10.ஆம் வகுப்பு
- தமிழ் - முக்கிய குறுவினாக்கள்
முக்கியக் குறுவினாக்கள்:
1)மன்னும்
சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடித்தாழ வாழ்த்துவமே! இவ்வடிகளில்
இடம்பெற்ற ஐம்பெருங்காப்பியங்களில் எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்கள் யாவை?
விடை: சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி
2)”நமக்கு
உயிர் காற்று காற்றுக்கு வரம் மரம்; மரங்களை வெட்டி எறியாமல்
நட்டு வளர்ப்போம்! இதுபோன்ற உலக காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்கள்
எழுதுக.
விடை: மரம் இயற்கையின் வரம்,காற்றின் கருவறை மரம்
3) வசன
கவிதை- குறிப்பு வரைக.
விடை: யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு செய்யுளும்,உரைநடையும்
கலந்து எழுதப் பெறுவது வசனகவிதை. பாரதியார் வசனகவிதையை அறிமுகப் படுத்தியதால் வசன
கவிதையின் தந்தை எனப்படுகிறார்.
4) விருந்தினரை
மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
விடை: வாருங்கள்.நலமா? , நீர் அருந்துங்கள், வீட்டில் அனைவரும் நலமா? போன்றன.
5) இறடிப்
பொம்மல் பெறுகுவிர் -இத்தொடரின் பொருள் எழுதுக.
விடை: தினைச்சோற்றைப் பெறுவீர்கள்.
6) பாவலரேறு
பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் யாவை?
விடை: உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம்,
கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி,
பள்ளிப்பறவைகள் முதலியன.
7) தமிழ்
தன் மனதில் பற்று உணர்வை ஏற்படுத்தும் காரணங்களாக பாவலரேறு கூறுபவை யாவை?
விடை: நிலைத்த தன்மை மற்றும் வேற்று மொழியார் புகழுரை.
8) பூவின்
நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
விடை: அரும்பு, போது,
மலர் , வீ , செம்மல்
9)சம்பா
நெல் வகைகளைக் குறிப்பிடுக.
விடை: ஆவிரம்பூச்சம்பா , ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச்சம்பா, சீரகச்சம்பா, சிறுமணிச்சம்பா முதலியன.
10) உலகத்
தமிழ் மாநாடு குறித்து அப்பாதுரையார் கூறுவது யாது?
விடை: ”உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல்
நாடு மலேசியாவே.
அம்மாநாட்டுக்குரிய முதல்மொழி தமிழே” என்று அப்பாதுரையார் கூறுகிறார்.
11) தற்கால
உரைநடையில் அமையும் சிலேடைக்கு
ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை: சர்க்கரையைச் சீனிவாசன் தின்றுவிட்டான் – இதில்
சீனிவாசன் என்பது மனிதரையும் குறித்தது. எறும்பையும் குறித்தது.
12)ஐம்பெரும்
காப்பியங்கள் யாவை?
விடை: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி,
வளையாபதி, குண்டலகேசி
13) இரட்டுற
மொழிதல்- விளக்குக.
விடை: ஒரு சொல்லோ தொடரோ இருபொருள்பட வருதல் இரட்டுற மொழிதல்
ஆகும்.இது சிலேடை எனவும் வழங்கப்படுகிறது.
14) வேங்கை
என்பதை தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்தி காட்டுக.
விடை: வேங்கை என்பது தனிமொழியாக வரும்போது விலங்கையும், அதுவே
”வேம்+கை” என்று
பிரிந்து தொடர்மொழியாக வரும்போது கையையும் குறித்ததால் பொதுமொழி
ஆயிற்று.
15) உயிரளபெடை
என்றால் என்ன ?
விடை:
செய்யுளில் ஓசை குறையும் போது அதை நிறைவு செய்ய மொழிக்கு முதலிலும் இடையிலும்
இறுதியிலும் நிற்கின்ற உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் நீண்டு ஒலிப்பது
உயிரளபெடை எனப்படும்.
16) இன்னிசை
அளபடையை விளக்குக.
விடை: செய்யுளில் ஓசை குறையாத போதும் இனிய ஓசைக்காக
நெடில் எழுத்துகள் ஏழும் நீண்டு ஒலிப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
சான்று:"எடுப்பதூஉம்"
என்பதில் ஓசை குறையவில்லை என்றாலும் இனிய ஓசைக்காக
நெடில் எழுத்து அளபெடுத்தது.
17) சொல்
என்றால் என்ன?
விடை: ஓர் எழுத்து தனித்தோ ஒன்றுக்கு மேற்பட்ட
எழுத்துகள் தொடர்ந்தோ பொருள் தருமாயின் அது சொல் எனப்படும்.
18) பொது
மொழியை விளக்குக.
விடை: ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும்,
அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனி க்கும் தொடர்
முடிக்கும் பொதுவாய் அமைவது பொது மொழி எனப்படும்.
சான்று:
”எட்டு” என்ற சொல் தனிமொழியாக வரும்போது எண்ணைக் குறிக்கிறது அதுவே ”எள்+து” என்று பிரியும்போது எள்ளைச் சாப்பிடு
என்பதைக் குறிக்கிறது இவ்வாறு அமைவது பொதுமொழி
19) தொழிற்
பெயர்- வினையாலணையும் பெயர் வேறுபடுத்துக .
விடை:
|
தொழிற்பெயர் |
வினையாலணையும் பெயர் |
1 |
வினை,பெயர்த்தன்மையாகி
வினையையே உணர்த்தி நிற்கும் |
தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும் |
2 |
காலம் காட்டாது |
காலம் காட்டும். |
3 |
படர்க்கைக்கே உரியது |
மூவிடத்திற்கும் உரியது. |
4 |
சான்று:பாடுதல்,படித்தல் |
சான்று:பாடியவள்,படித்தவர் |
20) தென்மேற்கு
பருவக்காற்று- குறிப்பு வரைக.
விடை: ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசக்கூடியது தென்மேற்குப் பருவக்
காற்றாகும்.இக்காற்று இந்தியாவிற்குத் தேவையான எழுபது சதவீத மழைப்பொழிவைத்
தருகிறது.
21) அமில
மழை எவ்வாறு பெய்கிறது?
விடை: கந்தக-டை-ஆக்சைடு, நைட்ரஜன்-டை-ஆகியவை நீரில்
கரைந்து விடுவதால் அமிலமழை பொழிகிறது.
22) ஹிப்பாலஸ்
பருவக்காற்று பற்றி நீங்கள் அறிந்தவற்றை எழுதுக
விடை: கி.பி.முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்ற கிரேக்க மாலுமி
பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார்.நடுக்கடல் வழியே முசிறித்
துறைமுகத்துக்கு வரும் வழியைக் கண்டுபிடித்தார்.எனவே யவனர்கள்(கிரேக்கர்கள்) அவர்
பெயரையே அக்காறுக்கு வைத்தனர்.
23) பாரதியாரின்
படைப்புகள் சிலவற்றை கூறுக.
விடை:கண்ணன் பாட்டு,குயில் பாட்டு, பாப்பாப் பாட்டு,
பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி.
24) பெற்றோர்
வேலையில் இருந்து திரும்ப தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல்
சொற்களை எழுதுக.
விடை:”அழாதே தம்பி,அப்பாவும்
அம்மாவும் இப்போது வந்துவிடுவர்.உனக்கு நிறையப் பொம்மைகள் வாங்கி வருவர்” என்று கூறுவேன்.
25) மாஅல்-பொருளும்
இலக்கணக்குறிப்பும் தருக.
விடை: மாஅல்-திருமால். மாஅல் என்பதன் இலக்கணக் குறிப்பு-செய்யுளிசை
அளபெடை
26) விரிச்சி
கேட்டல் என்றால் என்ன?
விடை: ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ?
