8 TH STD TAMIL UNIT 9 QUESTION & ANSWER


8.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்

இயல் - 9 

உயிர்க்குணங்கள்  (பக்க எண்: 194 மதிப்பீடு)

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அடுத்தவர் வாழ்வைக் கண்டு _____ கொள்ளக்கூடாது.                                                                                  ) உவகை  ஆ) நிறை  ) அழுக்காறு  ஈ) இன்பம்                                                                                            2. நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று _____ .                                                                                                      ) பொச்சாப்பு  ) துணிவு  ) மானம்  ) எளிமை                                                                                             3. ‘இன்பதுன்பம்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.                                                   இன்பம்துன்பு)இன்பம்+துன்பம் இ)இன்ப+அன்பம்ஈ)இன்பஅன்பு                                                   4. குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.                                       ) குணங்கள்எல்லாம் ஆ) குணமெல்லாம் இ) குணங்களில்லாம் ) குணங்களெல்லாம்

பொருத்துக

1. நிறை - பொறுமை

2. பொறை - விருப்பம்

3. மதம் - மேன்மை

4. மையல் – கொள்கை

விடை: 1 - இ , 2 -அ , 3 - ஈ, 4 - ஆ

குறுவினா

1. மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவைநூல் கூறுவது யாது?

விடை: அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை, பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை

2. மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கன்னிப்பாவைநூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?

விடை: அறிவு, கருணை,அன்பு, இரக்கம், நாணம், மேன்மை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல்

சிறுவினா

மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவைநூல் கூறுவன யாவை?

விடை: அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை, பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை

சிந்தனைவினா

மனிதர்கள் வளர்க்கவேண்டிய பண்புகளாகவும் விலக்கவேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?

விடை:

வளர்க்க வேண்டிய பண்புகள்: அறிவு, கருணை,அன்பு, இரக்கம், நாணம், மேன்மை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல்

விலக்க வேண்டிய பண்புகள்: வெறுப்பு , பொறாமை, சினம், அச்சம்,சோம்பல்

மெய்ஞ்ஞான ஒளி  (பக்க எண்: 171 மதிப்பீடு)

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உன்னுடன் நீயே_____கொள்.

) சேர்ந்து  ) பகை  ) கைகுலுக்கிக்  ) நட்பு

2. கவலைகள்_____அல்ல.

) சுமைகள்  ) சுவைகள்   ) துன்பங்கள்  ) கைக்குழந்தைகள்

3. ‘விழித்தெழும்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

) விழி + எழும்   ) விழித்து + எழும்    ) விழி + தெழும்   ) விழித்+ தெழும்

4. ‘போவதில்லைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

) போவது + இல்லை  ) போ+ இல்லை   ) போவது + தில்லை   ) போவது + தில்லை

5. ‘படுக்கையாகிறதுஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

) படுக்கை+ யாகிறது  ) படுக்கையா+ ஆகிறது  ) படுக்கையா+ கிறது  ) படுக்கை+ ஆகிறது

6. தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

) தூக்கிகொண்டு ஆ) தூக்குக்கொண்டு  ) தூக்கிக்கொண்டு  ) தூக்குகொண்டு

7. விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

) விழியெழும்  ) விழித்தெழும்   ) விழித்தழும்  ) விழித்துஎழும்

குறுவினா

1. கவலைகளைக் கவிஞர் எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

விடை: கவலைகளைக் கவிஞர் கைக்குழந்தையாக உருவகப்படுத்துகிறார்

2. தோல்வி எப்போது தூண்டு கோலாகும்?

விடை: நெய்யாகவும் , திரியாகவும் நாம் மாறும்போது தோல்வி தூண்டுகோலாகும்

சிறுவினா

பூமி எப்போது பாதையாகும்?

விடை: நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்ப்படுக்கையாகும். நீ கிளர்ந்து எழுந்தால் அதுவேஉனக்குப் பாதையாகும்.

சிந்தனைவினா

வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவைஎன்று நீங்கள் கருதுகிறீர்கள்?

விடை: விடாமுயற்சி, சோர்வின்மை , ஊக்கம், பரந்த அறிவு மற்றும் மனப்ப்பான்மை முதலியன

சட்டமேதை அம்பேத்கர்  (பக்க எண்: 202 மதிப்பீடு)

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இந்தியாவின் முதல் சட்டஅமைச்சர் ___________.

) இராதாகிருட்டிணன் ) அம்பேத்கர்  ) நௌரோஜி ஈ) ஜவஹர்லால் நேரு

2. பூனாஒப்பந்தம் __________ மாற்றஏற்படுத்தப்பட்டது.

) சொத்துரிமையை ஆ) பேச்சுரிமையை  ) எழுத்துரிமையை  ) இரட்டைவாக்குரிமையை

3. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ________.

) சமாஜ் சமாத சங்கம்) சமாதசமாஜ பேரவை இ) தீண்டாமை ஒழிப்புப் பேரவை ஈ) மக்கள் நல இயக்கம்

4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது.

) பத்மஸ்ரீ    ) பாரதரத்னா  ) பத்மவிபூசண்  ) பத்மபூசன்

கோடிட்டஇடத்தை நிரப்புக.

1. புத்தசமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் புத்தரும் அவரின் தம்மமும்

2. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் சுதந்திர தொழிலாளர் கட்சி

3. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் இலண்டன் சென்றார்.

குறுவினா

1. அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக்கொண்டார்?

விடை: மகாதேவ் அம்பேத்கர் என்றஆசிரியர், இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

2. தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கொண்டபணிகள் இரண்டினைஎழுதுக.

விடை:

ü  ஒடுக்கப்பட்டபாரதம் என்னும் இதழை1927 ஆம் ஆண்டு துவங்கினார்.

ü  சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் இவர் சமாஜ் சமாதசங்கம் என்னும் அமைப்பைஉருவாக்கினார்.

3. வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?

விடை: ஒடுக்கப்பட்டோருக்குத்தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்

சிறுவினா

1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?

விடை:

ü  ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்தஅரசில் அம்பேத்கர் சட்டஅமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ü  1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29 ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதஅம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்டஅரசியலமைப்புச் சட்டவரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.

2. அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி குறித்து எழுதுக.

விடை:  ஏழைவிவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கத்தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்; சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித்தேர்தலில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றிபெற்றனர்.

நெடுவினா

பூனாஒப்பந்தம் பற்றி எழுதுக.

விடை:

v  ஒடுக்கப்பட்டோருக்குத்தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

v  இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத்தேர்ந்தெடுக்கஒரு வாக்கும் ஒடுக்கப்பட்டசமூக வேட்பாளரைத்தேர்ந்தெடுக்கஒரு வாக்கும் அளிக்கும் இரட்டைவாக்குரிமைவழங்கப்பட்டது. ஆனால், இதைஏற்கமறுத்தகாந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

v  இதன் விளைவாக 1931 ஆம் ஆண்டு செப்டம்பர்த்திங்கள் இருபத்து நான்காம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத்தனி வாக்குரிமைஎன்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்தஒப்பந்தமேபூனாஒப்பந்தம் எனப்பட்டது.

சிந்தனைவினா

பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

விடை:

ü  மதம், ஜாதி ஆகியவற்றை நினைக்காமல் அனைவரிடமும் சமத்துவமாக பழக வேண்டும்.

ü  நான் இந்த மதத்திற்கு உரியவன், இன்ன சாதிக்குரியவன் என்ற எண்ணத்தை முற்றிலும் தவிர்த்து, நான் ஒரு இந்தியன் என்றும் நினைப்பை உருவாக்க வேண்டும். சமத்துவம், ஒருமைப்பாட்டு உணர்வு சகிப்புத்தன்மை ஆகியவை ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

பால் மனம்  (பக்க எண்: 206 மதிப்பீடு) 

முன்னுரை:

    ''பால் மனம்' எனும் இக்கதை அ. வெண்ணிலா என்பவர் தொகுத்த 'மீதமிருக்கும் சொற்கள்` என்னும் நூலில் இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணாவின் பண்புகளை இனி காண்போம்.

கிருஷ்ணாவின் செயல்கள்:

   ராமுவின் அண்ணன் மகள் கிருஷ்ணா. அவள் அனைவரின் மீதும் அன்பும் இரக்கமும் உள்ளவள். ஒருநாள் தெரு நாயைப் பார்த்து பரிதாபப்படுகின்றாள்.அம்மா அதைத் தொடக்கூடாது, அப்பா திட்டுவார்கள் என்றாள். அப்பா சொன்னால் தொடலாமா? என்றாள் கிருஷ்ணா. தெருவில் கீரை கொண்டு வரும் பாட்டியைக் கண்டதும், அவளைத் தொடப் போகிறாள், அவள் உடம்பு சரியில்லாததால் அவளைத் தொடக்கூடாது என்றாள் அம்மா, சித்தப்பா, அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போது நீங்கள் மட்டும் தொடலாமா? என்றாள். கிருஷ்ணா அடுத்து கைவண்டி இழுத்து வரும் ஒருவரைப் பார்த்து, அவரிடம் செருப்பு இல்லை உங்கள் செருப்பைக் கொடுங்கள் சித்தப்பா என்றாள். நன் தம்பிக்காக வைத்திருந்த பாலை எடுத்து கிருஷ்ணா ஆட்டுக்குட்டிக்குப் புகட்டுகிறாள். அம்மா என்ன மகள்? இப்படி இருக்கிறாளே! என்று புலம்புகிறார். ராமு, கிருஷ்ணாவின் மனிதநேயத்தைக் கண்டு வியக்கிறார்.

மனமாற்றம்:

    ராமு படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று, ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்புகிறார். இப்போது கிருஷ்ணாவிற்கு எட்டு வயது. அண்ணன் அண்ணியால் கிருஷ்ணா முற்றிலுமாக மாறி விட்டாள். சித்தப்பா, தம்பி தெரு நாய்க்குப் பால் சாதத்தைப் போடுகிறான் பாருங்க, டாமிக்கு தான் போடனும் என்கிறது, பிறகு ஆட்டுக்குட்டி மீது கல்லெடுத்து வீசுகிறாள். சாலை வேலை செய்யும் கூலியாள் தண்ணீர் கேட்டவுடன் கொடுக்க மறுக்கிறாள். கிருஷ்ணாவின் மன மாற்றத்தை ராமு உணர்கிறார்.

ஏமாற்றம்:       

   குழந்தைகளின் மனதை அவர்கள் வளர வளர இந்தச் சமுதாயமும் அவர்களின் பெற்றோரும் மாற்றுகின்றனர். இரக்க குணம் இல்லாமல் அவர்களை வளர்க்கும் செயல் ராமுவுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. நான் பார்த்த இரக்கமான கிருஷ்ணா இப்போது முற்றிலும் மாறி விட்டாள் என்று நொந்து கொண்டார்.

முடிவுரை:                                                             

   கடவுளின் உறுப்பினராக குழந்தை பூமியில் பிறக்கிறது. ஆனால் மனித நேயம் இல்லாத மனிதனின் உறுப்பினனாக உலகத்தை விட்டு நீங்குகிறது.

அணி இலக்கணம்  (பக்க எண்: 211 மதிப்பீடு)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறிதுமொழிதல் அணியில் _____ மட்டும் இடம்பெறும்.

) உவமை  ) உவமேயம்  ) தொடை ஈ) சந்தம்

2. இரண்டு பொருள்களுக்கு இடையேஉள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது _____ அணி.

) ஒற்றுமை ) வேற்றுமை) சிலேடை ஈ) இரட்டுறமொழிதல்

3. ஒரேசெய்யுளை இருபொருள்படும்படி பாடுவது __________ அணி.

) பிறிது மொழிதல் ) இரட்டுறமொழிதல்  ) இயல்பு நவிற்சி  ) உயர்வு நவிற்சி

4. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் _____________ அணி.

) பிறிதுமொழிதல்  ) வேற்றுமை   ) உவமை  ) சிலேடை

சிறுவினா

1. பிறிதுமொழிதல் அணியைவிளக்கி எடுத்துக்காட்டுத்தருக.

விடை:

இலக்கணம்:

      உவமையை மட்டும் கூறி, பொருளைப் பெற வைப்பது பிறிதுமொழிதல் அணி ஆகும்.

சான்று:

   கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

    நாவாயும் ஓடா நிலத்து"

விளக்கம்:

      தேர் கடலில் ஓடாது. கப்பல் நிலத்தில் ஓடாது என்ற உவமையை மட்டும் கூறி, எதுவும் தமக்குரிய இடத்தில் இருப்பதே நல்லது என்ற பொருளைப் பெற வைத்ததால், இது பிறிதுமொழிதல் அணி ஆயிற்று

2. வேற்றுமைஅணி என்றால் என்ன?

விடை: இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை

வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி எனப்படும்

 

3. இரட்டுற மொழிதல் அணி எவ்வாறு பொருள் தரும்?

விடை: ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் ஆகும்.

   சான்று:  தாமரை

 

    விளக்கம்: தாமரை ஒரு வகை மலர், தாவும்மான்,

 

மொழியை ஆள்வோம்  (பக்க எண்: 212)

கோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.

1. சிறுமி ______ (தனது/தமது) கையில் மலர்களைவைத்திருந்தாள்.

2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்டமக்களின் உயர்வுக்காகத்______ ( தனது/தமது) உழைப்பைநல்கினார்.

3. உயர்ந்தோர் ________ (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.

4. இவை______ (தான்/தாம்) எனக்குப் பிடித்தநூல்கள்.

5. குழந்தைகள் ________ (தன்னால்/தம்மால்) இயன்றஉதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.

தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

     முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான். இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

விடை:

    முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினான். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே, தமது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

கட்டுரை எழுதுக. : உழைப்பேஉயர்வு.

முன்னுரை:

    ஒருவரை வாழ்வில் உயர்த்துவது அவரது உழைப்பு தான். உழைப்பு தன்னையும் தன் நாட்டையும் உயர்த்தும். உழைப்பின் சிறப்பினைக் காண்போம்.

உழைப்பின் பயன்:

    நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். இறைவனால் முடியாத காரியம் கூட உழைப்பாலும் முயற்சியாலும் செய்ய முடியும் என்கிறது திருக்குறள். உழைப்பால் உடலும் உள்ளமும் வலுப்பெறுகிறது.

உழைப்பின் சிறப்பு:

    உழைப்பே உயர்வு தரும் என்பது பழமொழி. உழைப்பால் வரும் பொருளே என்றும் நிலைத்து நிற்கும். விலங்குகளும் பறவைகளும் தமக்குத் தேவையான உணவைத் தாமே உழைத்து தேடிப் பெற்றுக் கொள்கின்றன. உழைப்பில்லாமல் வரும் செல்வத்தை விட்டுவிட்டு உண்மையான உழைப்பால் வரும் செல்வத்தை நாம் அனுபவிக்க வேண்டும்

உழைப்பால் உயர்ந்தவர்கள்:

    தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டின், ஜி.டி. நாயுடு, டாக்டர் அப்துல் கலாம் ஆகிய எண்ணற்ற அறிஞர்கள் தம்முடைய கடின உழைப்பால் வாழ்வில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

முடிவுரை:

     உழைப்பின் உயர்வினை உணர்ந்து, நாம் அனைவரும் நல்வழியில் கடின உழைப்பு செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

மொழியோடு விளையாடு

பின்வரும் வினாக்களைப் படித்து இருவினாக்களுக்கு ஒரு விடை தருக.

எ.கா:

    குழம்பும் கூட்டும் மணப்பது ஏன்? குருதி மிகுதியாய்க் கொட்டுவது ஏன்?

விடை: பெருங்காயத்தால்

1. ஆடை நெய்வது எதனாலே? அறிவைப் பெறுவது எதனாலே?

விடை: நூல்

 2. மாடுகள் வைக்கோல் தின்பது எங்கே? மன்னர்கள் பலரும் இறந்தது எங்கே?

விடை: போர்

3. கதிரவன் மறையும் நேரம் எது? கழுத்தில் அழகாய்ச் சூடுவது எது?

விடை: மாலை

4. வானில் தேய்ந்து வளர்வது எது? வாரம் நான்கு கொண்டது எது?

விடை: திங்கள்

இயல்-9 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇


 

 

 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை