9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -JANUARY 1 ST WEEK

                9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு  

நாள்        : 02-01-2024 முதல் 06-01-2024        

மாதம்          ஜனவரி    

வாரம்     :   முதல் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.உரைநடை உலகம்-பெரியாரின் சிந்தனைகள்   

                                             2.கவிதைப்பேழை-ஒளியின் அழைப்பு

1.கற்றல் நோக்கங்கள்   :

      @ பெரியாரின் சிந்தனைகள் சமுதாய மாற்றத்திற்கு வழி வகுத்ததை உணர்ந்து கொள்ளுதல்

Ø      @ தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறச் சிந்தனைகளை அறிந்து, அறத்தோடு வாழும் வாழ்வியல் திறன் பெறுதல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # பெரியார் யார்?

       # பாக்குமரத்தைப் பார்த்துள்ளீர்களா?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

      பெரியாரின் சிந்தனைகள்:

  • ‘பெரியார்‘ என்றவுடன் நம்முடை ய நினைவுக்கு வருவது, அவரின் பகுத்தறிவுக் கொள்கை. எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப் பி , அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.

  • மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் , இன்று மதத்தின் நிலமை என்ன ? நன்கு சிந்தித்துப்பாருங்கள்; மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா ? பிரித்து வைப்பதற்காகவா?’ எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை எழுப்பினார்

ஒளியின் அழைப்பு:
@ வாழ்க்கை போட்டிகள் நிறைந்தது. கமுகு மரம் சூரிய ஒளியை நோக்கி வளர்வது போல,மனிதர்களும் தடைகளை மீறி இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.

5.ஆசிரியர் செயல்பாடு              :

     §  செய்யுளைப் பொருள் விளங்குமாறு, சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்.

§  நூல்வெளி பகுதியை விளக்கிக் கூறுதல்

§  பாடப்பொருளை தக்க சான்றுகளுடன் விளக்குதல்

§  இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.

6.கருத்துரு வரைபடம்:

பெரியாரின் சிந்தனைகள்

ஒளியின் அழைப்பு

7.மாணவர் செயல்பாடு:

   Ø  முன்னேற்றத்திற்கு விடாமுயற்சி அவசியம் என்பதை உணர்தல்.

Ø  இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.

@ பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. வைக்கம் வீரர் யார்?
2. ஒளியின் அழைப்பை இயற்றியவர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3.பெரியார் என்றழைக்கப்படக் காரணம் என்ன?

4.ந.பிச்சமூர்த்தி-குறிப்பு வரைக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5.பெரியாரின் சிந்தனைகள் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

           @ 9038மொழியில் வழங்கப்பட்டுள்ள சிந்தனை மரபுகளைப் படிப்பறிதலுடன் ஒரு சமூகக் கருத்தையொட்டி தர்க்க அடிப்படையில் கலந்துரையாடுதல்.  அறச் செயல்களைப் பின்பற்றி வாழும் எழுசசி பெறுதல்.          

@ 9039 நடைமுறையில் பயன்படுத்தப்படும் எளிய சொற்கள் வாயிலாகவே தத்துவக் கருத்துகள் புதுக்கவிதையில் சொல்லப்பட்ட தன்மையுணர்தல் அதுபோன்ற எழுதுதல்


 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை