கெல்லைப்போராட்டம்
பிரிவு-2 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34
கட்டாய வினா)
32) ‘முதல்மழை விழுந்ததும்’ என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?
விடை:
ü மண்ணின் மேல்பக்கம் ஈரமானது.
ü பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர்.
ü மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும்
ü உழவர் நம்பிக்கையுடன் உழுவர்.
33) எவையெல்லாம்
அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
விடை:
ü உயிர்பிழைக்கும்
வழி அறியேன்
ü உறுப்புகள்
அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன்.
ü உணவினத்
தேடும் வழி அறியேன்
ü காட்டில்
செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார்.
34) அ. மாற்றம்….. எனத்தொடங்கும் காலக்கணிதப்
பாடலை அடிமாறாமல் எழுதுக
விடை:
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம்
அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய
பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின்
சட்டம்!
(அல்லது)
ஆ. நவமணி
…. எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
விடை:
நவமணி வடக்கயில்போல்
நல்லறப்படலைப்பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர்அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே.
பிரிவு-3 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35)அலகிட்டு வாய்பாடு எழுதுக:
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின்
மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து.
விடை:
சீர் |
அசை |
வாய்பாடு |
இகழ்ந்தெள்ளா |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
தீவாரைக் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
காணின் |
நேர்+நேர் |
தேமா |
மகிழ்ந்துள்ளம் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
உள்ளுள் |
நேர்+நேர் |
தேமா |
உவப்ப |
நிரை+நேர் |
புளிமா |
துடைத்து. |
நிரைபு |
பிறப்பு |
இத்திருக்குறள் “ பிறப்பு” எனும் ஓரசைச்சீர் வாய்பாட்டில் முடிந்துள்ளது
36) அவந்தி
நாட்டு மன்னன்,மருதநாட்டு மன்னனுடன் போர்புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப்
புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.
விடை:
ü வஞ்சித்திணை
:
மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது.
ü காஞ்சித்திணை
:
எதிர்த்துப்
போரிடுவது.
37) நிரல்நிரை அணியைச்
சான்றுடன் விளக்குக.
விடை:
நிரல்நிறைஅணி
நிரல் = வரிசை; நிறை= நிறுத்துதல்.
சொல்லையும்
பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப்பொருள் கொள்வது நிரல்நிறைஅணி
எனப்படும்.
எ.கா.
அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
-குறள்: 45
பாடலின் பொருள்
இல்வாழ்க்கைஅன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்தவாழ்க்கையின்பண்பும் பயனும் அதுவே ஆகும்.
அணிப்பொருத்தம்
இக்குறளில்
அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும்
என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறைஅணி ஆகும்
பகுதி-4(மதிப்பெண்:25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க: 5X5=25
38) அ) சிலப்பதிகார
மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு
எழுதுக
விடை:
விளம்பரம்:
சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும்
வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. ஆனால் இன்றளவிலோ வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும் பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர்.
பண்டமாற்று
முறை:
மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு
பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால் தற்போது உள்ள வணிக
வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.
அங்காடிகள்:
சிலப்பதிகாரம் கூறும் மருவூர்ப்பாக்கத்தில், பலவிதமான வணிகர்களும் ஒரே இடத்தில் இருந்து
விற்பனை செய்தனர்.
ஆனால், இன்றைய சூழலில் அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.
பல தொழில்
செய்வோர்:
மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய
நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும் வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர் பலர் உள்ளனர்.
வணிக
வளாகங்கள்:
மருவூர்ப் பாக்கத்தில்
உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய
சூழலில் வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு
இடம் பெயர்ந்து உள்ளது
(அல்லது)
ஆ) கருணையனின்
தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும்
உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க .
விடை:
கருணையனின்
தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது கவிதாஞ்சலி
கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்:
குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய
தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும் தன்
கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான்.
கருணையன்
தாயை இழந்து வாடுதல்:
இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல்
காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று கருணையன்
வருந்தினான்.
கருணையனின்
தவிப்பு:
துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே
தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான்.
பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன:
கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன.
39) அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை
வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
விடை:
நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம்
அனுப்புநர்
அ அ அ அ அ,
100,
பாரதி தெரு,
சக்தி நகர்,
சேலம் – 636006.
பெறுநர்
ஆசிரியர் அவர்கள்,
தமிழ்விதை நாளிதழ்,
, சேலம் – 636001
ஐயா,
பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு
வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இணைப்பு:
இப்படிக்கு,
1. கட்டுரை
தங்கள் உண்மையுள்ள,
இடம் : சேலம்
அ அ அ அ அ.
நாள் :
04-03-2021
உறை மேல் முகவரி:
பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், , சேலம் – 636001
|
(அல்லது)
ஆ) உங்கள்
தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு
ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக
விடை:
மின்வாரியஅலுவலருக்குக் கடிதம்
அனுப்புநர்
ப. இளமுகில்,
6, காமராசர் தெரு,
வளர்புரம்,
அரக்கோணம்-631003
பெறுநர்
உதவிப்பொறியாளர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
அரக்கோணம்-631001
ஐயா,
பொருள்: மின்விளக்குகளைப்
பழுது நீக்க வேண்டுதல் சார்பாக.
வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன்
வேண்டுகிறேன்.
நன்றி!!
இப்படிக்கு,
தங்கள்
பணிவுடைய,
ப.இளமுகில்.
இடம்:அரக்கோணம்,
உறைமேல் முகவரி: உதவிப்பொறியாளர் அவர்கள், மின்வாரிய அலுவலகம், அரக்கோணம்-631001 |
40) அ) மொழிபெயர்க்க
Among the five geographical divisions
of the Tamil country in Sangam literature, the Marutam region was fit for
cultivation, as it had the most fertile lands. The property of a farmer
depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of
the soil. Among these elements of nature, sunlight was considered indispensable
by the ancient Tamils..
விடை:
சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய்
குறிப்பிடப்பட்டுள்ளது.
(அல்லது)
ஆ) மாணவ நிலையில்நாம்
பின்பற்றவேண்டிய அறங்களையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக
விடை:
1. புறம் பேசாதிருத்தல் |
1. தேவையற்றச்
சண்டைகள் நீங்கும் |
2. 2.பழிவாங்கும்
எண்ணத்தை கைவிடல் |
2. மன
அமைதிப் பெறலாம். |
3. உண்மை பேசுதல் |
3. நம்
வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம் |
4. உதவி செய்தல் |
4. மன
மகிழ்ச்சி கிடைக்கும் |
5. அன்பாய் இருத்தல் |
5. அனைவரும்
நண்பராகிவிடுவர் |
41) மேல்நிலைவகுப்பு – சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
விடை:
மேல்நிலை
வகுப்பு
– சேர்க்கை விண்ணப்பப் படிவம்
சேர்க்கை
எண்:
12345
நாள்: 05-01-2024 வகுப்பும் பிரிவும்:
பதினொன்றாம் வகுப்பு / ’அ’ பிரிவு
1. மாணவரின் பெயர் : வா. நிறைமதி
2. பிறந்த நாள் : 27-12-2008
3. தேசிய இனம் : இந்தியன்
4. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : வெ.க.வாசு
5. வீட்டு முகவரி : 52 , தமிழ்ப்பாவை நகர், திருச்சி-1
6. இறுதியாகப் படித்த வகுப்பு : 10. ஆம் வகுப்பு
7. பயின்ற மொழி : தமிழ்
8. இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி : அரசு உயர்நிலைப்பள்ளி, திருச்சி
9. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் :
தேர்வின் பெயர் |
பதிவு எண்
- ஆண்டு |
பாடம் |
மதிப்பெண்
(100) |
பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வு |
12345 |
தமிழ் |
100 |
ஆங்கிலம் |
99 |
||
கணிதம் |
100 |
||
அறிவியல் |
100 |
||
சமூக
அறிவியல் |
100 |
||
மொத்தம் |
499 |
9. மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா? : ஆம்
10. தாய்மொழி : தமிழ்
11. சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும் : தமிழ்
வா.நிறைமதி
மாணவர்
கையெழுத்து
42) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
விடை:
என்னை
எழுது என்று சொன்னது
இந்தக்
காட்சி!
கொடையைப்
பற்றி எழுதினேன்!
அனைவரும்
இதன் அருமை அறிந்து
நடக்க
வேண்டும்!
வாழ்க்கையில்
மேலும் உயர வேண்டும்!
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:
3X8=24
43)
அ) நாட்டுவிழாக்கள்-விடுதலைப்போராட்ட வரலாறு-நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்
பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்’
என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
விடை:
நாட்டு விழாக்கள்:
நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற நாட்டு விழாக்கள்
இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை
அனைத்திலும் சிறந்தவையாகும்.
விடுதலைப் போராட்ட வரலாறு:
பதினைந்தாம் நூற்றாண்டு
காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தினர்.எனவே மக்களிடையே விடுதலை
வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத் தூண்டினர்.
நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:
நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. துன்பத்தில் மற்றவர்க்கு
உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள், ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக்
குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.
மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:
மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ
வேண்டும். அவர்கள் தங்களை சாரண
சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில்
ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
(அல்லது)
ஆ) ஜெயகாந்தன் நினைவுச்
சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.
விடை:
44)
அ) 'அழகிரிசாமியின்
‘ஒருவன் இருக்கிறான் ’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து
எழுதுக.
விடை:
வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)
முன்னுரை:
யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார்.
குப்புசாமியின் குடும்ப நிலை:
காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள்.
நோயுற்ற
குப்புசாமி:
சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று
ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.
ஆறுமுகம்:
வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த
செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி
பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.
முடிவுரை:
“
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்”
பண்புடையவர்களால்தான், இவ்வுலகம்
நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.
(அல்லது)
ஆ) குறிப்புகளைக்
கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
மாணவன் – கொக்கைப் போல,கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும்–கொக்கு
காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும்
தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டா லும்
உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி.
விடை:
வெளித்தோற்றம்
எப்படி இருப்பினும் குணங்களை ஆராய்ந்து உணர்ந்து
கொள்ள வேண்டும்
உப்பு குறைவானாலும் உண்ண முடியாது. அதிகமானாலும்
உண்ணமுடியாது.
அளவோடு இருந்தால் தான் ருசிக்க முடியும். நாமும் மற்றவர்களிடம்
45) அ) பள்ளி வளாகத்தில் நடைபெற்ற'மரம் நடுவிழாவுக்கு' வந்திருந்தசிறப்பு விருந்தினருக்கும்
பெற்றோருக்கும் பள்ளியின்'பசுமைப்பாதுகாப்புப்படை' சார்பாக நன்றியுரைஎழுதுக.
விடை:
v
பசுமைப் பாதுகாப்புப்
படை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.இதன்
மூலம் பள்ளிகள் பசுமையாக உள்ளது.
v
மரங்கள் நம் வாழ்வில்
முக்கிய அங்கம். அதனை
உணர்ந்து அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.
v
மரம் நடும் விழாவிற்கு
வருகைப்புரிந்த சிறப்பு விருந்தினர் மரங்களின் அவசியம்,மாணவர்கள்
மற்றும் சமூகத்தின் கடமை ஆகியவற்றை எடுத்துரைத்து நமக்கு சிறப்பாக வழிகாட்டினார்.
v
இவ்விழாவினை ஏற்பாடு
செய்த தலைமை ஆசிரியருக்கும் மற்றும் பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படைக்கும்,
சிறப்பான
கருத்துகளை கூறிய சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும்
பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
(அல்லது)
ஆ) உங்கள்
ஊரில் கடினஉழைப்பாளர் - சிறப்புமிக்கவர் - போற்றத்தக்கவர்
– என்ற நிலைகளில் நீங்கள்
கருதுகின்ற
பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக.
விடை:
தனியொரு பெண்ணாக இருந்து, நண்பர்களின்
உதவியாலும் ஊக்கத்தாலும் இன்று வெற்றிகரமான இயற்கை விவசாயியாக உருவெடுத்து,
அதை மற்றவர்களும் செய்யத் தூண்டுதலாக இருக்கும் சாதனைப் பெண்மணி,
இராணிப்பேட்டை மாவட்டம் வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை
விவசாயி வடிவழகி. அவர், "இரண்டு வருடங்களுக்கு
முன்புவரை குடும்பத் தலைவியாகவே இருந்த நான், இன்று இயற்கை
விவசாயியாக அறியப்படுகின்றேன். இந்த அங்கீகாரம் தருகின்ற மனநிறைவை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கிறார்.
"நஞ்சில்லா
உணவை என் ஒவ்வொரு தமிழ்க்குடியும் உண்ண வேண்டும். அதுவே என் பெருங்கனவு. அந்தக்
கனவை நோக்கி உழைத்துக்கொண்டே இருப்பேன்" என்று கூறும் வடிவழகி, வேளாண்மைத் துறையில் வேலை
செய்யும் இளைஞர்களுக்கு விவசாயம் சார்ந்த ஆலோசனைகளைத் தந்து வருகிறார்.
நெகிழிப்
பொம்மைகளின் வரவால், அழிவுநிலைக்கே சென்றுவிட்ட மரக்குதிரைத்
தொழிலை
மீட்டெடுத்துச் செய்து வருகிறார், திருத்தணியைச் சேர்ந்த
புஷ்பலதா. அவர், "உளியையே பிடிக்காத நான், நம்பிக்கையுடன் உளியைப் பிடித்துச் செதுக்க ஆரம்பித்தேன், ஒரு மரக்குதிரை செய்து முடிக்க ஒரு மாதம் ஆகிறது. அதிலிருந்து நிறைய
விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்" என்கிறார் புஷ்பலதா.
1992ஆம்
ஆண்டுமுதல் கொஞ்சம் கொஞ்சமாக மரக்குதிரை செய்ய ஆரம்பித்துத் தொழில் நுணுக்கங்களைத்
தெரிந்து கொண்டேன். விற்பனை சூடு பிடித்துத் தற்போது அதிக அளவில் விற்பனையாக
வருகின்றன" என, மகிழ்ச்சியோடு கூறுகிறார் புஷ்பலதா.