என ஐயம் கொண்ட பெண்கள் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும்
ஊர்ப்பக்கத்தில் போய் தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து
கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில்
முடியும் என்றும், தீய மொழியைக் கூறின் தீயாய் முடியும்
என்றும் கொள்வர். இதுவே விரிச்சி கேட்டல் எனப்படும்.
27) முல்லைத்
திணைக்குரிய பொழுதுகள் யாவை?
விடை: முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது:
கார்காலம்( ஆவணி, புரட்டாசி)
முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது: மாலை.
28) முல்லைக்குரிய
கருப்பொருள் நான்கினை எழுதுக.
விடை: தெய்வம்:திருமால்
நீர்: குடிநீர் காட்டாறு
மரம்: கொன்றை, காயா, குருந்தம்.
முல்லை: முல்லை, பிடவம் தோன்றிப் பூ.
29) தண்ணீர்
குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக.
தொடரில் அமைக்க.
விடை: தண்ணீரைக் குடி: முருகன் குவளையில் இருந்த தண்ணீரைக் குடித்தான்.
தயிரை உடைய குடம்: பெண்கள் தயிரை உடைய குடத்தை சுமந்து சென்றனர்
30) தொகைநிலைத்
தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
விடை: தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.
அவை: 1)வேற்றுமைத்தொகை
2)வினைத்தொகை
3)பண்புத்தொகை
4)உவமைத்தொகை
5)உம்மைத்தொகை
6)அன்மொழித்தொகை.
31) தானியம்
ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டு ஒற்றி எடுத்து
குழுவினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச்
செல்வம் மட்டுமேஇன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக்
குறிப்பிடுக.
விடை: இல்லை. விருந்தோம்பலுக்கு செல்வம் மட்டுமே இன்றியமையாதது
அன்று. விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் மனமும், முகமும் இருத்தல் மட்டுமே
போதுமானது.
32) விருந்தோம்பல்
என்றால் என்ன?
விடை: தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண
உணவும், இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவது
விருந்தோம்பல்.
33) உலகம்
நிலைத்து இருப்பதற்கான காரணமாக இளம்பெருவழுதி கூறுவது யாது?
விடை: அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர்
நல்லோர் அத்தகையவர்களால்தான், உலகம் நிலைத்திருக்கிறது என்று இளம்பெருவழுதி
கூறுகிறார்.
34) இன்மையிலும்
விருந்தோம்பல் பற்றி புறநானூறு குறிப்பிடுவது யாது?
விடை: தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக
வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்த
செய்தியைப் புறநானூறு குறிப்பிடுகிறது.
35) விருந்து
பற்றி எடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் யாவை?
விடை: திருக்குறள்,சிலப்பதிகாரம், புறநானூறு,
கலிங்கத்துப்பரணி, கம்ப ராமாயணம், பொருநராற்றுப்படை போன்ற பல நூல்கள் விருந்தைப் பற்றி எடுத்துரைக்கின்றன.
36) காலின்
ஏழடி பின்சென்று- பாடல் உணர்த்தும் செய்தி யாது?
விடை: பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச்
செல்லும்போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர் மேலும் வழி
அனுப்பும் பொழுது அவர்கள் செல்ல விருகின்ற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை
ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர் என்பதே
அப்பாடலின் பொருள் ஆகும்.
37) அதிவீரராம
பாண்டியன் இயற்றிய நூல்களை குறிப்பிடுக.
விடை: நைடதம்,இலிங்கபுராணம்,வாயு சம்கிதை,திருக்கருவை அந்தாதி,கூர்ம புராணம் முதலியன.
38) ஆற்றுப்படை
என்றால் என்ன?
விடை: ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை
அழைத்து,யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று
வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று
வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.
39) பண்டைய
தமிழ் கலைஞர்கள் யாவர்?
விடை: பாணன்,பாடினி விறலியர் கூத்தர்.
40) நச்சப்
படாதவன் செல்வம்- பொருள் தருக.
