TAMIL THIRANARI THERVU QUESTION ANSWER AND ONLINE EXAM (2023-2024)


திறனறி தேர்வு வினாடி வினா-1

Tamil Talent Search exam for Plus One students, announces collector |  பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் திறனறி தேர்வு 

(விடைகளும், வினாடி வினா இணைப்பும் இறுதியில் வழங்கப்பட்டுள்ளன)

1 கீழ்க்காணும் தொடரில் அடிக்கோடிட்டச் சொற்களுக்கு நிகரான சொற்களைத்

தேர்ந்தெடுக்க.

சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

அ.வண்டுகள் பொதும்பில், மதுரம்

ஆ)பொதும்பில். வண்டுகள். நாவம்

இ. நரவம் வண்டுகள் பொதும்பில்

ஈ காவில், பொதும்புகள் தேன்

2. துரைமாணிக்கம் எழுதிய நூல்

அ. காவியக் கொத்து

ஆ. ஆறாசிரியம்

இ. எழுசுவை

ஈ மகபுகுவஞ்சி

3. "HOMOGRAPH" என்ற கலைச்சொல்லின் தமிழாக்கம்

அ. வரைபடம்

ஆ. வீட்டு வரைபடம்

இ. இணையெழுத்து

ஈ ஒப்பெழுத்து

4. பூ வாடிய நிலையின் பெயர்

அ. அலர்

ஆ. அம்பல்

இ. வெங்கழி

ஈ செம்மல்

5. தென்னன் மகள் - என்பதன் இலக்கணக் குறிப்பு.

அ.விளித்தொடர்

ஆ.வேற்றுமைத் தொடர்

இ வேற்றுமைத்தொகை

ஈ. உறவுப்பெயர்

6. யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டது

அ. மரபுக் கவிதை

ஆ. வசன கவிதை

இ.தளை

ஈ அடி

7 நாகூர் ரூமியின் படைப்புகளில் மாறுபட்ட படைப்பு

அ.நதியின் கால்கள்

ஆ.ஏழாவது சுவை

இ கப்பலுக்குப் போன மச்சான்

ஈ. சொல்லாத சொல்

8. கொடுஞ்செலவு என்பது

அ. அதிகமாகச் செலவு செய்தல்

ஆ. விரைவாகச் செல்லுதல்

இ வழிப்பறி

ஈ. வீண்செலவு

9. மாஅல் , மூதூர் என்பனவற்றின் இலக்கணக்குறிப்பு முறையே

அ. உரிச்சொற்றொடர். பண்புத்தொகை

ஆ பண்புத்தொகை, இன்னிசையாபெடை

இ. இன்னிசையளபெடை பண்புத்தொகை

ஈ செய்யுளிசையளபெடை பண்புத்தொகை

10.ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட நூல்

அ. திருக்குறள்

ஆ.நூறாசிரியம்

இ. முல்லைப்பாட்டு

ஈ நாலடியார்

11 சுதேசமித்திரன்

அ. விடுதலை வீரர்

ஆ இரயில் வண்டி

இ இதழ்

ஈ ஊர்

12.ஒழுக்கம் என்பது

அ. வினையாலணையும் பெயர்

ஆ.வினைப் பகுபதம்

இ. பண்புப்பெயர்

ஈ தொழிற்பெயர்

13. தொகாநிலைத் தொடர் ------வகைப்படும்

அ.6

ஆ.9

8

ஈ. 7

14. தீ தீ என்பது------

அ. அடுக்குத்தொடர்

ஆ. இரட்டைக்கிளவி

இ. பன்மொழித்தொடர்

ஈ அன்மொழித்தொகை

15. இடைச்சொல் தொடரைக் கண்டறிக.

அ. மற்றொன்று

ஆ. பள்ளிக்குச் சென்றான்

இ. வா வா

ஈ. கேட்ட பாடல்

16. குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்.

. திரு. பிரகாசம்

ஆ. மார்ஷல் நேசமணி

இ. தனிநாயகம் அடிகள்

ஈ ந. முத்துசாமி

17. ம.பொ.சிவஞானம் கேள்விஞானம் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்

அ.சரபையர்

ஆ. திருப்பாதிரிப்புலியூர் ஞானியரடிகள்

இ. ம.பொ.சி.யின் அன்னையார்

ஈ. ம.பொ.சி.யின் தந்தையார்

18 சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்குக் கொடுத்த அமைப்பு

.சர்தார் கே.எம். பணிக்கர் தலைமையிலான மொழிவாரி ஆணையம்

ஆ.நீதிபதி வாஞ்சி தலைமையிலான ஒரு நபர் ஆணையம்

இ. பசல் அலி ஆணையம்

. படாஸ்கர் ஆணையம்

19. ம.பொ.சி. அவர்களின் இயற்பெயரைச் சிவஞானி என்று மாற்றியவர்

.திருப்பாதிரிப்புலியூர் ஞானியரடிகள்

ஆ. சரபையர்

இ.ம.பொ.சி.யின் ஆசிரியர்

ஈ மங்கலங்கிழார்

20. மேன்மை தரும் அறம் என்பது

அ கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

ஆ. மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கம்

இ. புகழ் கருதி அறம் செய்வது

ஈ பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

21 அறநெறிக் காலம் என்பது

.சங்க காலம்

ஆ. சங்க காலத்திற்குப் பிந்தைய காலம்

இ. பக்தி இலக்கிய காலம்

ஈ. தற்காலம்

22 தப்பாட்டத்தைப் பதிவு செய்துள்ள இலக்கியம்

.திருப்புகழ்

ஆ. புறநானூறு

இ. திருக்குறள்

ஈ சிலப்பதிகாரம்

23. கரகாட்டத்தில் எத்தனை பேர் ஆடவேண்டும் என்ற வரையறை உள்ளது?

அ.இரண்டு

ஆ. நான்கு

இ. ஆறு

ஈ. இத்தனை பேர்தான் என்ற வரையறை இல்லை

24 .நீரற வறியாக் கரகத்து' என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

அ.புறநானூறு

ஆ. ஐங்குறுநூறு

இ.நற்றிணை

ஈ பதிற்றுப்பத்து

25. சிலப்பதிகாரம் குறிப்பிடும்--------ஆடல் வகை சுரகாட்டத்திற்கு அடிப்படை ஆகும்

அ அல்லியம்

ஆ.கடையம்

இ.குடக்கூத்து

ஈ. பாவை

26. சரியான அரை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ. உழவு, மண் எர். மாடு

ஆ. மண் மாடு. எர். உழவு

இ. உழவு.எர். மண் மாடு

ஈ எர். உழவு, மாடு மண்

27 சிலம்புச் செல்வர் யார்?

அ.திரு.வி.க

ஆ.ம.பொ.சி

இ.தெ.பொ.மீ

ஈ குபரா

28. பொற்காலம், கற்காலம் - எவ்வகைப் புணர்ச்சி.

அ.தோன்றல்

ஆ.திரிதல்

இ.கெடுதல்

.இயல்பு

29. 'எல்' என்பதன் பொருள்

அ. எட்டு

ஆ. எண்ணெய் விதை .

இ.ஞாயிறு

ஈ.எழினி

30. 'கடுமண் சிலைகள் என்ற குறும்படத்துடன் தொடர்புடையவர்

அ.ஜெயகாந்தன்

ஆ.தி. ஜானகிராமன்

இ. சா. கந்தசாமி

ஈ. அசோகமித்திரன்:

31. இரு கை ஊன்றி ஒரு காலின் மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலை

நிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும் பருவம்

.வருகை

ஆ.காப்பு

.தால்

.செங்கீரை

32 பிள்ளைத்தமிழ் நூலில் ------- பாடல்கள் பாடப்பெறும்

அ.10

ஆ.110

இ.70

ஈ.100

33. மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும். அப்போது எவ்வகை இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது?

அ.உருமி

ஆ. தபேலா

இ. தேவதுந்துபி

ஈ மேளம்

34, "ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ? வேழ் நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ கம்பராமாயணத்தின் இவ்வடிகள் இடம்பெறும் காண்டம்

அ.பால காண்டம்

ஆ. யுத்த காண்டம்

இ. கிட்கிந்தா காண்டம்

ஈ.அயோத்தியா காண்டம்

35. பொருத்தமான விடையைத் தேர்க..

(1). வண்மையில்லை  - 1) பொய்யுரையிலாமையால்

(2) வெண்மையில்லை -  2) நேர்செறுநரின்மையால்

(3) உண்மையில்லை.  - 3) பல்கேள்வி மேவலால்

(4). திண்மையில்லை – 4) வறுமையின்மையால்

அ.1  2  3  4  

ஆ.4  3  2  1

இ. 4  3  1  2

ஈ. 3   4  2  1

36. “நாடகக்  கலையை  மீட்டெடுப்பதே  தமது குறிக்கோள்" என்றவர்

அ.குமாரசாமி.

ஆ.பெரியாாமி

இ.பெ.இராமசாமி

ஈ.ந.முத்துசாமி

37. பரஞ்சோதி முனிவரோடு தொடர்பில்லாதது

அ. வேதாரண்யப் புராணம்

ஆ. மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி

இ. திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா

.திருவிளையாடற் கதைகள்

38. மன்னன் இடைக்காடனாரைப் பொருட்படுத்தாமையால் இறைவன் எங்குச்

சென்று தங்கினார்?

அ. கடம்ப வனம்

ஆ. வடதிரு ஆலவாயில்

இ. மதுரை

. செண்பக வனம்

39. 'நண்பா எழுது' என்பது தொடர்

அ. எழுவாய்த்தொடர்

ஆ. விளித்தொடர்

இ. பெயரெச்சத்தொடர்

ஈ. வினையெச்சத்தொடர்

40. உனதருளே பார்ப்பன் அடியேனே' - யார், யாரிடம் கூறியது?

அ.குலசேகராழ்வாரிடம் இறைவன்

ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார்

இ. மருத்துவரிடம் நோயாளி

ஈ. நோயாளி மருத்துவரிடம்

41. நீ, நீர் நீவிர் என்பன

அ. தன்மை வினைகள்

ஆ.தன்மைப் பெயர்கள்

இ. முன்னிலைப் பெயர்கள்

ஈ. முன்னிலை வினைகள்

42 நாளை உண்டேன்" என்பது

அ. கால வழுவமைதி

ஆ. கால வழு

இ. இட வழு

ஈ. பால் வழு

43. வழு -------வகைப்படும்

அ.7

ஆ.5

இ.6

ஈ.8

44. "இந்த மாறன் சொன்னதைச் செய்வான்" என்று கூறுவது

அ.திணை வழுவமைதி

ஆ. பால் வழுவமைதி

இ. திணை வழு

ஈ.இட வழுவமைதி

45. மொழி பெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் எந்த இயலில் குறிப்பிடுகிறார்?

அ. உவம இயல்

ஆ. செய்யுளியல்

இ. தொடரியல்

ஈ. மரபியல்

46. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் எனக் கூறும்

செப்பேடு

அ.உத்திரமேரூர்ச் செப்பேடு

ஆ.சின்னமனூர்ச் செப்பேடு

இஅரிக்கமேடு செப்பேடு

ஈ. கீழடிச் செப்பேடு

47.“உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும்” எனக் கூறியவர்

அ மணவை முஸ்தபா

ஆ. மு.கு.ஜகந்நாதராஜா

இ. பாரதியார்

ஈ.தனிநாயகம் அடிகள்

48. வடமொழி தழுவல் அற்ற நூல் எது?

ஆ. பெருங்கதை இ. வில்லி பாரதம்

ஆ. சீவக சிந்தாமணி ஈ.வால்மீகி இராமாயணம்

49 அருந்துணை என்பதைப் பிரித்தால்------என வரும்.

அ. அரு + துணை

ஆ. அருமை + துணை

இ. அருமை + இணை

ஈ. அரு + இணை

50. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

அ. முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்

ஆ.குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ.குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

ஈ. மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

51. தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி

அ. ஜால்ரா

ஆ. பறை

இ.உறுமி

ஈ. நாகசுரம்

52. "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" என்று மெச்சிக் கொள்ளலாம்.

அ. பெற்ற பிள்ளையை

ஆ. மெய்க்காப்பாளரை

இ. மெய்நிகர் உதவியாளரை

ஈ. தனி உதவியாளரை

53. பாரத ஸ்டேட் வங்கி உருவாக்கியுள்ள 'இலா' என்னும் மென்பொருள் ஒரு விநாடிக்கு வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.

அ.பத்தாயிரம்

ஆ. பதினைந்தாயிரம்

இ. ஓர் இலட்சம்

ஈ. இருபதாயிரம்

54. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய பெப்பர் ரோபோக்கள்---- வகைகளில்

கிடைக்கிறது.

அ. வீட்டுக்கு, வங்கிக்கு என இரண்டு

ஆ. வீட்டுக்கு, வணிகத்துக்கு என இரண்டு

இ. வீட்டுக்கு, வங்கிக்கு, படிப்புக்கு என மூன்று

ஈ. வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என மூன்று

55. சீன நாட்டில் என்னும் துறைமுக நகரில் தமிழ்க் கல்வெட்டு ஒன்று உள்ளது.

அ.காண்டன்

ஆ.சூவன்சௌ

இ.நான்ஜிங்

ஈ.ஜியாங்சு

56. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானதே என்பதற்கான சான்றுகளை அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கினார்.

அ.இயற்பியல்

ஆ.வேதியியல்

இ. உயிரி இயற்பியல்

ஈ.கணிதவியல்

57 ஸ்டீபன் ஹாக்கிங் என்னும் தொலைக்காட்சித் தொடரில் பங்கேற்றார்

அ. வருங்காலத் தலைமுறை

ஆ. புதிய தலைமுறை

இ. அடுத்த தலைமுறை

ஈ. எதிர்காலத் தலைமுறை

58. ஸ்டீபன் ஹாக்கிங்-----ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் "தொடக்க விழா நாயகர்” என்ற சிறப்பைப் பெற்றார்.

அ.2000

ஆ. 2010

இ. 2012

ஈ.2006

59. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு

அ.குறிஞ்சி - செவ்வழிப்பண்

ஆ. முல்லை – செவ்வழிப்பண்

 இ.பாலை - செவ்வழிப்பண்

ஈ.நெய்கல் - செவ்வழிப்பண்

60. பொருத்தமான விடையைத் தேர்க

1.நெய்தல்   - (1) கொற்றவை

2.பாலை – (2) முருகன்

3.குறிஞ்சி (3)வருணன்

4.முல்லை - (4) இந்திரன்

                      - (5)திருமால்

அ. 3  2  1  5

ஆ. 3  1  2  5

இ.  2  1  5  3

ஈ.  5   4  1  3

61 குளிர்காலம் பன்பது

அ.ஆவணி புரட்டாசி

ஆ. ஐப்பசி, கார்த்திகை

இ. மார்கழி, தை

.மாசி, பங்குனி

62 அறநெறிக்கான அறங்கள்

அ.சமயம்

ஆ. வரலாறு

இ.பண்பாடு

ஈ..இலக்கியம்

63. பதிற்றுப்பத்து-----அரசர்களின் பதிவாகவே உள்ளது.

அ.பாண்டிய

ஆ.சோழ

இ.சேர

ஈ.பல்லவ

64. -------இலக்கியங்கள் கொடை இலக்கியங்கம் ஆகும். கப்பியம்

அ.பதினென் கீழ்க்கணக்கு

ஆ,காப்பியம்

இ.சிற்றிலக்கியம்

ஈ.ஆற்றுப்படை

65 செல்வத்துப் பயனே ஈதல்' என்றவர்.

.நக்கீரர்

நல்லந்துவனார்

இ.பெருங்கடுங்கோ

ஈ. பதுமனார்

66 இவன் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும் இவ்வடிகளில் கற்காயம் என்பது

.தலைவிதி

ஆ. பழைய காலம்

இ.ஏழ்மை

ஈ.தலையில் கல் மப்பது

67. "எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும். விழை கண்ணீரும் பாடலிலே தலந்திருக்கும்* - இவ்வடி யாணக் குறிக்கிறது?

அ.கண்ணதாசன்

ஆ. சுரதா

இ.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

.மருதகாசி

68 ஒரு மனிதன். ஒரு வீடு. ஓர் உலகம் வகையைச் சார்ந்தது.

அ.சிறுகதை

ஆ.கவிதை

இ.குறும் புதினம்

ஈ.புதினம்

69.உன்னைப்போல் ஒருவன் என்ற திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற

விருது

அ.ஞானபீட விருது

ஆ.குடியரசுத் தலைவர் விருது

இ.பாரதி விருது

ஈ.சாகித்திய அகாதமி விருது.

70 .வாழ்க்கையின் உரைகல்' என்று ஜெயகாந்தன் குறிப்பிடுவது

அ.வரலாறு

ஆ.இலக்கியம்.

.தொன்மச் சான்றுகள்

அறங்கள்

71. பொருந்தாததைக் கண்டறிக.

அ. கனிச்சாறு

ஆ. மகபுகுவஞ்சி

இ. எழில் விருத்தம்

ஈ பள்ளிப் பறவைகள்

72. சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்க,

அ. கவை, கிளை, சினை, இணுக்கு

ஆ. கொம்பு, குச்சு, போத்து, இணுக்கு

இ.கவை. கொம்பு. சினை, கிளை

.கிளை, சினை, குச்சு, போத்து

73, சரியானவற்றைத் தேர்ந்தெடு

கூற்று 1 - சுரையின் மேற்பகுதி வன்மையாக இருப்பதால் ஓடு எனப்படுகிறது. கூற்று 2 சுரையின் ஓடு குடுக்கை எனவும் அழைக்கப்படும்.

அ. கூற்று 1 சரி, 2 தவறு

ஆ.கூற்று 1,2 சரி

இ. கூற்று 1 தவறு, 2 சரி

ஈ கூற்று 1,2 தவறு

74. கீழுள்ளவற்றுள் கூட்டுநிலைப் பெயரெச்சம் எது?

அ. வருக வருக

ஆ. மற்றொன்று

இ. இனியன் கவிஞர்

ஈ. சொல்லத்தக்க

75முதல் தரமான, இரண்டாம் தரமான, மூன்றாம் தரமான அறங்கள் முறையே

அ.தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம், சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம். இயல்பாக அறியும் அறம்

ஆ.சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம். இயல்பாக அறியும் அறம்.தாம்

சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம்

இ. இயல்பா அறியும் அறம், தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம், சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம்

ஈ. இயல்பாக அறியும் அறம், சிந்திந்து அறிந்து கொள்ளும் அறம். தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம்

76. கண்ணதாசன் தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில்

மக்களிடையே கொண்டு சேர்த்தார்.

அ. அறவியல்

ஆ. வாழ்வியல்

இ. நிலையியல்

ஈ.மெய்யியல்

77 ஆசிரியப்பாவின் சிறப்பு

.ஓங்காரத்தில் முடிவது

ஆ. ஐகாரத்தில் முடிவது

இ. ஏகாரத்தில் முடிவது

ஈ. ஆகாரத்தில் முடிவது

78. குடியரசுத் தலைவர் விருது. சாகித்திய அகாதமி விருது. சோவியத் நாட்டு

விருது. ஞனட்ட விருது. தாமரைத்திரு விருது போன்ற விருதுகளால் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்த்த படைப்பாளி

அ.வைரமுத்து

ஆ. ஜெயகாந்தன்

. அகிலன்

ஈ. தி. ஜானகிராமன்

79.பாசவர்,பரதவர்,உமணர்,ஓசுநர் சொல்லும் பொருளும் முறையே

அ. மீன் விற்பவர், உப்பு விற்பவர். எண்ணெய் விற்பவர்,வெற்றிலை விற்பவர். மீன் விற்பவர்.

ஆ. வெற்றிலை விற்பவர்,மீன் விற்பவர், உப்பு விற்பவர் , எண்ணெய் விற்பவர்

இ. உப்பு விற்பவர் எண்ணெய் விற்பவர் வெற்றிலை விற்பவர், மீன் விற்பவர்.

ஈ வெற்றிலை விற்பவர், மீன் விற்பவர். எண்ணெய் விற்பவர். உப்பு விற்பவர்

80. எயில் திணைகள் என்பன

அ. வெட்சி, கரந்தை

பாடாண், பொதுவியல்

இ.நொச்சி, உழிஞை

ஈ கைக்கிளை, பெருந்திணை

81, கவிதை வாழ்ககையின் திறனாய்வு” என்று கூறிய திறனாய்வாளர்

அ.கோல்ரிட்ஜ்

ஆ. ஜான் கீட்ஸ்

இ.ஆர்னால்டு

ஈ.தா.ஏ ஞானமூர்த்தி

82 "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்" என்னும் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர்

அ. ஏணிச்சேரி முடமோசியார்

ஆ. மோசிகீரனார் .

இ. பொன்முடியார்

ஈ. ஆவூர் மூலங்கிழார்

83. உதவி செய்தலை "உதவியாண்மை" என்று குறிப்பிடும் புலவர்

அ.கபிலர்

ஆ. ஈழத்துப் பூதன் தேவனார்

இ.நாசெள்ளையார்

ஈ..பெருந்தலைச் சாத்தனார்

84, 'மெதுவாக நல்ல லயத்துடன்

     நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு

இவ்வடிகளில் பயின்று வரும் தொகைச்சொல் வகை

அ. வேற்றுமைத் தொகை

ஆ.வினைத்தொகை

இ. பண்புத்தொகை

ஈ.உவமைத் தொகை

85. விருந்தினர் வந்த தேர் ----- பூட்டப்பட்டிருந்ததாக பொருநராற்றுப்படை

 கூறுகிறது.

அ. மூன்று காளைகள்

ஆ. நான்கு குதிரைகள்

இ. நான்கு காளைகள்

ஈ.மூன்று குதிரைகள்

86. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக அதிவீரராம பாண்டியர் கூறுவது

முறைகள்

அ.ஒன்பது

ஆ. ஏழு

இ எட்டு

ஈ.பத்து

87 .வருக - வாவரு) + க என்னும் பகுபத உறுப்பிலக்கணத்தில் 'வரு என்பது

அ.குறுக்கம்

ஆ.பகுதி

.சாரியை

ஈ.விகாரம்

ஈபத்து

88 .பொருத்தமான விடையைத் தேர்க.

1. தாழா துஞற்று பவர் – (1)  தேமா கருவிளம் காசு

2. கோடிஉண் டாயினும் இல் – (2) கூவிளம் தேமா பிறப்பு:

3. நச்சு மரம்பழுத் தற்று – (3) கூவிளம் கூவிளம் நாள்

4.கோலொடு நின்றான் இரவு – (4) தேமா புளிமா மலர்

அ. 4  3   1  2

ஆ.. 4  3  2  1

இ. 3   4   1  2

ஈ.  2   1   3   4

89. உரை (உறை) ஊற்றி ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால் தந்தை தந்த

தாய்ப்பால்

அ.அறிவுப்பால்

ஆ.தமிழ்ப்பால்

இ. முப்பால்

ஈ. ஐம்பால்

90. இயல்பான மொழி நடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளின் பெயர்

அ.வேர்டுஸ்மித்

ஆ.லிங்கவேர்டு

இ.எழுந்தாணி

ஈ. இச்சகம்

91. சில நிமிடங்களில் இரண்டு கோடி தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவுக் கணினி

அ.வாட்சன்

.அட்சன்

இ.காட்சன்

ஈ.லாட்சன்

92. கீழுள்ள கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்ந்தெடு

1. செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு.

2. செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையாகும்.

3. செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும்

முடியும்.

4. மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக் கூடியது செயற்கை நுண்ணறிவு.

அ.கூற்று 1

ஆ. கூற்று 2

.கூற்று 3

 ஈ. கூற்று 4

 93, ராகுல் சாங்கிருதியாயன் 1942 இல் ஹஜீராபாத் மந்திய சிறையில்

இருந்தபோது "வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை எழுதினார்.

இதை மொழிபெயர்த்தவர்களை வரிசைப்படுத்துக.

.கண முத்தையா, டாக்டர் என்.ஸ்ரீதர், முத்து மீனாட்சி. யூமா வாசுகி

ஆ. டாக்டர் என்.ஸ்ரீதர், கண முத்தையா. முத்து மீனாட்சி. யூமா வாசுகி

இ. முத்து மீனாட்சி. யூமா வாசுகி. டாக்டர் என்.ஸ்ரீதர், கண முத்தையா

ஈ. கண முத்தையா. டாக்டர் என்.ஸ்ரீதர். யூமா வாசுகி. முத்து மீனாட்சி

94.கூற்று :ம.பொ. சிவஞானம் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பினார்

காரணம் : தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப்

பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால் அது

சிலப்பதிகாரம் என்று கூறினார்.

அ.கூற்று சரி. காரணம் தவறு

ஆ. இரண்டும் தவறு

இ. கூற்று தவறு, காரணம் சரி

ஈ. இரண்டும் சரி

95 ம.பொ சிவஞானம் அவர்கள் சட்ட மேலவை தலைவராகப் பதவி வகித்த

காலம்

அ.1972 முதல் 1978

ஆ.1962 முதல் 1978

இ.1982 முதல் 1988

ஈ.1978 முதல் 1980

96. சரியான வாய்பாட்டைத் தேர்ந்தெடு 

    சுற்றமாச் சுற்றும் உலகு

.புளிமா தேமா காசு

ஆ.கூவிளம் தேமா பிறப்பு

இ. கூவிளம் தேமா காசு

ஈ. கருவிளம் தேமா பிறப்பு

97 இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாக கொண்ட சாகித்திய

அகாதமி விருது பெற்ற நூல்

அ. விசாரணைக் கமிஷன்

. வேருக்கு நீர்

இ.கோபல்லபுரத்து மக்கள்

ஈ. சில நேரங்களில் சில மனிதர்கள்

98. ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து

     அரசு பட அமர் உழக்கி” - என்னும் அடிகள் இடம்பெறும் நூல்

அ.பட்டினப்பாலை

ஆ. மதுரைக்காஞ்சி

இ. பதிற்றுப்பத்து

ஈ. புறநானூறு

99. "தந்தையில்லோர் தந்தையாகியுரு மைந்தரில்லொரு

     தாயரில்லோர் தாயராகியும் மன்னுயிர்கட் குயிராகியும்    விளங்குபவன் யார்?

அ.முதலாம் இராசராசன்

ஆ. இரண்டாம் இராசராசன்

இ. மூன்றாம் குலோத்துங்கள்

ஈ. மகேந்திரவர்மன்

100. பயில்தொழில், வண்ணமும் கண்ணமும்  இலக்கணக் குறிப்பு முறையே

அ. எண்ணும்மை, வினைத்தொகை

ஆ. உவமைத்தொகை, எண்னும்மை

இ. வினைத்தொகை, எண்ணும்மை

ஈ. உம்மைத்தொகை. எண்ணும்மை

மேற்கண்ட 100 வினாக்கள் அடங்கிய வினாடி வினா இங்கு இணைக்கப்படுள்ளது. அதில் பங்கேற்று 85 % மதிப்பெண் பெறுவோருக்கு பாராட்டுச் சான்றிதழ் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் படும் .

வினாடி வினாவில் பங்கேற்பதற்கான இணைப்பு 👇

விடைக்குறிப்புகள்👇👇

 


 

 

 




 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை