10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு (திருப்புதல்)
நாள் : 06-10-2023 முதல் 10-11-2023
மாதம் : நவம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இரண்டாம் இடைப்பருவத்தேர்வு திருப்புதல்
1.கற்றல் நோக்கங்கள் :
@ இரண்டாம் இடைப்பருவத் தேர்வு பாடப்பகுதிகளை (வினாவிடைகளை) மாணவர்களின் திறனுக்கேற்ப எழுதவைத்து பயிற்சி அளித்தல்.
Ø
வினாத்தாட்கள் , படிவங்கள்
5.ஆசிரியர் செயல்பாடு :
பின்வரும் வினாக்களுக்கான விடைகளை எழுதச்செய்து பயிற்சி அளித்தல்
சரியான விடையைத் தேர்ந்தெடு: 1 )சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடு
அ)உழவு, மண்,
ஏர், மாடு ஆ)மண், மாடு,
ஏர், உழவு
இ)உழவு, ஏர்,
மண், மாடு ஈ)ஏர்,உழவு,மாடு,மண்
2)”மாலவன்
குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்
”மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும்
குறிப்பது முறையே
அ)திருப்பதியும், திருத்தணியும் ஆ)திருத்தணியும், திருப்பதியும்
இ)திருப்பதியும், திருச்செந்தூரும் ஈ)திருப்பரங்குன்றமும்,
பழனியும்
3)”தன்
நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயுமாக இருந்த அரசன்” என்னும்
மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்
அ)மேம்பட்ட நிர்வாகத்
திறன் பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனிதநேயம்
கொண்டவர் ஈ)நெறியோடு நின்று காவல் காப்பவர்
4)இரு
நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போடுவதன் காரணம்------
அ) நாட்டை கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை
நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
5)தமிழினத்தை
ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா பொ சி கருதுவது---------
அ) திருக்குறள் ஆ)
புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
விரிவான விடையளி:
6)மெய்க்கீர்த்தி பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.
8) சிலப்பதிகாரம் மருவூர்ப்பாக்கம் வணிக வீதிகளை இக்கால வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக
ஓரிரு சொற்களில் விடையளி:
1. பாசவர், வாசவர், பல்நிண
விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
2. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
3.வறுமையிலும் படிப்பின்மீது
நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று
தருக.
4. புறத்திணை களில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
5. பொருத்தமான இடங்க ளில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட
பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம்
அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்குஅடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினை வூட்டி
விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் - ம.பொ.சி.
ஓரிரு வரிகளில் விடையளி:
6) ‘முதல்மழை விழுந்ததும்’
என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்? 7)
அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன்
போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப்
புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக. 8)
“ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக. கலைச்சொற்களைத் தமிழாக்குக: 9)PATENT 10)IRRIGATION ஓரிரு சொற்களில் விடையளி: 1. ‘ கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’ அ) அடியெதுகையை
எடுத்தெழுதுக.. 2. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக. 3. குறிப்பு வரைக:- அவையம் 4. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக. ஓரிரு வரிகளில் விடையளி:
|
மாணவர்கல் எழுதும் தவறான விடைகளை மீண்டும் மீள்பார்வை செய்து வலுவூட்டல்
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
தவறாக எழுதப்பட்ட விடைகளை வீட்டில் படித்துவரச் செய்தல்