8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 16-10-2023 முதல் 20-10-2023
மாதம் : அக்டோபர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.தொகைநிலை,தொகாநிலைத் தொடர்கள்
2.திருக்குறள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø தொகைநிலை,தொகாநிலைத் தொடர்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்
# Ø மனித வாழ்வில் திருக்குறள் கூறும் பண்பாட்டு நெறிகளைப் பின்பற்றுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# சூழ்கடல் என்ற சொல்லின் பொருள் என்ன?
4.பாடச் சுருக்கம் :
Ø தொகைநிலைத் தொடர்களின் 6 வகைகளை அறிதல்
§ வேற்றுமைத் தொகை
§ வினைத்தொகை
§ பண்புத் தொகை
§ உவமைத் தொகை
§ உம்மைத் தொகை
§ அன்மொழித்தொகை
@ தொகா நிலைத் தொடர்களில் உள்ள ஒன்பது வகைகள் அறிதல்.
Ø எழுவாய்த் தொடர் |
Ø விளித் தொடர் |
Ø வினைமுற்றுத் தொடர் |
Ø பெயரெச்சத் தொடர் |
Ø வினையெச்சத் தொடர் |
Ø வேற்றுமைத் தொடர் |
Ø இடைச்சொல் தொடர் |
Ø உரிச்சொல் தொடர் |
Ø அடுக்குத் தொடர் |
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு தொகைநிலைத் தொடர் வகைகளை கூறல்
Ø உருபு, சொல் மறைந்து வருவது தொகை நிலைத் தொடர் என உணர்த்துதல்.
Ø தொகா நிலைத் தொடர்களை சொல்லட்டைகளைப் பயன்படுத்தி தொடர் அமைத்து கூறல்.
Ø அன்றாட செயல்பாடுகளை தொடர்களாக அமைத்து தொகா நிலைத் தொடர்களை தொடர்புப்படுத்தி கூறல்
6.கருத்துரு வரைபடம்:
தொகைநிலைத்தொடர்கள்
தொகாநிலைத்தொடர்கள்
7.மாணவர் செயல்பாடு:
Ø சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்
Ø தொகை நிலையின் ஆறு உறுப்புகள் மட்டுமல்லாது உருபு பயனும் உடன் தொக்க தொகை பற்றி அறிதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø 816- மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது
பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப்
புரிந்துகொள்ளுதல்)
# Ø 801- மாணவர்கள் பல்வேறு வகையான தலைப்புகளில் பாடjஃபொருள்களின் மீது
எழுதப்பட்டவற்றைப் படித்துக் கலந்துரையாடச் செய்தல்