விடை: பிறருக்கு உதவி செய்யாததால் ,எவராலும் விரும்பப்படாதவர் செல்வம்
41) உயிரினும்
ஓம்பப் படுவது எது? ஏன்?
விடை: ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால், அவ்வொழுக்கத்தை
உயிரினும் மேலானதாகப் பேணிக்காக்க வேண்டும்.
42) நல்லார்
தொடர்பைக் கைவிடுதல் எத்தன்மையது?
விடை: நல்லார் ஒருவரின் தொடர்பைக் கைவிடுதல் பலரை வைத்துக்
கொள்வதற்கு சமமாகும்
43) வருங்காலத்தில்
தேவை எனக் கருதுகின்ற, செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு
அறிவியல் தொழில்நுட்பத்தைக் குறிப்பிடு.
விடை: காணொலி படத்தொகுப்பு,தானியக்க வியல்
44) வாட்சன்
- குறிப்பு வரைக
விடை: 2016 ல் ஐ.பி.எம்
நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன் சில நிமிடங்களில் இரண்டு கோடி
தரவுகளை அலசி நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டு பிடித்தது.
45) பெப்பர் குறித்து நீங்கள் அறிந்தவற்றை எழுதுக
விடை: ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனை பெப்பர்.
இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ.வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன. இவை மனிதர்கள் முக
பாவனைகளில் இருந்து உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன.
46) மருத்துவத்தில்
மருந்துடன் அன்பும் நம்பிக்கை மாற்றும் பாங்கினை எழுதுக.
விடை: மருத்துவத்தில் நோய்களைக் குணமாக்க மருந்து மற்றும் போதாது.
அன்பான கவனிப்பும், நோயுற்றவர் நோயிலிருந்து மீண்டு வரும் நம்பிக்கையும்
அளித்தலே மிகவும் முக்கியமானது.
47) உயிர்கள்
உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையென பரிபாடல் வழி அறிந்தவற்றை
குறிப்பிடுக.
விடை:அ) உடலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் தோன்றியது
ஆ) பின்பு நெருப்புப்
பந்து போல பூமி உருவான ஓடி காலம் தொடர்ந்தது
இ) பின் குளிர்ந்த மழை
பெய்தது.
ஈ) மழை வெள்ளத்தால்
மூழ்கிய பூமியில் ஏற்கனவே இருந்த இப்பெரிய உலகத்தில் உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு
ஏற்ற சூழல் தோன்றியது
48) பூமி
வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்ன?
விடை: பூமி குளிரும் படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம்
கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
49) விடுமுறையில்
காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழி செல்கிறேன்-இத்தொடர் கால
வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
விடை: "இருக்கிறேன்"என்று
நிகழ்காலத்தில் இடம்பெறவேண்டியது உறுதித் தன்மையின் காரணமாக எதிர்காலத்திற்காக
உரைக்கப்பட்டது.எனவே இது காலவழுவமைதிக்குச் சான்றாக அமைந்தது
50) உயர்திணைக்குரிய
பால் பகுப்புகளைக் கூறுக.
விடை:ஆண்பால்,பெண்பால்,பலர்பால்
பெண்பால்,பலர்பால்
51) வழுநிலை,
வழாநிலை- வேறுபடுத்துக.
விடை:
|
வழு |
வழாநிலை |
1 |
இலக்கண முறையின்றிப் பேசுவதும், எழுதுவதும் வழு |
இலக்கண முறையுடன் பேசுவதும், எழுதுவதும் வழாநிலை |
2. |
திணை, பால்,எண்,இடம்,வினா, விடை, மரபு ஆகிய ஏழும் இலக்கண முறையின்றி வரும் |
திணை, பால்,எண்,இடம்,வினா, விடை, மரபு ஆகிய ஏழும் இலக்கண முறையுடன் வரும் |
3. |
சான்று : அவன்
வந்தாள், அழகி பாடியது |
சான்று: அவன்
அவந்தான், அழகி பாடினாள் |
52) வழுவமைதி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
விடை: வழுவமைதி ஐந்து வகைப்படும்.
அவை: 1)திணை வழுவமைதி
2)பால்
வழுவமைதி
3)இடவழுவமைதி
4)காலவழுவமைதி
5)மரபு
வழுவமைதி
53) மரபு
வழுவமைதியைச் சான்றுடன் விளக்குக.
விடை: " கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற் படவேணும்"
என்று பாரதியார் பாடலில் இடம் பெற்றுள்ளது."குயில் கூவும்" என்பதே மரபு.குயில் கத்தும்
என்பது மரபு வழு ஆகும் இங்கு கவிதையில் இடம் பெற்றிருப்பதால், இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
54) தாய்மொழியும்
ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினை குறிப்பிட்டு காரணம் எழுதுக
விடை: மலையாள மொழி. ஏனெனில் தமிழுடன் நெருங்கிய தொடர்பு மலையாள
மொழிக்கு இருப்பதால் நான் அதைக் கற்க விரும்புகிறேன்.
55) மொழிபெயர்ப்பு
குறித்து மணவை முஸ்தபா கூறுவது யாது?
விடை: "ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு
மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்கிறார் மணவைமுஸ்தபா.
56) சங்க காலத்திலேயே தமிழில்
மொழிபெயர்ப்பு இருந்ததை சான்றுடன் விளக்குக.
விடை: "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்
வைத்தும்" என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதைப்
புலப்படுத்துகிறது
57) மொழிபெயர்ப்பால்
திருக்குறள் அடைந்த பெருமை யாது?
விடை: திருக்குறள் உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்த்து
வெளியிடப்பட்டதால் தான், இன்று உலகப் பொதுமறை என்ற பெரும் பெயரைப்
பெற்றிருக்கிறது.
58) camel என்ற
சொல்லின் மொழிபெயர்ப்பை விளக்குக.
விடை: CAMEL என்பதற்கு ஒட்டகம்,
வடம் என இருபொருள் உண்டு. ஊசி காதில் வடம் நுழையாது என்னும்
வேற்றுமொழித் தொடரை "ஊசி காதில் ஒட்டகம்
நுழையாது "என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோம்
இத்தொடரில் வடம் என்பதே பொருத்தமான பொருளாக அமையும். நூல் நுழையுமே அன்றி கயிறு
நுழையாது
59) செய்குத்தம்பி
பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத்தொடர்களாக்குக.
விடை: அ)கல்வி கரையில; கற்பவர் நாள் சில. ஆ)கற்றோர்க்குக் கட்டுச்சோறு
தேவையில்லை
60)சதாவதானம்-
குறிப்பு வரைக
விடை: சதம் என்றால் "நூறு" என்பது
பொருள். ஒருவரது புலமையையும், நினைவாற்றலையும், நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு
செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளித்தலே சதாவதானம்.
61) கழிந்த
பெரும் கேள்வியினான் எனக்கேட்டு முழுதுணர்ந்த
கபிலன் தன்பால் பொழிந்த பெரும் காதல்
மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல்
- கேள்வியினான் யார்?கேண் மையினான் யார்?
விடை: கழிந்த பெரும்கேள்வியினான்- குசேல
பாண்டியன். கேண்மையினான்-இடைக்காடனார்
62)இந்த
அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எப்பக்கம் இருக்கிறது? இதோ, இருக்கிறது! சொடுக்கியை போட்டாலும் வெளிச்சம்
வரவில்லையே! மின்சாரம், இருக்கிறதா? இல்லையா?
- மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்து எழுதுக.
விடை: எப்பக்கம் இருக்கிறது -அறியா வினா. மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?
-ஐயவினா
63) வினா
எத்தனை வகைப்படும்? அவை யாவை?
விடை: வினா ஆறு வகைப்படும்.
அவை: 1)அறிவினா
2)அறியா வினா
3)ஐயவினா
4)கொளல் வினா
5)
கொடை வினா
6)ஏவல் வினா
64) விடை
எத்தனை வகைப்படும்? அவை யாவை?
விடை: விடை எட்டு வகைப்படும்.
அவை: 1)சுட்டுவிடை
2)மறை விடை
3)நேர் விடை
4)
ஏவல் விடை
5)வினா எதிர் வினாதல் விடை
6)உற்றது உரைத்தல் விடை
7)உறுவது கூறல் விடை
8)இனமொழிவிடை.
65) வெளிப்படை,
குறிப்பு விடைகளை வகைபடுத்துக.
விடை: வெளிப்படைவிடைகள்:
1)சுட்டுவிடை
2)மறைவிடை
3)நேர்விடை
குறிப்புவிடைகள்:
1) ஏவல் விடை
2)வினா எதிர் வினாதல்
விடை
3)உற்றது உரைத்தல் விடை
4)உறுவது கூறல் விடை
5) இனமொழி விடை
66) ”நேற்று
நான் பார்த்த அர்ஜுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையும், சிறந்த நடிப்பையும், இனிய பாடல்களையும் நுகர்ந்து
மிக மகிழ்ந்தேன்”. என்று சேகர் என்னிடம் கூறினார்.
இக்கூற்றை அயற்கூற்றாக மாற்றுக.
விடை: முந்தைய நாள் தான் பார்த்த அர்ஜுனன் தபசு என்ற கூற்றில் அழகிய
ஒப்பனையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்ததாக சேகர்
என்னிடம் கூறினார்.
67)நிகழ்
கலை என்றால் என்ன?
விடை: பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல் ,புதுமை
ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் நிகழ்
கலைகள் ஆகும்
68) கரகாட்டம்
என்றால் என்ன?
விடை: கரகம் எனும் பித்தளைச் செம்பையோ சிறிய குடத்தை
தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப ஆடுவதே கரகாட்டம்.
69) மயில்
ஆட்டத்தில் பின்பற்றப்படும் அசைவுகள் யாவை?
விடை: ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், தலையை சாய்த்து ஆடுதல், இருபுறமும் சுற்றிஆடுதல், அகவுதல்,தண்ணீர் குடித்துக்கொண்டே ஆடுதல் போன்றன
70) காவடியாட்டம்என்றால்என்ன?
விடை: கா-என்பதற்குப் 'பாரம் தாங்கும் கோல்'என்பது பொருள். இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில்
சுமந்து ஆடுவது காவடி ஆட்டம்
71)தோல்பாவைக்
கூத்து என்றால் என்ன?
விடை: தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுருவும்
திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கு ஏற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும்
அசைத்துக் காட்டி, உரையாடியும் பாடியும் காட்டுவது
தோற்பாவைக் கூத்து.
72) சாந்தமானதொரு
பிரபஞ்சத்தைச் சுமக்கின்றன ஒல்லித்
தண்டுகள்- இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
விடை: இவ்வடியில் குறிப்பிடப்பட்டவர்கள் பெண்களாவர். ஏனெனில் இவர்கள்
அமைதியான முறையில் இவ்வுலகைத் தாங்கி நிறுத்தப் போராடும் போராளிகள் ஆவர்
73) பிள்ளைத்
தமிழுக்கு உரிய பத்து பருவங்கள் யாவை?
விடை: செங்கீரை, தால், சப்பாணி,முத்தம்,வருகை, அம்புலி இவை
இருபாலருக்கும் உரிய பருவங்கள்
ஆண் பாலுக்கு உரியன: சிற்றில்,
சிறுபறை,சிறுதேர்,
பெண் பாலுக்கு உரியன:கழங்கு ,அம்மானை, ஊசல்
74) செங்கீரைப்பருவம்என்றால்என்ன?
விடை: செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று, குழந்தையின்தலை
4-6 ஆம்மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச்
செங்கீரைப் பருவம் என்பர்
75) காட்டில்
விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக
உண்ணச் சுவை மிகுந்து இருக்கும். இத்தொடரில்
அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருளை எழுதுக.
விடை: முதற்பொருள்: காடு (முல்லை நிலம்) ,மாலை (பொழுது).
கருப்பொருள்: வரகு(உணவு).
76) கீழ்
வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருள்களைத் திருத்தி
எழுதுக .உழவர்கள் மாலையில் உழுதனர். முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர்
கடலுக்குச் சென்றனர்.
விடை:
ü உழவர்கள் வயலில் உழுதனர்
ü நெய்தல் பூச்செடியைப்
பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
77) கரப்பிடும்பை
இல்லார்- தொடரின் பொருள் எழுதுக.
விடை:
தம்மிடம் உள்ள பொருளை மறைத்து வைத்தல் எனும் துன்பம் தராத நல்லவர்.
78) வறுமையிலும்
படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் மாபொசி என்பதற்குச் சான்று தருக.
விடை: நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் பழைய
புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்று விருப்பமான புத்தகங்களை மிகக் குறைந்த
விலைக்கு வாங்கும் வாடிக்கையாளர்கள் உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில்
புத்தகங்களை வாங்கி விட்டு பட்டினி கிடந்திருக்கிறார். இவையே மா.பொ.சி வறுமையிலும்
படிப்பின் மீதும் நாட்டம் கொண்டவர் என்பதற்குச் சான்றாகும்
79) சிலம்புச்
செல்வர் என மாபொசி போற்றப்பட காரணம் யாது?
விடை: இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தை மா.பொ.சி தமிழினத்தின்
பொதுச் சொத்தாகக் கருதினார் எனவே தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள்
நடத்தியதால் சிலம்புச் செல்வர் என்று போற்றப்பட்டார்.
80) மெய்க்கீர்த்தி
பாடப்படுவதன் நோக்கம் யாது?
விடை: மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச்
சிறப்பையும் காலம் கடந்து உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் புகழும்
பெருமையும் அழியாத வகையில் ,அவை அனைத்தையும் கல்லில்
செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்
81) பாசவர்,
வாசவர், பல்நிண வினைஞர் ,உமணர்- சிலப்பதிகாரம் காட்டும் வணிகர்கள் யாவர்?
விடை:
# பாசவர்-
வெற்றிலை விற்பவர்
# வாசவர்-
நறுமணப் பொருட்களை விற்பவர்
# பல்நிண
வினைஞர்- பல்வகை இறைச்சிகளை விலை கூறி விற்பவர்கள்.
#உமணர்-
உப்பு விற்பவர்
82) சிலப்பதிகாரத்தின்
வேறு பெயர்கள் யாவை?
விடை: முதற் காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
புரட்சிக்காப்பியம் ஒற்றுமைக் காப்பியம், உரையிடையிட்ட
பாட்டுடைச் செய்யுள் முதலியன.
83) உரையிடையிட்ட
பாட்டுடைச் செய்யுள்- விளக்குக.
விடை:
உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்) என்பது சிலப்பதிகாரத்தில்
வரும் தமிழ்நடை. இது உரைநடைப் பகுதியில் அமைந்திருக்கும் பாட்டு. வாய்க்காலில்
பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை.உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம்.
இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை.
84) புறத்திணைகள்
எதிரெதிர் திணைகளை பட்டியலிடுக
விடை: வெட்சி- கரந்தை , வஞ்சி – காஞ்சி ,நொச்சி -
உழிஞை
85) பாடான்
திணையை விளக்குக.
விடை: பாடு+ஆண்+திணை. பாடப்படும் ஆண் மகனின் கல்வி, ஒழுக்கம்
கொடை வீரம் முதலியவற்றைப் புகழ்ந்து பாடுவது பாடாண் திணையாகும்.
86)குறிப்பு
வரைக- அவையம்.
விடை:
அ) அவையும் அரசனின் அறநெறி
ஆட்சிக்கு துணைபுரிந்தது.
ஆ) "அறம்
அறக்கண்ட நெறிமான் அவையம்"என்று புறநானூறு
பாராட்டுகிறது.
இ)அவையம் துலாக்கோல் போல நடுநிலை
மிக்கது என்று போற்றப்பட்டது.
87) கொடையில்
சிறந்த மன்னர்கள் நால்வரைக் குறிப்பிடுக.
விடை: அதியன், பேகன், ஆடுகோட்பாட்டுச்
சேரலாதன், திருமுடிக்காரி
88) காலக்கழுதை
கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
விடை: காலக்கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக்
குறிப்பதாகும். வயது முதிர்ந்து உடல் உறுப்புகள் வலுவிழந்தாலும் தொடர்ந்து
அறப்பணி செய்தலைக் குறிக்கிறது.
89) உள்வாய்
வார்த்தை உடம்பு தொடாது- இத்தொடரை விளக்குக.
விடை: ஒருவர் தன் வாயால் புகழ்வதும் இகழ்வதும் நம் உடம்பின் மீது
வந்து சேராது.
90) குறள்
வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டு தருக.
விடை: அ)வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று,இரண்டு
அடிகளால் வருவது குறள் வெண்பா .
ஆ)முதல் அடி நான்கு சீராகவும்,
இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.
சான்று:
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
91) நான்
எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு.இவற்றை இரு தொடர்களாக்குக.
விடை:
அ) நான் எழுதுவதற்கு ஒரு
தூண்டுதல் உண்டு.
ஆ) நான் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு.
92) வாழ்வில்
தலைக்கனம், தலைக்கனமே வாழ்வு என்று நாகூர் ரூமி யாருடைய
வாழ்வைக் குறித்து கூறுகிறார்?
விடை: நாள்தோறும் சுமக்கும் தலைச்சுமை தான் "தலைக்கணமே
வாழ்வு" என்று சித்தாளின் வாழ்வைக் குறித்து நாகூர்
ரூமி கூறுகிறார்.
93) காய்
மணியாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் -உவமை
உணர்த்தும் கருத்து யாது?
விடை: இளம் பயிரானது வளர்ந்து நெல்மணிகளை காணும் முன்பே,தூயமணி
போன்று பெய்கின்ற மழைத்துளி இல்லாமல் வாடி காய்ந்து விட்டது போல, கருணையாகிய நானும் என் தாயை இழந்து வாடுகின்றேன்.
94 ) தேம்பாவணி-
குறிப்பு வரைக.
விடை:
அ) தேம்பாவணி பெருங் காப்பிய
வகை நூல்.
ஆ) இந்நூல் மூன்று காண்டங்களை
உடையது.
இ) 36 படலங்களையும்,3615
பாடல்களையும் உடையது.
ஈ) இந்நூல் இயேசுவின்
வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பை பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட
நூலாகும்.
95) கருணையன்
புலம்பியதைக் கேட்டு, அழுவனபோன்று கூச்சலிட்டவை யாவை?
விடை: கருணையின் புலம்பியதைக் கேட்டு தேன் மலர்கள்
பூத்து மணம் வீசும் மலர்களும்,சிறு குட்டைகள் தோறும் உள்ள
பறவைகளும் வண்டுகளும் அக்காட்டில் அழுவன போன்று கூச்சலிட்டன.
96)தீவக
அணியின் வகைகள் யாவை?
விடை: தீவக அணி மூவகைப்படும். அவை:
1) முதல் நிலைத் தீவகம் 2) இடைநிலைத்த தீவகம் 3) கடை நிலைத் தீவகம்.
97) அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது- இக்குறளில் பயின்று வந்த
அணியின் இலக்கணம் யாது?
விடை: இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி நிரல்நிறை அணி ஆகும். நிரல்
என்றால் ‘வரிசை’.
நிறை என்றால் ‘நிறுத்துதல்’ சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்
படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.