7 TH STD TAMIL THIRD TERM QUESTION ANSWER UNIT-1

 


7.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்

மூன்றாம் பருவம் இயல் - 1

விருந்தோம்பல் (பக்க எண்:03 மதிப்பீடு)

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மரம் வளர்த்தால் பெறலாம்.

அ) மாறி   ஆ) மாரி   இ) காரி   ஈ) பாரி

2. 'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நீரு + உலையில்    இ) நீர் + உலையில்   ஆ) நீர் + இலையில்   ஈ) நீரு + இலையில்

3. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) மாரியொன்று   இ) மாரியின்று ஆ) மாரிஒன்று   ஈ) மாரியன்று

குறு வினா

1. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.

விடை: அங்கவை , சங்கவை

2. 'பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை" - எவ்வாறு?

விடை:  மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை,சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரி மகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.

சிந்தனை விளா

தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.

விடை: ஈகை, உயிரிரக்கம், நடுவுநிலைமை, பிறருக்கென வாழ்தல், எளிய வாழ்க்கை, தூய அன்பு, உலகப்பொதுமை ஆகியன தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகள் ஆகும்.

வயலும் வாழ்வும்  (பக்க எண்: 6 மதிப்பீடு)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உழவர்சேற்று வயலில் __________ நடுவர்.

) செடி ஆ) பயிர்  ) மரம்  ) நாற்று

2. வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை__________ செய்வர்.

) அறுவடை  ) உழவு  ) நடவு   ) விற்பனை

3. ‘தேர்ந்தெடுத்துஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

) தேர்+ எடுத்து  ) தேர்ந்து + தெடுத்து   ) தேர்ந்தது + அடுத்து  ) தேர்ந்து + எடுத்து

4. ‘ஓடை+ எல்லாம்என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

) ஓடைஎல்லாம்  ) ஓடையெல்லாம்   ) ஓட்டையெல்லாம்  ) ஓடெல்லாம்

பொருத்துக.

1. நாற்று - பறித்தல்

2. நீர்- அறுத்தல்

3. கதிர்- நடுதல்

4. களை- பாய்ச்சுதல்

விடை:  1 –   , 2 – , 3 – , 4 –

வயலும்வாழ்வும்பாடலில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைஎழுதுக.

மோனைச்சொற்கள்: 

   டை - ண்ணரை  , சீலையெல்லாம்சேத்துக்குள்ளே , நாத்தெல்லாம்ண்டும்,

    டமட- ண்குளிர ,   றுப்பறுக்களுபணம் , கிழக்கத்திகீழே , கால்படவும் ழலுதையா

எதுகைச்சொற்கள்: 

    நாலுசாலு , ணிபோலதை , கிக்கத்தி கீழே

குறுவினா

1. உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?

விடை:  உழவர்கள் நாற்று பறிக்கும்போது நண்டு பிடித்தனர்

2.நெற்கதிரிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிரிப்பர்?

விடை: கதிரடித்த நெல்தாட்களைக் கிழக்கத்தி மாடுடு்கணளக் கொண்டு மிதிக்கச் செய்தனர. மாடு்கள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணி்கள் மணிமணியாய் உதிர்ந்தன.

சிறுவினா:

1. தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.

விடை:

v  ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.

v  நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன.

v  பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர்.

v  அறுவடை செய்த நெலதாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர்.

v  கதிரடித்த நெலதாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.

v  மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

சிந்தனை வினா:

உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.

விடை:

v  ஆற்றங்கரையில் நாகரிகம் உருவாகக் காரணமானது உழவுத்தொழில்.

v  விதைகளை விதைப்பதும், அவற்றுக்கு நீர்பாய்ச்சி வளர்ப்பது மட்டுமே பழங்காலத்தில் நடைபெற்றது.

v  பின்னர், மனிதன் தன் சுய அறிவால் உழவுத்தொழிலுக்கு உதவியாக மாடுகளைப் பயன்படுத்தி இயற்கை எருக்களைக் கொண்டு பயிரிட்டான்.

v  பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, உழுகருவிகளையும் விதைத்தல் கருவிகளையும், பூச்சிக்கொல்லி, செயற்கை உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கினான்.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி  (பக்க எண்: 11 மதிப்பீடு)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. திருநெல்வேலி --------- மன்னர்களோடு தொடர்பு உடையது.

அ) சேர  ) சோழ  ) பாண்டிய  ) பல்லவ

2. இளங்கோவடிகள்  மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.

அ) இமய   ஆ) கொல்லி   இ) பொதிகை   ஈ) விந்திய

3.திருநெல்வேலி --------ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

) காவிரி  ஆ) வைகை    இ) தென்பெண்ணை     ஈ) தாமிரபரணி

பொருத்துக

1. தண்பொருநை   -    பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்

2. அக்கசாலை      -     குற்றாலம்

3. கொற்கை          -     தாமிரபரணி        

4. திரிகூடமலை    -     முத்துக் குளித்தல்

விடை:  1-   ,  2 –   , 3 – , 4-

குறுவினா

1. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?

விடை:  மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி

2. கொற்கை முத்து பற்றிக் கூறுக.

விடை: தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றது.கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

சிறு வினா

1. திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத் தொழில் குறித்து எழுதுக.

விடை:

ü  திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது

ü  உழவுத்தொழில் தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில்நடைபெறுகின்றது.

ü  இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட் ல் உள்ளன. இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது.

ü  மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

2. திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.

விடை:

ü  அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர்

ü  சங்கப்புலவர்களான மாறோக்கத்து நப்பசலையார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், அயோத்திதாசப்  பண்டிதர்  ஆகியோர் திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்குச் செழுமை செய்தனர்.

ü  ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவ போன்றோரைத் தமிழின்பால் ஈர்த்த பெருமை திருநெல்வேலிக்கு உரியது.

3.திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக

விடை:

ü  நெல்லை மாநகரில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. காவற்புரை என்றால் சிறைச்சாலை. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்குச் சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

ü  மேல வீதியை அடுத்துக் கூழைக்கடைத் தெரு உள்ளது. கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும். கூலக்கடைத்தெரு என்பதே மருவிக் கூழைக்கடைத் தெரு என வழங்கப்படுகிறது.

ü  அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம்.

சிந்தனை வினா

மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

விடை:

v  இயற்கை வளம் மிகுந்ததாக இருக்க வேண்டும்.

v  அனைத்துப் பொருட்களும் அருகில் கிடைக்கும் படி இருக்க வேண்டும்.

v  சாதி மத பேதமின்றி மதநல்லிணக்கத்தைப் போற்றும் படியாக இருக்க வேண்டும்.

v  சுற்றுப்புறத்தூய்மை உடையதாக இருக்க வேண்டும்.

 

திருநெல்வேலிச்சீமையும் கவிகளும்  (பக்க எண்: 15 மதிப்பீடு)

டி.உே.சி.குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை:

   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

எட்டையபுரம்:

     கவிமணி பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம், எட்டையபுர சமஸ்தானம் நெடுகிலும் ஊர் ஊராய்ப் புலவர்களும் கவிராயர்களும் வாழ்ந்தனர். தேசிகவிநாயகனார் கள்னியாகுமரிப் பக்கம் அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான். பாரதியாரும் தேசிகவிநாயகளாரும் தம்மோடு ஒட்டியவர்கள்.

சீவைகுண்டம் கொற்கை:

  திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்திலே பதினெட்டாவது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார். கொற்கை என்கிற சிறு ஊர்தான் அது. அதன் புகழோ அபாரம், சுமார் இரண்டாயிரம் வருடத்துக்கு முள்ளிருந்த ஒரு பெருங்கவிஞர் முத்தொள்ளாயிர ஆசிரியர்.

கருவை நல்லூர்:

   சங்கான்கோயிலுக்கு வடக்கே எட்டு மைலில முக்கியமான ஸ்தலம் கருவைநல்லூர். இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். கோயிலும் சுற்று வீதிகளும் அழகாய் அமைந்திருக்கின்றன. இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார்.

முடிவுரை:

   தமிழ்மணம் கமழும் நகர், தமிழ் வளர்த்த நகர் என்று போற்றுதலுக்குரிய நகர் திருநெல்வேலி என்பது தெளிவாகிறது

அணி இலக்கணம்  (பக்க எண்: 17 கற்பவை கற்றபின்)

தொடர்கள்

உவமை

உவமேயம்

உவம உருபு

மலரன்ன பாதம்

மலர்

பாதம்

அன்ன

தேன் போன்ற தமிழ்

தேன்

தமிழ்

போன்ற

புலி போலப் பாய்ந்தான் சோழன்

புலி

சோழன்

போல

மயிலொப்ப ஆடினாள் மாதவி

மயில்

மாதவி

ஒப்ப

 

(பக்க எண்: 17 மதிப்பீடு)

குறுவினா

1. உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக.

விடை :   சான்று: மயில்போல ஆடினாள்

ü  ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில்) உவமை அல்லது உவமானம் என்பர்.

ü  உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர்.

ü  இத்தொடர்களில் வந்துள்ள போல’, ‘போன்றஎன்பவை உவம உருபுகளாகும்.

2. உவமை அணிக்கும் எடுத்துக்கா ட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?

விடை :

ü  ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படை யாக வந்தா ல் அது உவமை அணி எனப்படும்.

ü  உவமை ஒரு தொட ராகவும் உவமேயம் ஒரு தொட ராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்கா ட்டு உவமை அணி எனப்படும்.

(பக்க எண்: 18 மொழியை ஆள்வோம்)

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

         பனை மரமே பனை மரமே

         ஏன் வளந்தே இத் தூரம்?

         குடிக்கப் பதனியானேன்!

         கொண்டு விற்க நுங்கானேன்!

         தூரத்து மக்களுக்குத்

         தூதோலை நானானேன்!

         அழுகிற பிள்ளைகட்குக்

         கிலுகிலுப்பை நானானேன்!

         கைதிரிக்கும் கயிறுமானேன்!

         கன்றுகட்டத் தும்புமானேன்!       - நாட்டுப்புறப்பாடல் வினாக்கள்

1. பனை மரம் தரும் உணவுப் பொ ருள்கள் யாவை?

விடை: பதனீர் , நுங்கு

2. பனை மரம் யாருக்குக் கிலுகிலுப்பையை த் தரும்?

விடை: அழுகிற பிள்ளைகளுக்கு

3. 'தூதோலை ' என்னும் சொல்லை ப் பிரித்து எழுதுக.

விடை: தூது + ஓலை

4. பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக.

விடை: பதனீர் , நுங்கு, தூதோலை, கிலுகிலுப்பை, கயிறு, தூம்பு

5. பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.

விடை:  பனை மரம்

பின்வரும் தலைப்பில் கட்டுரை எழுதுக : என்னைக் கவர்ந்த நூல்

என்னைக் கவர்ந்த நூல் சிலப்பதிகாரம்

முன்னுரை:

       அன்னைத் தமிழில் பல கோடி நூல்கள் இருப்பினும், என்னைக் கவர்ந்த நூல் சிலப்பதிகாரமே ஆகும். அதனைப் பற்றி விரிவாகக் கார்போம்.

சிலப்பதிகாரம் அமைப்பு:

    சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளையும், முப்பது காதைகளாகிய சிறுபிரிவையும் கொண்டுள்ளது. இந்நூலை இளங்கோவடிகள் இயற்றியுள்ளார்.

சிலப்பதிகாரக் கதை!

         புகார் நகரத்தில் கோவலனும், கண்ணகியும் திருமணம் செய்து வாழ்கின்றனர். கண்ணகியைப் பிரிந்து கோவலன் அதவியுடன் வாழ்கின்றார். அவளைப்பிரிந்து மீனர்டும் கண்ணகியுடன் மதுரை செல்கின்றார். கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்ற இடத்தில் கொல்லப்படுகின்றான்.கண்ணகி நீதியை நிலைநாட்டி மதுரையை எரித்து, வானுலகம் செல்கின்றாள்.

சிறப்புகள்:

     ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.  முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் நூல், ன் குடிமக்களைக் கதை மாந்தராகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நூல் இது.

சுவர்ந்த காரணம்:

      மூவேந்தர்களைப் பற்றியும், முத்தமிழ் பற்றியும், முச்சுவை பற்றியும், முந்நீதிகளைப் பற்றியும் ஒரே நூலில் விளக்குவதால் சிலப்பதிகாரம் என்னை மிகவும் கவர்ந்தது. பொதுமக்களைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாலும் என்னைக் கவர்ந்தது இந்நூல்,

முடிவுரை:

     சிலப்பதிகாரம் மிகவும் இனிமையான நூல் என்பதை அறிந்து, நான் படித்தேன், என்னைக் கவர்ந்தது. நீங்களும் படியுங்கள்! உங்களையும் கவரும்!

 

 

(பக்க எண்: 18 மொழியோடு விளையாடு)

தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.

1. என் தாயார் என்னை ______காத்து வளர்த்தார். (கண்ணை இமை காப்பது போல / தாயைக் கண்ட சேயைப் போல )

விடை: கண்ணை இமை காப்பது போல

2.  நானும் என் தோழியும்---------இணைத்து இருப்போம். (இஞ்சி தின்ற குரங்கு போல/ நகமும் சதையும் போல)

விடை: நகமும் சதையும் போல

3. திருவள்ளுவரின் புகழை-- உலகமே அறிந்துள்ளது. (எலியும் பூனையும் போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல)

விடை: உள்ளங்கை நெல்லிக்கனி போல

4. அப்துல் கலாமின் புகழ்--- உலகமெங்கும் பரவியது. (குன்றின்மேலிட்ட விளக்கு போல, குடத்துள் இட்ட விளக்கு போல)

விடை: குன்றின்மேலிட்ட விளக்கு போல

5. சிறுவயதில் நான் பார்த்த நிகழ்ச்சிகள்---- (கிணற்றுத்தவளை போல, பசுமரத்தாணி போல) என் மனத்தில்பதிந்தன.

விடை: பசுமரத்தாணி போல

கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.   

(எ.கா) திருநெல்வேலி - திரு, நெல், வேலி, வேல்

1. நாகப்பட்டினம்   -   விடை: நாகம், பட்டினம், பட்டி, நாடி,

2. கன்னியாகுமரி   -   விடை: கன்னி, குமரி, மரி, கனி.

3. செங்கல்பட்டு  -  விடை: செங்கல், பட்டு, கல், கட்டு.

4. உதகமண்டலம்  -  விடை: கமண்டலம், மண்டலம், உலகம், உணர்.

5. பட்டுக்கோட்டை -  விடை: பட்டு, கோட்டை, படை, கோடை

 

 பதிவிறக்கம் செய்ய

 

 

 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை