HALF YEARLY EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY MADURAI

 

மதுரை மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு

வினாத்தாளைப் பதிவிறக்க👇

அரையாண்டுப்பொதுத்தேர்வு-2023,  மதுரை மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                         பகுதி-1                                                                        15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. மணி வகை

1

2.     

ஆ. தெற்கு

1

3.     

ஆ. வேற்றுமைத்தொகை

1

4.     

ஈ. வானத்தையும்,பேரொலியையும்

1

5.     

இ. கல்வி

1

6.     

. பாரதியார்

1

7.     

. நெய்தல்

1

8.     

அ. திருப்பதியும், திருத்தணியும் 

1

9.     

அ. கைம்மாறு கருதாமல் அறம்செய்வது

1

10.    

. கலிவெண்பா

1

11.    

அ. கருணையன், எலிசபெத்துக்காக

1

12.   

இ. பெருஞ்சித்திரனார்

1

13.   

ஈ. சீர் எதுகை

1

14.   

. பத்துப்பாட்டு

1

15.   

. பெயரெச்சத் தொடர்

1

பகுதி-2

                                                                                  பிரிவு-1                                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

17

2

18

வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள் போன்ற சொற்கள்

2

19

மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்து உணர்த்த ,அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்.                            

2

20

இடையறாது அறப்பணி செய்தல்

2

21

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

2

 

                                                                                  பிரிவு-2                                                                        5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்

. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்

2

23

மோர்ப்பானை – உருபும் பயனும் உடன் தொக்க தொகை

மோர் கொடுக்கவும் – இரண்டாம் வேற்றுமைத்தொகை

2

24

அறியா வினா, இனமொழி விடை

2

25

. நாட்டுப்புற இலக்கியம்   . பாசனம்

2

26

. தந்தையை இழந்த குடும்பம் வருமானம் இன்றி மழைமுகம் காணாப் பயிர்போல வாடி இருக்கிறது.

ஆ. மூத்தோர் சொல் சிலை மேல் எழுத்துப் போல நிலையானது.

2

27

புதுகை , நெல்லை, திருச்சி, உதகை

2

28

தணிந்தது தணி + த்(ந்) + த் + அ + து தணி பகுதி, த் சந்தி த்(ந்) ந் ஆனது விகாரம் த் இறந்தகால இடைநிலை அ சாரியை, து படர்க்கை வினைமுற்று விகுதி

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                            பிரிவு-1                                                                          2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

சோலைக்காற்று :         இயற்கையில் பிறக்கிறேன்

மின்விசிறிக்காற்று :     செயற்கையில் பிறக்கிறேன்

சோலைக்காற்று :         காடும்,மலையும்,இயற்கையும் எனது இருப்பிடங்கள்

மின்விசிறிக்காற்றுஇருள்சூழ்ந்த அறையும்,தூசி நிறைந்த இடமும் எனது இருப்பிடங்கள்

(மாதிரி உரையாடல்)

 

3

30

) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்  மனித வாழ்வுக்குத் தேவையான பண்பு

      நலன்களை  உருவாக்குகின்றன.

 ) இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில்  நன்மை கிட்டும்  என

      எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும்  என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று

      சங்க  இலக்கியங்கள் கூறுகின்றன.இக்கருத்து  இன்றைக்கும் பொருந்தக்கூடியது.

) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும்

      தேவையே.

3

31

அ. 96 

ஆ. பிள்ளைத்தமிழ் 

இ. ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் ள்ளைத்தமிழ்

3

                                                                                                               

                                                                                பிரிவு-2                                                                            2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

 # மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்.

 # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார்.

 # அதுபோல, நீ துன்பங்கள் செய்தாலும், உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன் என்று குலசேகராழ்வார் கூறுகிறார்.

3

33

ü  மண்ணின் மேல்பக்கம் ஈரமானது.

ü  பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர்.

ü  மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும்

ü  உழவர் நம்பிக்கையுடன் உழுவர்.

3

34

.


அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று

.

தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந் தாங்கக்

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்

வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.

3

                                                                            பிரிவு-3                                                                             2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

ü  வஞ்சித்திணை: மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது.

ü  காஞ்சித்திணை:எதிர்த்துப் போரிடுவது.

3

36

தற்குறிப்பேற்ற அணி:

             இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

சான்று:

             “  போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

                 வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

அணிப்பொருத்தம்:

               கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில் அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும்அக்கொடியானது  கோவலன் கண்ணகியை,”மதுரை நகருக்குள் வரவேண்டாம்எனக் கூறிகையசைப்பதாகக் கம்பர் தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று

3

37

புளிமாங்காய்  தேமா புளிமா  புளிமாங்காய்

தேமா  புளிமா  மலர்

3

                                                         

                                                                                  பகுதி-4                                                                     5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

அ.

ü  மேகம் மழையைப் பொழிகிறது

ü  திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம்.

ü  கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர்.

ü  இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள்.

ü  தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள்

 (அல்லது)

)

கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்:

    குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான்.

கருணையன் தாயை இழந்து வாடுதல்:

     இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான்.

கருணையனின் தவிப்பு:

    துணையைப்  பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான்.

பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன:

      கருணையன்  இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன.

 

5

39

, ஆ முதலான வினாக்களுக்கு

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி

என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42

) வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

) வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.                    

5

                                                                          

                                                                                 பகுதி-5                                                                     3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 )    கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள், கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு ,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

(அல்லது)

) நாட்டு விழாக்கள்:

        நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள  எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்  சிறந்தவையாகும்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

    பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தினர்.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்  தூண்டினர்.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:

        நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல்  ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.

மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:

         மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

8

44

.

ü  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

 

.                                    வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)

 முன்னுரை:

                யாரையும் அலட்சியப்படுத்தாத  ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி  தனதுஒருவன் இருக்கிறான்என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்  ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

 குப்புசாமியின் குடும்ப நிலை:

              காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும்  மட்டுமே அவனது உறவினர்கள்.

நோயுற்ற குப்புசாமி:

               சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.

ஆறுமுகம்:

              வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.

 முடிவுரை:

                  “ பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

                    மண்புக்கு மாய்வது மன்”   

 பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு  மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.

 

8

45

 , முன்னுரை:

        உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

முச்சங்கம்:

      பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.

சிற்றிலக்கியங்கள்:

    96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன.

காலந்தோறும் தமிழ்:

   சங்க காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில்

பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.

முடிவுரை:

    இவ்வாறு தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை.

முன்னுரை :

    எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

            மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

            பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

            அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

            வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

            சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

            எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

8

விடைக்குறிப்பை  PDF வடிவில் பதிவிறக்க

   

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை