10 TH STD TAMIL MODEL REVISION PLAN -JANUARY 1 ST WEEK

10.ஆம் வகுப்பு - தமிழ்

ஜனவரி முதல் வாரம்- திருப்புதல் திட்டம்

தேர்வு நோக்கிலான திட்டமிடல்:

படிநிலை:1 (வகைப்படுத்துதல்)

    நடந்து முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மூன்று நிலைகளாகப் பிரித்தல்.

நிலை 1:

            மீத்திற மாணவர்கள் (75 மதிப்பெண்களுக்கு மேல்)

 நிலை 2:

            சராசரி திறனுடையோர்  (41-75 மதிப்பெண்)

 நிலை 3:

          திறன் குறைபாடு உடையோர்  (11-40 மதிப்பெண்)

(குறிப்பு: ஒருமாதம் கழித்து இந்நிலைகள் மேலும் பல நிலைகளாக அதிகரிக்கப்படும்)

படிநிலை:2 (பயிற்சி வினாக்கள்)

நிலை-1 மாணவர்கள்:

  •     எட்டு மதிப்பெண் (நெடு) வினாக்கள்  , ஐந்து  மதிப்பெண் வினாக்கள்  

1. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.

2. ‘சான்றோர் வளர்த்த தமிழ்என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

3.  புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைக ளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொ ற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வா று விவரிக்கின்றன?

4. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பே ச்சு ஒன்றை உருவாக்குக.

5. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

6. வினா வகைகளைச் சான்றுடன் விவரித்து எழுதுக

7. விடை வகைகளைச் சான்றுடன் விவரித்து எழுதுக

8. நயம் பாராட்டல்

             தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

                        தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

            ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

                        மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

            வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

                        தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

            தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே

நிலை-2 மாணவர்கள்:

  •      ஐந்து மதிப்பெண் வினாக்கள்‌

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பே ச்சு ஒன்றை உருவாக்குக.

2. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

3. மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம்எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

4. புயல் அறிவிப்பைக் கேட்ட நீங்கள், உங்களை யும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.

5. இன்சொல் பேசுவதால் ஏற்படும் நன்மைகளை எழுதுக.

6. மொழிபெயர்க்க:

   1.      The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the        dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers’ fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

  2.    1. If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mandela

         2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

7. நயம் பாராட்டல்

            தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

                        தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

            ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

                        மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

            வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

                        தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

            தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே

நிலை-3 மாணவர்கள்:

  •   ஒரு மதிப்பெண் வினாக்கள்

1) ‘மெத்த வணிகலன்என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது -------

2) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் -------- என வரும்                                                                     

3) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன--------                                                                           

4) வேர்க்கடலை,மிளகாய் விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக்குறிக்கும்காய்வகை------                                                                                                                                                                                                                   5) கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இத்தொடரில் இடம்பெற்ற தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே--------

6)உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்                                                                                                                                உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள்--------

7) பாடு இமிழ் பனிக்கடல் பருகி  என்னும் முல்லைப்பாட்டுஅடி உணர்த்தும் அறிவியல் செய்தி----

8) பெரியமீசை சிரித்தார்-வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை ----------

9) தமிழழகனாரின் இயற்பெயர் --------

10) தென்னன் என்று அழைக்கப்படும் மன்னன்-------

  • இரு மதிப்பெண்(குறு) வினாக்கள்.

1. 'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. "மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" இவ்வடிகளில் இடம்பெற் றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

3. "உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

      வடுக்காண் வற்றாகும் கீழ்" இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.

4. 'நமக்கு உயிர் காற்று காற்றுக்கு வரம் மரம்                                                                                                      மரங்களை வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' - இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

5. வசன கவிதை குறிப்பு வரைக.

6. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதி, தொடரில் அமைக்க.

7. பெற்றோர் வேலை

யிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

8. மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக

9. கலைச்சொல் தருக : ) Tempest  ) Conversation

10. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக. தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ

11. அன்னை மொழியே.... எனத்தொடங்கும் வாழ்த்துப்பாடல்.

12. “எப்பொருள்----” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.

13. ” ------விடல்” என முடியும் குறளை அடிமாறாமல் எழுதுக.

PDF வடிவில் பதிவிறக்க👇👇


திருப்புதல் திட்டம் வடிவமைப்பு:

முனைவர் திரு.க.பொன்னம்பலவாணன்,

தமிழாசிரியர்,

அரசினர் உயர்நிலைப்பள்ளி,

தணிகைப்போளூர்,

இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

அலைபேசி எண்: 9445700145


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை