9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 18-11-2024 முதல் 22-11-2024
மாதம் : நவம்பர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.புணர்ச்சி
2.திருக்குறள்
1.கற்றல் நோக்கங்கள் :
# புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்தல்.
Ø # திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெ றுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# வாழை+பழம் சேர்த்து எழுதினால் என்ன கிடைக்கும்?
4.பாடச் சுருக்கம் :
@ புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது. இரண்டுக்கு மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி – வருமொழி, நிலைமொழியாகி நிற்கும்.
5.ஆசிரியர் செயல்பாடு :
§ சொற்களின் புணர்ச்சியைத் தக்க சான்றுகளுடன் விளக்க முற்படுதல்
§ புணர்ச்சி வகைகளுக்கு உள்ள வேறுபாடுகளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்
§ திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் விளக்குதல்
§ இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
புணர்ச்சி
திருக்குறள்
7.மாணவர் செயல்பாடு:
Ø புணர்ச்சி ஆழ்ந்த மொழி அழிவுக்குத் துணைபுரியும் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
Ø திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் புரிந்துகொள்ளுதல்
Ø இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
# 9030- புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்தல்.
Ø # 9031 - திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெறுதல்.