HALF YEARLY EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY TIRUPPUR DIST

 

திருப்பூர் மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு

வினாத்தாளைப் பதிவிறக்க👇

அரையாண்டுப்பொதுத்தேர்வு-2023, திருப்பூர் மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. சச்சிதானந்தன்

1

2.     

. சிற்றூர்

1

3.     

. தலையில் கல் சுமப்பது.

1

4.     

. தொடர்மொழி

1

5.     

. வினைத்தொகை

1

6.     

. வேற்றுமை உருபு

1

7.     

. இலா

1

8.     

. குறிஞ்சி, மருதம்,நெய்தல் நிலங்கள்

1

9.     

. திருப்பதியும், திருத்தணியும்

1

10.    

. அதியன் , பெருஞ்சாத்தன்

1

11.    

. உருவகம்

1

12.   

. மலைபடுகடாம்

1

13.   

. தேம்பாவணி

1

14.   

வினா தரப்படவில்லை

1

15.   

. பெயரெச்சம்

1

 

பகுதி-2

                                                                                  பிரிவு-1                                                                       4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

இயந்திரமனிதன்,செயற்கைக்கோள் போன்றன

2

17

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

18

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

19

செய்யுளும், உரைநடையும் கலந்து எழுதப்பெறுவது

2

20

#பாசவர்- வெற்றிலை விற்பவர்.                                                                                           # வாசவர்- நறுமணப் பொருட்களை விற்பவர்கள்.                                                                                                                                                                                             # பல்நிண வினைஞர்- பல்வகை இறைச்சிகளை விலை கூறி விற்பவர்கள்.                       

  #உமணர்உப்பு விற்பவர்.                                           

2

21

இன்மையின்  இன்னாத  தியாதெனின்  இன்மையின்

இன்மையே  இன்னா  தது.

2

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

. பண்புத்தொகை - முகில் அனைவரிடமும் இன்சொல் பேசினான்

. உம்மைத்தொகை - நானும் அவனும் கீரியும் பாம்பும் போல இருப்போம்

2

23

. உப்பிலாப் பண்டம் குப்பையிலே

. விருந்தும் மருந்தும் மூன்று நாளுக்கு

2

24

கிளர்ந்த = கிளர்+த்(ந்)+த்+

கிளர்பகுதி , த்சந்தி, ந்- விகாரம், த்இறந்தகால இடைநிலை , - பெய்ரெச்ச விகுதி

2

25

. நிலக்காற்று  . பாசனம்

2

26

. துரோகிகளின் நட்பு தாமரை இலை நீர் போல ஒட்டாமல் இருக்கும்.

. பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்ணினைக் காக்கும் இமைபோல காக்க வேண்டும்.

2

27

. அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்

. சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

2

28

6 – காலை, நண்பகல் ,எற்பாடு, மாலை, யாமம், வைகறை(விடியல்)

 

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

 ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது

3

30

அ. தம்மைவிட வலிமை குறைந்தவரோடு போர்செய்யக்கூடாது.

ஆ. வீரமற்றோர், புறமுதுகிட்டோர் ஆகியோரை எதிர்த்துப்ப் போர் செய்யாமை.

இ. பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர் , புதல்வரைப் பெறாதவர்.

3

31

)சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்  மனித வாழ்வுக்குத் தேவையான பண்பு

      நலன்களை  உருவாக்குகின்றன.

)இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில்  நன்மை கிட்டும்  என

      எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும்  என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

)நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று

      சங்க  இலக்கியங்கள் கூறுகின்றன.இக்கருத்து  இன்றைக்கும் பொருந்தக்கூடியது.

 )மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும்

      தேவையே.

3

 

                                                                  பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  மண்ணின் மேல்பக்கம் ஈரமானது.

ü  பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர்.

ü  மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும்

ü  உழவர் நம்பிக்கையுடன் உழுவர்.

3

33

ü  நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான்

ü  ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக.

ü  அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள்.

ü  அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள்

 என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது.

3

34

.

     வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

     மாளாத காதல் நோயாளன்    போல் மாயத்தால்

     மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

    ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

.

     நவமணி வடக்கயில்போல்

          நல்லறப்படலைப்பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

    தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

    துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

           ஒலித்து அழுவ போன்றே.

3

 

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

(வினாவில் “தொகாநிலைத்தொடர்” எனத் தவறாகக் கேட்கப்பட்டுள்ளது)

மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை

பூங்கொடி- இருபெயரொட்டுப் பண்புத்தொகை

ஆடுமாடு -உம்மைத்தொகை

3

36

    எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்கள ை அமைத்துப் பாடுவது தன்மையணியாகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர். இவ்வணி நான்கு வகைப்படும். பொருள் தன்மையணி, குணத் தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற் தன்மையணி என்பனவாகும்.

3

37

தேமா    புளிமா   புளிமாங்காய்  தேமாங்காய்

கூவிளம்  தேமா  காசு.

3

 

                                                                   பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

 (அல்லது)

)

கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்:

    குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான்.

கருணையன் தாயை இழந்து வாடுதல்:

     இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான்.

கருணையனின் தவிப்பு:            

    துணையைப்  பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான்.

பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன:

      கருணையன்  இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன.

5

39

அ) மற்றும் )  ஆகிய வினாக்களுக்கு

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி

என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42

)

1.பிறந்தநாள் விழாவில் மயிலாட்டம் நிகழ்த்துதல்

2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்துதல்

3. கோவில் திருவிழாக்களில் கரகாட்டம், காவடியாட்டம் நிகழ்த்துதல்

4. விடுமுறை காலத்தில் தெருக்கூத்து நிகழ்த்துதல்.

5. விளையாட்டு விழாக்களில் புலியாட்டம் நிகழ்த்துதல்.

)

   சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

5

 

                                                                               பகுதி-5                                                             3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 )   மற்றும் ஆ) ஆகிய வினாக்களுக்குக்  கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பி ழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

8

44

அ. முன்னுரை:

    கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே  ஒரு தோணி எனும் குறும்புதினமாகும்.

புயல்:

      கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது.

தொங்கானின் நிலை:

   அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது.

கரை காணுதல்:

   அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது.கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது.அங்கிருந்தவர்கள்எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர்.

சீட்டு வழங்குதல்:

    பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர். அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார்.

முடிவுரை:                                                                                                                              

    புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன.

 

ஆ. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)

 முன்னுரை:

                யாரையும் அலட்சியப்படுத்தாத  ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி  தனதுஒருவன் இருக்கிறான்என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்  ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

 குப்புசாமியின் குடும்ப நிலை:

              காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும்  மட்டுமே அவனது உறவினர்கள்.

நோயுற்ற குப்புசாமி:

               சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.

ஆறுமுகம்:

              வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.

 முடிவுரை:

                  “ பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

                    மண்புக்கு மாய்வது மன்”   

 பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு  மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.

 

8

45

 

அ. விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

முன்னுரை:

    இந்தியாவில் பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

              விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

நமது கடமை:

            விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.

 முடிவுரை:

         “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்என்ற பாரதியின் கனவை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.

(அல்லது)

முன்னுரை :

    எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

            மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

            பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

            அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

            வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

            சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

            எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

8

விடைக்குறிப்பை  PDF வடிவில் பதிவிறக்க

  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை