HALF YEARLY EXAM 9 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY MADURAI DIST

  

மதுரை மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு 

வினாத்தாளைப் பதிவிறக்க

மதுரை மாவட்டம்அரையாண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள்

டிசம்பர் - 2023-2024

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்தமிழ்

உத்தேச விடைக்குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                       மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

ஆ. ச. அகத்தியலிங்கம்

1

 

2.

ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

1

 

3.

இ. வளம்

1

 

4.

இ. கல் முத்திரை

1

 

5.

அ. ஆராயாமை, ஐயப்படுதல்

1

 

6.

. ஊரகத் திறனறி தேர்வு

1

 

7.

ஈ. டாக்டர் முத்துலட்சுமி , மூவலூர் இராமாமிர்தம்

1

 

8.

. எதிர்மறை வினையெச்சம் , உவமைத்தொகை

1

 

9.

ஆ. தீர்த்தங்கரர் உருவங்கள்

1

 

10.

ஆ. தில்லான்

1

 

11.

. கருவியாகுபெயர்

1

 

12.

இ. மணிமேகலை

1

 

13.

. புகார் நகரம்

1

 

14.

ஆ. சீர் எதுகை

1

 

15.

இ. துணியாலான கொடி

1

 

பகுதி – 2 / பிரிவு - 1

16.

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

1

1

 

17.

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

 

18.

குடும்ப விளக்கின் தலைவியின் பேச்சில்,

  • பெண்ணுக்கு விடுதலை வேண்டுமெனில் கல்வி வேண்டும்;
  • பெண் ஒளிர வேண்டுமெனில் கல்வி வேண்டும்;

2

 

19

நான் இராணுவப் பணியை தாய்நாட்டுக்காக உழைக்க தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், தாய்நாட்டைப் பாதுகாக்கவும், இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையைப் பேணவும் கிடைத்த வாய்ப்பாக இராணுவப் பணியைக் கருதுகிறேன்.

2

 

20.

  • நடுகல் பற்றியக் குறிப்பு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.
  • போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும்.
  • அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப் பெறும். அவரது வீரத்தின் சிறப்பும் கூறப்பெறும்.
  • தமிழரின் தொடக்ககாலச் சிற்பக் கலைக்குச் சான்றாக இதனைக் குறிப்பிடுவர்.

2

 

21

அன்புநாண்  ஒப்புரவு  கண்ணோட்டம்  வாய்மையொடு

ஐந்துசால்பு  ஊன்றிய  தூண்.

2

 

பகுதி – 2 / பிரிவு - 2

22

அ. பேசப்படுகின்றன  ஆ. சென்றனர்

2

 

23

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

 

24

அ. நல்ல தமிழில் எழுதுவோம்   ஆ. குழலிக்கும் பாடத்தெரியும்

2

 

25.

அ. பூவினம்   ஆ. திருவருட்பா

2

 

26.

. இந்திய தேசிய இராணுவம்   . ஏவுகணை

2

 

27.

கொடுத்தோர் = கொடு+த்+த்+ஓர்

கொடு- பகுதி , த் – சந்தி, த்- இறந்தகால இடைநிலை , ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி

2

 

28.

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

 

பகுதி – 3

பிரிவு - 1

29

ü  1886-ல் பிறந்த முத்துலெட்சுமி அவர்கள் பல சாதனைகளுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.

ü  தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

ü  இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை

ü  மேயராகவும், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.

ü  அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம், 1952ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

ü  தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், இருதாரத்தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்துள்ளார்.

3

 

30

  • குமிழித்தூம்பு என்பது ஏரியில் உள்ள நீரையும் சேறையும் வெறியேற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட்டன.
  • சோழர்காலத்தில் நீர்நிரம்பி நிற்கும் ஏரிக்குள் நீந்தி கழிமுகத்தை (ஏரி நீர்க்கழிவு) அடைந்து குமிழித் தூம்பைத் தூக்கி விடுவார்கள்.
  • குமிழித்தூம்பில் இரண்டு துளைகள் இருக்கும். மேலே இருக்கும் நீரோடித் துளையிலிருந்து
  • நீர் வெளியேறும். கீழே இருக்கும் சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும். இதனால் தூர் வாரத் தேவையில்லை .

3

 

31.

. ஹரப்பா அகழாய்வு

. திராவிட மொழி

. குமரிலபட்டர்

3

 

பகுதி – 3

பிரிவு - 2

32


3

 

33.

இடம்

      மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :  

       மதுரையின் வளங்களையும், விழாக்களையும் பற்றிக் குறிப்பிடும் போது புலவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

விளக்கம்:

        ஆறு போன்ற தெருக்களில் பல்வேறு பொருள்களை வாங்க வந்த பல்வேறு மொழி பேசும் மக்களின் ஒலியோடு விழாக்கள் பற்றிய அறிவிப்புகள் ஒலிக்கின்றன. “முரசறைவோரின் முழக்கம், பெருங்காற்று புகுந்த கடலொலி போல்ஒலிக்கிறது. இதனையேமாகால் எடுத்த முந்நீர் போலஎன்றார் மாங்குடி மருதனார்.

3

 

34.

. நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

      உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

      உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

      உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;

      நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு

      உடம்பும் உயிரும் படைத்திசினோரே!*

(அல்லது)

. கல்லிடைப் பிறந்த ஆறும்

           கரைபொரு குளனும் தோயும்

     முல்லைஅம் புறவில் தோன்று

           முருகுகான் யாறு பாயும்

     நெல்லினைக் கரும்பு காக்கும்

             நீரினைக் கால்வாய் தேக்கும்

      மல்லல்அம் செறுவில் காஞ்சி

              வஞ்சியும் மருதம் பூக்கும்*

3

 

பகுதி – 3

பிரிவு - 3

35

  தன்வினை :   வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும்.

                         .கா: பந்து உருண்டது.

   பிறவினை : வினையின் பயன் எழுவாயை இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும்.

                        .கா. பந்தை உருட்டினான்

   காரணவினை :எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது

                         .கா. பந்தை உருட்ட வைத்தான்.

3

 

36.

அணி விளக்கம்: 

        இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி. (தன் + குறிப்பு + ஏற்றம் + அணி)

எ.கா:    அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
             வெள்ளம் தீப் பட்ட(து) எனவெரீஇப்புன்ளினம்தம்
             கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
              நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

அணிப் பொருத்தம்:
    சேறுபட்ட, நீர்வளம் மிகுந்த வயல் பகுதிகளில், பொய்கைகளில் செவ்வாம்பல் மலர் விரிவது இயல்பான நிகழ்வு. இதைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்து விட்டதாக எண்ணியதாக கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக் கூறியதால் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

3

 

37

·        வல்லெழுத்துகள் க,,,ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும், இவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும். இதை வல்லினம் மிகுதல் என்பர்.

·        இவ்வாறு எந்த எந்த இடங்களில் அவ்வல்லினம் மிகும் என்பதை விதிகளின் மூலமூம் எடுத்துக்காட்டுகள் மூலமும் அறியலாம்.

             (எ.கா) அச்சட்டை, கதவைத்திற, எனக்கேட்டார், எட்டுத்தொகை மல்லிகைப்பூ

·        நாம் பேசும் போதும் எழுதும் போதும் பொருள் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது இன்றியமையாததாகும்.

3

 

பகுதி – 4

38

.

1. சொக்கநாதருக்குத் தூது சென்ற தமிழ்:

     மதுரையில் கோவில் கொண்டுள்ள சொக்கநாதப் பெருமான் மீது விருப்பம் கொண்ட பெண்ணொருத்தி, தன் அன்பை வெளிப்படுத்தி வருமாறு தூது அனுப்ப, அவன் தேர்தெடுத்தது தமிழ் மொழியைத்தான்.

2. தூது செல்வோரின் தகுதி :

    தூது செல்பவர் பல்வேறு திறனுடையவராய் இருக்க வேண்டும். அவர் இனிமையாய், இலக்கியச் சுவையோடு, நலமும் அழகும் குறையாமல் செய்தியைத் தெரிவிப்பவராய் இருத்தல் வேண்டும். தாம் கூற வரும் செய்தியைக் குற்றம் குறைவின்றித் தெளிவாய் எடுத்துக்கூறும் திறன் படைத்தவராய் இருத்தல் வேண்டும். அப்போதுதான் தூது சென்றதற்கான பயன் கிடைக்கும். தமிழ்மொழி மேற்கூறிய சிறப்புகளை உடையது. அத்திறன்களோடு கூடவே, இனிய பாச்சிறப்பும் பெற்றிருப்பதால் தலைவன் சொக்கநாதப் பெருமானிடம், தூது செல்லும் அனைத்துக் தகுதிகளையும் பெற்றுத் திகழ்கிறது. தமிழ், இவற்றைக் கருதியே சொக்கநாதப் பெருமானிடம் தூதாகத் தமிழை அனுப்புகிறாள், தலைவி.

5

 

38

முன்னுரை:

   பாரதிதாசன் இயற்றிய குடும்ப விளக்கு என்னும் நூலில், குடும்பத்தலைவி தன் உள்ளக்கருத்துகளை வெளிப்படுத்தும் போது, பெர்கல்வி குறித்த கருத்துகளையும் வெளிப்படுத்துகிறார். அவ்வாறு தலைவி கூறும், கருத்துகளும், இன்றைய சூழலையும் பார்ப்போம்..

தலைவியின் பேச்சு:

     கல்வி இல்லாத பெளர்கள் பண்படாத உவர்நிலம் போன்றவர்கள். அங்கு பயனற்ற புல் விளைந்திடலாம். அறிவார்ந்த புதல்வர்கள் உருவாவதில்லை, கல்வியறிவு பெற்ற பெண்கள், பண்பட்ட தன்செய் நிலம் போன்றவர்கள் அவர்கள் மூலமே சிறத்த அறிவார்ந்த மக்கள்  உருவாகின்றனர்.

      பெண் கல்வி இல்லாததினால், இன்று உலகம் ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால், பெண்களுக்கு விடுதலை பறிபோனது. கல்வியறிவு இல்லாத பெண். மின்னலபோல் ஒளிரும் அழகு பெற்றவளாயினும், அவன் வாழ்வு ஒளிர்வதில்லை.

            "கல்வி இல்லா மிள்னாள்

            வாழ்வில் என்றும் மின்னாள்"!

       சமைக்கும் பணி, தாய்மார்களுக்கே உரியது எனும் வழக்கத்தினைக் கார் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.

இன்றைய சூழல்:

     கல்வி கற்ற பெர் குடும்பத்தலைவியாய் இருப்பதால், பட்டங்களும், பதவிகளும் பெறும் மக்கடபேறு இல்லந்தோறும் காணப்படுகிறது.

       வானூர்தியைச் செலுத்துதல் விளர்கலத்தில் செல்லுதல், மருத்துவர், எனப் பல்வேறு துறைகளிலும், உலகை அளத்தல், மாக்கடலை அளத்தல் என அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும் இடம்பெறுகிறாள், செயலாற்றும் திறள் உடையவளாய் இருக்கிறாள் என்பதை  மறுக்க இயலாது.

      “வானூர்தி செலுத்தல் வைய

       மாக்கடல் முழுது மனத்தல்

      ஆனஎச் செயலும் ஆண்பெண்

     அனைவர்க்கும் பொதுவே ஆகிவிட்டது.

சமையல்பணி

    சமைப்பதும், வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வதும் பெண்களுக்கு உரியது என்ற நிலை மாறிவருகிறது.ஆண்களும் அதனைத் தாழ்வாக எண்ணாது ஏற்று நடத்தும்காலம் வந்துகொண்டிருக்கிறது எளில் மிகையாகாது, குடும்ப விளக்கு தலைபேசும் கால கட்டத்தை விட பெண்கல்வி இன்று பல மடங்கு  வளர்ந்திருக்கிறது..

முடிவுரை:

   "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பெண்கள் நடத்த வந்தோம்". என் பாரதியின் களவு கரிகள் தனவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

5

 

39

.

ü  அனுப்புநர் முகவரி

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி

 என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

5

 

ஆ.

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  விளித்தல்

ü  பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி      என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

5

 

40

பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

 

41

திரண்ட கருத்து :
    இப்பாடலில், கவிமணி ஆறு ஒன்று தன் வரலாறு கூறுவது போல் பாடியிருக்கிறார். கற்களிலும் மலைகளின் உச்சியிலிருந்து குதித்து வந்தேன் காடுகளிலும் செடிகளிலும் கடந்து வந்தேன். சமவெளிகளில் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். மேட்டுப் பகுதிகளிலும் ஏறி வந்தேன். பல ஏரி, குளங்களை நிரப்பி மக்கள் பயன்பாட்டிற்காக வந்தேன். ஊற்று வராத நிலப்பகுதிகளிலும் உள்ளே புகுந்து வந்தேன். ஓடை மணல்களில் எல்லாம் ஓடிப் பாய்ந்து வந்தேன் என்று குறிப்பிடுகிறார்.

 

 

மோனை நயம் :   

      சீர்தோறும் அடிதோறும் முதல் எழுத்துகள் ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். மோனை நயத்தை ஓசையுடன் பாடுவதில் சிறந்து விளங்குகிறார் கவிமணி.

சான்று :     ஏறாதஏறி
                   ஊறாதஊற்றிலும்

                  ஓடைகள்ஓடி வந்தேன்.

எதுகை நயம் :  

      அடிதோறும் இரண்டாம் எழுத்துகள் ஒன்றிவரத் தொகுப்பது எதுகையாகும்.

     சான்று :    கல்லும் …. எல்லை
                      ஏறாத …… ஊறாத

இயைபு நயம்

       இச்செய்யுளின் ஈற்றடிகளில்தேன் தேன்என்று முடிந்திருப்பதால் அழகான இயைபு நயம் அமைந்து விளங்குகின்றது.

சொல் நயம்

        ‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்என்றாற் போல விருத்தப்பா சந்தத்தில் எழுதும் ஆற்றல் பெற்றவர் கவிமணி. ஆறு கடந்து வந்த பாதையை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். ஆற்றின் போக்கிற்கேற்ப யாப்பு வடிவங்களைக் கையாண்டிருக்கிறார்

குதித்து வந்தேன்
கடந்து வந்தேன்
தவழ்ந்து வந்தேன்
ஏறி வந்தேன்
நிரப்பி வந்தேன்
உட்புகுந்தேன்
ஓடி வந்தேன்.

ஆற்றின் நீரோட்டத்திற்கேற்ப சொற்களை நடனமாடச் செய்திருக்கும் கவிஞனின் கவியுள்ளத்தைக் காண முடிகிறது.

5

 

42

) பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

)

ü  நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

ü  மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி

ü  உங்கள் களவு நளவாகும் வரை, களவு காணுங்கள்.

5

 

 

பகுதி – 5

 

 

43 .

   1. தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில்காளையைக் கொன்று அடக்குபவனே வீரன் அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.

   2. காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சிலநாட்டுவிளையாட்டுக்களில் கொல்லப்படுவதும் உண்டு.

   3.அது வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.

   4. தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது.

  5.நிகழ்வின் தொடக்கத்திலும்முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர்.

  6.எவராலும் அடக்கமுடியாத காளைகள்வெற்றிபெற்றதாகக் கருதப்படும்.

  7. அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையைஅரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

8

 

முன்னுரை:

    கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன்; சிற்பம் என்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினாள், உணர்வுகளையும், நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் வரலாற்றின் வாயில்களாகவும், கலைநயம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன.

சிற்பங்களின் கலைநயம்:

     "கற்கவிஞர்கள்" என்று சிறப்பிக்கப்படும் சிற்பிகள் வடித்த சிற்பங்கள் ஒவ்வொன்றும்

கலைநயம் மிக்கலையாய் மிளிர்கின்றன. சிற்பங்களை கோவில்களின் கட்டடங்கள், கற்றுளர்கள், கற்றுச்சுவர்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து இடங்களிலும் கலைநயம் மிளிரச் செதுக்கினர்

       புதுக்கோட்டைமாவட்டம்நார்த்தாமலையில் உள்ள சிற்பம் நடனக்கலையின் முத்திரைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு கலை நயத்துக்கோர் சான்றாகும். கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுடபத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில்   வெளிப்படும் முக பாவனைகள் சிற்பக்கலை நுட்பத்திற்கு தனி சான்றாய்த் திகழ்கிறது.

     கோவில் கோபுரங்களில் கதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. அவற்றுள் ஆடை அணிகலன்கள் அரிந்த நிலையில் உள்ள உருவங்கள் சிற்பங்களாயின. அவையும் சிற்பக் கலைநுட்பம் வாய்ந்தவை. உருவங்கள் விழியோட்டம், புருவ நெளிவு. நகஅமைப்பு என மிக மிக நுட்பமாக கலை நயத்துடன் படைக்கப்பட்டுள்ளன.

     கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவிலில் உள்ள குறவன், குறத்தி, இரதிதேவி சிலைகள் காண்போரை ஈர்க்கும் கலைநயம் வாய்ந்தவை,

சிற்பங்கள் வரலாற்றுப் பதிவுகள்:

     சிற்பக் கலையைப் பற்றிக் கூற முற்படுகின்ற பொழுது. பல்லவர் காலச் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பங்கள், சோழர் காலச் சிற்பங்கள் ,விஜய நகர மன்னர் காலச் சிற்பங்கள், நாயக்கர் காலச் சிற்பங்கள் என்றே வகைப்படுத்துகிறோம். எனவே சிற்பக்கலை வரலாற்றுப் பதிவாகவும் திகழ்கிறது. என்பதை மறுக்க இயலாது.

     மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள சிற்பங்கள் மூ லம் பல்லவர் கால வரலாற்றை உணரலாம். திருமயம் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.

     கங்கை கொண்ட சோழபுரம், தாராகரம், திரிபுவனம், தஞ்சை பெருவுடையார் கோவில்களில் உள்ள சிற்பங்கள் மூலம், இராசஇராசசோழன், குலோத்துங்க சோழன், இராசேந்திர சோழன், இரண்டாம் இராசராசன் போன்ற மன்னர்களின் வரலாறுகளையும், அவர்கள் கலை வளர்த்தப் பாங்கினையும் அறியலாம்.

    விஜயநகர மன்னர்கள் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்தது, அவற்றில் கதைகளாலான சிற்பங்களை அமைக்கச் செய்தனர், சோழர் காலத்தை செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று சிறப்பிக்கின்றனர்.

     நாயக்க மன்னர்களின் காலத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைக்கப்பட்ட வரலாற்றை அறிவிக்கிறது.மதுரை மீனாட்சியம்மன் கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள் கண்ணப்பர், சந்திரமதி, அரிச்சந்திரன் வரலாற்றை எடுத்துக் கூறுகிறது.

முடிவுரை:

    'சிற்பங்கள் என்பன தெய்வங்களாகப் போற்றி வணங்குவதற்கும். என்னய உருவங்கமைக் கண்டு களிப்பதற்கும் மட்டுமல்ல, அவை கலைநயத்தின் சான்றாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும், அறியில் முதிர்ச்சிக்கு ஓர் அடையாளமாகவும் இருப்பதால் சிற்பக்கலையைப் போற்றி பேணுவது நம் கடமையாகும்.

8

 

44.

.

     முன்னுரை :
            “நாகலிங்கம்என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்”, “ஒவ்வொருகல்லாய்”, “கொம்பன்முதலிய வரிசையில்தண்ணீர்சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :
           பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.

           பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.

           எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவேதண்ணீர்கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
         இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

         அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள்.

இந்திராவின் கனவு :
     அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
            பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள்,தொடர்ந்து  பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே :
        எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.

தாயின் துயரம் :
        “எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோஎன அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே ஓட ஆரம்பித்தாள். தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்தஎன்று தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள்.

முடிவுரை :
       “உயிர் நீர்எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,  “நீர் மேலாண்மையை கட்டமைப்போம்  மழைநீர் சேகரிப்போம்.”

8

 

நாளிதழ் செய்தி

தணிகைப்போளூர் சந்தையின் புகழ்:
           செப்டம்பர் 28, 2023 -  நம் மக்களின் வணிக முறைகளில் ஒன்று சந்தை, தினசரி சந்தை, வாரச் சந்தை என இரண்டு உண்டு. எங்கள் ஊரில் வாரச் சந்தைதான் வாரத்தில் ஒரு நாள் (செவ்வாய்க்கிழமை) மட்டும் கூடும். எங்கள் ஊர் சந்தையில் எம் கிராமத்திலும், பக்கத்து கிராமங்களிலும் விளையும் காய்கறி, கீரை, தானிய வகைகள் விற்பனைக்கு வரும். பக்கத்து மலைப்பகுதியில் இருந்து மிளகு, மல்லி, சீரகம் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

       காய்கறிகள், தானியவகைகள், மளிகைப் பொருட்கள், தின்பண்டங்கள் ஈயம், மண், இரும்பு பாத்திரங்கள் தோட்ட வேலை செய்வதற்கு உரிய களைக்கொத்தி, மண்வெட்டி, மேலும் துணி மணி வகைகள் என அனைத்தும் எம் ஊர் சந்தையில் வாங்கலாம்.

           நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கு நேர்மையான விலையில் அனைத்தும் கிடைக்கும். என் தாத்தா சிறு வயதில் சந்தைக்குச் செல்லும் பொழுது திருவிழாவிற்குப் போவது போல் மகிழ்ச்சியாய்ச் செல்வாராம். ஏனெனில் அக்காலத்தில் கழைக்கூத்து, பொம்மலாட்டம் கூட சந்தைவெளியில் உண்டாம்.

            எங்கள் ஊர்சந்தையிலே ஆடு, மாடு வாங்குவதை நினைச்சாலே வேடிக்கையா இருக்கும். துண்டைப் போட்டு கைகளை மறைச்சு விலைபேசுவது ஒரு பக்கம், பல், வால், கொம்பைப் பார்த்து விலை பேசுவது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தியைக் கையாள்வர் சந்தை விற்கும் வாங்கும் வணிகத்தளம் மட்டுமல்ல, உறவுகளுக்கு உயிரூட்டும் இடமாகவும் இருக்கும்.

வாங்க! வாங்க! என கல்யாண வீடு போல வரவேற்று நலம் விசாரித்த பின்புதான் வியாபாரம் தொடங்கும்.

         எம் ஊர் சந்தையில் வியாபாரிக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு என்பது வெறுமனே பொருளை விற்று வாங்கும் உறவாக மட்டும் இருப்பதல்ல. சந்தையில் பழகியவர்கள் சம்பந்தியான கதைகளும் உண்டு. சந்தையின் சாதாரண விசாரிப்புகளிலும் நேசம் உண்டு. நேர்மை உண்டு.

       நீங்களும் ஒருமுறை எங்கள் சந்தைக்கு வந்துதான் பாருங்களேன்.

, அனுபவிக்க அதன் மெய்ப்பொருள் அறிய நாடு, மொழி, இனம் தேவையில்லை.

8

 

45 .

கருத்துச்செறிவு, பிழையின்மை, கையெழுத்துத் தெளிவு, மேற்கோள்கள் முதலானவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்கலாம்.

8

 

45. .

கருத்துச்செறிவு, பிழையின்மை, கையெழுத்துத் தெளிவு, மேற்கோள்கள் முதலானவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்கலாம்.

8

 

 விடைக்குறிப்பை  PDF வடிவில் பதிவிறக்க

  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை