HALF YEARLY EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY TIRUVARUR,CUDDALORE

 


திருவாரூர், கடலூர் மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு 

(திருவாரூர், கடலூர் ஒரே வினாத்தாள்)

10.ஆம் வகுப்பு - தமிழ்

வினாத்தாளைப் பதிவிறக்க👇

 

அரையாண்டுப்பொதுத்தேர்வு-2023,  கடலூர், திருவாரூர் மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                         பகுதி-1                                                                        15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. மணி வகை

1

2.     

. இலா

1

3.     

ஈ. கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை?

1

4.     

அ. திருப்பதியும் திருத்தணியும்

1

5.     

ஆ. இறைவனிடம் ,குலசேகர ஆழ்வார்

1

6.     

. அருமை+துணை

1

7.     

ஆ. சண்முகசுந்தரம்

1

8.     

. உருவகம் 

1

9.     

ஆ. கொளல் வினா

1

10.    

. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

1

11.    

ஆ. பொதுவியல் திணை

1

12.   

. கீரந்தையார்

1

13.   

. பரிபாடல்

1

14.   

ஈ. வானம்

1

15.   

ஆ. அடுக்குத்தொடர்

1

 

பகுதி-2

                                                                                  பிரிவு-1                                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

17

இயந்திரமனிதன்,செயற்கைக்கோள் போன்றன

2

18

இளம்பயிர் வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை இழந்து வாடினான்.

2

19

அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்

2

20

# மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்

 # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார்

 # அன்பும்,நம்பிக்கையும் மருத்துவத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

2

21

குற்றம் இலனாய்க்குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு

2

                                                                                 பிரிவு-2                                                                        5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

அ. பண்புத்தொகை மற்றும் பொருத்தமான தொடர்

ஆ. வினைத்தொகை மற்றும் பொருத்தமான தொடர்

2

23

அமர்ந்தான் = அமர்+த்(ந்)+த்+ஆன்

அமர்-பகுதி , த்- சந்தி, ந்- விகாரம், த்- இறந்தகால இடைநிலை ,ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

2

24

அ. உதகை  ஆ. கோவை

2

25

அ. தொன்மம்   ஆ. தத்துவவியலாளர்

2

26

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

 

2

27

எதிர்காலம் உறுதித் தன்மையின் காரணமாக நிகழ்காலமானது காலவழுவமைதி.

2

28

(அட்டவணையில் சிறுபொழுதுகளை மட்டும் கருத்தி கொள்க)

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                           

                                                                               பிரிவு-2                                                                            2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான்

ü  ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக.

ü  அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள்.

ü  அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள்

3

33

இடம்: நாகூர் ரூமியால் எழுதப்பட்டசித்தாளுகவிதையின் வரிகள் இவை

பொருள்: சித்தாளு அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத் தெரியாது

விளக்கம்: உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும் புரியாது.

3

34

.

  

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று

.

     நவமணி வடக்கயில்போல்

          நல்லறப்படலைப்பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

    தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

    துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

           ஒலித்து அழுவ போன்றே.

3

 

                                                                            பிரிவு-3                                                                             2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை

 பூங்கொடி- பண்புத்தொகை

ஆடுமாடு -உம்மைத்தொகை

 

3

36

தேமா  கருவிளங்காய்  கூவிளங்காய்  தேமாங்காய்

தேமா  புளிமா  மலர்

3

37

ü  அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும்.

ü  ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும்.

ü  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும்

3

                                                                                  பகுதி-4                                                                     5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

அ. மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  கடல் ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.

ü  அதற்குத் தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்  உள்ளது.

ü  திலகத்தின் மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.

ü  அத்தகைய தமிழை வாழ்த்துவோம்.

பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம்.

 (அல்லது)

)

விளம்பரம்:

      சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. ஆனால் இன்றளவிலோ  வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும்  பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறை:

      மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

அங்காடிகள்:

      சிலப்பதிகாரம் கூறும்   மருவூர்ப்பாக்கத்தில்பலவிதமான வணிகர்களும்  ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்தனர்.

       ஆனால், இன்றைய சூழலில்  அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

பல தொழில் செய்வோர்:

       மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும்  வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்  பலர் உள்ளனர்.

வணிக வளாகங்கள்:

      மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது  வானுயர் கட்டடங்களுக்கு  இடம் பெயர்ந்து உள்ளது.

5

39

அ)

ü  இடம், நாள்

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  உறைமேல் முகவரி என்ற

அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

(அல்லது)

ஆ)

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42

) வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

)

   சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                         

5

                                     

                                                                                 பகுதி-5                                                                     3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 )    கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

(அல்லது)

) பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

44

அ.

ü  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

ஆ. பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

45

 , முன்னுரை:

    இந்தியாவில் பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

              விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

நமது கடமை:

            விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.

 முடிவுரை:

       “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்என்ற பாரதியின் கனவை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.

 

ஆ) நாட்டு விழாக்கள்:

        நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள  எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்  சிறந்தவையாகும்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

    பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தினர்.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்  தூண்டினர்.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:

        நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல்  ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.

மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:

         மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 

8

 

 விடைக்குறிப்பை  PDF வடிவில் பதிவிறக்க


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை