HALF YEARLY EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY ARIYALUR DIST

 

அரியலூர் மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு

வினாத்தாளைப் பதிவிறக்க👇

 

அரையாண்டுப்பொதுத்தேர்வு-2023, அரியலூர் மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

அ. அங்கு வறுமை இல்லாததால்

1

2.     

அ. வேற்றுமை உருபு

1

3.     

அ. கூவிளம்  தேமா  மலர்

1

4.     

)தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

1

5.     

.சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

1

6.     

ஈ. இராமாவதாரம்

1

7.     

தெரிவுகளில் சரியான விடை தரப்படவில்லை.

சரியான விடை : இமயத்துக்கு அப்பால்

1

8.     

அ. அகவற்பா

1

9.     

ஈ. பெயரெச்சம்

1

10.    

ஆ. 7

1

11.    

அ. திருப்பதியும், திருத்தணியும்

1

12.   

ஈ. முல்லைப்பாட்டு

1

13.   

அ. நப்பூதனார்

1

14.   

ஆ. வினைத்தொகை

1

15.   

. சிறுதாம்பு, உறுதுயர்

1

 

பகுதி-2

                                                                                  பிரிவு-1                                                                       4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

17

மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்து உணர்த்த ,அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்.                            

2

18

இல்லை,விருந்தினரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்ற எண்ணமே தேவை.

2

19

ü  உயிரினும் ஓம்பப் படும்.

ü  நடு ஊருள் நச்சுமரம் பழுத்தற்று.

ü  ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

2

20

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.                                

2

21

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

2

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

சிரித்துச் சிரித்துப் பேசினார்.

2

23

சேரர்களின் பட்டப் பெயர்களில்கொல்லி வெற்பன்’, ‘மலையமான்போன்றவை குறிப்பிட்த்தக்கவை. கொல்லி மலையை வென்றவன்,’கொல்லி வெற்பன்எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள்மலையமான்எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.                                                                                             

2

24

அ. கந்தன் தொழில் ஆரம்பித்ததும் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என மனக்கோட்டைக் கட்டுகிறான்

ஆ. கனிமொழி தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக படித்ததால் வெற்றிப் பெற்றாள்.

2

25

. நவீன இலக்கியம்  .காப்பிய இலக்கியம்

2

26

சொன்ன அம்மா , அம்மா ஓடாதீர்கள் , அம்மாவிற்காக ஓடினாள்

2

27

மயங்கிய மயங்கு + இ(ன்) + ய் + அ

மயங்கு பகுதி

இ(ன்) இறந்கால இடை நிலை ; ‘ன்புணர்ந்து கெட்டது.

 ய் உடம்படுமெய்   

அ - பெயரெச்ச விகுதி

2

28

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளில் வருவது குறள் வெண்பா

   (-கா)  வேலொடு நின்றான்  இடுவென்றது  போலும்

                 கோலொடு  நின்றான்  இரவு.

 

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை

கன்று: மா , புளி, வாழை முதலியவற்றின் இளநிலை

குருத்து: வாழையின் இளநிலை

பிள்ளை: தென்னையின் இளநிலை

குட்டி: விளாவின் இளநிலை

மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை

பைங்கூழ்: நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்.

3

30

ü  கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும்.

ü  கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

ü  கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும்.

ü  கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும்.

3

31

) சீனா – காண்டன் நகருக்கு அருகில்

) குப்லாய்கான்

) வணிகத்திற்காக

3

 

                                                                  பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  வியந் து உரைத்தல்,

ü   நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்,

ü  முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்,

ü  'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல்,

ü  அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து  செல்லல் ,

ü  அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்

3

33

 

தமிழ்

கடல்

1

முத்தமிழாக வளர்ந்தது

முத்தினைத் தருகிறது.

2

முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

முச்சங்கினைத் தருகிறது.

3

ஐம்பெருங்காப்பியங்கள்- அணிகலன்கள்

கடலில் செல்லும் கப்பல்கள்

4

சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

சங்கினைக் காக்கிறது

3

34

.

     செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்

          திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

    பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

         பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

    கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

         கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட

  வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

        ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை

.

     வினாத்தாளில் கேட்கப்பட்ட பாடல் மனப்பாடச்செய்யுள் இல்லை.

 

3

 

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

தேமா    புளிமா   புளிமாங்காய்  தேமாங்காய்

கூவிளம்  தேமா  பிறப்பு.

3

36

வெட்சி – கரந்தை     வஞ்சி – காஞ்சி , நொச்சி - உழிஞை

3

37

உவமை , உவமேயம் , உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது உவமை அணி

3

 

                                                                   பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

ü  மேகம் மழையைப் பொழிகிறது

ü  திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம்.

ü  கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர்.

ü  இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள்.

ü  தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள்

 (அல்லது)

) பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

39

) மற்றும் ஆ)  ஆகிய வினாக்களுக்கு

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி

என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42

)

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

நான்கு

எறும்புந்தன் கையால் எண் சாண்

எட்டு

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

ஐந்து

ரு

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

நான்கு,இரண்டு

’ ,

ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி

ஆயிரம்

000

)

மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா.

தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.

மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை செலவிடுகிறது.

தேவி: யாருக்கு தெரியும்? எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும் படைக்கலாம்.

மலர்: நான் படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள் வழியாக செயற்கை நிலவை உருவாக்கி வெளிச்சம் பரப்புகிறார்கள்

தேவி: அருமையான செய்தி. நாமும் இது போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும் பகுதியில் வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தோமானால்,நிறைய மின்சக்தி செலவாவதைத் தடுக்க இயலும்.

5

 

                                                                               பகுதி-5                                                             3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 )     தமிழ்ச்சொல் வளம்:

v  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v  திராவிட மொழிகளில் மூத்தது.

v  பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v  பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v  மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v  தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v  மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

) பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

8

44

அ. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)

 முன்னுரை:

                யாரையும் அலட்சியப்படுத்தாத  ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி  தனதுஒருவன் இருக்கிறான்என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்  ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

 குப்புசாமியின் குடும்ப நிலை:

              காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும்  மட்டுமே அவனது உறவினர்கள்.

நோயுற்ற குப்புசாமி:

               சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.

ஆறுமுகம்:

              வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.

 முடிவுரை:

                  “ பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

                    மண்புக்கு மாய்வது மன்”   

 பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு  மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.

 

ஆ)

ü  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

 

8

45

அ)பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

(அல்லது)

ஆ) முன்னுரை :

    எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

            மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

            பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

            அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

            வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

            சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

            எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

8

 விடைக்குறிப்பை  PDF வடிவில் பதிவிறக்க

  




 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை