7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 02-01-2024 முதல் 06-01-2024
மாதம் : ஜனவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. விருந்தோம்பல் 2. வயலும் வாழ்வும்
1.கற்றல் நோக்கங்கள் :
ü விருந்தோம்பல் பண்பினை வளர்த்தல்.
ü
நாட்டுப்புறப்
பாடல்களில் தொழில் பாடல் அறிந்து களைப்பின்றி உழைத்தல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
நீவிர் அறிந்த பழமொழி ஒன்று கூறுக.
நாட்டுப்புறப் பாடல்கள் கேட்டது உண்டா? தொலைக்காட்சியில் பார்த்ததுண்டா?
ஆகிய வினாவைக்கேட்டு, விடைகூறச்செய்து ஓவியங்களை அறிமுகம் செய்தல்
4.படித்தல் :
செய்யுட்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
விருந்தோம்பல்
ü பாரி மகளிர்- அங்கவை, சங்கவை- பாணர்களுக்கு உலை நீரில் பொன் அளித்தல்.
@ நாற்று நட்டு நீர் பாய்ச்சுதல் -அறுவடை செய்தல்- நெல்மணிகள் குவித்தல்
8.மதிப்பீடு:
1.பாரி மகளிரின் பெயர்களை
எழுதுக.
2. வாய்மொழி இலக்கியம் என அழைக்கப்படுவது எது?
3.
உழவர்கள் எப்போது நண்டுபிடித்தனர்?
4. வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்கள் யாவை?
5. சுழன்றும் ஏர்பின்னது
உலகம்-விளக்குக.
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளைக்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
விருந்தோம்பல் சார்ந்த படங்களைத் திரட்டி படத்தொகுப்பு உருவாக்கச் செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø 710 - பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆராய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.
@ 704- தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல், கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்